Skip to Content

05. பூரணயோகம் - முதல் வாயில்கள்

பூரணயோகம் - முதல் வாயில்கள்

கர்மயோகி

108. போன உயிர் திரும்பி வருவது.

  • போகும் உயிர், போன உயிர் திரும்புவது மனித முயற்சியிலில்லை. பூரண யோகம் பலிப்பவருக்கு மரணமில்லை.
  • மரண வாயிலிலுள்ளவர் ஓர் அன்பரால் திரும்பி வருகிறார் எனில், அந்த அன்பருக்கு யோகம் பலிக்கும்.
  • பகவானும் அன்னையும் சாதகர்களைத் தங்கள் ஸ்தாபனத்தில் சேர்ப்பது இந்த உலகத்திலில்லாத பவரை அவர்கள் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது.
  • உயிர் போகும் தருணம் பலவகையானது.
    • வயது முதிர்ந்த நிலை.
    • சவரட்சணையின்றி அழியும் உடல்.
    • ஒரு உறுப்பு சீரழிவது.
    • சர்க்கரை, B.P. போல் ஒரு reading அளவு கடப்பது.
    • விக்கல், தும்மலால் உயிர் போவது.
    • முக்கியமான குறையை கவனிக்காததில் ஏற்படும் ஆபத்து.
      காயம் சீழ் பிடித்து ஆபத்தாவது.
    • மூர்ச்சை தவறுவது.
    • மயக்கம் நிலையைக் கடப்பது.
  • பிறந்த நாள் முதல் ஒரு வேளை சாப்பிட்டவர் 60 அல்லது 70 வயதுவரை இருப்பதில்லை.
  • அவர்கட்கு மயக்கம் பசி மயக்கம்.
  • உடல் மெலிந்து சவரட்சணையை இனி ஏற்க முடியாத நிலை ஏற்படும்.
  • அப்படிப்பட்டவர் மயக்கம் வந்து பிழைக்காது என்ற நிலையில் இருமுறை பிழைத்தபின் மூன்றாம் முறை மயக்கமானார்.
  • இவர் ஆயுள் முழுவதும் ஆசைப்பட்டது நிறைவேறவில்லை - வீடு கட்ட முடியவில்லை - என்பதால் உயிருடனிருந்தார்.
  • அவர் பிழைத்து எழுந்தார் - 1 மணி நேரத்தில்.
    அதன்பின் வீடு கட்டினார்.
    30 ஆண்டுகள் வாழ்ந்தார்.
  • அந்த சக்தி உலகிலில்லை.
    ஆத்மாவுக்குண்டு என்றால் அதற்குரிய சாங்கியம் மூலம் அது வர வேண்டும்.
    வீடு கட்டலாம் என்ற நம்பிக்கை அவரை உயிர்ப்பித்தது.
    அது அன்னை சக்தியால்.
    அந்தச் சக்தியை பெறுபவர், தருபவர் அன்பர்கள்.
    அது யோக வாயில்.

*********

 ஜீவிய மணி

இல்லாததை உண்மையாகப் பேசக் கற்றுக் கொண்டவர்கள் உண்டு. மிக அழகாக அப்பேச்சு அமைந்தால், அதையே பலமுறையும் பேசினால் பேசுபவரே அது இல்லாதது என்பதை மறந்து அதையே உண்மை என நம்புவதும் உண்டு.

  • வாழ்க்கை சொல்லுக்கும், எண்ணத்திற்கும் பலன் தரவல்லது அன்று.
  • மனத்தின் உண்மைக்கும், செயலுக்கும் பலன் தரக்கூடியது.
  • அன்னை, மனம் உண்மையாக இருந்தால், நினைவுக்கே பலனை முதலிலேயே தருவார்.

*********

 



book | by Dr. Radut