Skip to Content

04. யோக வாழ்க்கை விளக்கம்

யோக வாழ்க்கை விளக்கம்

22/15. ஒழுங்கும் சட்டமும், நியாயம் கருணை மூலம் நல்லதின் நிலையான வாழ்வாகின்றன.

  • ஒழுங்கு மனம் பெற்ற திறமை. மனம் வளரும்முன் ஒழுங்கு என்று ஏற்படவில்லை.
  • ஒன்றன்பின் ஒன்றாய் செயல்கள் வருவது ஒழுங்கு.
  • இலக்கம் என்பதை நம்பர் என்கிறோம்.
    729 என்றால் 7 நூறு இரண்டு பத்து 9 ஒன்றுகள்.
    அதை இலக்கம் மாற்றி எழுதினால் மதிப்பு மாறும்.
  • மனம் என்பது உலகில் உற்பத்தியான பின்னரே இதுபோன்ற அம்சங்கள் ஏற்பட்டன.
  • அவற்றுள் ஓர் ஒழுங்குண்டு (Order).
  • Q க்யூ வரிசையை ஒழுங்கு என அறிவோம். இன்னும் நம் நாட்டில் அது ஏற்கப்படவில்லை.
  • ஒழுங்கு துறைக்கேற்ப மாறும். Q க்யூ வரிசை, குறித்த நேர செயல்பாடு வெவ்வேறு வகையான ஒழுங்கு முறை.
  • சமையல் செய்யும் ஒழுங்கு, பரிமாறும் ஒழுங்கு, சாப்பிடும் ஒழுங்கு மாறுபடும்.
  • ஒழுங்கில்லாமல் சமையலாகாது, பரிமாற முடியாது, சாப்பிட இயலாது.
  • நாம் பேசும்பொழுது சொற்கள் வெளிவருவதற்குரிய ஒழுங்கில்லாவிட்டால் ஊமை உளறுவது போல் சப்தம் வரும், சொல் எழாது.
    ஒழுங்கு முறையால் சப்தம் சொல்லாக மாறுகிறது.
  • மனிதனாய்ப் பிறந்தவன் மண்ணாங்கட்டியாக, மனிதனாக, குடும்பஸ்தனாக, கணவனாக, தகப்பனாக, மகனாக, தலைவனாக, உயர்ந்தவனாக ஒவ்வொரு கட்டத்திற்கும் உரிய ஒழுங்கு முறையை ஏற்கிறான்.
  • சமூகம் ஓர் ஒழுங்கை ஏற்படுத்தியிருந்தால் மனிதன் அதை ஏற்கலாம்.
  • சமூகம் கூட்டமானது.
    சட்டம், ஒழுங்கு, நியாயத்தால் சமூகமாக, ஊராக மாறுகிறது.
  • மனித வரலாறு சட்டம் ஏற்படும்முன் இருந்தது.
    பழக்கம், முறையாகி, முறையின் ஒழுங்கை ஊர் ஏற்று, ஏற்றதை நீண்ட நாள் பின்பற்ற முடிவு செய்வது சட்டம்.
  • சட்டம் பொது மக்களுக்குரியது.
    கட்டுப்படாத மனிதனைக் கட்டுப்படுத்த ஊர் அதிகாரத்தைச் செலுத்துவது சட்டம்.
  • நல்லது கெட்டது என்ற பாகுபாடு ஏற்பட்டு, கெட்டதை விலக்கி நல்லதைச் செய்ய முனையும்பொழுது நல்லதை மனம் ஏற்பது மனச்சாட்சி.
    மக்கள் அனைவர் மனச்சாட்சியும் ஊராரின் மனச்சாட்சியாவது
    நியாயம் மனதில் பிறப்பது.
  • பிறந்த நியாயத்தைச் செயல்படுத்த ஊர் ஏற்கும் முறையொன்றைக் கண்டுபிடிப்பது அதற்குச் சொல்லாலான உருவம் கொடுப்பது
    சட்டம் ஏற்படுவது.
    ஊராரின் மனச்சாட்சி அதிகாரம் பெற்ற சொல்லாவது சட்டம்.
  • நியாயம், சட்டத்தைவிட உயர்ந்தது.
  • ஊரார் சட்டத்தைச் செயல்படுத்தலாம். அதே போல் நியாயத்தைச் செயல்படுத்த முடியாது. ஒரு கட்டத்தில் அநியாயத்தை ஊரார் நியாயமாக ஏற்காமல் ஊர் நிலை கொள்ளாது.
    அநியாயத்தைத் தலைவரோ, பலரோ மேற்கொண்டபொழுது அதை அழிக்க முடியாது. அழித்தால் ஊர் அழிந்து விடும்.
    நியாயம் தழைக்க அநியாயம் அடிப்படை என்பதை
    அநியாயம் ஆண்டவனின் நியாயம் எனக் கூறலாம்.
  • உயிரையும், உடமையையும், உரிமையையும் தியாகம் செய்து இலட்சக்கணக்கானவர் போராட்டம் நடத்தி, சத்தியாக்கிரகம் செய்து காங்கிரஸ் வளர்ந்தது.
    எதுவுமே செய்யாமல் முஸ்லீம் லீக் உணர்ந்தது.
    உண்மை வளரும்பொழுது பொய் வளர்வது
    ஆண்டவன் நியாயம்.
  • இதன் பின்னுள்ள கருத்தையும், அதன் மூலத்தையும் அறிய முயல்வதே
    பரிபூரண யோகம்.

******

ஜீவிய மணி

மரபை விட்டு அன்னையை ஏற்பதன் சிரமத்தை அனைவரும் அறிவர். அதைச் செய்து பலன் பெற்றவர் அநேகர். அன்னை கூறும் மனமாற்றம் மரபை விட்டு மாறுவது. சுபாவம் நாய் வால் போன்றது. எவராலும் மாற்ற முடியாது என்பது தெரியும். அம்மாற்றம் யோகத்திற்கு உரியது. மனம் நம் கையில் உள்ளது. அதை மாற்றலாம். தவறான கருத்தை விட்டு நல்ல கருத்தை ஏற்கலாம். போட்டியை விட்டு ஒத்துழைக்கலாம். பொறாமையை விட்டு நல்லவராக இருக்கலாம். இது போன்று மனம் மாற வேண்டிய இடங்கள் அநேகம். இது அனைவரும் அறிந்தது. அம்மாற்றத்தைத் தன்னுள் ஏற்படுத்துபவர் அதிர்ஷ்டத்தை உற்பத்தி செய்யலாம்.

  • உலகின் அனுபவம் சுபாவம் மாறாது என்பது.
  • அபிப்பிராயம் மாறினால் அனைவரும் இனியவராகின்றனர்
  • சுபாவம் மாறுவது வாழ்வைப் பொறுத்தவரை பேர் அதிர்ஷ்டம்.
  • யோகத்தில் சுபாவம் மாறினால் திருவுருமாற்றம் வரும்.
  • காணாமற்போன மோதிரம் கிடைப்பதும், சுபாவத்தை மாற்றுவதும் அன்னை அருளுக்கு ஒன்றேயாகும்
  • நாம் அன்னையை நம்ப வேண்டும். நம்பி நம் சுபாவத்தை அவரிடம் ஒப்படைக்க வேண்டும்
  • நமக்கு முடியாத காரியம் அது.

 

நம்மால் அன்னையிடம் நம் சுபாவத்தை ஒப்படைக்க முடிந்தால், அது சரணாகதியாகும். அதுவே அன்னையை அறிவதாகும். பிறவிப்பயனை அடைந்ததாகும்.

********



book | by Dr. Radut