Skip to Content

03. சாவித்ரி

சாவித்ரி

Page 168: An early attempt, a first experiment

முதன் முயற்சி, ஆரம்ப சோதனை

  • பிறந்த குழந்தையான பூமாதேவிக்கு இது விளையாட்டுக் கருவி
  • ஞானம் மேல்மனத்துடன் முடியவில்லை
  • அறியாமையின் சிறகுகளில் வாழும் ஞானம்
  • ஆழ்ந்த ஆபத்தான நிலையை அது எட்டிப் பார்க்கத் துணியவில்லை
  • நிமிர்ந்து நினைக்க முடியாததை அளவிடும் ஆண்மையில்லை
  • அகமெனும் ஆழத்துள் ஆழ்ந்துணர வேண்டியதுண்டு
  • மனமெனும் குறுகிய எல்லையைக் கடந்தபொழுது
  • உயரத்தில் பெரும் ஞானம் திருஷ்டியாய் நம்மை சந்திக்கிறது
  • ஆத்ம நோக்கின் அளவிறந்த ஒளிப்பரப்பு
  • முடிவாக சாட்சியாய் புருஷன் நம்முள் விழித்தெழுகிறான்
  • புலப்படாத சத்தியத்தைப் பார்த்து அப்பாலையறிய முயன்று
  • அனைத்தும் புதிய அற்புத வதனம் பெற்று
  • உலகம் உற்பத்தியாகுமிடத்தில் இறைவனின் இதமான ஒளி எழுந்து நடுங்கும்
  • காலத்தின் நெஞ்சு பெருநெறியைப் போற்றி வாழ்ந்து
  • வாழ்வின் எல்லை நொறுங்கி அனந்தத்துடனிணைந்து
  • பரந்த குழப்பம் இறுகிய திட்டமாகி
  • பிரமாதமான கடவுளின் குழப்பமான சிக்கல்
  • ஆட்டம், விவரமற்ற இறைவனின் கடமை
  • நம் முயற்சி சிறு வாழ்வின் சோதனை
  • சொல்லிழந்த இரகஸ்ய சக்தி
  • ஜட இருளின் இரவினின்று சோதனை செய்து
  • சத்தியம், ஆனந்த ஜோதியின் பிரம்மத்தைச் சந்தித்து
  • தோற்றத்தைக் கடந்து சத்தியத்தையடைந்து
  • மனித மனத்தின் புலனில் உழன்று
  • அறியாமையின் அகன்ற ரூபங்களுள்
  • எண்ணமும், சொல்லும் எழுப்பும் அடையாளக் குறியீடு
  • அனைத்தும் சுட்டும் சத்தியத்தை நாடும்
  • திருஷ்டியின் சுடரைக் கண்டு அதன் மூலத்தைத் தேடி
  • வேலையனைத்தையும் செய்பவனை அறியும் வேலையை மேற்கொண்டு
  • நாமுணராத பிரம்மம் உள்ளேயிருந்து வழிகாட்ட முனைந்து
  • மேலுள்ள அறிய முடியாத பிரம்மம் நம் இலக்கு
  • அனைத்தும் குருட்டு இயற்கையின் கடும் வேலையில்லை
  • மேலிருந்து நம்மைக் காக்கும் சப்தம், விவேகம்
  • தன்னைப் பூர்த்தி செய்து கொள்ளும் சாட்சியின் வேலை
  • பார்வையற்ற பரப்பின் பார்வையைக் கடந்த நேத்திரம்

******** 

ஜீவிய மணி

அகந்தை உள்ளவரையில் உழைத்து மிகவும் பாடுபட்டு மனிதன் முன்னேற வேண்டியுள்ளது.

ஆனால் அகந்தை அழிந்த பின்னர் சாதிக்கின்ற மனிதன் ஏற்பது ஆனந்தம் மட்டுமே.

ஆனந்தம் உயர்ந்தால், சாதனை உயரும் என்பது

அன்னையின் யோகம்

********



book | by Dr. Radut