Skip to Content

01. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்

ஸ்ரீ அரவிந்தம்

லைப் டிவைன்

(சென்ற இதழின் தொடர்ச்சி)

கர்மயோகி

 

XXVII. The Sevenfold Chord of Being
Page 269
Para 12
27. சப்த ஜீவன்
Wherever Cosmos is, one principle only may be apparent.
பிரபஞ்சம் என்றொன்றிருந்தால், அதில் ஒரு தத்துவம் மட்டுமே வெளிப்படையாகத் தெரியும்
It may seem to be the sole principle of things.
அது பொருட்களின் ஒரே தத்துவமாகத் தெரியும்
Everything else may appear to be no more than its forms and results.
மற்றவை அதன் தோற்றமாகவும் முடிவாகவும் காணப்படும்
They may seem not indispensable to cosmic existence.
பிரபஞ்ச வாழ்விற்கு அவை இன்றியமையாதவையாக
இல்லாதது போல் தோன்றலாம்
But such a front presented by being is only an illusory mask.
ஜீவனின் அப்படிப்பட்ட தோற்றம் ஒரு மாயையான முகமூடி.
The real truth is behind the appearance.
அதன் உண்மை தோற்றத்தின் பின் உள்ளது.
Where one principle is manifest in Cosmos, there all the rest must be.
எங்கு பிரபஞ்சத்தில் ஒரு தத்துவம் வெளிப்படுகிறதோ,
அங்கு மற்றவையும் இருக்க வேண்டும்
They are not merely present and passive, but secretly at work.
அவை அங்கு உயிர்ப்பற்று சாட்சியாக மட்டும் இல்லை. அது
மறைமுகமான வேலையில் ஈடுபட்டுள்ளது.
In a given world it may be in possession of all seven principles.
உலகம் என்று ஒன்று இருந்தால் அது ஏழு தத்துவங்களையும்
உட்கொண்டிருக்கும்.
This may be at a higher or lower degree of activity.
அது உயர்ந்த அல்லது தாழ்ந்த நிலைக்கான செயல்பாடாக இருக்கலாம்.
In another world they may be all involved in one principle.
மற்ற உலகத்தில் அவை ஒரே தத்துவத்தில் புதைந்து இருக்கலாம்
It becomes the initi al or fundamental principle of evolution in that world.
அது அவ்வுலகத்தின் முதலான அல்லது அடிப்படையான
பரிணாமத்திற்குரிய தத்துவமாகிறது.
Evolution of the involved there must be.
உள்ளே புதைந்திருப்பது பரிணாமத்தால் வெளிவருவதாக இருக்க வேண்டும்.
A world may start apparently from the involution of all in one power.
ஒரு சக்திக்குள் அனைத்தும் புதைந்து, அதனின்று ஒரு உலகம் வெளி வரலாம்.
But the evoluti on of the sevenfold power of being must be any world’s destiny.
ஜீவனின் எழுமடங்கு சக்தி பரிணாமத்தால் வெளி வருவது எந்த உலகிற்கும் முடிவாக இருக்க வேண்டும்
Its destiny must be the realisation of its septuple Name.
அதன் முடிவு அந்த எழுமடங்கு சக்திக்கான மந்திரத்தை அறிவதாகும்.
Therefore the material universe had to evolve apparent life from hidden life .
ஆகவே, பிரபஞ்ச உடல் பரிணாமத்தால் மறைந்துள்ள வாழ்வை வெளிப்படுத்த வேண்டும்
It had to evolve apparent mind from its hidden mind.
மறைந்துள்ள மனத்தை பரிணாமத்தால் வெளிக் கொணர வேண்டும்.
It must evolve apparent Supermind from hidden Supermind.
மறைந்துள்ள சத்திய ஜீவியத்தைப் பரிணாமத்தால் அது வெளிப்படுத்த வேண்டும்.
It must evolve the triune glory of Sachchidananda from the concealed Spirit.
சிறப்பான, மூவகைத் தத்துவங்கள் ஒருங்கிணைந் சச்சிதானந்தத்தை, ஒளிந்துள்ள ஆத்மாவிலிருந்து வெளிப்படச் செய்ய வேண்டும்.
The questi on is whether this emergence will take place on earth.
இவ்வெளிப்பாடு நாம் வாழும் இவ்வுலகில் நடக்குமா என்ப கேள்வி.
Will it take place in the human creati on?
மனிதப் படைப்பில் இது நடக்குமா?
Will it take place in this or any other material scene?
இது இந்த ஜட உலகில் அல்லது வேறெங்காவது சாத்தியமா?
Will it take place in this cycle?
தற்போதைய பரிணாமச் சக்கரத்தில் இது நடைபெறுமா?
Will it take place in any other cycle of the large wheelings of Time?
வேறு எந்தப் பெரிய காலச் சக்கரத்தின் சுழலிலாவது இது  ஏற்படுமா?
Time is its instrument and vehicle.
காலம் அதன் கருவி மற்றும் வாகனம்
The ancient seers believed in this possibility for man.
பண்டைய முனிவர்கள் மனித வர்க்கத்தின் இந்த சாத்தியக்கூற்றை நம்பினர்.
They held it to be his divine desti ny.
அதை அவர்கள் மனிதனுக்கு இறைவனால் அளிக்கப்பட்ட முடிவாகக் கருதினர்.
The modern thinker does not even conceive of it.
நவீன அறிஞர்கள் இதை ஒரு எண்ணமாகக்கூட அறியவில்லை.
If he conceived, he would deny or doubt.
அப்படியே அறிந்தாலும், அதை மறுத்தனர், சந்தேகித்தனர்
He may see a vision of the Superman.
சத்திய ஜீவனை அவர்கள் திருஷ்டியாகக் காணலாம்
But it would be a figure of increased mentality or vitality.
ஆனால், அது மனதுக்கோ அல்லது பிராணனுக்கோ உரிய ஓர் வடிவமாக இருக்கும்.
He would admit no other emergence.
அதைத் தாண்டிய நிலையில் எந்த வெளிப்பாட்டையும் அவர்களால் ஏற்க முடியாது.
He would see nothing beyond these principles.
அதைக் கடந்த எந்த தத்துவத்தையும் அவர்களால் காண முடியாது.
Up till now these have traced our limit and circle.
இதுவரை இவையே நம் எல்லையாகவும், பரிணாமத்திற்கான சுழற்சியாகவும் இருந்தன.
This human creature in this progressive world has a divine
spark.
பரிணாமம் பெறும் இவ்வுலகில், இந்த மனித ஜீவனுக்குள் தெய்வக்கனலின் பொறி உண்டு.
Real wisdom with him is likely to be the higher aspiration.
உண்மையான விவேகத்தைப் பெறுவது அவனுடைய உயர்ந்த ஆர்வமாக இருக்கலாம்.
It is not with the denial of aspiration.
அது ஆர்வத்தை மறுப்பதல்ல
It is not with the hope that limits itself.
அது ஆர்வம் தன்னை வரையிட்டுக் கொள்வதும் அல்ல
It is not with the hope that circumscribes itself.
அது ஆர்வம் தன்னை கட்டுப்படுத்துவதும் அல்ல
That would be within narrow walls of apparent possibility.
அது சாத்தியமானதைக் குறுக்குவதாகும்
They are only our intermediate house of training.
இவை நம் பயிற்சிக்காக இடையில் ஏற்பட்டவையாகும்
There is a spiritual order of things.
ஆன்மீக விஷயங்களுக்கான ஒரு ஒழுங்கு முறை உள்ளது.
In that, the higher we project our view, the greater the Truth.
அதில், எவ்வளவு உயர்வாக நாம் நம் எண்ணத்தைச்  செலுத்துகிறோமோ அவ்வளவு உயர்வான சத்தியம் புலப்படும்
That Truth seeks to descend upon us.
அந்த சத்தியம் நம்முள் இறங்க விழைகிறது.
It is already there within us.
அது ஏற்கனவே நம்முள் புதைந்து உள்ளது.
It calls for its release from the covering.
திரையின் பின் மறைந்துள்ள அது வெளிவர குரலெழுப்புகிறது.
That covering conceals it in manifested Nature.
அத்திரை அதைச் சிருஷ்டிக்குள் ஒளித்து வைக்கிறது.
 
முற்றும்

 

******

ஜீவிய மணி

உலகில் நடப்பவை அனைத்தும் அருளால் என்றாலும், மனிதன் சிலவற்றை மட்டும் விரும்புகிறான். அந்தத் தேவைகளையும், ஆசைகளையும் மட்டும் பூர்த்தி செய்வது இறைவன் கடமை அல்ல. அவை பூர்த்தியான பின்னரே தன்னை மனிதன் நினைப்பான் என்பதால் இறைவன் மனிதனிடம் இல்லறத்தைப் பூர்த்தி செய்து, துறவறத்தை மேற்கொள்ளும் அமைப்பை ஏற்படுத்தினான். மனிதனுடைய சுயநலமான ஆசைகளைப் பூர்த்தி செய்வதைத் தம் பரநலமான இலட்சியமாகக் கொண்டவர் அன்னை. இறைவனின் திருவுள்ளத்தைப் பூவுலகில் சொர்க்கமாக மனிதன் அனுபவிக்க அவதாரம் எடுத்த அன்னை அவனுக்கு அளவு கடந்து வாரி வழங்குபவைகளில் முக்கியமானவை இரண்டு:

  1. அபரிமிதமான அதிர்ஷ்டம்
  2. அளவுகடந்த பாதுகாப்பு

மிகமிக ஆர்வமாக, மனிதன் கண்களை மூடி, இவற்றிலிருந்து விலகி, தன் நாடி நரம்புகள் விரும்பும் சுவையை ஆர்வமாக நாடுவதையே தன் வாழ்வு எனக் கொள்கிறான். சுவையை ஏற்று அதில் அமிழ்ந்தால் சுவை மனிதனை அழிக்கும். உலகில் இன்று இல்லாத அதிர்ஷ்டத்தையும் பாதுகாப்பையும் அன்னை வழங்குவதை முறையாக ஏற்றுப் பலன் பெறுவது வாழ்க்கைக்கு உகந்தது.

******* 

ஜீவிய மணி

எச்செயலைச் செய்தாலும் வெற்றி உறுதி எனும் நிலையை இராசி, அதிர்ஷ்டம் என்கிறோம். பொதுவாக எங்கெங்கு சக்தி உபரியாக உள்ளதோ, அங்கெல்லாம் அதிர்ஷ்டத்தின் இரகஸ்யம் உறைகிறது. அதிர்ஷ்டம் என்பது உழைப்பு, பணிவு, சூட்சும அறிவு என உயர்ந்த அடிப்படைகளில் பொதிந்துள்ளது. இந்த உண்மையை ஸ்ரீ அரவிந்தம் ஏற்கிறது. ஆனால் இது உண்மையின் பகுதி மட்டுமே. இதையும்விட முழுமையான உண்மை எது? அதிர்ஷ்டத்தின் தோற்றம் - தாழ்ந்த பிறப்பு, புறக்கணிப்பு, ஆதரவற்ற நிலை, தொடர்ந்து வரும் தோல்வி போன்ற, தாழ்ந்த அடிப்படைகளில் அமையும் என்பதே அது. இன்னும் கெட்ட பெயர், கடுமை, நோய், துன்பம் போன்றவற்றில் அதிர்ஷ்டத்தின் இரகஸ்யம் உறைகிறது என்பது ஸ்ரீ அரவிந்த தத்துவம். இந்த இரகஸ்யம் இரு பகுதிகளாக உள்ளது:

  1. தாழ்ந்ததை உயர்த்தும் போது பலன் அபரிமிதமாக வரும் எனும் தத்துவத்தை மனமும் உணர்வும் ஏற்க வேண்டும்.
  2. அதற்குரிய முயற்சியைப் பழைய மன நிலையுடன் மேற்கொள்ளாமல் புதிய நிலையுடன் நிறைந்த மகிழ்வுடன் செய்ய வேண்டும். அதாவது, என் முயற்சி சத்திய ஜீவிய முயற்சி என அறிதல் வேண்டும்.

********

 



book | by Dr. Radut