Skip to Content

11. சூட்சும விஷயங்கள் ஜட விஷயங்களைவிட சக்தி வாய்ந்தவை

சூட்சும விஷயங்கள் ஜட விஷயங்களைவிட சக்தி வாய்ந்தவை

என். அசோகன்

ஒரு விஷயம் எவ்வளவுக்கெவ்வளவு சூட்சுமமாக இருக்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு அது சக்தி வாய்ந்ததாக இருக்கும் என்கிறார் ஸ்ரீ அரவிந்தர். சமூக வளர்ச்சிக்குரிய முப்பத்திரண்டு கருத்துகளில் இதுவும் ஒன்றாகும். ஓர் அறையைத் துரியோதனன் வைக்கோல் மூலமாகவும், தருமபுத்திரர் வாசனை திரவியங்கள் மூலமாகவும் நிரப்ப முயன்ற மகாபாரதக் கதை மூலம் இக்கருத்துகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. மிகப்பெரிய சொத்து ஒன்று ஒரு சிறிய காசோலை வடிவிலும் அடங்கி விடுகின்றது. அதிலுள்ள கையெழுத்து அதற்குரிய சூட்சும சக்தியினைத் தாங்கி வருகிறது. மிகப் பெரிய கிராமப்புறமாக விளங்கும் இவ்வுலகத்தில் சக்தி உறைவது ஜட பூமியில்தான். கடந்த ஓரிரண்டு நூற்றாண்டுகளாகத்தான், நகர்ப்புறத்தை நோக்கி மக்கள் குடிபெயர்வதைப் பார்க்கிறோம்.

நகரங்கள், முக்கியமாக அவற்றின் தலைநகரங்கள் கல்வி, கேளிக்கை, வியாபாரம், வணிகம், வங்கிகள், மற்றும் பண்பாட்டுத்துறை, மேலும் அதிகாரம் இவற்றின் உறைவிடமாக விளங்குகின்றன. ஒவ்வொரு வகையில், ஒவ்வொன்றின் சூட்சுமம் தனிப்பொருளாக வெளிப்படுகிறது. கிராமத்தின் அடையாளம் பூமி, நகரத்தின் அடையாளம் பணம். பல்கலைக் கழகங்கள், நகரத்தின் பண்பாட்டுச் சின்னங்களாக இருக்கின்றன. புதியதாகத் தோன்றிய நாடுகளில் கிராமம் என்பதே கிடையாது. அப்படி ஒரு கிராமம் ஏதேனும் இன்னமும் இருந்தால் அங்கு நகரத்தின் எல்லா வசதிகளும் இருக்கும். வோர்ட்ஸ்வொர்த் (Wordsworth) எனும் கவியின் காலத்தில் பதினைந்து மைல்கற்கள் நடப்பது என்பது தினசரி அங்கமாக விளங்கியது. இன்று சிறிய ஊர்களில்கூட பேருந்துகள் உள்ளன. ஒரே தெருவில் அவற்றிற்கு இரண்டு நிறுத்தங்களும் இருக்கும். Pride and Prejudice எனும் கதையில் தாயார் மிகவும் சுறுசுறுப்பானவள், குடும்பத்திற்கே தன்னை அர்ப்பணித்துக் கொண்டு, ஆற்றல் வாய்ந்தவளாகச் செயல்பட்டு எப்படியாவது தன் பெண்களுக்குத் திருமணம் நடத்தி முடித்துவிட வேண்டும் என்று தீவிரமாக நடந்து வருகிறாள். அவளிடத்திலோ, அவள் செயல்படும் விதங்களிலோ அல்லது அவளுடைய பலத்திலோ (power) எந்த விதமான சூட்சுமமும் தென்படுவதில்லை. தாயாரின் முயற்சி மிகச் சிறிய அளவில்தான் நடக்கிறது. அப்படியே நடந்து முடிந்தாலும் அதன் பலன் கெடுதலில் முடிகிறது. ஜேன் அமைதியான, மென்மையான குணம் உடையவளாய், தன் உணர்வுகளை வெளிக்காட்டாத பெண்ணாய் திகழ்கிறாள். லிசி துறுதுறுப்பானவள், கலகலப்பானவள். கேட்பது என்பதோ, நாடுவது என்பதோ அவளிடத்தில் இல்லை.

ஆனால் இக்கதையின் மிகப்பெரிய பரிசு அவளைத் தேடி வருகிறது. மிகச் சிறந்த பண்பாளன் எனும் ஒரு நல்ல குணமே டார்சியின் சூட்சும சக்தியாக விளங்குகிறது.

பொருள் ரீதியாக வாழும் நமது வாழ்க்கை மிகவும் சாதாரணமானது. ஆனால் அதனுடைய உயர்ந்த சிறப்பம்சங்கள், சூட்சும பண்பாட்டின் சிகரத்தில் உறைகிறது. ஒரு தாயார், தன்னுடைய குழந்தைக்குத் தேவையான உணவளித்து, உடையுடுத்தி, எல்லாவித வசதிகளையும் செய்து தருகிறார். அக்குழந்தையைக் கவனித்துக் கொள்ளும் செவிலித் தாயார் அக்குழந்தை ஏங்கும் அன்பு மொத்தத்தையும் அள்ளித் தருகிறார். இந்தக் குழந்தையின் விருப்பம் அச்செவிலித் தாயாராக இருக்குமே தவிர, பெற்றெடுத்த தாயாரிடம் அன்பு இருக்காது.

பத்து பணியாளரை நிர்வகிக்கும் பொறுப்பு என்னுடையதாக இருந்தது. அவர்களுக்குச் சம்பளம் கொடுப்பதும் நான்தான். என் சொற்களை மீறாமல் நடந்து வந்தனர். ஒரு நாள், முதலாளி ஊருக்குத் திரும்பி வந்துள்ளதாகச் செய்தி வந்தது. வந்தது சூட்சுமமாக இருந்தாலும், அச்செய்தியே அவர்களை மேலும் ஆர்வமாக வேலை செய்ய வைத்தது. விக்காமிற்கு பணம், அந்தஸ்து எதுவும் இல்லாதபோதிலும் அவனுடைய நடத்தை எல்லோரையும் கவரும் வண்ணம் இருந்தது. அவனுடைய சுயரூபம் வெளிப்படும்வரை மெரிட்டனில் இருந்த அத்தனை பெண்களும் தங்கள் சுயக்கட்டுப்பாட்டிலேயே இல்லை. அவனுடைய கவர்ச்சி அவனுடைய சூட்சுமமாக விளங்கியது.

1930-ஆம் வருடத்தில் ஓர் சமஸ்கிருத பண்டிதர் ஆசிரமத்தில் சேர்ந்தார். அவர் சென்னையில் வசித்த காலத்தில் அவரைச் சுற்றி சில சிஷ்யர்கள் இருந்தனர். அவர்களில் ஒருவர் கல்லூரிப் பேராசிரியர். இங்கு வந்ததில், The Life Divine-ன் மிகப் பெரிய ஆன்மீகச் சிறப்பு அப்பண்டிதருக்குத் தெரிய வந்தது. ஆர்யா எனும் பத்திரிக்கையில் தொடராக வெளிவந்த போதும், அதனை வாங்க முடியாத நிலையில் அவர் இருந்தார். ஆண்டுச் சந்தா அப்பொழுது எழுபத்தி ஐந்து பைசா. ஒரு மளிகைக் கடைக்காரருக்கு அப்பத்திரிக்கை இலவசமாக கிடைத்து வந்தது. ஆனால் அவருக்கோ அதனைப் படிக்கத் தெரியாது. அப்பதிப்பினை வாங்கி வருவதற்கு அப்பண்டிதர் ஒவ்வொரு முறையும் ஐந்து மைல் தூரம் நடந்து செல்வார். ஆசிரமத்திற்கு வந்தபின் அப்புத்தகத்தின் ஆன்மீக சக்தியினைப் புரிந்து கொண்டார். சென்னையில் இருக்கும் தனது பழைய சிஷ்யர்களும் அதன் பலனைப் பெற வேண்டும் என விரும்பினார். ஒருமுறை தன்னைச் சந்திக்க வந்தவரை நோக்கி புதன்கிழமை தோறும் நடக்கும் The Life Divine வகுப்பிற்கு பொன்னுசாமியைப் போய் கேட்கச் சொல்லவும் என்றார். செய்தியும் சென்றடைந்தது. அவர் இறக்கும்வரை அப்பணி தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டது. குருவின் வார்த்தைகள் சூட்சுமமான ஆணைகள். வண்டிக் கயிற்றால் கட்டப்பட்டது போல், சிஷ்யர்கள் ஆணைக்குக் கட்டுப்பட்டவர்கள். பவர் சூட்சுமமானது. சூட்சும பவர் அதிக வலிமையுள்ளது.

உண்மையில் கவிஞர்கள்தாம் சமூகத்தின் தலைவர்கள் எனலாம். நினைவு தெரிந்த நாளிலிருந்து அவர்கள் அரசர்களுடனும், சமூகத்தின் மாபெரும் சக்தியுடனும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தனர். அது அவர்களுக்குப் பெரும் புகழைத் தேடித் தந்தது. ஆனால் அப்பெரும் புகழ் அவர்களைச் செல்வந்தர்களாக ஆக்கவில்லை. இது உலகளாவிய உண்மை. நூறாவது முறை ஷேக்ஸ்பியரின் நாடகங்களைப் படித்தாலும், அதனுடைய புத்துணர்ச்சி மாறாமல் அப்படியே படிக்க முடிகிறது என ஸ்ரீ அரவிந்தர் கூறுகிறார். சில படைப்புகளைப் பாராட்டும்பொழுது, ஷேக்ஸ்பியருக்கு நிகராக இருப்பதாக ஷா (பெர்னாட்ஷா) கூறியுள்ளார். புரிவாற்றல் மிக்கவர்களுக்குத் தங்களுடைய வாழ்க்கையில் அமைந்த சந்தோஷமான நேரங்களெல்லாம் கவிதைக்குரிய நேரமாக விளங்கியது புரியும். காதல் வயப்பட்டவருக்கு, வாழ்க்கை கவிதை போலிருக்கும். உற்சாகம் நிறைந்த உள்ளத்திற்கு வயதே ஆகாது. அவர்கள் மேலும் இளமையாகத்தான் திகழ்வர். இனிமையான காதல் உணர்வுடைய ஆண்கள், தங்களுடைய வாழ்க்கையின் பிற்பகுதியில், சில சமயங்களில் தங்கள் மனைவியுடன் உணர்வுபூர்வமான தருணங்களை அனுபவித்திருப்பர். அவை கவிதைக்குரிய நேரமாக விளங்கியிருக்கும். விஸ்வாசமாக இருக்கும் தொழிலாளிகளை, முதலாளிகள் பெரும்பாலும் மறந்து விடுவர். ஓய்வு பெற்ற பிறகு, தாம் மறந்து விட்டிருக்கும் தொழிலாளிகளைச் சந்திக்க நேரும்பொழுது, அவர்கள் காட்டும் மனிதத் தன்மையும், விஸ்வாசமும் அவர்களை நெகிழவைக்கும்.

வாழ்வின் பிற்பகுதியில் நடக்கும் சம்பவங்கள், ஒருவருடைய ஆழத்தில் புதைந்திருக்கும் பக்தியை வெளிப்படுத்தும் வண்ணம் இருக்கும். மேலும் அவருடைய தைரியத்தை வெளிக்கொண்டுவரத் தூண்டும் வண்ணமுமாகவும் இருக்கும். டான்டே என்பவர் ஹேடிக்கு (Haydee) பாதுகாவலராகவும், தந்தையாகவும் இருந்தார். 100 மில்லியன் ஃப்ராங்க் மதிப்புள்ள சொத்தின் உயில் பத்திரத்தைக் கிழித்துப் போட்டது அவளுக்கு அவர்மேல் இருந்த வெளிக்காண்பிக்காத அன்பினை தெரிவிக்கும் வண்ணம் இருந்தது. அவள் பெருந்தன்மை உடையவளாக விளங்கினாள். அவளுடைய உணர்வுகளும் பெருந்தன்மை மிகுந்ததாக இருந்தது. ஊழல் மிக்க ஒரு நீதிபதி தகாத செயல் புரிபவராக மாறியிருந்தார். திருட்டுப் போன வைர நெக்லஸ் அவரிடம் இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. ஆனால் சட்டத்தினால், அவருக்கு இடமாற்றம் என்ற தண்டனையைவிட பெரிய ஒரு தண்டனையை அளிக்க முடியவில்லை. ஒரு சமயம் அவர் இலஞ்சம் வாங்கிக் கொண்டு ஒருவரை கைது செய்யும் ஆணையைப் பிறப்பிக்கும் மிகக் கொடிய செயலைச் செய்ய நேரிட்டது. பாதிக்கப்பட்டவர், இதற்கு எதிராக இலஞ்சம் கொடுத்துத் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் நிலைமையில் இல்லை. இவருடைய வழக்கறிஞருக்கு மிகவும் கவலையாகி விட்டது. பாதிக்கப்பட்டவரின் நண்பர் ஒருவர், இந்த நீதிபதி ஆதி நாளில் தங்கள் இல்லத்தில் வசித்து வந்ததால், எலிமெண்டரி பள்ளி ஆசிரியரான தன்னுடைய தகப்பனாருக்கு இந்த நீதிபதியிடம் கணிசமான செல்வாக்கு இருந்ததாகத் தெரிவித்தார். இதைக் கேட்ட வழக்கறிஞர் நம்ப முடியாமல், கோபமடைந்தார். இருப்பினும் பாதிக்கப்பட்டவர் இவ்வாசிரியரின் உதவியை நாடினார். கைது செய்யப் பிறப்பிக்கப்பட்ட ஆணை ரத்து செய்யப்பட்டது. இவ்வாறு நிலைமை மாறியதை வழக்கறிஞரால் நம்பவே முடியவில்லை. நீதிமன்றத்தில் இவ்வயதான நபர் இருந்ததால் மட்டுமே, இவ்வளவு பெரிய மாறுதல் ஏற்பட்டுள்ளதா என அவர் ஆச்சரியப்பட்டார்.

மந்திரங்களுக்கு சூட்சும சக்தியுண்டு. அதே பலனைத்தர வல்லது ஸ்ரீ அரவிந்தரின் புத்தகங்கள். தேள் கொட்டிய பூனையை, ஸ்ரீ அரவிந்தருக்கு முன்னால் ஒரு மேஜைமீது, அன்னை அமரச் செய்தார். இருபது நிமிடங்கள் கழித்து விஷத்தன்மை முற்றிலும் நீங்கி அப்பூனை குதித்து ஓடியது. ரோமாபுரி தேவாலயத்தில், மண்டியிட்டு பிரார்த்தனை செய்து கொண்டிருக்கும் ஓர் அம்மையாரை, எட்டுக்கால் பூச்சி போல் தோற்றமளித்த ஓர் கெட்ட ஆவி அவருடைய சக்தியினை உறிஞ்சிக் கொண்டிருந்ததை அன்னை பார்த்தார்.

சிறு தெய்வ வழிபாடு கூடாது என இராமலிங்க சுவாமி கூறியுள்ளார். பிரபலமாக இருக்கும் கோயில்கள் அனைத்திலும், முதலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட முருகரும், கிருஷ்ணரும் இப்பொழுது முதன்மையாக இல்லை. நாளாக ஆக கோயிலில் வழிபட வரும் பக்தர்களின் உணர்வுகளுக்கேற்ப, அவர்களுடைய உணர்வுகளைத் திருப்திப்படுத்தும் வகையில் சிறு தேவதைகளே கூட்டம் கூட்டமாக வசிக்கின்றன. அவை ஒரு பிரார்த்தனையைப் பூர்த்தி செய்து கொடுத்து நம்பிக்கையை ஏற்படுத்தி விடுகின்றன. பிறகு, பக்தர்கள் தங்களை விட்டுப் போய்விட்டால் அவர்களைத் தண்டிக்கின்றன. கல்வி அறிவு உயர்ந்து விளங்கும் ஐரோப்பிய நாட்டு மக்களும் இம்மாதிரியான வழிபாட்டிற்கு அதிக அளவில் பலியாகின்றனர்.

கணவரின் உயிரைக் காப்பாற்றும் சூட்சும சக்தியான மாங்கல்ய பலத்தைப் பற்றி நான் பல முறை வலியுறுத்தி வருகிறேன். மீன் பிடிப்பவரின் சமுதாயத்தில் இதனை முற்றிலுமாகக் காணலாம். இதுவே அவர்களை நேர்மையாகவும் இருக்க வைக்கிறது.

ஒரு ஸ்தாபனத்தை உருவாக்கியவரே, அந்த ஸ்தாபனத்தின் உயிராகவும் விளங்குவார். அவரே அந்த ஸ்தாபனத்தின் ஆன்மா என்றால் மிகையாகாது. தன்னுடைய உள்ளத்தையும், உயிரையும் அவ்விடத்திற்கு அவர் அளிப்பார். ஒரு விடுதிப் பெண்ணால் தொடர்ந்து ஆதரிக்கப்பட்ட பீட்டர் என்ற பேரரசரை அவ்விடத்தின் ஆன்மா அவரை ஓர் பெண்ணாகவே பேணுகிறது. பின்னால், அவ்விடத்திற்கு ஒரு பெண்மணியே வந்து வசிப்பது இதனை உண்மை எனக் காண்பிக்கிறது. எல்லா பழைய பண்பாட்டு முறைகளிலும், இந்தச் சூட்சும வாழ்வின் பலதரப் பட்ட கோணங்கள், அவைகளுக்குத் தகுந்தவாறு உருவாகியது. இதில் ஒன்று என்னுடைய தனிப்பட்ட கவனத்திற்கு வந்தது. அடக்கம் செய்வது என்பது கிறித்துவ சம்பிரதாயத்தில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த விஷயமாகும். உயிலில்கூட அதைப் பற்றி ஒரு பகுதி எழுதப்பட்டிருக்கும். நம்முடைய பழைய நம்பிக்கைக்கு மாறாக ஸ்ரீ அரவிந்தர் இந்தியாவின் ஆன்மீகத் தன்மையைப் பற்றிப் பேசுகிறார். இந்தியர்கள் மற்றவர்களைக் காட்டிலும் ஆன்மீகத்தில் உயர்ந்தவர்கள் என்பது நம்முடைய பரவலான அபிப்பிராயம். பகவானோ இதை மறுக்கிறார். ஆன்மாவைப் பொறுத்தவரையில் இந்தியர்களும் மற்றவர்களைப் போல்தான் என்று கூறுகிறார். ஆனால் இந்த மண் ஆன்மீக பலம் கொண்ட ஆன்மீகத் தன்மையால் நிரப்பப் பட்டுள்ளது என்கிறார். அப்பல்லோ பந்தரில் அவர் அனுபவித்த பேரமைதியும், அமெரிக்க அன்பர், இந்தியாவின் சுவாசக்காற்றில் உணர்ந்த அமைதியும் நமக்கு நன்றாகத் தெரியும்.

ஆன்மீகத்தைத் தேடி இந்தியாவிற்கு வரும் மேல்நாட்டார், அதனை இந்தியர்களிடம் தேடாமல், இந்திய மண்ணில்தான் தேடுகிறார்கள். இந்தியாவில் ஆன்மீகம் நேர்த்தியாக நிறுவப்பட்டு, இந்திய மண்ணில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. அதற்குமேல் அது எழும்பவில்லை என்று பகவான் கூறுவதாக எடுத்துக் கொண்டாலன்றி வேறு எப்படி எடுத்துக் கொள்வது என்று எனக்குப் புரியவில்லை. ஆங்கிலேயரால் காப்பாற்றப்பட்ட இந்தியாவின் எல்லை ஒற்றுமை எவ்வாறு பாகிஸ்தானால் அழிக்கப்பட்டதோ, அதே போல் பாகிஸ்தான் எனும் நாடு மறைந்து, இம்மண் ஜடத்தன்மையிலிருந்து முதிர்ச்சி பெற்று உயருவதற்காக மட்டுமே இந்திய ஆன்மா காத்துக் கொண்டிருக்கிறது என்று என்னால் பொருள் கொள்ள முடிகிறது. இந்தியாவின் நிலைமை எப்படி இருந்தாலும், கிறித்துவ மதத்தின் புதைப்பது என்பதன் முக்கியத்துவம் வேறு விதத்தில் செயல்படும். எனக்குத் தெரிந்த ஒரு ஸ்தாபனத்தை நிறுவிய ஒரு பாதிரியார், தன்னை வளர்த்த நிறுவனத்தின் குறிக்கோளுக்கு எதிராக, தன்னுடைய ஆற்றலாலும், சிரத்தையான உழைப்பாலும் அதனை வளர்த்தார். ஆனால் அவர் ஓய்வு பெறுவதற்குமுன் ‘புதைப்பது’ எனும் கிறித்துவப் பழக்கம் அவரை ஆட்கொள்ள ஆரம்பித்தது. அதனால் தன்னுடைய கல்லறையை அவரே கட்ட ஆரம்பித்தார். வாழ்வின் எதிöராலியாக, குழந்தை போல் பாவித்து வந்த அவர் நிறுவிய ஸ்தாபனத்திலிருந்து அவர் விலக்கப்பட்டார். அவர் கட்டிய கல்லறை அவருடைய குறிக்கோளிற்குக் கல்லறையாக அமைந்தது.

சூட்சும உலகமும், அதனுடைய சட்டங்களும் அன்பர்களின் வாழ்வில் முக்கியமாக பாதுகாப்பிற்குத்தான் முனைப்புடன் செயல்படுகிறது. ஆசிரமத்திற்கு முதன்முதலாக அழைக்கப்பட்ட ஒருவர், பாண்டிச்சேரி செல்வதற்காக, பேருந்து நிலையத்திற்குச் சென்றார். பேருந்து நிலையத்தில் திருவிழாக் கூட்டம், கார் சவாரி என்பதே தெரியாமல் இருந்த சுமார் ஐம்பது ஆண்டுகளுக்குமுன், அவருக்குப் பாண்டி செல்ல கார் ஏற்பாடு செய்யப்பட்டது. அன்னையின் சூழல் செயல்படும் விதம் இப்படித்தான் இருக்கும். அந்த கிறித்துவ பாதிரியாரின் ஸ்தாபனத்தில் இந்த அன்பர் மட்டுமே உண்மையாக இருந்தவர். பாதிரியாரின் சேவையைப் பாராட்டும் வெள்ளி விழாவினை பயன்படுத்திக் கொண்டு அன்பரை வேலை நீக்கம் செய்ய, பொறாமை பிடித்த சிலர் செயல்பட்டனர். தனக்கு இஷ்டம் இல்லாமலேயே பாதிரியார் அவ்வலைக்குள் சிக்கிக் கொண்டார். அன்பர்களைச் சுற்றி தங்கக் கவசம் போல் அமைந்திருக்கும் பாதுகாப்பு வளையத்தைப் பற்றி அவருக்கு எப்படி தெரிந்திருக்க முடியும்? வாழ்வின் சட்டம் இங்கு செயல்பட்ட விதம், உண்மையாக வேலை செய்த ஒருவரை மிகவும் சங்கடத்திற்குள்ளாக்கியது. மேலும் சிரத்தையாகக் கட்டிக் காப்பாற்றிய தன் முப்பது வருட உழைப்பை அழிக்கும்படியும் நேர்ந்தது. சூட்சுமம் ஜடத்தைக் கடந்த சக்தி வாய்ந்தது.

ஒருவர், தான் உடற்பயிற்சி செய்யும்பொழுது, kindle என அழைக்கப்படும் உபகருவி மூலம் புத்தகங்கள் படிப்பதை வழக்கமாக்கி விட்டிருந்தார். ஒரு நாள் அவர் எப்பொழுதும் வைக்கும் இடத்தில் அந்த kindle-ஐக் காணவில்லை. தேடியபொழுது, அது அவர் உடற்பயிற்சி செய்யும் மெஷினின் அருகில் இருந்தது. எவரோ அங்கு கொண்டு வந்து வைத்திருக்க வேண்டும் என அவர் எண்ணினார். ஆனால் அவருடைய படிக்கும் ஆர்வத்திற்கு மதிப்பு அளிக்கும் வகையில் சூழல் செயல்பட்டு சூட்சுமமாக அக் kindle-ஐ அங்கு கொண்டு வந்து வைத்தது என்பதை அவர் உணரவில்லை. இதற்கு முன்னால் என்னுடைய எழுத்துகளில், எப்படி ஒரு பணப்பை, பாஸ்போர்ட்டுடன், அன்பரின் பிரார்த்தனைக்குக் கட்டுப்பட்டு புல்வெளியில் கிடைத்தது என்பது பற்றி குறிப்பிட்டு இருக்கிறேன். ஆனால், எவ்வாறு சூட்சும சக்தி செயல்பட்டு, அந்த இடத்தில் பணப்பையைக் கொண்டு வந்து சேர்த்தது என்பதனை படித்தவர்கள் அனைவரும் உணரத் தவறி விட்டனர்.

இலக்கு இல்லாமல் இருப்பதைவிட ஒரு குறிக்கோளோடு வாழ்வது உயர்ந்தது. சாதாரண வாழ்க்கை பொருள் ரீதியாக இருக்கும். குறிக்கோளோடு வாழும் உயர்ந்த வாழ்க்கை சூட்சுமமாக இருக்கும். ஆனால் உண்மை என்னவென்றால், இவ்வுயர்ந்த வாழ்க்கைக்கும் பொருள் பலம் இல்லாமல் முடியாது. குடும்பம், கட்சி, ஸ்தாபனம், அரசு என எல்லாவற்றிற்கும் இது பொருந்தும். ஆன்மீக வாழ்விற்கு இது பெரிய அளவில் உண்மையாக உள்ளது. ஓர் ஆன்மீகவாதியோ அல்லது ஒரு குற்றவாளியோ அவர்களுடைய இறுதிக் காலத்தில் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தனர் என்பது நாம் கேள்விப்படாதது. எந்த உயர்ந்த வாழ்வும், வெற்றி பெறுவதற்கு அடிப்படையாக பொருள் ரீதியிலும் முன்னேற்றம் அடைந்திருக்க வேண்டும் என்ற உண்மையைத்தான் இது வலியுறுத்துகிறது.

பிரபலத்தை அளக்கலாம், ஆனால் புரிந்து கொள்ள முடியவில்லை. வாழ்வின் குணத்தைப் பொறுத்து சூட்சுமம், gross, பொருள் இவை மூன்றும் கலந்து இருக்கும். வாழ்க்கையை புரிந்து கொள்ளாதவரால், பிரபலத்தையும் புரிந்து கொள்ள முடியாது. வாழ்க்கை ஒரு கண்ணாடி எனும் சொற்பதத்தைக் கண்டுபிடித்தவர் ஷேக்ஸ்பியர். அவருடைய நாடகங்களில் இதனை வெளிப்படுத்தினார். உலகம் முழுவதிலும் அவருடைய எழுத்துக்கள் படிக்கப்பட்டிருந்தாலும், இரண்டு நூற்றாண்டுகளாக, அவர் இங்கிலாந்தில் மறக்கவும்பட்டிருந்தார். சூட்சும வாழ்க்கையிலும், ஜட வாழ்க்கையிலும் பிரபலத்திற்கு என்ன வேலை இருக்கிறது. பிரபலத்தில்தான் சூட்சுமமும் (materiality), ஜட வாழ்க்கையும் சரியான விகிதத்தில் கலந்திருக்கும். உண்மைக்குள் எல்லா உயர்ந்த ஞானமும் இருக்கும். இதுதான் சூட்சுமத்தின் உச்சக்கட்ட ஞானமும் ஆகும். வியாசருக்கு மகாபாரதக் கதையை எழுத ஒருவர் தேவைப்பட்டார். தான் எழுதும் வேகத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில் செய்யுள்களை உரைக்க வேண்டும் என்ற ஒப்பந்தத்திற்கு விநாயகப் பெருமான் எழுத முன்வந்தார். தெய்வ லோகத்திற்குரிய தெய்வம் விநாயகர். அந்நிலைக்கு வாழ்வு கட்டுப்படவில்லை. சத்திய ஜீவிய அளவில் மட்டுமே வாழ்வு கட்டுப்பட்டு வந்தது. சத்திய ஜீவியத்தில் வாழ்வின் ஒரு துளி சக்திகூட வீணாகப் போகாது. இயற்கையில் விரயமே கிடையாது. விரயம் என்பதே இல்லை எனும்பொழுது எல்லா சக்தியும் சேர்ந்து பூரணமாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறது. அந்நிலையில் விநாயகர் இல்லை. சத்திய ஜீவிய நிலையில் பிறந்தாலும், வாழ்வது தெய்வ லோகத்தில்தான். வியாசர் ரிஷி என்பதால் ஒரு வகையில் விநாயகரையும் மிஞ்சும் நிலை பெற முடியும். தான் சொல்வதைப் புரிந்து கொண்டு எழுத வேண்டும் என்று வியாசர் வலியுறுத்தினார். ஆதலால், எழுத முன்வந்த விநாயகப் பெருமானால் ஜெயிக்க முடியவில்லை. மகாபாரதத்தில் சூட்சும உண்மைகளை ஜட எழுத்து வெளிப்படுத்துகிறது.

தீமைக்கு எதிராக நடத்திய தர்ம போர்தான் மகாபாரதக் கதை. பவர் இருப்பது தீமையின் அணியில். இப்பக்கம் இருந்த துரோணாச்சாரியாரிடம் தீர்மானிக்கும் பவர் (சக்தி) இருந்தது. கௌரவ அணியின் மூதாதையரான பிதாமகர் பீஷ்மரும் அவர் அணியில்தான் இருந்தார். தர்மம் ஆட்சி புரிந்த பூமி அது. சக்தி, சொத்து, பணபலம், சட்டம், நீதி எல்லாமும் தவறான பக்கத்தில் சேர்ந்து விட்டிருந்தது. மனித சுபாவத்தின் கலாச்சாரம், பண்பாடு, மரியாதை இவைகளே நேர்மையான அணி தோற்பதற்கு வழி வகுத்தன. சூதாட்டத்தில் தருமருக்கு மிகுந்த நாட்டம் இருந்தது. சகுனியிடம் மந்திர தாயம் இருந்தது. இவற்றிற்கு இடையே, எல்லாம் தோற்றுப்போனது. இதுதான் வாழ்வின் சுபாவம், சூட்சும வாழ்வின் சுபாவமும் கூட. பரமபதம் போல் சூட்சும வாழ்க்கை, ஒரு கோடியிலிருந்து மற்றொரு கோடிக்குக் கொண்டுபோய் சேர்க்கும் திறனுடையது. தர்மம் அவர் தலையைக் காக்கவில்லை. பின்னர் எவ்வாறு அவர்கள் காப்பாற்றப்பட்டனர்? நம்ப முடியாத அளவிற்கு, நம்மால் ஜீரணிக்க முடியாத அளவிற்கு ஏதோ ஒரு சூட்சுமம் செயல்பட்டு எல்லோரையும் காப்பாற்றியது. அது பக்தி. திரௌபதிக்கு கிருஷ்ணர் மேலிருந்த அசைக்க முடியாத நம்பிக்கை, கடவுளிடம் இருந்த பக்தி எல்லோரையும் காப்பாற்றியது. பக்தி சூட்சுமமானது. பூஜை ஜடமானது. ஜடமான பூஜைக்கு பலனளிப்பது சூட்சுமமான பக்தி. சூட்சும தொடர்புகள் எவ்வாறு முன்னணிக்கு வருகின்றன என நமக்குத் தெரியாது. வயலைச் சுற்றி வரும்பொழுது, ஒரு பகுதியினை கவனிக்கத் தவறி விட்டால் அவ்வயல் பகுதி எவ்வாறு வருத்தப்படும் என்பதை ஒரு விவசாயியாவது புரிந்து கொண்டார்.

இந்துக்களை அழிக்கும்படி ஆகஸ்ட் 16, 1946 அன்று முஸ்லீம்களுக்கு, ஜின்னா ஓர் அழைப்பு விடுத்தார். கல்கத்தாவில் அப்பொழுது முக்கிய மந்திரியாக இருந்தவர் ஒரு முஸ்லீம். அவர் ஆவேசத்துடன் செயல்பட ஆரம்பித்தார். சட்டமும் உள்நாட்டுப் பிரச்சனை ஆகும். எல்லைப் புறத்தில் நடப்பது போர். ஒரு நாடு தாக்கப்பட்டால் எல்லோரும் எழுந்து எல்லையைக் காக்க முற்படுவர். உள்நாட்டுக் கலகம் என்பது வேறு ஒரு பரிமாணம் ஆகும். நாட்டைக் காக்க நாட்டுப் பற்று எழுந்து நிற்கும். மனித குலத்தின் அல்ப குணம், சமூக சச்சரவில் தன்னையே ஈடுபடத் தூண்டுகிறது. இன உணர்வுகளை தட்டி எழுப்பி, தலைவர்கள் மனித சக்தியைத் தவறாகப் பயன்படுத்துகின்றனர். காவல் துறை என்பது கட்டுக்கோப்பான ஒரு கூட்டமைப்பு ஆகும். இராணுவம் இதனினும் ஒருபடி உயர்ந்தது. நம் நாட்டுத் தலைவர்களுக்கு எதிராக இந்தியக் காவல் துறை மிகத் துல்லியமாக தங்களுடைய ஆணைகளை செயல்படுத்துகிறது என்பதை ஆங்கிலேய ஆட்சி புரிந்து கொண்டது. இது ஒரு சாதாரண பயிற்சி அல்ல. ஆனால் ஆழமான இன உணர்வுகள் தூண்டப்படும்பொழுது, நாடு முழுவதும் மக்கள் கொதித்து எழும் சமயம் போலீஸுக்கு அளிக்கப்பட்ட பயிற்சியும் பயனற்றுப் போய் விடும். இந்துக்கள் நிறைந்த காவல் துறை இஸ்லாமிய கலவரவாதிகளைச் சுட்டுத் தள்ளியதே தவிர இந்துக்களை அல்ல. அவர்களை நம்ப முடியாத நிலைமை ஏற்பட்டது. இராணுவ அதிகாரிகள் பாரபட்சம் பார்க்காது செயல்பட்டனர். ஏனெனில் இவர்களுடைய பயிற்சி மேலும் ஆழமானது.

காவல் துறைக்குமேல் ரிஸர்வ் போலீஸ் உண்டு. இதற்கும் மேல் சிறப்பு போலீஸ். இந்தச் சிறப்பு போலீஸில் புகழ் பெற்றது மலபார் போலீஸ். இப்போலீஸ் துறை தீவிரவாதிகளைக் கதிகலங்க அடித்தது. போலீஸ் துறை தோற்றது என்ற பேச்சிற்கே நிர்வாகத்தில் இடம் இருந்ததில்லை. வங்காளத்தில் இப்போலீஸ் ஏமாற்றி விட்டது. இராணுவத்தை நியமித்ததினால், நிலைமையைக் காப்பாற்ற முடிந்தது. அரசியலில், அஹிம்சையை நம் நாடு பின்பற்றியது. உச்சகட்டத்திற்கும் எடுத்துச் சென்றது. வாழ்வு மிகவும் விழிப்பானது. மனிதன் வாழ்வுக்கு எதிராகத் திரும்பினால் அது வேறு பக்கமாக செயல்பட ஆரம்பிக்கும். நம்முடைய மேல்மனத்தின் அடியிலுள்ள ஆழ்மனத்தில் அது தன்னை ஒழுங்குபடுத்திக் கொள்ளும். போலீஸ் அதிகாரிகள் வெற்றிக் களிப்பில் இருந்தனர். தெருவில் நடந்த கலவரம் தீவிர போர் போலத்தான் காட்சியளித்தது. போலீஸ், கலவரத்தை அடக்க முடியாமல் போனது ஏமாற்றமாகத்தான் இருந்தது. சில நிமிடங்களில் இராணுவம் வந்து அமைதியை நிலை நாட்டியது. இச்செயல் இராணுவ அதிகாரிகளுக்கு வாழ்நாளில் கிடைக்காத திருப்தியைத் தேடித் தந்தது.

உணர்ச்சிக் கொந்தளிப்பு உச்சத்தில் இருந்தது. அதை இராணுவம் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. வகுப்புவாதம் எனும் பெயரில் அப்பொழுது வெறித்தனம் அதிகமாக இருந்தது. போலீஸ் துறையைப் போலவே இராணுவமும் சட்ட ஒழுங்கைக் காக்கும் அதிகாரிகளை ஏமாற்றி விட்டது. எல்லோரும் தங்கள் இஷ்டத்திற்கு செயல்பட ஆரம்பித்தனர். மீண்டும் மீண்டும் கலவரம் வெடித்தது. கல்கத்தாவில் அன்று இராஜாஜி கவர்னராக இருந்தார். வெறிபிடித்தவர்களின் கூக்குரலைக் கேட்டு காந்திஜீ செயலில் இறங்கினார். இந்நிலைமையைத் தன் கைகளில் எடுத்துக் கொண்டார். உண்ணாவிரதத்தைத் தன் ஆயுதமாக்கினார். கூட்டத்தின் வெறித்தனத்தைக் கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வர தன்னுடைய ஆன்மாவைப் பரிசுத்தமாக்க முயன்றார். அவருடைய அத்தள்ளாத வயதில் அவர் மிகவும் பலஹீனமாக இருந்தார். மோசமான நிலையில் இருந்த நாட்டிற்கு, அமைதியைவிட அவருடைய உயிர் மிகவும் விலைமதிப்பற்றதாகத் தோன்றியது. கலவரத்தை அடக்க முடியாமல் அவர் இறக்கவும் நேரிடலாம். அப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்திருந்தால் நாம் ஒரு பெரிய ஆன்மாவை இழந்திருப்போம். உண்ணாவிரதம் இருக்க வேண்டாம் என்று அவரைச் சுற்றியிருந்த அனைவரும் அவரை மன்றாடிக் கேட்டுக் கொண்டனர்.

ஆனால் அவர் அதற்கு இணங்கவில்லை. உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். இந்து தர்மத்தில் அஹிம்சை ஓர் அரசியல் ஆயுதமாகப் போற்றப்படவில்லை. ஆச்சரியப்படும் வகையில் கலவரம் எனும் அலை அடங்கியது. மூன்று நாட்களிலேயே அவ்வூர் சகஜ நிலைக்குத் திரும்பியது. அஹிம்சை, ஹிம்சையைக் காப்பாற்றியது. அரசியல் சாசனம் எழுதுவதற்கு ஆலோசகராக பர்மா அரசு B.N. ராவ்வை அழைத்திருந்தது. வழியில் அவர் ராஜ்பவனில் தங்கினார். அப்பொழுது கலவரத்தை எவ்வாறு காவல்துறை வெற்றிகரமாக அடக்கியது என்பதைப் பற்றி பெருமையாக அவருக்கு விளக்கினார் அன்றிருந்த இன்ஸ்பெக்டர் ஜெனரல். பர்மாவில் தனக்கு இட்ட பணியினை முடித்து விட்டு சில மாதங்கள் கழித்து ஊர் திரும்பிய B.N.ராவ் மீண்டும் ராஜ்பவனில் தங்கியபொழுது அதே இன்ஸ்பெக்டர் ஜெனரலைச் சந்திக்க நேர்ந்தது. போலீஸும், இராணுவமும் தோற்றுவிட்டன. எல்லா அதிகாரங்களும் மோசமாக தோற்றுப்போயின. இந்தத் தடவை தனிமனிதனாக காந்திஜீதான் நிலைமையைக் காப்பாற்றினார் என்று அவர் கூறினார். சூட்சுமம் சக்தி வாய்ந்தது.

சில மனிதர்கள் உலகம் முழுவதும் சுற்றுவார்கள். இவர்கள் தங்களுக்கென்று ஒரு தனித்தன்மையை உருவாக்கிக் கொள்வர். ஆனால் அதற்கு வேர் இருக்காது. மற்ற சிலரோ தங்களுடைய ஊரைவிட்டே வெளியே சென்றிருக்க மாட்டார்கள். பூமித்தாயிடமிருந்து தங்களுக்கு வேண்டிய சக்தியைப் பெற்றுக் கொள்வார்கள். இது நிஜம். வாலியை எதிர்ப்பவர்களுக்கு அவர்களுடைய பாதி பலம் வாலிக்குச் சென்று விடும். அதனால் வாலியை யாரும் ஜெயிக்க முடியாது. தனக்கு வேண்டிய பலத்தை சூட்சும சூழலிலிருந்து அவர் பெற்றுக் கொள்வார். உள்ளூர் தலைவர்களையும் அவர்களுடைய சொந்த மண்ணில் யாராலும் வெல்ல முடியாது. கைப்பற்றும் எண்ணத்துடன் ஓர் இடத்தில் நுழைபவர்கள், உள்ளூர் மக்களை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்வதை வழக்கமாக வைத்துக் கொண்டிருந்தனர். ஒருவரது தேசியக் கொடியும், சக்தி அளிக்கும் அடையாளச் சின்னமாக விளங்கி வந்துள்ளது.

தன்னைத் திருமணம் செய்து கொள்ள முடியுமா என்ற நேரடியான கேள்விக்கு உடனே மறுப்புத் தெரிவித்தவள் எலிசபெத். அதனை அடுத்து இழிவான நிந்தனையும் தொடர்ந்தது. ஒரு சமயம் பிம்பெர்லியை பார்க்கச் சென்றிருந்தாள். வெகு தொலைவிலிருந்தே அக்கற்கட்டடம் அவளிடம் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. சூட்சும கட்டத்தில் அவள் அவ்வாசைக்கு அடி பணிந்தாள். பிம்பெர்லிக்கு எஜமானியாவது மிகப்பெரிய விஷயம் என்று தனக்குள் கூறிக் கொண்டாள். அவ்வீட்டைச் சுற்றிப் பார்த்தது, அதனை பராமரிக்கும் பணியாளரின் புகழுரை, அங்கிருந்த வீட்டுச் சாமான்களின் நேர்த்தி, ரசனை எல்லாமுமாகச் சேர்ந்து அவள் மனதை மாற்றியது. முணுமுணுப்பு, உள் மனக்குரலாக மாறியது. பிம்பெர்லியை தனதாக ஏற்றுக் கொள்ள முடிவு செய்தாள். அம்முடிவு, அதன் எஜமானனை அங்கு வரவழைக்கும் அளவிற்குச் சக்தி வாய்ந்ததாக இருந்தது.

நமக்கு உலக சரித்திரம் தெரியும். சரித்திரம் என்றாலே நமக்கு அரசரும் அவர்கள் புரிந்த போர்களும்தான் தெரியும். ஆனால் இதற்கெல்லாம் மேலாக, நமக்குப் புரிவாற்றல் இருந்தால், இவையெல்லாம் நாகரீகம் முன்னேற்றமடைவதற்குச் சூட்சும சக்தியாக விளங்கியது எனத் தெரிந்து கொள்ளலாம். எண்ணங்கள், கலாச்சாரம், குறிக்கோள் இவைகளின் பலத்தினால்- தான் சமூகம் நிலைத்து வளர்ந்தது. எண்ணங்கள் மறைந்ததி- னாலேயே உலகத்திற்கு கிரீஸ் எனும் நாடு கிடைக்காமல் போய் விட்டது. நிலைத்து நிற்கக்கூடிய அடிப்படையான பண்புகளினால் மட்டுமே ஒவ்வொரு கலாச்சாரம் மற்றும் பேரரசின் வீழ்ச்சியையும், எழுச்சியையும் பார்க்கிறோம். நமது பாரம்பரியத்தில் உயர்ந்த பண்புகளைப் பற்றி வெளிப்படையாகப் பேசப்படவில்லை. சூட்சுமமாக அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்லப்பட்டது. பெரிய சொத்தினைத் தன் மகனுக்கு அளித்த தகப்பனார் இரண்டு விஷயங்களைப் பற்றி அவனிடம் எடுத்துரைத்தார். எப்பொழுதும் நிழலில் நட, நீ செல்லும் ஒவ்வொரு ஊரிலும் தர்ம சத்திரம் கட்ட வேண்டும் என்றார். தகப்பனார் இறந்தபின் அவர் கூறியதை செயல்படுத்த விரும்பினார் அவரது மகன். அக்கூற்றின் உண்மையான பொருள் என்ன என்று ஆராய்ந்து அதனுடைய சூட்சுமமான உண்மை என்ன என்று கண்டுபிடித்துச் செயல்படுத்த வேண்டும் என்று ஒருவர் அறிவுரை வழங்கினார். பிரயாணம் செய்யும் நேரம் விடியற்காலையாகவும், மாலை நேரமாகவும் இருக்க வேண்டும் என்பதும், எவ்வாறு தர்ம சத்திரத்தில் செளகரியமாகவும், தயங்காமலும் தங்க முடியுமோ அதே போல் தங்கும் அளவிற்குச் செல்லும் இடங்களிலெல்லாம் நண்பர்களை தேடிக்கொள்ள வேண்டும் என்பதும்தான் அவ்விரண்டு விஷயங்களின் அர்த்தம் ஆகும்.

பெண்களுடன் சுற்றுபவர்களைக் கண்டால் எவருக்கும் பிடிக்காது. அவர்கள் பெண் பித்தர்களாக, தவறிழைப்பவர்களாக இருப்பார்கள். எல்லாத் தடைகளையும் தாண்டி இன்னமும் இவ்வெறுக்கத்தக்க பழக்கம் நம் சமூகத்தில் வேரூன்றி உள்ளது. மிகத் தெளிவாக இருக்கும் இவர்களது ஆயுட் காலத்தைப் பற்றி எனக்குக் கவலையில்லை. ஆனால் ஒளிவு மறைவில்லாமல் இருக்கும் இதுபோன்ற நபர்களின் ஆயுள் கண்டிப்பாக நீடிக்கிறது என்பதுதான் சூட்சுமமான உண்மை. தவறிழைக்கப்பட்ட, அத்துமீறி நடத்திய, அவதூறு இழைக்கப்பட்ட பெண்மணிகள் யாவருக்கும் எங்கோ ஆழத்தில் நிறைவு ஏற்படுகிறது. ஆழத்தில் உறையும் அவர்களுடைய கள்ளத் தனமான உணர்ச்சிகள் யாவும் திருப்தி அடைகின்றன. சமூக ரீதியாகவும், தார்மீக ரீதியாகவும் பங்கப்படுத்தப்பட்ட அவர்களது ஜட உடலின் ஆசிகளே, அக்குற்றவாளிகளின் ஆயுளை நீட்டிக்கிறது. சூட்சும காரணம், உண்மையானது. அது மிகவும் சக்தி வாய்ந்தது. ஆனால் இது ஒரு தவறான உதாரணம்தான். ஷேக்ஸ்பியர் எழுதியது போல், துன்பவியலிலும், எதிர்மறையான தன்மையுள்ள வாழ்விலும்தான் ஆழமான உண்மைகள் வெளிக்கொண்டு வரப்படுகின்றன.

முற்றும்.

*********



book | by Dr. Radut