Skip to Content

08. பூரணயோகம் - முதல் வாயில்கள்

பூரணயோகம் - முதல் வாயில்கள்

கர்மயோகி

98. நிகழ்ச்சிகளின் பின்னால் அன்னை ஜகஜ்ஜோதியாய் ஜொலிக்கிறார்.

  • 1970 முதல் 1980 வரை கடையடைப்பு, ஹர்த்தால், பந்த் சற்று அதிகமாக இருந்தது. அத்துடன் அவை பயங்கரமான அரசியல் பிரச்சினைகளை ஆதரிப்பவையாகும்.
  • அதுபோன்ற ஹர்த்தால் வரும்பொழுது கடைக்காரர்கள் பயப்படுவார்கள். கலவரம் கட்டுமீறிப் போகுமென எந்த நேரமும் எதிர்பார்க்க வேண்டியிருக்கும். அந்நாட்களில் புதுவையில் பேரமைதி பெரும் அளவுக்குக் கனத்து பொங்கி வழிவது தெரியும்.
  • அதுபோன்ற தரிசனம் பெறுவோர்க்கு பூரண யோக வாய்ப்புண்டு.
  • வன்முறை காளியின் ஆர்ப்பாட்டம். அது அன்னை தரிசனம்.
  • லிஸி திட்டியது டார்சிக்கு இனிப்பாக இருந்தது, சூழலில் தெய்வம் எழுவதாகும்.
  • பூரண யோகத் தத்துவப்படி எல்லாச் செயலும் இறைவன் வெளிப்பாடே.
  • நம் அறியாமை அதை நல்லது, கெட்டது எனப் பிரித்துக் காண்கிறது.
  • செப்புக் காசு, நிக்கல் காசு, வெள்ளிப் பணம், நோட்டு அனைத்தும் பணம்.
  • வெள்ளிக் காசு மட்டுமே பணம் மற்றவை பணமில்லை என்பது சரியாகாது.
  • உயர்ந்தவன், தாழ்ந்தவன் அனைவருக்கும் எலக்க்ஷனில் ஒரு ஓட்டு தான். யுகம் எழுந்து மறையும் தாளம் Squandering eternity on a beat of time..
  • தாளத்தின்பின் தெரியும் யுகம் இறைவன். கர்னாலியில் விக்ரஹத்திலிருந்து எழுந்த காளியைப் பார்க்கும்வரை பகவானுக்குத் தெய்வ நம்பிக்கையில்லை. ஒரு குரல் கேட்டு ஓராயிரம் மக்கள் ஆர்ப்பரித்து எழுவது தலைமையின் தகுதி.
  • பேய் வந்து பகவான்முன் பித்தலாட்டம் செய்தது. பகவான் அøசியவில்லை.
    பேய் ஏமார்ந்து திரும்பியது. பகவான் இனிமையை உணர்ந்தார். அது கிருஷ்ணனின் விஷமம் என்றறிந்து சிரித்து மகிழ்ந்தார்.
    பகவானுக்குப் பேயின் பித்தலாட்டத்தின் பின்னும் தரிசனம் உண்டு.
  • கல்லூரிப் பேரவையில் சிறப்பாகப் பேசுபவனுக்கு, அரசியலில் எதிர்காலம் உண்டு. அது விளையும் பயிர்.
  • எழுதும் கடிதம் கவர்ச்சியானால் அவனுக்கு எழுத்தாளனாகும் வாய்ப்புண்டு.
  • வீட்டில் அடுக்கியிருக்கும் நெல் மூட்டைகள்மீது ஏறி 10 வயது சிறுவன் சொற்பொழிவாற்றியது எதிர்காலத்தில் சிறப்பான பேச்சாளராக வருவான் என்று கூறுகிறது.
  • ஹோட்டல் சர்வர் பிரபலமானால், எதிர்கால ஹோட்டல் முதலாளியாவான்.
  • ஹோட்டல் முதலாளி பில்லுக்கு மிச்சம் தரும்பொழுது, சில்லரையை வீசுவான். கடை மூடப்பட்டது.
  • நாகலிங்கப் பூ வருகிறது எனில் செல்வம் வரும் என்று தெரிகிறது.
  • புற்றிலிருந்து எறும்பு வெளிவந்தால், மழை வரப்போகிறது என அர்த்தம்.
  • மலை மீதுள்ள குதிரைகள் காரணமின்றி கனைத்தால், எரிமலை வெடிக்கப் போகும் அறிகுறி அது.

********



book | by Dr. Radut