Skip to Content

07. அன்பர் அனுபவம்

அன்பர் அனுபவம்

அழகம்மை, தர்மபுரி

என் பெயர் அழகம்மை. நான் தற்பொழுது தருமபுரி மருத்துவக் கல்லூரியில் II Year M.B.B.S. படிக்கிறேன். என் I Year M.B.B.S.-இல் இறுதித் தேர்வு கடந்த ஆகஸ்ட் 03 முதல் 10 தேதி வரை நடைபெற்றது. முதல் பரீட்சை Anatomy paper. நான் நன்றாகப் படித்துவிட்டு மதரிடம் பிரார்த்தனை செய்துவிட்டுச் சென்றேன். வினாத்தாள் மிகவும் எளிமையாக இருந்தது. ஆனால் எனக்குப் படித்த எதுவுமே ஞாபகம் வரவில்லை. எனினும் அழுதுகொண்டே நூறு மதிப்பெண்களுக்கு என்னால் முடிந்தவரை பக்கங்களை நிரப்பினேன். நன்றாகப் படித்துவிட்டு எழுத முடியவில்லையே என்று வருந்தி அன்று முழுவதும் அழுது கொண்டே, மறுநாள் பரீட்சைக்கும் சுத்தமாகப் படிக்கவில்லை. இரவு முழுவதும் தூங்காமல் படித்தால்கூட எல்லாப் பாடங்களையும் படிக்கவே இயலாது. ஆனால் நான் எதுவுமே படிக்காமல், ஏதோ என் அம்மா சொன்னதற்காக எதுவானாலும் நீங்களே காப்பாற்றுங்கள் என்று பாரத்தை மதரிடம் ஒப்படைத்துவிட்டு, அடுத்த பரீட்சைக்குச் சென்றேன். அன்றைய வினாத்தாளும் எளிமையாகவே இருந்தது. முதலில் படித்திருந்தது சிறிதளவிற்கு நினைவில் இருந்ததால் சுமாராக எழுதினேன். ஆனால் இரண்டு பேப்பர்களும் சுமாராகத்தான் எழுதினேன். 200-க்கு 100-க்கு மேல் மதிப்பெண்கள் எடுத்தால்தான் பாஸ் செய்ய முடியும்.

எல்லாத் தேர்வுகளும் முடிந்தவுடன் சென்னைக்கு வந்தேன். அம்பத்தூர் தியான மையத்திற்குச் சென்று எல்லாவற்றையும் சொல்லி அழுதேன். அங்கே இருந்த சேவை அன்பர் அருளமுதம் புத்தகம் வாங்கிப்படி என்று கூறினார்கள்.

நானும் அதன்படி வாங்கிப் படித்தேன். அவர்கள் சொன்னதுபோல் அன்னையிடம் பிரார்த்தனை செய்தேன். அன்னை என்னை காப்பாற்றி விட்டார்கள். என்னுடைய ரிசல்ட் அக்டோபர் 9 அன்று மாலை 7.30 மணிக்கு வந்தது. Anatomy paper-இல் 200-க்கு 114 marks பெற்று pass செய்திருந்தேன். Fail-ஆகி விடுவேன் என்று நினைத்திருந்தேன். என்ன ஆச்சரியம்! அன்னை என்னை பாஸாக்கி இருந்தார்கள். உடனே அம்பத்தூர் தியான மையம் சென்று, சேவை அன்பரிடம் கூறினேன். அவர்களும் மிகவும் சந்தோஷப்பட்டார்கள். என்னுடைய வீட்டில் அனைவரும் மிகுந்த சந்தோஷம் மற்றும் ஆச்சரியமும் அடைந்தனர்.

நான் எப்படி pass செய்தேன் என்றும், அன்னையின் அளப்பரிய அருளை நினைத்தும் பூரிப்படைந்தேன். அன்னை என் திறமைக்கு அதிகமாகவே பலனை அள்ளிக் கொடுத்திருக்கிறார்கள்.

நன்றி.

*******

ஜீவிய மணி
 
வாழ்க்கை ஒருவருக்குச் செய்த செயலில் நியாயம் வழங்குகிறது. அடுத்தவருக்குப் பூரண நியாயம் வழங்க, தனித்தனிச் செயலில் நியாயம் கிடைப்பதில்லை. சிறு நியாயம் இல்லாமல் பெரு நியாயம் பெறுபவர், கீழிருந்து மேலே உயருபவர். சிறு நியாயம் மட்டும் பெறுபவர், அதே நிலையில் இருப்பவர். தனிச் செயல்களில் நியாயம் பெற்றுப் பூரண நியாயம் பெறுபவர் உயர்ந்த இடத்தில் ஆரம்பித்து மேலும் உயருபவர்.
 
ஆனால் எல்லோருக்கும் எல்லா விஷயங்களிலும் வாழ்வு நியாயம் வழங்குகிறது. சிறுசிறு விஷயத்தில் அநியாயத்தைக் கண்டு பொருமினால், பூரண நியாயம் வருவது தடைப்படும். சிறு விஷயத்தில் அநியாயம் பெற்றவர், உள்ளே போய் வேலையை ஏற்றுக்கொண்டால் அவருக்குப் பூரண நியாயம் உரிய காலத்தில் உண்டு.

*******



book | by Dr. Radut