Skip to Content

08. அன்பு அமிர்தமாகி, அபரிமிதம் அனந்தமாகும் அழைப்பு

அன்பு அமிர்தமாகி, அபரிமிதம் அனந்தமாகும் அழைப்பு

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

  • நான் ஒருத்தியிருப்பது எவருக்கும் நினைவில்லை

    அன்னை டென்னீஸ் கோர்ட்டிலிருந்து ஆசிரமம் திரும்பும் பொழுது வழியில் உள்ள கூட்டத்தில் நின்றார். ஆசிரம வாலிபன் விழுந்து, கழுத்தில் பெரிய எலும்பு முறிவு ஏற்பட்டு உடனே டாக்டர் பார்த்து முதலுதவி செய்து கொண்டிருந்தனர். அவர்கள் செய்கையைப் "பாராட்டி'' அன்னை, "அனைத்தையும் குறைவறச் செய்திருக்கிறீர்கள், நானொருத்தி இருப்பது எவருக்கும் நினைவில்லை. என்னிடம் சொல்ல ஒருவருக்கும் தோன்றவில்லை'' என்றார்.

    அன்னை நமக்களிக்கும் சுதந்திரம் உலகில் காண முடியாதது. நாமாக எடுத்துக் கொள்ளும் சுதந்திரமில்லை. அவராகக் கொடுப்பது. அதுவும் ஆழத்தில் (substance) தருவது. அது இப்படியே செயல்படும்.

  • வீட்டில் எந்தப் பெட்டியையும் பூட்டுவதில்லை. அனைவரும் நேர்மையானவர். அது சுதந்திரம். நம் வீட்டாரைப் பணம், கணக்குக் கேட்பதில்லை. அவர்கட்குச் செலவு செய்யும் சுதந்திரமுண்டு.
    • ஏராளமான பணம் அன்பர் கையால் நேர்மையாகச் செலவாகியது.
    • மற்றொரு அன்பர் சுதந்திரமாகக் கம்பனியை அழித்தார். உறவினரான அன்பர் முழுத் திருடனாக இருந்தார். அனைவருக்கும் சுதந்திரமிருந்தது.
      குடும்பத் தலைவரிடமிருந்து விஷயங்களை மறைக்கும் குணம் இதற்கெல்லாம் அஸ்திவாரம்.
  • அன்னையை மறந்து செயல்படுபவர் வாழ்க்கைக்கு அன்னை மையமில்லை. அவர்கள் சுயநலவாதிகள்.
  • இந்தத் திருட்டு உறவினர் இங்கிருந்து போனது அவருக்குப் பெரிய நஷ்டம். இந்த ஸ்தாபனத்தை விட்டுப் போனவர்கள் அனைவரும் - முதலாளி, பேராசிரியர், நண்பர் - எவ்வளவு பெரிய வாய்ப்பை இழந்தோம் என அறியார்.

    நமக்குப் போனவரெல்லாம் முக்கியமில்லை.
    நாமும் அவர்களைப் போலிருக்கிறோம்.
    அது தவறு.
    அது நம் சந்ததிகட்குத் தவறு.

  • மறதி
    • மறப்பது சிறப்பு.
      நினைவாக மறப்பது யோகப் பயிற்சி.
      பகவான் தான் உலகை விட்டுப் போவதை அன்னையை மறக்கும்படிச் செய்தார்.
      வாடிக்கைக்காரர் குறைகளை எப்படி கன்ஸல்டண்ட் மறப்பது?
      எதையும் நினைவில் கொள்ளாதவரையும், மறப்பவரையும் எப்படிப் புரிந்து கொள்வது?
      எந்த வேலையிலும் நல்லது, கெட்டது, இரண்டுமற்றது என மூன்று நிலைகள் உள்ளன.
      நாம் மட்டமானால் நம் கெட்ட எண்ணம் உயிர் பெறும்.
      நாம் சரியானால் நாம் மறந்தது நம்மைப் பாதிக்காது.
      இரண்டுமில்லாதபொழுது பலன் நம் மன நிலைக்கு வரும்.
      1. குறைகளையெல்லாம் மறந்து பிறர் திறமைகளை மட்டும் கருதினால் பெரும் நல்லது நடக்கும்.
      2. நாம் இரண்டுமில்லாமல் இருப்பது கவனக் குறைவாக இருந்து நல்லதை இழப்பதாகும்.
      3. நாம் சரியாக இருக்க எவருடைய குறையும் மனதில் எழக்கூடாது.

      இவ்வேறுபாடுகள் சூட்சுமமானவை.

      நல்லது, கெட்டது, இரண்டுமற்றது இவற்றின் வித்தியாசம் புரிவது சூட்சும யோகத் திறன்.
      இதனுள் ஒரு பெரிய லோகம் புதைந்துள்ளது.

  • "100 ரூ." சிறியது. மனம் மாறுவது நிலையாக சந்தோஷப்படுவது பெரியது.

    1 ஏக்கர் வாங்கப் போனேன். பார்ட்னர் 1000 ஏக்கர் வாங்க கட்டாயப்படுத்தினார். இந்த அம்சம் 1958-இல் அன்னையிடம் வந்ததிலிருந்து நமக்கு இருப்பதை அறிய முயன்றால் 8 reversalsஉம் புரியும். அப்பொழுது "100 ரூ.'' சிறியது எனப் புரியும். நம் வீட்டுப் பையனுக்கு அது போல் வந்தது மட்டமான சரக்கு என்பதால் தெளிவாக இருக்கவில்லை. வருஷத்தில் காலேஜ் ஆசிரியருக்கு $ 12,000 என்றால் 250 நாளுக்கு தினமும் $ 50 ஆகிறது. பள்ளி ஆசிரியருக்கு $ 4000 உள்ள நேரம். அதாவது $ 17 தினசரி இருக்கும்பொழுது அந்த வேலையிலிருந்து நம்மிடம் வந்தவருக்கு தினமும் $ 1000 வந்தது. அடுத்த வருஷம் $ 2000 ஆயிற்று. இது 100 மடங்குக்கு மேல் ஆகிறது. ஓர் அன்பர் தனக்கு ரூ.1,200/-இல் வேலை கிடைக்கும் என்றார். அதற்கு ஒரு வருஷம், 1½ வருஷம் ஆகும் என்றார். அதே ஒரு வருஷத்தில் $ 5000இல் வேலை கிடைத்தது. அது ரூ.200,000/-. 150 மடங்கு. நடந்ததை ஊன்றிப் பார்த்தால் இந்த அம்சம் அனைவர் வாழ்விலும் உண்டு. உடல் ஆரோக்கியம், மனநிம்மதி, ஊரில் மரியாதை ஆகியவற்றில் பணத்தில் புரிவது போல் புரிவதில்லை. புரிவது அரிது, ஏற்பது அதனினும் அரிது. நடந்ததெல்லாம் அப்படியே என மனம் அறிய, விழிப்பு, உண்மை, உஷார், தெளிவு, நல்லெண்ணம், நல்லவராக மனத்தில் சத்தியம் வேண்டும். 30 நாட்கள் ஆழ்ந்து சத்தியத்தை மனத்தைக் கடந்த ஜீவன் ஏற்றால் இது தெரியும்.

  • நம்பிக்கை
    • எனக்கே நடந்தால் நான் நம்புவேன் - உடல்.
      அடுத்தவரைப் பார்த்து கற்றுக் கொள்வேன் - உயிர்.
      எவரும் செய்யாவிட்டாலும் எனக்குப் புரிந்தால் ஏற்பேன் - மனம்.

      நம் கிணறுகளைப் பார்த்து கிராமம் கற்கவில்லை - உடல்.
      ஒரு விவசாயி வாழை நம்மைப் பார்த்து 10 வருஷம் கழித்துப் போட்டான் - உயிர்.
      மல்லிகை சென்ட் நான் படித்துப் புரிந்து கொண்டேன் - மனம்.
      ஆன்மீகம், சத்தியஜீவியம் இவற்றைக் கடந்தது.
      கன்ஸல்டன்சி என்பது இல்லாததை உற்பத்தி செய்வது - ஆன்மீகம்.
      1200 ரூ. சம்பாதிக்க முடியாதவனுக்கு அமெரிக்காவில் 2 இலட்சம் சம்பாதிப்பது சத்தியஜீவிய திருவுருமாற்றம்.
      நமக்குள்ள மிகப்பெரிய திறமை மூலம் அன்னை செயல்பட அனுமதிப்பது இரகஸ்யம்.
      டார்சி அதை எலிசபெத் விஷயத்தில் செய்கிறான். அவனது குறை கர்வம். அவனது மிகப்பெரிய திறமை உண்மை (sincerity). அவள் கூறியதின் உண்மையை ஏற்று அவமானத்தை அறிவாகக் கருதி மாற முயன்றான். அது உண்மை (sincerity). டார்சி எடுத்தது ஆன்மீக முயற்சி இல்லை. நல்ல மனிதனுடைய உண்மையான முயற்சி. அவனது குறையைக் காரமாக அவள் எடுத்துக் கூறியதை உண்மை என ஏற்று மாறினான். அவன் நல்லவனாக நடந்தான். அது நமக்குப் போதும்.

      ஒரு நல்ல உண்மையான உதயம் போதும்.

  • காணாமற் போனதைக் கட்டாயம் கண்டுபிடி - அன்னை மூலம் மட்டும் கண்டுபிடி.
    • கண்டுபிடிப்பதைவிட அன்னை மூலம் கண்டுபிடிப்பது முக்கியம்.
    • ஒரு காரியத்தை அன்னை மூலம் செய்வதற்கும், ஒன்று விடாமல் அன்னை மூலம் செய்வதற்கும் உள்ள இடைவெளி ஆரம்பத்திற்கும் முடிவுக்கும் உள்ளது.
    • முதற் காரியம் செய்ய நம்பிக்கை வேண்டும், அடுத்ததைச் செய்ய முழு ஈடுபாடு வேண்டும்.
    • உன் மூலமாக வராதது எனக்கு வேண்டாம் எனக் கூறுவது நமது உறவு பூர்த்தியாவது.
      அது மனித சுபாவத்திலில்லை.
      அன்னையில் அது எவருக்கும் பூர்த்தியாகும்.
      அதைக் கூற முடியுமென்றால் அன்னையை முழுவதும் ஏற்றதாகும்.
      இந்தியப் பண்பில் பெரிய அளவுக்கு அது முதலாளி-தொழிலாளி, குடும்பத்தார், கணவன்-மனைவி, குரு-சிஷ்யன் உறவில் உண்டு. மேல்நாட்டில் எதிரானது உண்மை. எது மற்றவர் மூலம் வருவதானாலும் அது வேண்டாம். அவர்கட்கு அது சுயமரியாதை.
      1. பணிந்து ஒன்றுவது.
      2. தனித் தன்மை.
      அறியாமையின் உயர்வு முதலில் கூறியது.
      அறிவின் தெளிவு திறமையும், சிறப்பும் பெறுவது அடுத்தது.
      அறிவு தெளிவு பெற்று அறியாமை செய்வதையே செய்ய அறிவைக் கடந்த பண்பின் பக்குவம் ஞானம் பெற வேண்டும்.
  • இலட்சணம்
    • எதிரான இலட்சணம்.
      வேலை செய்யாத ஆண் பிள்ளை.
      பிள்ளை மேல் பாசமில்லாத தாயார்.
      பிள்ளைக்குத் தாயார் மீதுள்ள பாசம் தாயாருக்குப் பிள்ளை மீதுள்ளதாக அர்த்தமில்லை.
      வறண்ட உள்ளத்தின் அடியில் ஆன்மீக சொரணை psychic sensitivityஇருக்கும்.
      எதனுடனும் எதுவுமிருக்கும்.
      அன்னைக்கு Mother உரியது இல்லாத மனிதரில்லை.
      நம்மிடம் அது எது எனக் கண்டு அதை முழுவதும் அன்னைக்குச் சமர்ப்பணம் செய்ய வேண்டும்.
      எந்தக் குறையுள்ளது என்பது கேள்வியில்லை.
      எந்த நிறைவுள்ளது என்பதே கேள்வி.
      நிறையைக் காண முடியுமா?
      கண்டது உண்மையா?
      ஏற்க முடியுமா?
      ஏற்றது உண்மையா?
      கண்டதும், ஏற்றதும் உண்மையானால் நாம் அன்னையைத் தேட வேண்டாம்.
      இரண்டு பெண்கட்கு யோகம் செய்யும் அம்சமிருந்தது.
      அம்சமிருப்பது வேறு. அதைப் பயன்படுத்துவது வேறு.
  • அன்னை சூழல் Mother's atmosphere பிறர் மனதில் நம்மை இதமாக இருத்தி வைக்கும்.
    • 10 அல்லது 20 வருஷமாகப் பழகும் நண்பர்கள் ஒரு நேரம் வரும் பொழுது நண்பர் நடப்பதைக் கண்டு, "இதுபோல் அவர் என்னை நினைக்கிறார் என எனக்குத் தெரியாது'' என்பதுண்டு.
    • நம்மையறியாமல், அவரும் அறியாமல் நம் மீது பிறருக்குப் பிரியம் ஏற்படுவதுண்டு. அன்னை சூழல் தவறாது அதைச் செய்யும்.
    • மனித உறவில் நாமறிந்த கோளாறுகள் ஏராளம். அவற்றிற்கு எதிரானவை அனைத்தையும் தவறாது உற்பத்தி செய்வது Mother's Force. அன்னை சக்தி.
    • அன்னையை மட்டும் நினைத்து, ஆழமாக நினைத்து, ஒரு நாள் சமையல் செய்தால் அது அமிர்தமாக இருக்கும்.
    • ஜடமான சாப்பாட்டிற்கு இந்தக் குணம் receptivity உண்டு. மனிதர்கட்கு இது ஏராளம். 3 நாள் இடைவிடாமல் ஒருவரை அன்னை மூலம் நினைத்தால் அவர் நம் மீது உருகிக் கரைந்து விடுவார்.
    • பிரார்த்தனை பலிப்பதைவிட நாம் அன்னையை நெருங்கி வர வேண்டும்.
    • அன்னை நம்மிடம் இருப்பதைப் போல் நாம் அவரிடம் இருக்கிறோமா?
    • நாம் அன்னையை நினைப்பதைவிட உருக்கமாக அவர் நம்மை நினைக்கிறார். இது அன்னையின் கருணை.
    • நாம் அவரை விட்டு விலகினால் அவர் நெருங்கி வருகிறார். விலகுபவனை விரும்பி நெருங்குவார் அன்னை.
    • அதைவிட நாம் அன்னை பின்னே போகும்பொழுது, எட்டாமல் கிட்டேயிருப்பது நெருக்கமான உறவு.
  • ஊறிய பழக்கம்
    • ஜீரணம், இரத்த ஓட்டம், நடப்பது, பேசுவது போன்று நம் கவனமில்லாமல் நடப்பவை (subconscious habits) ஆழ்ந்து நம்முள் ஊறிய பழக்கங்கள்.
      • தெரிந்து கற்ற (conscious habits) பழக்கத்தைக் கண்ட்ரோல் செய்யலாம். ஆழ்ந்த பழக்கங்கள் (sub-conscious habits) நம் கண்ட்ரோலில் இருக்காது. நம் கண்ட்ரோல் பிறர் இல்லை, ஊர் உலகமில்லை, கண்ட்ரோலில் இல்லாதது கண்ட்ரோலில் வருவது யோகம்.

        அது நடக்க நாம் (conscious habits) தெரிந்து செய்பவை, ஒழுங்காக அடுக்கி வைப்பது, உபசாரம் செய்வது, டிரஸ் செய்வது, சாப்பிடுவது போன்றவை முழு கண்ட்ரோலுக்கு வந்த பிறகுதான் ஆழ்ந்தவற்றைக் கண்ட்ரோல் செய்ய முயலலாம். எல்லா ஆழ்ந்த பழக்கங்களும் (sub-conscious habits) நம் கண்ட்ரோலுக்குள் வருவது யோகம்.

        ஹடயோகி இதயத் துடிப்பு (heart beat), மூச்சு விடுவதை 15 நாள் நிறுத்த முடிகிறது.

      • பூரணயோகம் என்பது மனம், ஊர், உலகம், பிரபஞ்சம் ஆகியவை ஒருவர் ஆன்மாவுக்குக் (Spirit) கட்டுப்படுவது. ஏனெனில் ஒருவர் ஆன்மா உலகத்தின் ஆன்மா. நளாயினி சூரியனைக் கட்டுப்படுத்தினாள். அனுசூயா திருமூர்த்திகளை மாற்றினாள். அது தபோ வலிமை. பூரணயோகத்தில் அது இயல்பாக ஏற்பட வேண்டும்.
      • ஒரு ஆழ்ந்த பழக்கத்தை (sub-conscious habits) e.g. கையெழுத்து handwriting - முயன்று மாற்ற முடியுமா? அது அவசியமில்லை. முடிந்தால் நமக்கு யோகம் பலிப்பதாகப் புரிந்து கொள்ளலாம். இது மிக உயர்ந்த சோதனை.
  • அறிவில்லாதவன், கூலிக்காரன், சிறுவன் செய்யும் தவறு தவறல்ல.
    படித்தவன், முதலாளி, பெரியவர் செய்யும் பெரிய தவறும் அளவுக்குட்பட்ட தவறு - தவறல்ல.
    • தவறு, செய்பவனைப் பொருத்தது, செயலைப் பொருத்ததில்லை.
    • தவறு என்பதைத் திறமை எனக் கொண்டு யோசனை செய்தால் சாதிப்பது செய்பவனைப் பொருத்ததாகும்.
      குழந்தை உடைப்பதை நாம் குற்றமாகக் கொள்வதில்லை.
      தலைகீழே மாற்றி யோசனை செய்தால்,
      பெரியவர் செய்யும் பெரிய காரியத்தைப் பாராட்டத் தேவையில்லை என்றாகும்.
      அன்பர், யோகம் செய்பவர், அன்னை சூழலில் உள்ளவர் அளவு கடந்து திறமையுள்ளவர் (அதை நாம் உணருவதில்லை).
      அவர் 1000 கோடி சம்பாதிப்பது பெரிய சாதனை ஆகாது.
      இந்தத் தத்துவம் புரியுமா?

      சிறியவன் தவறு தவறில்லை.
      பெரியவர் சாதனை பெரிதில்லை.

      அதனால் "100 ரூ.'' சம்பாதிப்பது அன்பருக்கு ஒரு சாதனையில்லை.
      அதனால் அது முடியும்.
      இதனுள் உள்ளது தத்துவம். தத்துவம் புரிந்தால் மனம் ஏற்கும்.
      மனம் ஏற்றதை உணர்ச்சி ஏற்றால் காரியம் முடியும்.
      அறிவு கூறுவது உணர்ச்சிக்குக் கசப்பாக இருக்கும். மருமகளுக்கு வீட்டு வேலை செய்ய வேண்டும் என்பது தெரியும், பிடிக்கவில்லை. ஏற்றுச் செய்ய ஆரம்பித்தால் வேலையில் ஆர்வம் வந்து வேலை மீது பிரியம் வரும்.
  • கவனம்
    • பட்டேலும் நேருவும் 1947இல் மகாத்மா பேச்சை கேட்க மறுத்தனர்.
      1920 முதல் 1947 வரை மகாத்மா கூறுவதை அப்படியே ஏற்றனர்.
      அப்படி மகாத்மா அவர்களைக் கவனித்தார்.
      1947இல் மவுண்ட் பேட்டன் பட்டேலையும் நேருவையும் கவனிக்க ஆரம்பித்தவுடன் மகாத்மா பேச்சை ஏற்க மறுத்தனர்.

      Attention என்பதைக் கவனம் என்றால் சரியாக இருக்கும்.
      முழு அர்த்தம் புலப்படாது.
      • எதற்கு, எவருக்கு கவனம் செலுத்தினாலும் விக்ரஹத்திலிருந்து காளி வெளிவருவது போல் தெய்வம் வெளி வரும்.
      • ஒரு முரட்டு மனிதனை எடுத்து குறையை அறவே விலக்கி நிறைவுக்கு கவனம் செலுத்தினால் நிறைவு நிறையும். குழந்தை வளர்ப்புக்குரிய முறை அதுவே.
        ஒரு டம்ளருக்கு அது போன்ற கவனம் செலுத்தினால் டம்ளர் நமது பிரார்த்தனையைப் பூர்த்தி செய்யும்.
        ஏகலைவனுக்கு துரோணர் கொடுத்த கலை அது போன்றது.
        மனைவியைத் தெய்வமாக நினைக்க மனம் பிரபஞ்சம் முழுவதும் பரவ வேண்டும்.
        அது நிச்சயமாக யோகம் பலிக்கும் வழி.
        அம்மன நிலையில் மனைவி செய்வது இனிக்கும்.
        தவறு தவம் பெற்ற வரமாகும்.
        கெட்டது நல்லதாகத் திருவுருமாறும் பாதையிது.
  • எது சரி
    • நடப்பதால் சரி.
    • நடப்பதால் சரியாகாது.
    ஆன்மாவுக்கு 12 அம்சங்களுண்டு. மௌனம், சாந்தி, ஞானம், ஐக்கியம், நன்மை, ஜீவியம், உறுதி, சந்தோஷம், அன்பு, அனந்தம், காலத்தைக் கடந்த நித்தியம். இவற்றுள் ஒன்றில் சிறப்பெய்துவது பெரியது. 12இலும் சிறப்பு யோகம் பலிப்பது. ஒரு அம்சம் (உ.ம்.) மௌனம் அல்லது சந்தோஷத்தை வாழ்வில் பூரணமாக்கினால் ஆத்மா க்ஷணம் பலிப்பதைக் காணலாம். அது கீழ்க்கண்டவாறு தெரியும்.
    • உள்ளே பெரும் சித்தியாகும்.
    • மனம் பூரித்து உயர்ந்து மலரும்.
    • இறைவனின் ஸ்பர்சம் இதமாக ஆத்மாவைத் தொடும் உணர்வு.
    • அனைவரையும் வணங்கத் தோன்றும்.
    • ஆபாசத்துள் அழகு தெரியும்.
    • எவரையும் முழுமையாக ஏற்கத் தோன்றும்.
    • சாதாரண புடவை அழகாகத் தெரியும்.
    • அழுக்கும், குப்பையுமான மேஜை தூய்மையாகத் தோன்றும்.
    • பொய் வெட்கம் தரும்.
    • கனத்த மௌனம் காத தூரம் வரை தெரியும்.
    • "சொந்த பாஷை'' பேச முடியாதது விளங்கும்.
    • கண் சுயம் பிரகாசம் பெறும். இதெல்லாம் மனத்தைத் தொடாது.
    • "100 ரூ.'' தேடி வரும். அது புரியும்.
      பொருளாக வருவது உண்மை. மற்றதெல்லாம் உண்மையை நோக்கிப் போவது.

தொடரும்....

********



book | by Dr. Radut