Skip to Content

06. லைப் டிவைன் - கருத்து

லைப் டிவைன் - கருத்து

நெதி, நெதி என்ற இந்தியச் சட்டம் நமக்குத் தெரிகிறது.

  • ரிஷிகள் பிரம்மத்தைக் காணும் முயற்சியில் வெற்றி பெற்று பிரம்மம் அசைவற்றது என முடிவு செய்து உலகை அக்கண்ணோட்டத்துடன் கண்ட பொழுது மரத்தையும், சிறுவனையும், குழவியையும், சிறுமியையும் கண்டு, "இதுவே பிரம்மம்'' என்றனர்.
  • பார்வை கூர்மையானபொழுது "இதுவல்ல பிரம்மம், இதுவல்ல பிரம்மம்'' என்றனர்.
  • ஆரிய முன்னோர் அன்று கண்டதை இன்றுவரை உலகம் காணவில்லை.
  • அத்துடன் அவர்களால் அறுதியிட்டு பிரம்மம் இதுதான் எனக் கூற முடியவில்லை.
  • ரிஷிகள் பிரம்மத்தை ஒரு புறத்தில் "இதுவே பிரம்மம்'' எனவும், மறுபுறத்தில், "இது பிரம்மமல்ல'' எனவும் கண்டனர் என பகவான் விளக்கம் கூறுகிறார்.
  • மனம் முழுமையைக் காண இயலாதது. அதனால் இருபுறமும் மாறி மாறிக் காண்கிறது.
  • மனத்திலிருந்து உயர்ந்து சத்தியஜீவியத்திற்குப் போய் பிரம்மத்தைக் கண்டால் மனிதன் பிரம்மத்தைக் காண முடியும். முழுமையான பிரம்மம் தெரியும்.
  • அது ஒரு புறம் அசைவற்றதாகவும், மறுபுறம் அசைவுள்ளதாகவும் தெரியும்.
  • குழந்தையைப் பாம்பிடமிருந்து காப்பாற்றியக் கீரிப்பிள்ளையை அதுவே குழந்தையைக் கடித்துக் கொன்றது எனத் தவறாக அறிந்த தாயார் போல் பகுதியான பார்வை தவறான பார்வையாகிறது.
  • பார்வை முழுமை பெற்றால் முரண்பாடு உடன்பாடாகும்.
  • The Life Divine-இல் 5-ஆம் அத்தியாயம் மனிதனுடைய கடமை. அதில் வரும் கூற்று இது.
  • மனிதனுடைய கடமை பிரம்மத்தை முழுமையாகக் காண்பதாகும்.
  • சுமார் 18 வகையாக மனிதன் பிரம்மத்தைப் பகுதியாகக் காண்கிறான். இதுவும் அதில் ஒன்று.
  • ஒரு குழந்தையைக் கண்டு இது பிரம்மம் என்றாலும், இது பிரம்மமில்லை என்றாலும் இரண்டும் உண்டு.
  • அதன் பொருள்: பிரம்மம் ஒரே சமயத்தில் எதிரெதிரான இரு தோற்றம் பெறக்கூடியது.
  • தாயார் குழந்தையை அடிக்கிறாள். குழந்தை மீது பிரியமுடையவள் அவள் எனில் அடிப்பது அன்பின் வெளிப்பாடு என்றாகிறது.
  • அதை மனம் முழுமையாக உணர முடியாது.
  • சத்தியஜீவியம் முழுமையாக உணர முடியும்.
  • சத்தியஜீவியம் முழுமையாகக் காண்பதை மனம் சுட்டிக்காட்ட வேண்டும். அதை உணர்வது மனிதனுடைய கடமை என்ற கருத்தை இந்த அத்தியாயத்தில் 18 வகையாகக் கூறுவதில் இதுவும் ஒன்றாகும்.
  • மரணம் வாழ்விற்கு அமரத்துவமளிக்கிறது என்ற கருத்து இதனின்று எழுகிறது.
  • எலிசபெத் டார்சியைத் திட்டியது, டார்சிக்குத் திட்டாகத் தெரியவில்லை, உண்மையாகத் தெரிந்தது.
  • அவன் கண்ட "உண்மை" முடிவில் நடந்தது.

********



book | by Dr. Radut