Skip to Content

05. பூரணயோகம் - முதல் வாயில்கள்

பூரணயோகம் - முதல் வாயில்கள்

(சென்ற இதழின் தொடர்ச்சி.....)

கர்மயோகி

54. பூர்வ ஜென்ம ஞானம்

  • ஞாபகம் பிறப்புக்கு முன் இல்லை.
  • இறப்புடன் ஞாபகம் முடிகிறது.
  • மனித வாழ்வு பிறப்பில் ஆரம்பித்து, இறப்பில் முடிகிறது.
  • நினைவு இவ்வெல்லைக்குள் செயல்படும்.
  • மனத்தின் நினைவுக்கு இவை எல்லைகள்.
  • அடிமனம் பிரபஞ்சத்தின் அளவு பரந்தது.
  • அதற்கு நினைவு என ஒன்றில்லை.
  • அடிமனம் ஒரே சமயத்தில் உலகம் முழுவதும் காண வல்லது.
  • அதனால் அதற்கு நினைவு என ஒன்று தனியாகத் தேவையில்லை.
  • சைத்திய புருஷன் அடிமனத்தில் உறைகிறான்.
  • பூரணயோகம் சமர்ப்பணத்தால் மேல்மனத்தினின்று அடிமனம் செல்ல வல்லது.
  • அடிமனம் சென்றடைந்தவுடன் எல்லா முற்பிறப்புகளும், எல்லா வருங்காலப் பிறப்புகளும் தெரியும்.
  • மேல்மனத்திற்கும், அடிமனத்திற்கும் இடையே உள்மனம் உண்டு.
  • உள்மனத்தில் சாட்சி புருஷன் உறைகிறான்.
  • இது ஆன்மீக லோகமல்ல, சூட்சும லோகம்.
  • சூட்சும லோகம் என்பதால், பூர்வ ஜென்மத்தை அறியும் திறனுண்டு.
  • கர்ணனுக்குத் தாயார் யார் எனத் தெரிந்துகொள்ளும் ஆசை அவனை அரித்தெடுக்கிறது.
  • வெகுநாள் கழித்து அதைக் கிருஷ்ணன் மூலம் தெரிந்து கொள்கிறான்.
  • அதன்பின் துரோணரைப் பார்க்க ஒரு சமயம் போன பொழுது, "வா, குந்தி புத்ரா'' என்றார்.
  • அவருக்குத் தன் பிறப்புத் தெரியும் என்பது கர்ணனுக்கு ஆச்சரியம்.
  • துரோணர் ரிஷியில்லை, ஆச்சாரியன்.
  • அவருக்குச் சூட்சுமம் தெரியும்.
  • பிறப்பில் தவறுதலாகப் போன ஜென்ம நினைவு சிறிது வரலாம்.
  • அவர்கட்கு இப்பிழையால் போன ஜென்ம விவரங்கள் சில தெரியும்.
  • தவம் செய்பவர்க்கு இத்திறமை தவறாது எழும்.
  • அன்னைக்கு இத்திறமையுண்டு.
  • போன ஜென்மத்தில் சில சாதகர்களுடைய பிறப்பை அவர் ஒரு சமயம் கூறியுள்ளார்.
  • அந்த நாளில் ஆசிரமத்திற்கு அன்னை தரிசனத்திற்காக வருபவர்களை அன்னை முதல் நாள் பால்கனி தரிசனத்திற்கு வரச் சொல்லுவார்.
  • அப்படி ஒரு சாதகர் அவர் உறவினரை அழைத்து வந்தார்.
  • பால்கனியில் அன்னை அவரைக் கண்டார்.
  • பிறகு அந்தச் சாதகரிடம், "உன் நண்பரைக் கண்டேன், உயரமாக தாடியுடனிருந்தார்'' என்றார்.
  • சாதகர், "என் நண்பர் குள்ளமானவர், தாடியில்லை'' என்றார்.
  • மறுநாளும் பால்கனிக்கு அழைத்து வரச் சொன்னார்.
  • அன்றும் அவரை உயரமாக, தாடியுடன் கண்டார்.
  • அந்தச் சாதகரிடம், "நான் கண்டது உன் நண்பரின் பூர்வ ஜென்ம உருவம்'' என்றார்.
  • யோகம் முதிர்ந்து பூர்வ ஜென்மம் ஒருவருக்குத் தெரியுமானால், அது அவருக்குப் பெரிய சித்தி.
  • அன்பருக்குத் தியானத்தில் பூர்வ ஜென்மம் தட்டுப்பட்டால், அவருக்கு யோகம் பலிக்கும் எனப் பொருள்.
  • நமக்கு நண்பர் உறவினர்களில் போன ஜென்ம தொடர்புள்ளவரிருப்பதுண்டு.
  • ஜாதகம் அதைக் கூறும்.
  • சில அன்பர்கள் பூர்வ ஜென்மத்தை அறியும் ஆவலுடையவர்கள்.
  • அவர்கள் பிரார்த்தனையால் அதைப் பெறுவதுண்டு.

தொடரும்.....

*******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
  • நல்லதை உற்பத்தி செய்தபடியிருக்க வேண்டும்.
  • நல்லவர்கட்கு அவற்றைத் தடையின்றி கொடுக்க வேண்டும்.
  • நல்லது நானிலத்தில் பரவுவது நல்லது.  
 

******



book | by Dr. Radut