Skip to Content

01. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்

ஸ்ரீ அரவிந்தம்

லைப் டிவைன்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

XXII. The Problem of Life
22. வாழ்வின் பிரச்சனை
We have data before us.
Page No.212
நம்முள் உள்ள விஷயங்கள் சில.
We can see the difficulties
 Para No.7
நம் சிரமத்தை அறியலாம்.
It arises from the imperfect poise of Consciousness and Force.
ஜீவியமும், சக்தியும் குறையான நிலையிலிருப்பதால் அவை எழுகின்றன.
Man's present status raises this.
மனிதனின் இன்றைய நிலை இதை உருவாக்குகிறது.
It is a status of mind and life.
மனமும் வாழ்வும் உள்ள நிலையிது.
They are principally three.
அவை முக்கியமாக மூன்று.
First he is aware of only a small part of his being.
தன் ஜீவனின் சிறு பகுதியை மட்டும் மனிதன் அறிவான்.
He has a surface mentality.
மேலெழுந்த மனம் உண்டு.
He has surface life.
மேலெழுந்த வாழ்வுண்டு.
He has too a surface physical being.
மேலெழுந்த உடல் வாழ்வும் உண்டு.
He knows not even all that.
மனிதன் தன் மேல் மனத்தையும் முழுமையாக அறியமாட்டான்.
Below is the occult plane.
அதன் கீழ் கண்ணுக்குத் தெரியாத சூட்சும லோகமுண்டு.
It is a surge of the subconscious mind.
ஆழ்மனம் வீறிட்டெழுவது அது.
It is a surge of the subliminal mind.
அடிமனம் வீறிட்டெழுவது அது.
There are his subconscious life-impulses.
ஆழ்மன வாழ்வின் உந்துதல்கள் உண்டு.
There are his subliminal life-impulses.
அடிமன வாழ்வின் உந்துதல்கள் உண்டு.
There is his subconscious corporeality.
ஆழ்மன உடலுண்டு.
It is a large part of himself.
இவை மனிதனின் பெரும் பகுதி.
He does not know them.
மனிதன் அவற்றை அறியமாட்டான்.
He cannot govern them.
அவனால் அவற்றை ஆள முடியாது.
They know him.
அவற்றிற்கு அவனைத் தெரியும்.
They govern him.
அவை அவனை ஆட்சி செய்கின்றன.
Existence, consciousness and force are one.
வாழ்வு, ஜீவியம், சக்தி ஒன்றே.
We are identified with them by self-awareness.
நாம் அவற்றுடன் தன்னை அறிந்து ஐக்கியமாகிறோம்.
Our power is in the measure of that.
அந்த அளவில் நமக்குப் பவருண்டு.
The rest are subliminal.
மற்றவை மனத்திற்கு அடியில் போய்விடும்.
It is subliminal to our mind, life and body.
மனம், வாழ்வு, உடலுக்கு அடியில் போய்விடும்.
The rest must be governed by its own
consciousness.
நாம் ஐக்கியமானது போக உள்ள ஜீவியம் மீதியை ஆளும்.
The two are one movement.
இரண்டும் ஒன்றே.
They are not two separate movements.
அவை இரண்டும் தனித்தனி அல்ல.
One is larger and more powerful.
ஒன்று பெரியது சக்தி வாய்ந்தது.
The other is smaller and less powerful.
அடுத்தது சிறியது, சக்தி குறைவானது.
Therefore we are governed by them.
எனவே நாம் அவற்றால் ஆளப்படுகிறோம்.
Even in our conscious existence they prevail.
நாமறிந்த வாழ்விலும் அவை நம்மை ஆள்கின்றன.
We have self-mastery
சிலவற்றில் நாம் நம்மை ஆள்கின்றோம்.
We have self-direction.
நாமே நம்மை வழிநடத்துகிறோம்.
Even there we are only instruments.
அங்கும் நாம் கருவிகளே.
There is the Inconscient in us.
ஜட ஜீவியம் உண்டு.
We are its instruments.
நாம் அதன் கருவிகள்.
The old wisdom speaks of Nature.
Page No.212
பழைய விவேகம் சுபாவத்தைப் பற்றிப் பேசுகிறது.
It says Men are compelled to follow their Nature.
Para No.8
மனிதன் தன் சுபாவத்தைப் பின்பற்ற வேண்டும் என்பது கட்டாயம்.
Nature determines, in reality, all his works.
அவன் செயல்களைச் சுபாவம் நிர்ணயிக்கிறது.
He does not work by his free will.
சுதந்திரம் அவனுக்கில்லை.
Man imagines he is the doer, it says.
அது மனிதன் சுதந்திரமாகச் செயல்படுவதாக நினைத்துக் கொள்கிறான் என்கிறது.
Nature is the creative force of our consciousness.
சுபாவம் நம் ஜீவியத்திற்கு ஜீவனளிக்கிறது.
It is the consciousness of the Being.
அது ஜீவனின் ஜீவியம்.
It is within us.
அது நம்முள் உள்ளது.
It is masked.
அது மறைந்துளது.
It is masked by his inverse movement.
அதன் சலனம் தலைகீழேயுள்ளது.
It is an apparent denial of Himself.
கடவுளை மறுப்பதாக அது தெரிகிறது.
They called it Maya.
அதை மாயை என்றனர்.
Maya is the illusion-power.
மாயை என்பது இல்லாதது.
The Lord is seated within the heart of all
existences.
இறைவன் வாழ்வின் இதயத்திலுறைகிறான்.
It is turned as upon a machine.
அது இயந்திரம் போல் இயங்குகிறது.
It does so through His Maya.
அது மாயை மூலம் செயல்படுகிறது.
This is how Maya is explained.
மாயையை இப்படிக் கூறுகிறார்கள்.
Man exceeds his mind.
மனிதனால் மனத்தைக் கடக்க முடியும்.
It makes him one in self-awareness.
அதனால் மனிதன் தன்னையறிய முடியும்.
He thus becomes one with the Lord.
இறைவனோடு அவன் அப்படி ஒன்றுகிறான்.
Thus the Lord becomes the master.
அவ்விதம் இறைவன் உலகை ஆள முடியும்.
He is the master of his own being.
தன் ஜீவனை அவன் ஆள முடியும்.
This is not possible in the inconscience.
இது ஜடத்தில் முடியாது.
Nor is it possible in the subconscient.
இது ஆழ்மனத்திலும் முடியாது.
It is to plunge into our depths.
அது நம் ஆழத்தில் புதைவதாகும்.
It moves towards the Inconscient.
அது ஜட ஜீவனை நோக்கிச் செல்லும்.
We must go inward.
நாம் உள்ளே போக வேண்டும்.
Go to where the Lord is seated.
இறைவன் உறையுமிடம் நாட வேண்டும்.
From there we must ascend.
அதனின்று உயர வேண்டும்.
It is still superconscient to us.
அது நாமறியாதது.
It is in Supermind.
அது சத்திய ஜீவியத்திலுள்ளது.
There exists this unity.
இவ்வைக்கியம் அங்குள்ளது.
There is the higher Maya.
அங்கு உயர்ந்த மாயை உள்ளது.
It is the divine Maya.
அது தெய்வீக மாயை.
It is the conscious knowledge.
அது தன்னையறியும் ஞானம்.
It is knowledge in its law and truth.
அது சத்தியமான சட்டம்.
It works in the subconscient.
அது ஆழ்மனத்தில் செயல்படுகிறது.
It works by the lower Maya.
அது தாழ்ந்த மாயை மூலம் செயல்படுகிறது.
It is in the conditions of the Denial.
அது மறுப்பிற்குரிய இடம்.
It seeks to become Affirmation.
அது மறுப்பை மறுக்க முயல்கிறது.
It is willed in higher Nature.
உயர்ந்த மாயை முடிவு செய்கிறது.
The lower Nature works out.
தாழ்ந்த மாயை அதைச் செயல்படுத்துகிறது.
There is an Illusion-Power.
மாயையான சக்தியுண்டு.
It is of the divine knowledge.
அது தெய்வீக ஞானம்.
It creates appearances.
அது தோற்றம்.
It is governed by Truth-Power.
அது சத்திய சக்தி.
It is of the same knowledge.
அதுவும் அந்த ஞானத்தைச் சேர்ந்தது.
It knows the truth behind appearances.
தோற்றத்தின் பின்னுள்ள சத்தியத்தை அது அறியும்.
They are working.
அவையும் செயல்படுகின்றன.
They keep Affirmation ready for us.
அது மறுப்பை மறுத்துக் காட்டுகிறது.
Higher Nature knows and wills.
உயர்ந்த இயற்கை அறியும், செயல்பட முடிவு செய்யும்.
Lower Nature works it out.
தாழ்ந்த இயற்கை அதைச் செயல்படுத்துகிறது.
The divine knowledge has the Illusion-Power.
தெய்வீக ஞானம் மாயையின் சக்தியைப் பெற்றுள்ளது.
It is in the world.
இந்த ஞானம் உலகிலுண்டு.
It creates appearances.
இது தோற்றத்தை எழுப்பும்.
The Truth-Power governs the appearances.
சத்திய-சக்தி தோற்றத்தை ஆளும்.
Both are of the same knowledge.
இரண்டும் ஒரே ஞானத்தைச் சார்ந்தவை.
It knows the truth behind the appearances.
தோற்றத்தின் பின்னுள்ள சத்தியத்தை அது அறியும்.
We are working towards the Affirmation.
மறுப்பை மறுக்கும் செயலில் நாம் முன்னேறுகிறோம்.
The knowledge keeps the Affirmation ready.
இந்த ஞானம் இலட்சியத்தைத் தயாராக வைத்துள்ளது.
Man is partial and apparent here.
மனிதன் பகுதியான தோற்றம்.
He will find there something else.
அங்கு இவன் காண்பது வேறு.
There is the real and perfect Man.
அங்கு உண்மையான சிறப்பான மனிதனுண்டு.
He is capable of an entirely self-aware being.
முழுவதும் தன்னையறிய அவனால் முடியும்.
It is by his full unity with the Self-existent.
சுய வாழ்வுடன் முழு ஐக்கியத்தால் அவன் அவை அறிவான்.
He is the omniscient Lord.
அவன் எல்லாம் அறிந்த இறைவன்.
He knows His own cosmic evolution and procession.
தன் பிரபஞ்சப் பரிணாமத்தையும் அவன் வளர்ச்சியையும் அவன் அறிவான்.
There is a second difficulty.
Page No. 213
இரண்டாவது பிரச்சனையுண்டு.
It is man is separated in his mind.
Para No.9
மனித மனம் பிரிந்துள்ளது.
He is separated from the universe.
அவன் பிரபஞ்சத்திலிருந்து பிரிக்கப்பட்டுள்ளான்.
He is so in his mind, life and body.
அவனது உடலும், வாழ்வும், மனமும் அப்படி பிரிக்கப்பட்டுள்ளது.
Therefore he does not know his fellow creatures.
அவனால் உடனுள்ளவர்களை அறிய முடியாது.
Already he does not know himself.
ஏற்கனவே மனிதன் தன்னையறியான்.
He has a mental construction of them.
அவன் அவர்களைப் பற்றி மனத்திற்குரிய கருத்துடையவனாகிறான்.
It is rough.
இது குத்துமதிப்பானது.
This is by some kind of sympathy.
ஒரு வகையான அனுதாபத்தால் இது எழுகிறது.
This is by an imperfect capacity.
குறையுள்ள திறமையாலெழுவது இது.
This is by inferences, theories and observation.
கண்டும், சிந்தனை செய்தும், உத்தேசமாகவும் அவன் இதை அறிகிறான்.
But this is not knowledge.
ஆனால் இது ஞானமாகாது.
We are consciously aware of ourselves to some extent.
ஓரளவு நாம் நம்மைத் தெளிவாக அறிவோம்.
Knowledge can come only by identity.
ஞானம் ஐக்கியம் மூலமே வரும்.
It is the true knowledge.
அதுவே உண்மையான ஞானம்.
It is existence aware of itself.
வாழ்வு அங்ஙனம் தன்னையறிகிறது.
The rest is hidden.
மீதி மறைந்துள்ளது.
We become one in our consciousness.
நாம் நம் ஜீவியத்தில் ஒன்றாவோம்.
We can really come to know that.
நாம் அதை உண்மையில் அறியலாம்.
It can be known only so far we can become one.
ஒன்றுபடும் அளவுக்கே அதை அறிய முடியும்.
As is the means of knowledge, so is the knowledge.
நம் ஞானம் நாம் பயன்படுத்தும் கருவியைப் போன்றது.
They can be indirect.
அவை மறைமுகமானதாக இருக்கலாம்.
The knowledge too will be indirect.
ஞானமும் மறைமுகமாக இருக்கும்.
The means may be imperfect.
கருவி குறையுடையதாக இருக்கலாம்.
The knowledge too will be imperfect.
ஞானமும் குறையுடையதாக இருக்கலாம்.
It will enable us to work.
நாம் செயல்பட அது உதவும்.
It will be precariously clumsy.
அது நிலையற்ற குழப்பமாக இருக்கும்.
We have a mental standpoint of view.
நமக்கு மனம் கொண்ட நோக்கமுண்டு.
There are limited practical aims.
அளவுக்குட்பட்ட நடைமுறை நோக்கங்களுண்டு.
There are necessities.
தேவைகளுண்டு.
There are conveniences.
வசதிகளுண்டு.
We are related with what we know.
நாம் அறிந்ததுடன் உறவுண்டு.
It is imperfect.
அது குறையுடையது.
It is an insecure harmony.
அது நிலையற்ற சுமுகம்.
There is a conscious unity.
நாம் முழுவதும் அறியும் ஐக்கியமுண்டு.
It can help us to arrive at a perfect relation.
ஒரு சிறப்பான உறவைப் பெற அது உதவும்.
We must achieve it with our fellow beings.
மற்ற மனிதருடன் நாம் ஒரு ஐக்கியத்தை அடைய வேண்டும்.
Our mental knowledge creates an understanding.
மனத்தின் அறிவு பிறரை அறிய உதவுகிறது.
It is created by a sympathy of love.
அது அன்பின் ஆதரவால் எழுந்தது.
It will be superficial.
அது மேலெழுந்தவாரியானதாகும்.
Therefore it will be imperfect.
அதனால் அது குறையுடையதாகும்.
It is subject to frustration and denial.
அது விரக்திக்கும், மறுப்பிற்கும் இடம் தரும்.
It is by the uprush of the unknown.
தெரியாதது எழுவதால் அது நடக்கிறது.
It is by the unmastered from below.
கீழிருந்து நமக்குக் கட்டுப்படாததால் எழுவது அது.
It is from the subconscient and subliminal in us.
நம் அடிமனத்திலிருந்தும், ஆழ்மனத்திலிருந்தும் வருவது அது.
There is the universal in us.
பிரபஞ்சம் நம்முள் உள்ளது.
We are one with it.
நாம் பிரபஞ்சத்துடன் ஒன்றியுள்ளோம்.
We can enter into that.
நாம் அதனுள் நுழையலாம்.
It can be a conscious oneness.
அது நாமறியும் ஐக்கியமாகும்.
The superconscient is there in us.
நம்முள் பரமாத்மாவுள்ளது.
The fullness of the universal exists only there.
பரமாத்மாவில் பிரபஞ்சம் முழுமை பெறுகிறது.
It is conscient.
பரமாத்மா தன்னையறியும், பிரபஞ்சத்தையறியும்.
It is in the Supermind.
அது சத்தியஜீவியத்திலுள்ளது.
Man lives in his normal being.
மனிதன் என்றும் போல வாழும் வாழ்வுண்டு.
Its greater part is subconscient.
அதன் பெரும் பகுதி ஆழ்மனம்.
Man cannot possess it in his normal mind.
அதை மனிதன் அவன் வழக்கமான மனதால் ஆட்கொள்ள முடியாது.
It is so in his mind, life and body.
இது மனம், வாழ்வு, உடலுக்குப் பொருந்தும்.
The lower conscious nature is bound.
தன்னையறியும் தாழ்ந்த சுபாவம் கட்டுண்டது.
It is bound in all activities.
எல்லாச் செயல்களிலும் அது கட்டுண்டது.
It is bound down to ego.
அகந்தையால் அது கட்டுப்பட்டது.
It is chained triply.
மூவகையாக அது கட்டுப்பட்டது.
The individuality is differentiated.
தனித்தன்மை பலவகையானது.
It is tied to its stake.
சுபாவம் தனித்தன்மைக்குக் கட்டுப்பட்டது.
The Supermind has the unity.
சத்தியஜீவியம் ஐக்கியம் பெற்றது.
It has diversity.
சத்தியஜீவியம் ஒன்றைப் பெற்றதைப் போல் பலவற்றையும் பெற்றுள்ளது.
Contd....
தொடரும்......
 
******
 
 
*******
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
  • அன்பை செலுத்துவது ஆனந்தம்.
  • வெளியே செல்லும் அன்பு உள்ளே அருளை ஈர்க்கும்.
  • அன்பைப் பெறுவது ஆனந்தம்.
  • பெற்ற அன்பை செலுத்துவது உயர்ந்த வாழ்வு.
  • அன்பின் செயல் அருளுக்கு அஸ்திவாரம்.
  • அன்பைப் பெற அடுத்தவரை தயார் செய்வது அன்பு இல்லை; அருள்.
  •  மனிதனுக்கு தரும் அன்பைவிட பொருளுக்குத் தரும் அன்பு உயர்ந்தது; நிகழ்ச்சிகளும் அன்பைப் பெறும்.
  • ஹிருதய சமுத்திரம் சக்தியான சமுத்திரம்.
  • அன்னை அன்பான ஹிருதய சமுத்திரம்.
  • பிரச்சனை தீர்க்க வரும் அன்னை, புயல்.
  • நமக்காக வரும் அன்னை கடல் காற்று.
  • அன்னைக்காக அவரை அழைப்பது, தென்றல்.
  • தென்றலான அன்னை திகட்டாத அன்பின் அருள்.
  • தீர யோசனை செய்து சேர வேண்டும்.
  • சேர்ந்தால் பிரியக் கூடாது.
  • நம்மால் ஆதாயமில்லாவிட்டால் இனி நட்பு நீடிக்காது என்பது உறவல்ல.
  • ஆதாயமில்லாவிட்டால் உறவு நெருக்கமாகும் என்பதே உறவு, நட்பு, பிரியம்.
  • உன் உறவு நஷ்டம் கொடுத்தாலும் அது வேண்டும் என்ற நல்லெண்ணம் நஷ்டத்தை இலாபமாக்கும் திறனுடையது.
  • ஆதாயம் இல்லை என்பதால் விலகக் கூடாது என்ற நல்லெண்ணம் ஆதாயத்தை உற்பத்தி செய்ய வல்லது.
  •  நட்பு நஷ்டத்தைக் கடந்தது.

********



book | by Dr. Radut