Skip to Content

10. யோக வாழ்க்கை விளக்கம் V

யோக வாழ்க்கை விளக்கம் V

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

  1. ஒரு நிலை ((level) முறையால் (organisation) செறிவாக நிறையும்பொழுது, அதை மேலும் உயர்த்த ஒரு நல்ல காரியம் செய்தாலும், தவறு இழைத்தாலும் வாழ்வு எதிரொலிக்கும்.

    செறிவான நிலை நல்லதாலும், கெட்டதாலும் உயரும்.

    [When a plane is saturated with organisation any addition to it either as a positive endowment or a negative lapse raises a life response].

    இது தத்துவமான கருத்து. எளிதில் மனதில் படாது. Organisation, saturation என்ற சொற்களை தமிழில் எழுத வாராது. இந்தச் செய்தியிலுள்ள கருத்தை நடைமுறைத் தமிழில் புரியும்படி எழுதினால் கருத்து மாறியதுபோல் தோன்றும்.

    நேரம் வந்து நெஞ்சு நிறைந்தால் நினைத்தது நடக்கும் (அல்லது) நெஞ்சு நிறைந்து நேரத்தை வரவழைத்தால் நீ செய்ய வேண்டியதை உலகம் உனக்குச் செய்யும்.

    அன்பர்கட்கு முக்கியம் என்பதாலும், நமக்குக் கர்மமில்லை, நாம் நினைத்தது நினைத்தபடி உடனே நடக்கும்என்பதாலும், இக்கருத்தை நான் வலியுறுத்துகிறேன். Pride and Prejudiceஇல் £ 50 வருமானமுள்ள அழகில்லாத பெண் எலிசபெத்தை £ 10,000 வருமானமுள்ள டார்சி பார்த்து "பரவாயில்லை” எனக் கூறி, டான்ஸ் ஆட மறுத்தபின், அவள் கண்ணொளிப் பிரகாசத்தால் கவரப்பட்டு, தன் நிலையிழந்து, தன் ஆர்வத்தை எவரும் அறியக்கூடாதுஎன மறைத்ததால், எலிசபெத்திற்கு டார்சியின் ஆவல் தெரியவில்லை. டார்சி மீது கேள்விப்பட்ட புகார், தமக்கைத் திருமணத்தைத் தடை செய்தான்என நம்புவதால், எலிசபெத் அவன் மீது தீராத வெறுப்பு கொண்டாள்.

    தீராக் காதலும் தீராத வெறுப்பும் சந்தித்தன.

    பூகம்பம் வெடித்தது. "என்னை மணக்க வேண்டும்” என ஆர்வமாகக் கேட்டதை அவள் வெறுப்புடன் மறுத்தாள். அவள் மனதறிந்து, அவன் விளக்கமான கடிதம் எழுதுகிறான். வேண்டாவெறுப்பாகப் படித்து, உண்மையறிந்து, மனம் மாறினாள். வந்த பேர்அதிர்ஷ்டம் தேடி வந்தது. கடுமையாக மறுத்தாள். இனி என்ன செய்வது? கடிதத்தை மனப்பாடம் ஆகும்வரை படித்து, எல்லாத் தவறுகளும் தன் மீதுள்ளதை அறிய அவளுக்கு 2 மணி நேரமாயிற்று. பெற்றதை இழந்தாள். கடிதத்தின் செய்திகள், உணர்ச்சிகள், விளக்கங்களை ஆழ்ந்து படித்து, மனம் மாறினாள். தற்செயலாக, பிரயாணம் செய்யும்பொழுது டார்சி வீடான பெம்பர்லியைப் பார்க்கப் போகிறாள். அவள் வீடு பெரியது. பெம்பர்லி பிரம்மாண்டமான பல நூறு அறைகளுள்ள பங்களா, 200 ஏக்கரில் உள்ளதைத் தூரத்திலிருந்து கண்டவுடன் இழந்ததின் பெருமையை அறிந்தாள். உள்ளே போய் டார்சியின் பிரதாபங்களை அறிந்து, வீட்டின் மகத்துவம் மனதைத் தொட்டவுடன், "இந்த வாய்ப்பை நான் அறிவில்லாமல் இழந்தேன்' என உணர்ந்து நினைக்கிறாள்.

    நெஞ்சு குறையை விட்டகன்று நிறைகிறது.
    மனம் இழந்ததை நாடியது.

    அரை க்ஷணத்தில் வெளியூர் போயிருந்த டார்சி வந்து, அவளைச் சந்தித்து, அன்பாகப் பேசி, உபசரித்து, தன் பிரியத்தை வெளிப்படுத்தி, அவள் மாறிய மனநிலையை ஏற்கிறான்.

    • நெஞ்சு நிறைந்தால் நேரம் வரும்.
    • மனம் இழந்ததை நாடியது.

     நெஞ்சு நிறைய, செயல் முழுமைப்பட வேண்டும். அதற்கு நாமுள்ள நிலையில் ஆயிரம் பெரிய, சிறிய விஷயங்கள் அமைய வேண்டும். பெரிய வீட்டுக் கல்யாணத்தில் குறையேயில்லைஎனில் அவர்கள் எடுத்த முயற்சி பெரியது. அவர்கள் வசதி பெரியது. திட்டமிட்டது பரம்பரையானது.

    • சத்தியஜீவியம் இதை அன்பர்க்கு அளிக்கிறது.
    • மனம் பவ்யப்பட்டு, சமர்ப்பணம் சரணாகதியானால், சத்தியஜீவியம் நெஞ்சை நிறைத்து, நேரத்தை வரவழைக்கும்.  

     
  2. வாழ்வு எதிரொலிக்க ஒரு வாழ்வு நிலையை (level) அமைப்பால் செறிந்தநிறைவு செய்ய வேண்டும்.

    எதிரொலிக்குச் செறிவு தேவை.
    (அல்லது)
    நினைவும் உணர்வும் நெஞ்சில் நிறைந்தால் தேடிப் போகும் காரியம் நம்மை நாடி வரும்.
    (அல்லது)
    நாம் செய்ய வேண்டியவற்றை மயிரிழை குறையாமல் பூர்த்தி செய்தால், நமக்கு வரவேண்டியது நம்மைத் தேடி வரும்.
    (அல்லது)
    கடமை முழுமையானால் காரியம் தானே பூர்த்தியாகும்.

    என் மகன் படிப்பு, அட்மிஷன், வேலை, திருமணத்திற்காக அலைய வேண்டிய சந்தர்ப்பம் எனக்கு எழவில்லை என்பவர் மகன் முதல் மாணவனாக, பெரிய இடத்துப் பிள்ளையாக இருப்பான். எளிய வீட்டில் பிறந்து இதுபோல் அரிபொருளாக நடந்ததுண்டு. பையனும், பெற்றோரும் படிப்பு சம்பந்தமாக முழுப்பொறுப்புடன் வேலை செய்தால், அட்மிஷன் கேட்ட இடங்களிலெல்லாம் கிடைக்கும். பொறுப்புடன் திறமையாகப் படிக்கும் மாணவனுக்கு வேலை தேடி வரும். அவனுக்குப் பல பெண்கள் அமையும். அவனே தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம்.

    • நிலைமை, பிறப்பு, எளிமை, வசதி எப்படியிருந்தாலும், விஷயம் எதுவானாலும் - திருமணம், சொத்து, வேலை - நமது கடமை பூரணமாக நிறைந்திருந்தால், அடுத்தது கேட்டவுடன் கிடைக்கும், அல்லது தேடி வரும்.
    • சாஸ்திரிக்கும், இந்திராவுக்கும் பிரதமமந்திரி பதவி அப்படித்தான் வந்தது. காமராஜருக்கு அகில இந்தியக் காங்கிரஸ் தலைமைப் பதவி வந்ததும் அப்படியே. இராஜாஜியை வற்புறுத்தி முதல் மந்திரியாக்கினர்.

    வாழ்வு தெம்பாலும், திறமையாலும் நிறையும். தெம்பில்லாமல் எதுவும் செய்ய முடியாது. அதிகபட்சத் தெம்பும் திறமையும் இல்லாவிட்டால், ஆர்ப்பாட்டமாகச் செயல்பட்டு, சிறிதளவே சாதிக்கும். திறமையால் அதிகபட்சம் சாதிக்கும். திறமை (organisation) என்பது காரியத்தை முடிக்கும் திறமை. அது பலதரப்பட்டது. செயல், செல்வாக்கு, பவர் ஒரு ஸ்தாபனத்திற்குண்டு. அவை பூரணமாகச் செறிவுபட்டால் (saturated) அந்த ஸ்தாபனத்திற்கு எதிரொலியுண்டு. அதுபோன்ற குடும்பத்திற்கு வாழ்வு எதிரொலிக்கும். எதிரொலிக்கும் எனில் மற்றவர் முயன்று பெறுவதை அவர்கள் எளிமையாகப் பெறுவார்கள்.

    கிராமத்துப் பள்ளியில் எட்டு வகுப்பு முடித்தவன் நகரத்திற்கு ஹைஸ்கூலுக்குப் போவான். SSLC முடித்து, கல்லூரியைத் தேடிப் போவான். கிராமத்தில் அவன் 8ஆம் வகுப்பு முடித்த ஆண்டு அப்பள்ளி உயர்நிலைப் பள்ளியாவது, அவன் SSLC முடித்தவுடன் அதே பள்ளி கல்லூரியாவது அப்படிப்பட்ட எதிரொலியாகும்.

    • அன்னைக் கோட்பாடுகளை நாம் ஏற்றால், அன்னை நம்மை நாடி வருகிறார்.
    • குடும்பத்தை நடத்துவது நிறைந்து செறிந்தால், யோகம் பலிக்கும்.
    • பன்னிருவருக்கு யோகம் பலித்தால், பல்லாயிரம் பேருக்கு அது பலன் தரும். 
  3. நெடுநாளாக நீ அறிந்ததைப் பேப்பரில் எழுதினால், உடனே அவ்வறிவைப் பெற்று, காரியத்தை நிகழ்த்தும் திறன் பெறுகிறது.
    • எழுத்திற்கு உயிருண்டு.
    • வரிவடிவம் வலிமை தரும்.
    • எழுத்தால் எழுதினால் காரியம் எழுந்துநின்று பேசும்.
    • நினைத்த சொல்லுக்கு எழுதிய எழுத்து சூட்சும உடல்.
    • சாதனை அடுத்த கட்டத்தில் வெளிப்படுவது.

    எதிர்காலத்தில் வரப்போவதை நிகழ்காலத்தில் உருவகம் செய்வது கற்பனைஎன்பது பகவான் விளக்கம். கற்பனைக்கு சிருஷ்டிக்கும் திறனுண்டு. கற்பனை பலிக்கும்; கற்பனைக் கோட்டைக்கு அத்திறனில்லை.

    55,000 ரூபாய்க்கு 1965இல் வாங்கிய பாலைவன நிலத்தில் அன்னை அபரிமிதமான நீரூற்று அளித்தபொழுது அதைப் பலனாக மாற்ற ரூ.2 இலட்சம் தேவை. அப்படிச் செய்தால் நிலம் 30 இலட்சம் மதிப்பு பெறும். பாங்கு தேசீயமயமாகாத நேரம். விவசாயிக்கு பாங்குக் கடனில்லை. மனம் அறிவால் செய்யக்கூடியதை எழுதிப் பார்த்ததில் எழுதும்பொழுது திட்டம் கற்பனையாக இல்லை; ஜீவனோடு இருந்தது. எழுதிய பேப்பரை அன்னை ஆசீர்வாதம் செய்தார். இந்தக் குறுகிய காலத்தில் பாங்கு கடன் தரலாம் என சட்டம் வந்தது. விண்ணப்பத்தைப் பெற்ற பாங்கு பரிசீலனை செய்து, ரூ.4,25,000 சாங்ஷன் செய்தது.

    • அன்னை ஆசீர்வாதம் அபரிமிதம்.
    • திட்டத்தின் கூறுகட்கு திறன் அதிகம்.
    • அவற்றுடன் எழுத்து எழுதியதைப் பெற்றுத் தரும் திறனுள்ளது. 

    1988இல் அணு ஆயுதங்கள் அளவுக்கு மீறி குவியும் நேரம். ரொனால்ட் ரீகனும், கோர்ப்பஷாவும் உலகை ஆளும் நேரம். அன்னை குவியும் ஆயுதங்களைச் செயலற்றதாக்க 1968இல் ஆரோவில் நகரம் எழுப்பினார். 1973இல் சமாதியானார். அன்னை பக்தர் ஒருவர் அவர் கருத்தை எடுத்து, ஆளும் தலைவருக்கு உரைத்தால், அது அன்னை சக்தி வெளிப்படும் கருவியாகும். 1962இல் கென்னடியை, இராஜாஜி அணுகுண்டு வெடிப்புச் சோதனையைச் செய்யக்கூடாது எனக் கேட்டபொழுது சோதனை ஒத்திவைக்கப்பட்டது. இராஜாஜி மகாத்மா காந்தி சமாதானக்குழு சார்பாகப் போய்ப் பேசினார். இந்திய ஆன்மீகசக்தி வெளிப்பட இராஜாஜி கருவியாக இருந்தார். மதர் சர்வீஸ் சொஸைட்டியின் கருத்தை வெளியிட ஒரு இராஜாஜி இல்லை; கோர்ப்பஷாவ், ரீகனிடம் யார் போய் பேசுவது? ஒரு பிரபல இந்தியர் சம்மதித்தார். குழு அமைக்கச் சொன்னார். 1989 அக்டோபரில் முதற் கூட்டம் இத்தாலியில் நோபல்பரிசு பெற்ற விஞ்ஞானியின் இன்ஸ்ட்டிடூட்டில் நடக்க இருக்கிறது. சொஸைட்டியின் கருத்துகளை Terms and References என்று எழுத்து வடிவத்தில் எழுதி முதற் கூட்டத்திற்கு சமர்ப்பிக்கத் தயாரானோம். 1 வாரம் முன்பு பெர்லின் சுவர் விழுந்தது. அணு ஆயுதங்கள் 1/3 பாகம் குறைக்க வல்லரசுத் தலைவர் இருவரும் முடிவு செய்தனர்.

    • இது அன்னையின் இலட்சியம்.
    • செய்ய முன் வந்தது சர்வதேசக் குழு.
    • எழுத்தால் எழுதப்பட்டதால் எழுத்து தந்த வலிமை சேவை செய்ய முன்வந்தது.
    • 1989 முதல் 1994 வரை குழு செயல்பட்டு ரிப்போர்ட் வெளி வந்தது. அதன் அடுத்த பலன் 10 ஆண்டுகளில் இந்தியாவில் வேலை வாய்ப்பு உத்தரவாதமாகச் செய்யப்பட்டது.

     

தொடரும்....

******

ஜீவிய மணி
 
ஆசைக்குரிய மனிதன் ஆசையாலானவன்.

*****



book | by Dr. Radut