Skip to Content

08. 8 தலைகீழ் மாற்றம்

8 தலைகீழ் மாற்றம்

கர்மயோகி

மனிதன் மாறுகிறான், காலம் மாறுகிறது, உலகம் மாறுகிறது என்பவை உலகம் அறிந்தவை. மாற்றம் நல்லதாக இருந்தால் முன்னேற்றம்; தவறாக இருந்தால் அழிவு. பகவான் கூறுவது திருவுருமாற்றம். சிறையிலுள்ள அரசியல் கைதியை விடுதலை செய்து, நாட்டுக்குத் தலைவராக்குவது மாற்றம். கைதியின் உருவம் தலைவரின் உருவமாக மாறுவதால் அதை உருமாற்றம் எனலாம். அப்படி ஏற்படும் உருமாற்றம், மனிதனைத் தெய்வமாக மாற்றுவது திருவுருமாற்றம் எனப்படும். Silent Will மௌன சக்தி, சக்தி வாய்ந்தது. வாயுள்ள பிள்ளை பிழைக்கும், வழி வாயிலிருக்கிறது, கேட்டால் கிடைக்கும், தட்டுங்கள் திறக்கப்படும், கேட்காதவருக்கு எதுவும் கிடைக்காது என்ற உலகில், எதையும் கேட்காமலிருந்தால் எல்லாம் கிடைக்கும் என்பது தலைகீழ் மாற்றமாகும்; திருவுருமாற்றமாகும். மௌன சக்தியில் மனிதன் மனிதனைக் கேட்காவிட்டால், தெய்வத்தைக் கேட்கிறான். தெய்வம் மனிதனைவிட அதிகமாகத் தரும். மௌனத்திற்குப்பின் மௌனம் உண்டு. அது பிரம்மாண்டமானது. அது செயல்பட தெய்வத்தையும் கேட்காத மனநிலை தேவை. அது பிரம்மாண்டமானதைச் சாதிக்கும்.

உலக வரலாற்றிலும் இதுபோன்ற பெரிய நேரங்களுண்டு. படை எடுத்துவந்த எதிரி தானே திரும்பிப் போவது; தான் நெடுநாளாக ஆண்ட நாட்டை விட்டுத் தானே வெளியேறுவது; திவாலான பேங்கிலிருந்து நேரத்தில் எடுத்துக் காப்பாற்றிய பணத்தை மீண்டும் திரும்பப் போடுவது; பயங்கர எதிரியை எதிர்க்கலாம், சாகலாம், ஜெயிக்கும் வாய்ப்பேயில்லைஎன்றபொழுது, இளைஞர்கள் சிரித்த முகத்துடன் போர்முனைக்குப் போய் உயிரைவிட முன் வருவது; அரசன் பெருவெற்றிக்குப்பின் இனிப் போரிடப் போவதில்லைஎன முடிவு செய்வதுண்டு. உதாரணம்,

  • இந்திய விடுதலை ஆயுதம் தாங்கிய போராட்டமின்றி, ஆளும் நாடு தானே வெளியேறியது.
  • 1929 பொருளாதார நெருக்கடியில் அமெரிக்கர் டெபாசிட்டைத் திரும்பவும் பாங்கில் போட்டது.
  • 1940இல் இங்கிலாந்து ஹிட்லரை எதிர்த்து வென்றது.

    இவை நம் வாழ்வில் நடப்பதுண்டு. அன்பர் வாழ்வில் அடிக்கடி நடக்கும்.

  • பெருமுயற்சி செய்து பெறவேண்டிய மார்க்கட் நம்மை நோக்கி வந்து முன்பணம் கொடுத்து சரக்கு பெறும்.
  • வேலைக்காக ஆயிரமாயிரம்பேர் அலையும்பொழுது படிப்பு முடியுமுன் கம்பனிகள் வந்து வேலை தரும் அதிசயம் நடக்கிறது.
  • கல்லூரியில் சேர்வது சிரமமாக இருக்கும்பொழுது பல்கலைக்கழக துணைவேந்தர் மாணவனை நாடி, "என் ஸ்தாபனத்திற்கு வா'' என அழைத்தார்.
  • தொழிலுக்கு முதல் அவசியம். அது சேர 20 (அல்லது) 30 ஆண்டுகளாகும். முதலுள்ளவர் நம்மைத் தேடி வந்து பார்ட்னராக வரச்சொல்லி, பெருமுதல் தருவது அன்பர் பலர் வாழ்வில் நடந்தவை.
  • கேட்டால் கிடைக்காத டீலர்ஷிப் 5 மாநிலங்கட்கு, கேட்காமல் வருகிறது. கேட்கவில்லைஎன்ற காரணத்தால் வருகிறது.
  • மாவட்டத்தில் கலெக்டர் ஒரு விசேஷத்திற்கு வருவது அரிது. கலெக்டர் அன்பரை, "என்னைக் கூப்பிட்டால் நான் வர மாட்டேனா?'' என்பதும் உண்டு.
  • கவர்னர் எந்த வீட்டிற்கும் வருவதில்லை. "நான் உங்களை சந்திக்க விரும்புகிறேன்'' என அழைப்பில்லாமல் கவர்னர் வருவது.
  • திருமணத்திற்கு நண்பர்களை முறையாக அழைக்க வேண்டும். எவரையும் அழைக்காமல் செய்த திருமணத்திற்குத் தலைமை தாங்குபவரையும் அழைக்காதபொழுது, முக்கியஸ்தர், "நீங்கள் அழைக்காவிட்டாலும் நான் வருகிறேன்'' என வந்தது நடந்தவை.

Pride and Prejudiceஇல் டார்சி வாழ்வில் இவற்றை எடுத்துக்காட்டலாம். ஆன்மீகத் தத்துவப்படி மேல்மனம், உள்மனம், அடிமனம், சைத்தியப்புருஷனில் ஏற்படும் மாற்றமாகவும், அவற்றையும் இரண்டாகப் பிரித்து, ஜீவியம், பொருள் அல்லது மேலே, உள்ளே, அல்லது அகம், புறம்எனப் பிரித்தும் காட்டலாம். 8ஆம் நிலை தலைகீழ் மாற்றம் நடந்தால், ஆழத்தில் உலகில் தீமையில்லை; வாழ்வில் தோல்வியில்லை; நோய், துன்பம், மரணமில்லைஎன்பது அற்புதமாக வெளிப்படும். பாங்கில் கடன்பெற நாம் போகிறோம். டெப்பாசிட் பெற பாங்க் நம்மைத் தேடி வருகிறது. வீட்டிற்கு வந்து கடன் தந்த பாங்க் உண்டு. ஒரு கிராமத்திற்கு முழுவதும் அப்படி கடன் கொடுத்த நிகழ்ச்சியும் உண்டு. போரில் தோற்ற நாடு வென்ற நாட்டிற்கு நஷ்டஈடு கொடுப்பது முறை. முதல் போரில் ஜெர்மனி அப்படி பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்காவுக்கு நஷ்டஈடு கொடுத்தது.

இரண்டாம் போரை வென்றது பகவான் ஸ்ரீ அரவிந்தர்.
அவர் சக்தி திருவுருமாற்றவல்லது.
போரில் வென்ற நாடு தோற்ற நாட்டை புனருத்தாரணம் செய்ய கோடிக்கணக்கான டாலர் கொடுத்தது வரலாற்றில் முதல் முறை.

டார்சி எலிசபெத்தைப் பார்த்து அழகில்லை, பரவாயில்லை என்கிறான். அவளுடைய முகத்திலும், உடலிலும் எந்த அங்கமும் கவர்ச்சியாயில்லைஎனக் கண்டவன் அப்படிப் பேசினான். பிறகு அவள் கலகலப்பாக இருப்பதைக் கண்டு, கவனித்து, அவள் கண்கள் ஒளி வீசுவதைக் காண்கிறான். பரவாயில்லைஎன்றது, மேல்மனம் கவனிக்காமல் பேசியது. கண்களின் ஒளியைக் கண்டது மேல்மனமானாலும், அது மேல்மனத்தின் ஆழ்ந்த நிலை.

எலிசபெத் அழகியில்லை. எந்த அங்கமும் அம்சமாக இல்லை என்றபின்னும், டார்சியின் மனம் அவளை நாடியது. அவள் தாயார் வாயாடி, தங்கைகள் அடக்கமற்ற பெண்கள், சித்தப்பா வக்கீல் (இங்கிலாந்தில் அன்று டாக்டர், வக்கீலுக்கு வேலைக்காரருக்குரிய மரியாதையுண்டு), மட்டமான குடும்பம் என்றறிந்து டார்சி விலகினாலும், அவன் மனம் அவளை நாடுகிறது. அது உள்மனம். உள்மனம் மனோமயப்புருஷனுள்ள இடம். அது சாட்சிப்புருஷன். அதை எட்டியவர் ஜீவன் முக்தன். தவம் பலித்து, ஜீவன் முக்தனானது ரமண மகரிஷி நிலை. அதையடைந்த பின்னரும் முனிவர்கட்குக் கோபம் வருகிறது, காமம் எழுந்து தவத்தை சிதைக்கிறது. டார்சியின் மனம் அடிமனத்தையடைந்து, அவள் மட்டமான குடும்பத்தைப் புறக்கணித்து, அவளை மணக்க விரும்பி, அவளையணுகி, "என்னை நீ மணக்க வேண்டும்'' எனக் கேட்கிறான். ஜீவன் முக்தன் பரமாத்மாவை அடைவது மோட்சம். ஜீவன் ஆண்டவனையடைய விரும்புவது முதல்நிலை. ஆண்டவனையடையும் பக்குவத்தைப் பெற்று, மோட்சத்திற்காகக் காத்திருப்பது அடுத்தநிலை. எலிசபெத் அவனைக் காரசாரமாகத் திட்டி, மறுத்துவிட்டாள். அவன் அவளை விடவில்லை. அவள் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லைஎன கடிதம் எழுதுகிறான். "எலிசபெத் மனம்மாறி என்னை ஏற்கும் அளவிற்கு நான்மாறி, அவளை ஏற்க வைப்பேன்' எனமாறி, பெம்பர்லியில் அவள் சந்தோஷப்படும்படி நடக்கிறான். அது நிறைவேறுகிறது. அவள் சந்தோஷப்படுகிறாள். அதன் பிறகு பூகம்பம் எழுகிறது. லிடியா ஓடிப்போகிறாள். மட்டமான குடும்பம்என்பதை மீறி, எலிசபெத்தைத் திருமணம் செய்ய முடிவு செய்தது ஜீவன் முக்தன் மோட்சம் அடைந்த நிலை. எப்படி ஒரு வீட்டில் பெண் ஓடியபின் அவள் தமக்கையை மணப்பது? எலிசபெத்திற்கு அதுவரை எழுந்த நம்பிக்கை மறைகிறது. குருக்ஷேத்திரத்தில் அர்ஜுனன் மலைத்துப்போன கட்டம் அது; அடிமனம். பரமாத்மா அவனுக்குப் பிரம்மோபதேசம் செய்தார். அவன் மனம்மாறி போரிட சம்மதிக்கிறான். போரை வெல்கிறான். அடிமனம் விஸ்வரூப தரிசனம் தருவது. அங்கு கோரமான பிரபஞ்சமும், கோரமற்ற இருநிலைகள் உள்ளன. அர்ஜுனன் போரிட சம்மதிப்பது முதல்நிலை. போரை வெல்வது அடுத்தநிலை. டார்சி எலிசபெத்தை எப்படியும் ஏற்க முடிவு செய்தபின் லிடியா ஓடிப்போகிறாள். இது அடிமனம். ஓடிப்போன லிடியாவுக்கு பெரிய மனத்தால் திருமணம் செய்து வைக்கிறான். அதைச் செய்தாலும், அந்த வீட்டில் பெண் எடுக்க முடியுமா? விக்காமை சகலனாக ஏற்க முடியுமா? பிங்லியிடம் தான் மறைத்த விஷயத்தை மனம்விட்டுப் பேசி, மன்னிப்புக் கேட்க முடியுமா? அது அடிமனத்தின் இரண்டாம் கட்டம். சைத்தியப்புருஷன் எழுவது இரண்டுநிலை. நமக்கு மட்டும் சித்திப்பது முதல்நிலை. சைத்தியப்புருஷன் சித்தித்தால் தோல்வியில்லை; கவலையில்லை; செய்யும் காரியங்கள் அனைத்தும் கூடிவரும்; நோய், துன்பமில்லை. அது நமக்குமட்டும் பெறுவது. இரண்டாம்நிலையில் நமக்கு சைத்தியப்புருஷன் சித்திப்பதால் உலகம் - நம் உலகம் - நாம் பெறுவதைப் பெறுவது. அது சத்தியஜீவியம் பலித்து, உலகில் மரணம் அழியும்நிலை. டார்சிமூலமாகவும், குடும்பஸ்தன்மூலமாகவும், ஆன்மீகத் தத்துவப்படியும் இந்த எட்டு நிலைகளை மேல்மனம், உள்மனம், அடிமனம், சைத்தியம்என நான்காகப் பிரித்து, ஒவ்வொரு நிலையையும் அகம், புறம் (அல்லது) மேலே, ஆழம் (அல்லது) ஜீவியம், பொருள் என இரண்டு இரண்டாகப் பிரித்து, 8 நிலைகளாக எழுதலாம்.

I
மேல்மனம்
குடும்பம்
 
 
 
 
 
}விஸ்வரூப தரிசனம்
தவம்
II
உள்மனம்
ஜீவன் முக்தன்
மோட்சம்
III
அடிமனம்
கோரப் பிரபஞ்சம்
கோரமற்ற பிரபஞ்சம்
IV
சைத்தியம்
கிருஷ்ணபரமாத்மா
 
சத்தியஜீவிய அற்புதம்
 


Pride and Prejudice: ---------------------------------------3
 
I
மேல்மனம்
பரவாயில்லை
 
1
கண்களில் ஒளி
2
II
உள்மனம்
குறைகளைமீறி எலிசபெத்தை
மணக்க டார்சி விரும்புவது
3
எலிசபெத்தை விரும்பும் அளவு டார்சி அவளுக்காக மனம் மாறுவது
4
III
அடிமனம்
லிடியா திருமணத்தை நடத்துவது
5
எலிசபெத்திற்காக லிடியா, விக்காம் Mrs.பென்னட்டை ஏற்று, அவளை மணக்க விரும்புவது
6
IV
சைத்திய புருஷன்
மணக்க விரும்பும் எண்ணம் உணர்ச்சியாகி எலிசபெத்தை மணப்பது
7
டார்சியின் மனமாற்றம் ஜீவியத்தின் மாற்றமாகி, அதனால் Mrs.பென்னட் பண்பாகவும், விக்காம் நாணயமானவனாகவும் மாறுவது
8

 

அன்பர் அனுபவம்:

பேரம் பேசுபவர், பேரம் பேசாமலிருக்க முடிவு செய்து, சாதிப்பது. குறுக்கே பேசுபவர், குறுக்கே பேசாமலிருப்பது.

வாய் ஓயாமல் பேசுபவர் மௌனத்தைப் பேச்சிலும், மனத்திலும் ஏற்பது.

பிறர் உதவி பெற்று வாழ்க்கை நடத்துபவர், இனி அதைப் பெற மறுப்பது.

பொறாமைப்படுபவர் பொறாமையைக் கைவிட்டு, எவரைக் கண்டு பொறாமைப்படுகிறாரோ அவர்மீது நல்லெண்ணம் கொண்டு அவரை உயர்த்துவது.

சர்க்கார் மான்யம் தருமிடங்களில் அது தேவையற்றவர் மான்யம் பெற மறுப்பது.

மான்யம் பெற்றிருந்தால், திருப்பித் தருவது.

வரி கட்டாதவர் இதுவரை கட்ட வேண்டிய வரியைக் கட்டுவது.

மாமா, பெரியப்பா, மாமனார், உறவினர் சொத்து பெற விரும்புவோர், பெற மறுப்பது.

தகப்பனார் சொத்தில் வாழாமல், அதைப் பிள்ளைகட்கு வைத்துவிட்டு, சொந்தமாக சம்பாதித்து சாப்பிடுவது.

எலக்ஷனில் வோட்டுக்குப் பணம் பெறாதது. எலக்ஷனில் வோட்டுப்பெற, பணம்தர மறுப்பது.

பொய்யைவிட்டு மெய்யை ஏற்பது.

அதிகாரம் உள்ள இடத்தில் செலுத்தாதது.

உரிமையுள்ள இடத்தில் உரிமையைப் பாராட்டாததுபோன்றவை பல கட்டங்களில், பல அளவில் வாழ்வில் எழும்பொழுது, நாமுள்ள இடத்தை விட்டு ஒரு கட்டம் உயர முயன்றால், அது

  1. மாற்றம்
  2. தலைகீழ் மாற்றம்
  3. திருவுருமாற்றம்.

*******

 



book | by Dr. Radut