Skip to Content

07. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்

தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

  1. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல்.
    • தாங்க முடியாத பூரிப்பு.
  2. பணக்காரன் பின்னால் பத்துப் பேர்,
    பயித்தியக்காரன் பின்னால் பத்துப் பேர்.
    • அருளை நோக்கி அனைவரும் வருவர்.
  3. அகலாது, அணுகாது தீக்காய்வார்போல்.
    • நெஞ்சே ஆலயம்; நினைவே வழிபாடு.
  4. ஊர் ஓடும்பொழுது ஒக்க ஓடு.
    • உலகம் சொல்லும் பொய்யை ஏற்க முடியாது.
  5. வெளுத்ததெல்லாம் பால்.
    • அருகிலுள்ளவரெல்லாம் அன்பராகாது.

தொடரும்....

*******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
அன்னையை வாழ்வினுள் அழைத்தபின் பொருளின் நிலை மாறுகிறது. பெறுபவர் அளவு கடந்தது என்று கருதும் தொகை, கொடுப்பவருக்குக் கடுகளவு என்று தோன்றும்.
 
அளவு கடந்த கடுகு.

******



book | by Dr. Radut