Skip to Content

05. பிரம்மம் மற்றும் படைப்பைப் பற்றிய 12 கருத்துகள்

பிரம்மம் மற்றும் படைப்பைப் பற்றிய 12 கருத்துகள்

N.அசோகன்

 

 
தவறான கருத்து
சரியான கருத்து
1.
பிரம்மத்திலிருந்து படைப்பு வெளிவந்ததாக நாம் கருதுவதால் பிரம்மத்தை  முதலாவதாகவும் படைப்பை அடுத்ததாகவும் நாம் நினைக்கிறோம்.
ஆனால் உண்மையில் முன்பு, பின்பு என்று இல்லை. பிரம்மமும் அதனுடைய படைப்பும் ஒன்றாகவே உள்ளன.
2.
பிரம்மம் காலத்தை கடந்ததுஎன்றும், படைப்பு காலத்துக்கு உட்பட்டது என்றும் நாம் நினைக்கிறோம்.
ஆனால், உண்மையில் இரண்டும் காலத்தைக் கடந்தவை. (ஒளியின் படைப்பு)
3.
பிரம்மத்தை நாம் சச்சிதானந்தமாக கருதுகிறோம்.
பிரம்மம் சச்சிதானந்தத்திற்கும் கட்டுப்பட்டதில்லை. சத்தாகவும், சித்தாகவும்கூட இல்லாமல் சுத்த
பிரம்மமாகவும் அதனால் இருக்க முடியும். அந்நிலை என்ன என்று நம்மால் வார்த்தையால் கூட
வர்ணிக்க முடியாது.
4.
உலகமும், படைப்பும் பிரம்மத்திற்கு வெளியே இருப்பதாக நாம் நினைக்கிறோம்.
மாறாக, உலகமும், படைப்பும் பிரம்மத்திற்குள்தான் இருக்கின்றன.
5.
படைப்பின் உச்சக்கட்டமாக நாம் சத்தியஜீவிய வெளிப்பாட்டை நினைக்கிறோம்.
நாம் அறியாமையில் மூழ்கி இருப்பதால், கீழே இருந்து பார்க்கும்பொழுது சத்தியஜீவிய
பரிணாமம் படைப்பின் உச்சக்கட்டமாகத் தெரிகிறது. ஆனால், சத்தியஜீவிய வெளிப்பாடுதான் ஞானமயமான பரிணாமத்தின் முதல் கட்டமாகும்.
6.
பிரம்மம் வரம்பற்றது என்பதால் வரம்புக்குட்பட்ட உலகத்தை அதனால் படைத்திருக்க முடியாது என்று நாம் நினைக்கிறோம்.
பிரம்மம் வரம்பற்றது என்பதால் வரம்புக்குட்பட்ட சிறிய உலகமாக தன்னை மாற்றிக் கொள்ள அதற்கு தடையில்லை.
7.
படைப்புதான் எல்லாம் என்று நாம் நினைக்கிறோம்.
பிரம்மத்தை பொருத்தவரை படைப்புஎன்பது ஒரு இயக்கம்தான்.
அவ்வியக்கத்தை நிறுத்திவிட்டு சுத்த பிரம்மமாகவும் அதனால் இருக்க முடியும்.
8.
பிரம்மம் பர்ஸ்னாலிட்டியைத் தாண்டியதாக நினைக்கிறோம்.
சத்தாக இல்லாமல், சத்புருஷனாக மாறும்பொழுது பிரம்மத்திற்கும் பர்ஸ்னாலிட்டி வருகிறது.
9.
பிரம்மம் உலகை படைத்தது என்று நாம் நினைக்கிறோம்.
பிரம்மம் எதையும் படைப்பதில்லை.
தனக்குள் இருப்பதை அது வெளிக்கொண்டு வருகிறது.
10.
படைப்பிற்கு பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் என்று இரு பக்கங்கள் உண்டு என்று
நினைக்கிறோம்.
ஜடம் என்பது ஆனந்தத்தின் வெளிப்பாடு என்று நம்மால் பார்க்க முடிந்தால், படைப்பு ஒரு அற்புத காட்சியாக மாறும். அப்பட்சத்தில் எல்லாமே பாசிட்டிவாகத்தான் தெரியும்; எதுவுமே நெகட்டிவாகத் தெரியாது.
11.
பிரம்மம் உலகத்தை விட்டு பிரிந்து, ஈடுபாடு இல்லாமல் இருக்கிறது என்று நாம் நினைக்கிறோம்.
பிரம்மம் நினைப்பதுதான் உலகில் நிகழ்ச்சியாக வெளிப்படுகிறது என்னும்பொழுது பிரம்மம் எப்படி ஈடுபாடு இல்லாமல் இருக்க முடியும்?
12.
படைப்பு எண்ணற்ற வடிவங்களால் நிரம்பியுள்ளது.
பிரம்மம் தன்னை தானே எண்ணற்ற கோணங்களிலிருந்து பார்த்துக்கொள்வதை நாம் எண்ணற்ற வடிவங்களாக எடுத்துக்கொள்கிறோம்.

 

*******



book | by Dr. Radut