Skip to Content

1. தோல்வியற்ற வாழ்வு

தோல்வியற்ற வாழ்வு

10 அல்லது 11 வயது சிறுவர்கள். 8ஆம் வகுப்பு படிப்பவர்கள். கால்பந்து போட்டி வந்தது. பள்ளிக்கு வெளியில் சென்று பழக்கம் இல்லாத குழந்தைகள். போட்டி ஆரம்பித்தது. உற்சாகமாக விளையாடத் தயாராயினர். ஜெயிப்பதைப் பற்றி நினைக்கவில்லை. விளையாடுவதில் ஆர்வம். ஜெயிக்கும் நோக்கமும் எழவில்லை. பந்தயம் ஆரம்பித்தது. ஆட்டம் விறுவிறுப்பாக இருந்தது. ஒரு கோல் போட்டனர். அடுத்ததும் பெற்றனர். மேலும் இரண்டு கோல் போட்டனர். எதிர்க்கட்சி ஒன்றுகூடப் பெறவில்லை.

  • ஆசிறுவர்கள் மகிழ்ச்சியின் எல்லையை எட்டினர், கொண்டாடினர், கும்மாளம் போட்டனர்.
  • மறுநாள் அடுத்த பந்தயம் (second round).
    எதிரி ஒரு கோல் போட்டனர். அடுத்ததும் போட்டனர். மூன்றாம் கோலும் கிடைத்தது. இவர்கட்கு எதுவும் கிடைக்கவில்லை.
  • சோர்ந்தனர், வீழ்ந்தனர், வாடினர்.
  • இது சிறுவர்கட்கு சரி, மனிதர்கட்குச் சரி.
  • அன்பர் நிலையென்ன?
  • வெற்றி சந்தோஷம் தந்தால், அன்பருக்குத் தோல்வியும் சந்தோஷம் தரவேண்டும்.
  • தாம் பெற்றது தோல்வியெனில், வெற்றி அழியவில்லை. எதிர்கட்சிக்குப் போயிற்று. எங்கிருந்தாலும், எவர் பெற்றாலும், அன்பர் வெற்றியைப் போற்றவேண்டும்.
  • வெற்றியைப் போற்ற தைரியம்வேண்டும், பரந்த மனம்வேண்டும்.
  • வெற்றியைப் போற்றும் பரந்த மனத்தை, தைரியலக்ஷ்மியை நாடும் இதர லக்ஷ்மிகள் போல், வெற்றி தவறாது வரும், வந்தபின் அதை விட்டுப் போகாது.
  • பிறர் வெற்றியால் மகிழும் மனநிலை, தோல்வியற்ற மனநிலையின் வாழ்வு.
  • வாழ்வில் தோல்வி நிலையாகப் போக, பிறர் வெற்றியை மனம் நாடி மகிழவேண்டும்.

*****



book | by Dr. Radut