Skip to Content

05. சாவித்ரி

"சாவித்ரி"

The World-Stair - உலகத்துப் படிக்கட்டு

P.95 Alone he moved watched by the infinity

அனந்தனின் பார்வையில் அவன் தனிமையில் நடை பயின்றான்

  • மனத்தைக் கடந்த மகிமையின் கீழ், அனந்தத்தின் சூழலில்,
  • ஊனக் கண்ணுக்குப் புலப்படாதனவெல்லாம் புலப்படும்.
  • மனித முயற்சிக்கு அப்பாற்பட்ட அத்தனையும் அங்கு முடியும்.
  • அளவிறந்த அமைதியில் அளவிறந்த சலனம்.
  • புவியைக் கடந்த புனித வாழ்வு.
  • எண்ணமும், கனவும் எழும் ஏற்றமிகு இடம்.
  • ஆத்மசோதனையின் அளவிலாப் பரப்பு.
  • அனைத்தின் ஐக்கியம் ஊடுருவும் பல பொருள்கள்.
  • அறிவைக் கடந்த பிரபஞ்சம் உருவாயிற்று.
  • சுயமான சிருஷ்டி தடையின்றி, முடிவின்றித் தொடர்ந்தது.
  • அனந்தத்தின் ஆர்வமிகு ஆவேசம் தன்னை வெளியிட்டது.
  • ஆபத்து நிறைந்த அதன் ஆட்டம் ஊடே,
  • ஆயிரமாயிரம் குணங்களும், லட்சோபலட்சம் சக்திகளும்,
  • சத்தியத்தின் சாதுர்யம் உலகமாக உருவாயிற்று.
  • பெரிய சக்தியின் சுதந்திரமளித்த சூத்திரம்,
  • நிலையான சலனத்தின் அசைவான அலையுள் பொழிந்தது.
  • மதுவின் கிளர்ச்சியும், எண்ணத்தின் எழுச்சியும்,
  • நிலையானதின் சலனம் தரும் வேகமான கிளர்ச்சி.
  • மாறாத எழுச்சியினுள் ஜனிக்காத பிறவி.
  • அழியாத முடிவினுள் உறையும் எண்ணக்கூட்டம்.
  • சொர்க்கத்தின் சொற்கள் பேச்சிழந்த பெருமை.
  • மௌனத்தின் ஊமை உறுதியை வெளியிடும் செயல்கள்.
  • சொல்ல முடியாததைச் சொல்லும் வரிகள்.
  • அசையாத களிப்பு அனந்தத்தின் அமைதியுள் கண்டது.
  • பிரபஞ்ச சக்தி செயல்படும் சிறப்பு.
  • துன்பமான கதை இன்பமான நாடகம்.
  • அவளழகின் அற்புதம் பூண்ட உறுதி.
  • வலியும் ஆத்ம சந்தோஷமாகும்.
  • அனைத்து அனுபவமும் இங்கு ஒரே திட்டம்.

****

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
தடி எடுத்தவன் தண்டல்காரன், சச்சிதானந்தத்திலிருந்து ஜடம் வரை உண்மை. வலிமையுள்ளவனிடம் நியாயத்தை ஒப்படைப்பது அநாகரீகமான கொடுமை என்பது சரி. ஆனால் நியாயத்திற்கு அநாகரீகமான வலிமை வரும்வரை அது செல்லாது என்பதும் உண்மை. மனம் சச்சிதானந்தத்தைப் போற்றினால், ஜடம் அதற்குட்படுவதில்லை. ஜடமே சச்சிதானந்தமானால் அது நடக்கும்.
 
உண்மை எடுபட கொடுமையின் வலிமை தேவை.



book | by Dr. Radut