Skip to Content

09.சாவித்ரி

"சாவித்ரி"

P.30 There rose a song of new discovery.

        புதிய கீதம் கண்டுபிடிப்பாக எழுந்தது
 

. ஆன்மாவின் காதலாக விடிந்த பொழுது.

. ஆபத்து அரவணைக்கும் நண்பனாகத் துள்ளி எழுந்தது.

. புது உலகம் ஜோதியில் பிறந்தது.

. இளமையின் சோதனை வெண்கலத்தின் சங்கநாதம்.

. காலத்தின் அம்பு கதிர்போல் பறந்தது.

. ஆத்மாவைப் பரிசாகப் பெறும் போராட்டம்.

. ஒளியின் தெய்வமும், இருளின் அசுரனும்.

. இறைவன் இதயத்தை எடுத்துரைப்பவரென வந்தவர்.

. எதிரியை ஏற்பதே ஏற்றம் என்று கொண்டனர்.

. அறிவின் மன்றத்தில் வழக்காடும் மக்கள்.

. இருளின் தலைவனும், ஒளியின் அரசனும்.

. இலக்கிய நயத்தைக் கடந்த இறைவனின் ஞானம்.

. பிறப்பையும், இறப்பையும் கடந்த பெருமை.

. நீத்தார் என நாம் கூறும் நெடுநாள் வாழ்பவர்.

. பல ராஜ்ய ஜீவன்கள் தம்மைப் பகிர்ந்துரைத்தன.

. அமர நயனங்கள் அருகில் வந்தன.

. சத்தியத்தின் சட்டம் சொர்க்கத்தின் முத்திரையுடன் வருகிறது.

. திருஷ்டியும் கனவும் சத்தியம் சொல்லும் கதைகள்.

. எழுத்தில் எடுபடாதவை இதயத்தில் பொறிக்கப்பட்டன.

. பரம ஜோதியின் பக்தி வணக்கம்.

. உலகம் அறியாத மின்னும் கீதம்.

. இடியே சிறகாகவும், மின்னலே கழுத்தாகவும் நடை பயின்றோர்.

. கேட்காத கேள்விக்குக் கேட்டறியாத பதில்.

       காதல் உயிரின் உணர்வுக்குரியது. உடலால் பூர்த்தியாவது. மனம் தரும் உறுதி மயக்கத்தை இலட்சியமாக்குவது. காதல் எழுந்த பின் கண் தெரியாது. புல்லுக்கும் புலியின் வீரம் தருவது காதல் உணர்வு. கட்டிளங்காளைக்குரியது காதல் வேகம். பெண்ணைப் பெறுவதே நோக்கம். பெண்ணையே பெரியதாகக் கருதுவதே நோக்கம். காதல் இலக்கியத்தின் கரு. காலத்தைக் கடந்த இலக்கியத்தை எழுதியது காதல் எனும் ஓலை. அமரகாவியம் அன்பின் பிழம்பு. காதலுக்குக் கண்ணில்லை எனில் ஆன்மா உண்டு. காலத்தைக் கடந்த காதல் காதலனுக்குக் கடவுளையும் கடந்தது. ஸ்ரீ அரவிந்தம் காதலை காலத்துள் கடவுளாக கர்மத்தைக் கரைத்து, தடைகளைத் தவிர்த்து, முடிவற்ற இன்பப் பிழம்பாகக் கொடுக்க பெண்ணின் கற்பை இருளின் வாழ்வை முடிக்கச் செய்து சாவித்திரி என்ற காவியமாகப் படைத்தது.

****


 


 



book | by Dr. Radut