Skip to Content

07.அன்பர் கடிதம்

அன்பர் கடிதம்

ஸ்ரீ அரவிந்த அன்னையின் மலர்ப் பாதங்களுக்குக் கோடானு கோடி நன்றியைச் சமர்ப்பணமாக்குகிறேன்.

இக்கடிதத்தை அன்னையின் அருளால் எழுதுவதாக நினைக்கின்றேன். நான், அம்மா, அண்ணன் மூவரும் அன்னையின் அருளால் வாழ்கின்றோம். என் அண்ணன் ஒரு cricket player. கடந்த மாதம் அவர் Punjabக்கு விளையாடச் சென்றார். விளையாடும் பொழுது கால் முட்டியில் காலில் அடிப்பட்டு வீங்கி விட்டதாகவும் காலை மடக்கி உட்கார முடியவில்லை என்றும் STDயில் கூறினார். நான் அவருக்கு அன்னையின் மலர்களை (blessing packet) கொண்டு செல்லுமாறு கூறியதால் அவரும் ஏற்கனவே கொண்டு சென்றார். என்னை STDயில் தொடர்பு கொண்டு அவருடைய அடியைப் பற்றிக் கூறிய பொழுது அன்னையின் blessing packetஐ முட்டியில் வைத்து அன்னைக்கு prayer பண்ணச் சொன்னேன். Fever வந்துள்ளதாகவும் கூறினார். அன்னை அவர் உடலை வருடிக் கொடுப்பதாகக் கற்பனை பண்ணிக் கொள்ளச் சொன்னேன். அவரும் அவ்வாறே செய்ததாகவும் தம் கால் வலியும், feverஉம் மறுநாளே சரி ஆனதாகவும் அன்று மேட்ச் நன்றாக ஆடி win செய்து கொடுத்ததாகவும் மறு நாள் STDயில் கூறிய பொழுது நாங்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. நான், என் அம்மா உடனே அன்னைக்கு நன்றி கூறினோம். எங்கள் வாழ்வில் ஒவ்வொரு தருணத்திலும் அன்னையின் அருளைப் பெறுகின்றோம். அன்னையின் கோட்பாடுகளையும், அவருடைய அருளைப் பெறச் செய்ய வேண்டிய முறைகளையும் தங்கள் புத்தகத்தின் வாயிலாக அறிந்து கொள்ள உதவிய அன்னைக்கு நாங்கள் மூவரும் நன்றியைச் செலுத்துகிறோம். எங்கள் வாழ்வை மேன்மேலும் அன்னை உயர்த்துவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு பரிபூர்ணமாக உள்ளது. எங்களை ஒவ்வொரு fraction of second காத்திடும் அன்னையின் மலர்ப் பாதங்களுக்குக் கோடானு கோடி நமஸ்காரங்கள்.

நன்றி.

****

 

ஸ்ரீ அரவிந்த சுடர்
 

உலகமே என்னுள்ளிருக்கும் பொழுது தனிமை ஏது?” என்றார் பகவான். உடல் தனித்திருக்கலாம். ஜீவன் எப்பொழுதும் தனித்தில்லை. தனிமை ஆன்மீக நெருக்கத்தை அதிகப்படுத்தும்.   

Comments

07.அன்பர் கடிதம்  Para 2  -  

07.அன்பர் கடிதம்

 
 Para 2  -   Line 12   -  winசெய்து             -   win செய்து
 Para 2  -   Line 19   -  secondகாத்திடும்   -   second காத்திடும்
 



book | by Dr. Radut