Skip to Content

05.அன்பரும் - நண்பரும்

அன்பரும் - நண்பரும்

நம் நாட்டில் தபாலில் புத்தகம், பரிசு அனுப்பினால் நிச்சயமாகப் போகும் என்று சொல்ல முடியாது. நிச்சயமாகப் போக வேண்டுமானால், ரிஜிஸ்டர் செய்து அனுப்ப வேண்டும். விலையுர்ந்த பொருள்கள் போக இன்ஷுர் செய்யும் முறையுண்டு. வெளிநாடுகளில் சாதாரண தபாலில் போகும் பொருள்கள், நம் நாட்டில் இன்ஷுர், ரிஜிஸ்டர்போல தவறாது போய்ச் சேரும்.

நம் நாட்டில் வசிக்கும் வெளிநாட்டுப் பெண் இலண்டனிலிருந்து 3 வீடியோ கேசட்டுகள் ஆர்டர் செய்திருந்தார். 2 வந்தன. மூன்றாவது பார்சல் இல்லை. யாரையும் கேட்க முடியவில்லை. Amazon கம்பனி மூலம் ஆர்டர் செய்தால் வெளிநாட்டிலிருந்து courier மூலம் வருகிறது. அங்குப் பொருள்கள் தவறுவதில்லை. எப்படி எனத் தெரியவில்லை. அந்தத் தபால் கஸ்டம் மூலம் வரி கட்டி வரும். ஆர்டர் செய்தவருக்கு வரி கட்ட அபிப்பிராயமில்லை. தவறாவதும் சம்மதமில்லை. இதன் விளைவாக அவர் புது கேசட்டுகள் ஆர்டர் செய்வதையே நிறுத்திவிட்டார். நிறுத்திய பின்னும் மனம் நிதானப்படவில்லை. அடுத்தமுறை ஒரு கேசட் ஆர்டர் செய்தார். கேசட் பத்திரமாக வந்து சேர்ந்தது. வரி 100% கட்டினார். மனம் துணுக்குற்றது. பல நாள் மனம் குழப்பம், கவலை, போராட்டம், எரிச்சல்பட்டு அடங்கியபின், 3 கேசட் வெளிநாட்டு கொரியர் மூலம் அமேஜான் கம்பனியில் ஆர்டர் கொடுத்தார். குறித்த நேரத்தில் பத்திரமாக எல்லாக் கேசட்டுகளும் வரியில்லாமல் வந்து சேர்ந்தன. சர்க்காரில் பல சட்டங்கள் இருக்கின்றன. எந்தச் சட்டத்தின் கீழ் வரியுண்டு, எதன்படி வரியில்லை என இவரால் விவரமாக அறிய முடியவில்லை. தெரிந்தவர்களை விசாரித்தார். வந்த பதில்கள் பலவாறு, முன்பின் முரணாகவுமிருந்தன.

  1. சமீபத்தில் வரி ரத்து செய்யப்பட்டது என்பது ஒரு பதில்.
  2. ஆர்டர் ஒரு ஸ்தாபனத்தின் பேரில் போட்டால் வரியில்லை.
  3. வரி ஸ்தாபனத்திற்கு, தனி நபருக்கில்லை.
  4. வெளிநாட்டிலிருந்து அனுப்புவது கம்பனியானால் வரியுண்டு.
  5. அனுப்புபவர் தனி நபரானால் வரியில்லை.
  6. தனிநபர் gift
    பரிசாக அனுப்பினால் வரியில்லை.

இந்தச் சட்டங்களில் எது உண்மை என்று தெரிந்துகொள்ளும் வசதி இப்பெண்ணுக்கில்லை. இவருக்கு நஷ்டப்படவோ, வரி கட்டவோ, அன்னையை நம்பவோ மனம் இல்லை. விவரம் தெரியாததால் குழப்பமான மனநிலை. தெளிவாகச் செயல்பட முடியவில்லை. ஓரளவு மனம் அடங்கியது உண்மை. வரியில்லாமல் வந்ததும் உண்மை. இதன் நடுவில் நண்பர் ஒருவர் இந்தியா வருவதாகவும், அன்பருக்கு எந்தக் கேசட்டுகள் வேண்டும் எனவும் கேட்டிருந்தார். அவர் வரும்பொழுது 40 கேசட்டுகள் கொண்டு வந்தார். அவற்றிற்கு வரியில்லை, தபால் செலவில்லை. கேசட்டுகளை நண்பர் பரிசாகக் கொடுத்ததால் விலையுமில்லை.

  • தன் பிறகு ஒரு வருஷத்திற்கு மேலாக இப்பெண் கேசட் ஆர்டர் செய்கிறார். அவை தொலைவதில்லை. வரி கட்டுவதில்லை.
  • மனம் அன்னையை ஏற்று, அன்னைக்குச் சரணடைந்து, அன்னையை நம்பிச் செயல்படும்பொழுது இதுபோல் காரியம் நடக்கும். இவர் அலுத்து, சலித்து, வெறுத்து ஒதுக்கியதால், மனம் பிரச்சினையிலிருந்து விலகியது unconscious surrender தெளிவில்லாத சரணாகதியாயிற்று. அதன் பலன் மேற்சொன்னது.

****   

Comments

05.அன்பரும் - நண்பரும் Para

05.அன்பரும் - நண்பரும்

 
Para 9    -  Line  1   -   வசதிஇப்பெண்ணுக்கில்லை   -     வசதி இப்பெண்ணுக்கில்லை
Para 12  -  Line 2
surrenderதெளிவில்லாத -   surrender தெளிவில்லாத
Please remove the blank line from the Para 12.
 



book | by Dr. Radut