Skip to Content

04.அஜெண்டா

“Agenda”

Age does not matter because advantages and disadvantages balance.

வயதாகிவிட்டது என்பது குறையல்ல. குறைக்குரிய நிறைவுண்டு.

  • சிறு வயதில் படிக்க முடியவில்லை. இனி எனக்குப் படிப்பில்லை.
  • நான் சம்பளத்திற்கு வேலை செய்தேன். எனக்குச் செல்வம் வர வழியில்லை.
  • படிப்பும், திருமணமும், பணமும் பெற உரிய காலம் உண்டு என்று தமிழ்நாட்டு வழக்குக் கூறுகிறது.

எதையும் காலத்தில் பெற வேண்டும். பெற்றாலும் காலம் கடந்தால் பயனில்லை என்பது மரபு. அன்னை அதற்கு எதிராகப் பேசுகிறார்கள். அன்பர்கள், "அன்னையை அன்றே தெரியாமற் போய்விட்டது'' எனக் குறைப்படுவதுண்டு. இது உண்மையில்லை.

என்று கண் திறந்தாலும் எல்லாம் சேர்ந்துவரும் என்பது அன்னை.

ஓய்வு பெற்ற பிறகு சர்வீஸ் முழுவதிலும் பெறாத பிரபலம், சௌகரியம், வருமானம் பெற்ற அன்பர்கள் தங்கள் அனுபவத்தில் இதைக் கண்டுள்ளனர். Synthesis of Yoga என்ற நூலில் பகவான்,

"கடந்த நாட்களில் இடறி விழுந்ததின் முக்கியத்துவம் இன்று தெரியும். நாம் இதைவிடவேகமாக முன்னேறியிருக்க முடியாது என்பது இப்பொழுது புரியும்''

என்று எழுதுகிறார்.

இளம் வயதில் மனம், ஆன்மா விழிப்பாக இருப்பதால் வேகமாக முன்னேறலாம் என்பது உண்மை. வயதான பின் அனுபவம் அதிகமாக இருப்பதால் அதே அளவு முன்னேறலாம் என்பதும் உண்மை என்பதால் ஒரு வழியாக ஏற்பட்ட குறை அடுத்த முறையில் நிறைவாவதால், காலம் பொருட்டன்று என்பது அன்னையின் விளக்கம்.

40 வயதானவர் பட்டம் பெறவில்லை எனில், இன்று பட்டம் பெற்றால் 20 ஆண்டு சர்வீஸ் விரயமாகிவிட்டது என்ற குறையில்லாமல் இன்றுள்ள அனுபவத்திற்காகவும், அன்னையின் சூழலுக்காகவும், கிடைக்கும் பெரிய உத்தியோகம் மேற்சொன்ன கருத்தின் உண்மையை எடுத்துக்காட்டும்.

  • வருமானத்தில் இவ்வுண்மையை எளிதாகக் காணலாம்.
  • படிப்பால் பெறும் பலனிலும் நடைமுறையில் காணலாம்.
  • ஆன்மாவுக்கு வயதில்லை என்பதாலும், அனந்தமானது என்பதாலும், விழிப்பு என்று ஏற்பட்டவுடன் அனந்தமான ஆன்மீகப் பலன் பெறுவதால் நஷ்டம் என்பதில்லை என்று காணலாம்.
  • நஷ்டம் நம் வாழ்வுக்குரியது. அன்னை வாழ்வில் நஷ்டம் அதிர்ஷ்டமாகும்.

****

Comments

04.அஜெண்டா Para 8 - Line 2

04.அஜெண்டா

 
Para 8 - Line 2 -  Yogaஎன்ற   -   Yoga என்ற



book | by Dr. Radut