Skip to Content

13.லைசென்ஸ்

 லைசென்ஸ்

1950, 1940 போன்ற நாட்களில் ஒரு லைசென்ஸ் எடுக்க இளைஞர்களை அனுப்பமாட்டார்கள். அப்படி அனுப்பினால் அவர்களிடம் பணம் கொடுத்து அனுப்பமாட்டார்கள். ரூ.100 நோட்டு கண்ணில்படாத காலம். பணம் என்றால் ரூ.20 அல்லது 30 ரூபாய் பெரியவர்கள் ஷர்ட்டில் உள்பாக்கட்டில் அதை வைத்திருப்பார்கள். அடுத்தவரிடம் பணம் கொடுப்பது என்பதை உலகம் அறியாத நாளது.

Two-wheeler லைசென்ஸ் எடுக்க இளைஞன் RTO ஆபீஸுக்குப் போனான். Q நீளமானது என்பதால் நிற்க சோம்பேறித்தனம். இவன் நிலையைக் கண்ட புரோக்கர் ஒருவர் அவனிடம் வந்து "நான் லைசென்ஸ் பெற்றுத் தருகிறேன். நீங்கள் மாலையில் வந்தால் போதும்'' என்றது இளைஞனுக்கு "Mother's Grace'' எனப்பட்டது. அப்பணம் திரும்பி வரும் வழியறியாதது என்று அவனுக்குத் தெரியாது. முன்பின் தெரியாத புரோக்கரிடம் 450/- ரூபாய் கொடுத்துவிட்டு தாயாரிடம் கூறினான். தாயாருக்குத் திக் என்றது. பையனுக்கு ஏன் தாயார் பயப்படுகிறார் என்று தெரியவில்லை. முதலில் போய் 450 ரூபாயை வாங்கி வா எனப் பையனை அனுப்பிவிட்டு தாயார் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு அன்னையை இடைவிடாது அழைத்தாள். இப்படியும் ஒரு பிள்ளையுண்டா? அந்த புரோக்கர் கிடைப்பாரா? அது புரோக்கர்தானா? பணம் வருமா? என்ற கேள்விகளை ஒதுக்கி அன்னையை ஆழ்ந்து அழைத்தாள். பிள்ளை திரும்பி வந்தான்.

  • 450 ரூபாய் மீண்டும் வந்தது.
  • 15/- ரூபாய் செலுத்தி லைசென்ஸ் வந்தது.

****

Comments

13.லைசென்ஸ்   Para 2  

13.லைசென்ஸ்
 
 Para 2   Line 1  ஆபீஸுக்குப் போனா   -   ஆபீஸுக்குப் போனான்.



book | by Dr. Radut