Skip to Content

12.குடும்பம்

குடும்பம்

விதவையான தாயார், 3 பெண்கள். இருவர் திருமணமானவர். ஓரளவு வசதி வந்தது. திருமணமானவர் வீடு கட்டிவிட்டனர். கடைசி பெண் வேலையிலிருக்கிறாள். தாயார் தன் வீட்டை இடித்துப் புதியதாகக் கட்டி மகளுக்குத் தரப் பிரியப்படுகிறாள். முதல் இரண்டு மாப்பிள்ளைகட்கும் சம்மதமில்லை. திருமணமான பெண்களுக்கு தாயாருடன் அபிப்பிராய பேதம். வீடு வீடாக இல்லை. சண்டையில்லை ஆனால் சச்சரவு மலிந்தது. நிலை தாயார் மனத்தைக் கலக்கியது. குடும்பம் என்றால் எல்லாம் தானிருக்கும் என்கிறார்கள். நல்லதும், கெட்டதும் எல்லாம். நல்லது கண்ணில்படவில்லை. எதையும் பேசி முடிவெடுக்கும் நிலையில்லை. பேசினால் பேச்சு வளர்கிறது. தகப்பனாரில்லை. திருமணம் ஆக வேண்டும். நிலைமை மோசமாக ஆக பெண்ணுக்கு மனம் தளர்ந்து சலிப்பேற்பட்டபொழுது, "மனிதர்களை நம்பாமல், அன்னையை நம்பலாம்'' என மையம் வந்தார்.

சுமுக மலர் சச்சரவை விலக்கியது.

நடக்கும் பேச்சுகளுக்குப் பெண்ணால் பதில் கூறாமலிருக்க முடியவில்லை. அது முடிந்தாலும், மனத்திற்குப் பதிலில்லை. லிப்பு விரக்தியாகும் நிலையில் "யாரிடம் எது சொல்வதற்கும் பதிலாக, எல்லாவற்றையும் அன்னையிடம் கூறு, அன்னையிடம் மட்டும் சொல்'' என்ற உபதேசம் இதமாக இருந்தது. கடைப்பிடிக்க முடியவில்லை. நாளாயிற்று. முடிவாக அதை மனம் ஏற்றது. சச்சரவு அழிந்தது போல் எதிர்ப்பு மறைந்தது. தாயார் தன் இஷ்டப்படி வீட்டை இடித்துக் கட்டினாள். 6ஆம் மாதம் அத்தனைப் பிரச்சினைகளும் தீர்ந்து பெண்ணுக்கு வீடு கிடைத்தது.


 

****

Comments

 12.விளம்பரம் Para  1

 12.விளம்பரம்
 
Para  1  -  Line 1   -  வேலையிலிருக்கிறள்  -  வேலையிலிருக்கிறாள்
Para  1  -  Line 10 -  சப்பேற்பட்டபொழுது    -  சலிப்பேற்பட்டபொழுது
Para   3 -  Line  3  -  சப்பு                                -  சலிப்பு



book | by Dr. Radut