Skip to Content

10.பிரார்த்தனை பலிக்க வேண்டும்

பிரார்த்தனை பலிக்க வேண்டும்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

தம்பி - தமிழ்நாட்டுப் பிரபலஸ்தர் மகன் வறுமைக்குள்ளானார். அன்னையைத் தேடி வந்தார். அவர் வறுமை 7ஆம் நாள் மாறியது. புதிய சேவையைக் கொடுத்தார்கள். 2, 3 மடங்கு வருமானம் வந்தது. இந்தச் சேவை அன்னைச் சேவை என்றாலும் சேவைக்கும் அன்னைக்கும் நடுவில் அன்னையைத் துரோகம் செய்தவர்களிருக்கிறார்கள். அவர்களால் பேராபத்து வருகிறது. எனவே சேவையைக் கைவிட வேண்டும் என்ற போது, கைவிட்டார். சில மாதங்களில் சேவை வருமானத்தைப்போல் 2 மடங்கு வருமானம் வருகிறது. இது எனக்குத் தெரியும். சேவை என்றாலும், துரோகிக்குப் பலன் போவது தவறு என்ற கருத்தைத் தயங்காமல் ஏற்றுக்கொண்டார். அதைச் சொல்கிறீர்களா?

அண்ணன் - இது முக்கிய இடம். இந்த அன்பர் மனநிலை எதையும் சாதிக்கும். சேவையே ஆபத்து என்பதை எவரும் ஏற்கமாட்டார்கள். இவர் ஏற்றது பெரியது. மேலும் சாதாரண விஷயங்களிலும் இப்பாகுபாடு எழும். அச்சமயங்களில் சரியான முடிவெடுப்பது சிரமம்.

தம்பி - அன்னையோடு இருந்தவர், சாதகர், முக்கியஸ்தர், உறவினர், முடிவாக நாம் என்பதுவரை விலக்க வேண்டியது, சேர்க்க வேண்டியது என இருபகுதிகள் உண்டு. அன்னையுடன் இருந்தவர்கள் அனைவரையும் சேர்க்கிறோம். எதிரிகள் அனைவரையும் விலக்குகிறோம். சரியாகப் பிரிக்கத் தெரியவில்லை.

அண்ணன் - உலகம் ஜடம். ஜடமான உலகத்தைச் சிருஷ்டித்தது மனம். இன்று மனம் ஜடத்தால் ஆளப்படுகிறது. மனம் ஜடத்தை ஆள ஆரம்பித்தால் பிரச்சினையிருக்காது.

தம்பி - அது தெரியும். நாம் மனிதனைவிடப் பணத்தை முக்கியமாக்குகிறோம். உணர்வைவிட உறவை முக்கியமாகக் கருதுகிறோம்.

அண்ணன் - இப்படிச் சொன்னால் ஏற்றுக் கொள்வார்கள். நடைமுறை வேறு. முதலாளி அன்பர். ஊழியர்கள் பக்தர்கள். பக்தர்கள் சங்கத்திற்கு முதலாளி இடம் தருகிறார். செலவுக்குத் தருகிறார். ஏற்பதா வேண்டாமா?

தம்பி - நமக்கே உதாரணம் இருக்கிறதே. இந்த இடத்தில் முதலாளியை விலக்க தொழிலாளி சம்மதப்பட மாட்டான். சேவைக்கு இடம், பணம், காணிக்கையாக மட்டும் வரவேண்டும். உண்டியல் உள்ளதே (பேர் தெரியாமல் வந்த காணிக்கை) மூலதனம் என்றால் எவரும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்.

அண்ணன் - முதலாளி இடம் கொடுத்தால் பக்தி வளராது. முதலாளியின் பெருமை வளரும். பெண் அழகைக் கண்டு பொறாமைப்படும் தாயார், பெண்ணுக்குப் பெரிய வரன் வந்தால், தாயாரை விலக்கி முடிவெடுக்கச் சம்மதப்படுமா? சாத்தியமா? தாயாரைக் கலந்தால் பெண்ணுக்கு இந்த வரன் அமையுமா? இக்குழந்தை விஷயத்தில் பெற்றோருக்கு இப்பாகுபாடிருந்தால், எல்லாம் நடக்கும்.

தம்பி - குழந்தைக்கு இட்லி கொடுப்பதா, தோசை கொடுப்பதா என்பதுவரை நம்மைக் கேட்டு நடக்க வேண்டும் என்று முடியும். இது நடக்காது.

அண்ணன் - முதலில் பாகுபாடு discrimination & discretion ஏற்படும் வரை கேட்டுத்தான் நடக்க வேண்டும். சட்டம் புரிந்தால், சட்டத்தைப் பின்பற்றலாம்.

தம்பி - எனக்குச் சட்டம் புரியும். குழந்தை சந்தோஷமானால் சரி, சிணுங்கினால் தப்பு. ஆரம்பத்தில் இந்தச் சட்டம் போதும்.

அண்ணன் - நான் மனமே ஜடத்தை ஆள்கிறது என்றேன். வாழ்வை ஆள்வதும் அன்றிலிருந்து இன்றுவரை மனமே. எல்லா முக்கியமான நிகழ்ச்சிகளுக்கும் அடிப்படை ஒரு செய்தி, ஓர் அபிப்பிராயம். செய்தி எனில் மனம். அச்செய்தி இன்று வதந்தியாகப் பரவுகிறது. இந்த வதந்தி உண்மையை எடுத்துப் போனால் உலகத்தை உடனே மாற்றலாம்.

தம்பி - இது புதியதாக இருக்கிறதே. நாம் உடலால் வாழ்ந்தாலும், உணர்வால் செயல்பட்டாலும், அதன் அடிப்படையில் ஒரு understanding கருத்துள்ளது. அக்கருத்து இன்று வதந்தி மூலம் வருகிறது என்கிறீர்களா!

அண்ணன் - இது பெரிய தத்துவம். இதைப் புரிந்து கொண்டவர் வாழ்வில் ஞானி; இந்தச் சரியான வதந்தியை எழுப்பக் கூடியவர் உலகை ஆளக்கூடியவர், மாற்றக் கூடியவர். நாம் குழந்தை விஷயத்தை மட்டும் காண்போம்.

தம்பி - புரிகிறது. பெற்றோர் குழந்தைகளின் செயல்களை, உணர்ச்சிகளை, உத்வேகங்களைக் கண்டு, அவற்றினடியில் உள்ள கருத்து opinion எது எனக் கண்டு, அவற்றை அன்னை கருத்தாக மாற்ற வேண்டும். சரியா?

அண்ணன் - இதற்கு ஒரு சாரார் விலக்கு, ஏற்கனவே - 100 ஆண்டுகட்கு முன் - அவர்கள் ஜனத்தொகையில் 100% விலக்கானவர். சரியானவர் இல்லை. குறைவு. இப்பொழுது விலக்கானவர், தவறானவர் உலகில் 50%க்கும் குறைவு. அவர்களிடம் இது பலிக்காது. அதைச் சேராதவரிடம் பலிக்கும். இக்குழந்தைக்குப் பலிக்கும்.

தம்பி - எனக்கு இவர்களைத் தெரியும். விற்காத சரக்கை அடமாக வாங்குபவர்கள், எதிரியை நம்புபவர்கள். இன்று கம்பனி பெறும் 10 லட்ச வருமானம் புதிய சரக்கை ஏற்றால் 25 லட்சம் வரும் என்றாலும், மாறாதவர்கள் இவர்கள். தவறு என்று தெரிந்து அதை நாடுபவர்கள். மகள் வாழ்வு, மருமகள் சந்தோஷத்தைப் பற்றி இக்கருத்தைத் தெரிவிக்கும் பழமொழியேயிருக்கிறதே.

அண்ணன் - சில குடும்பங்களில் அனைவரும் அப்படிப்பட்டவர்களே. சில ஊர்களில் பெரும்பாலோர் அப்படிப்பட்டவர்கள். அவர்களைப் பற்றி விளக்க ஒரு புத்தகமே எழுதலாம்.

தம்பி - குழந்தைக்குப் பலிக்குமா?

அண்ணன் - பெற்றோர் அன்னையை ஏற்றால் பலிக்கும். நாம் சொல்லும் எந்தக் குறையுமில்லாதவர் பெற்றோர். ஆனால் குறையற்றவர்கள் சுலபமாக அன்னையை ஏற்கமாட்டார்கள்.

தம்பி - முடியாது என்கிறீர்களா?

அண்ணன் - முடிந்தால் பலிக்கும் என்கிறேன்.

தம்பி - நீங்கள் சொல்வனவெல்லாம் முடியாது என்றே படுகிறதே.

அண்ணன் - இதுவரை அன்னையை அதுபோல ஏற்ற பக்தரைப் பார்த்திருக்கிறாயா? அதனால் சிரமம் என்கிறேன்.

தம்பி - எது சிரமம்?

அண்ணன் - அன்னையால் மனிதனுக்கு என்ன செய்ய முடியும் எனப் புரிந்து கொள்வது சிரமம். உதாரணமாக இவர்கள் சேவையில் நல்ல, பெரிய அம்சங்களுண்டு. பணம் திரட்டுவதிலும் உண்டு. ஆனால் இதே முறையை பணம் திரட்ட பயன்படுத்தினால் ஓராண்டில் ஒரு பல்கலைக்கழகம் நிறுவும் அளவுக்குப் பணம் வரும். செய்வார்களா?

தம்பி - இம்முறையால் சேவைக்குக் கோடிக்கணக்காகப் பணம் வர ஆரம்பித்தால், குழந்தை பிரசித்தி பெறுமா?

அண்ணன் - இம்முறை 24 மணி நேரத்தில் 1 கோடியைச் சேவைக்குத் தரும். அது நடந்தால், குழந்தை விஷயம் தானே பலிக்கும்.

தம்பி - நான் என்ன செய்ய?

அண்ணன் - இம்முறையை அவர்கட்கு நீ சொன்ன பிறகு, அவர்களே initiative முன்கை எடுத்து அதைப் பின்பற்ற உன்னை நாடினால், அது முதற் சகுனம், நல்ல சகுனம்.

தம்பி - அது சரியான சோதனை.

அண்ணன் - விஷயத்தைத் தெரிந்து கொண்டபின் அவர்களே விருப்பப்படுவது முடிவில் காரியம் பலிக்கும் என்பதற்கு அறிகுறி.

தம்பி - இது எப்படி எனப் பார்க்கவேண்டும்? நாம்தான் அவர்கள் பின்னாடிப் போவது வழக்கம்.

அண்ணன் - முதற்கட்டத்திற்கு அனைவரும் வருவார்கள். அடுத்த கட்டத்திற்கு இதுவரை எவரும் வந்ததில்லை. மாதம் 1 லட்சம் சம்பாதிக்கலாம் என எவ்வளவு நாளாக மையத்தில் பேசுகிறோம்? யாராவது அது எப்படி எனக் கேட்டார்களா?

தம்பி - நம்பிக்கையில்லை.

அண்ணன் - சம்பாதித்தவர்களைப் பார்த்தார்கள் இல்லையா?

தம்பி - அதுவும் நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை.

அண்ணன் - விவரத்தைக் கேட்டு அறிந்த பின் அல்லது படித்து தெரிந்த பின் பின்பற்ற முன்வருவது அல்லது மேலும் அறிய முன்வருவது என்பது முதல் நல்ல சகுனம்.

தம்பி - நாட்டில் எல்லாக் குழந்தைகளும் இக்குழந்தைபோல் படிக்க என்ன தேவை?

அண்ணன் - பொதுவாக என்ன நினைப்போம்? இது போன்ற பள்ளிகள் பரவவேண்டும், சர்க்கார் இம்முறையைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறுவோம். அதெல்லாம் உண்மை. அதனால் இப்படிப்பு நாடெங்கும் பரவாது.

தம்பி - எப்படி இப்படிப்பு நாடெங்கும் பரவும்?

அண்ணன் - நாடெங்கும் சமீபத்தில் பரவுவது என்ன என்று ஒரு உதாரணம் சொல்.

தம்பி - சமீபத்தில் T.V. பரவுகிறது. போன் அது போலிருக்கிறது. Mopedஉம் அப்படியே.

அண்ணன் - T.V.யை எப்படி அனைவரும் ஏற்றுக் கொண்டனர்?

தம்பி - வீட்டிலேயே சினிமா பார்க்கலாம் இப்போ அதுதான் பேஷன்.

அண்ணன் - வீட்டிலேயே சினிமா பார்க்கலாம் என்பது மட்டும் காரணமில்லை. அதுவும் ஒரு காரணம். 50 வருஷத்திற்கு முன் எந்த ஊரில் (சென்னை தவிர) வசதியுள்ளவர் வீட்டிலெல்லாம் போன் வந்தது?

தம்பி - நமக்கு எதற்குப் போன் என்பார்கள்.

அண்ணன் - இப்பொழுது, வசதியில்லாதவர் வீடுகளிலெல்லாம் போனிருக்கிறது.

தம்பி - அது பேஷனாகவும் ஆகிவிட்டது.

அண்ணன் - போன் பேஷனானதுதான் உண்மை. இப்படிப்புப் பேஷனாகிவிட்டால் பரவிவிடும்.

தம்பி - அது உயர்ந்த படிப்பு என்பதால் பரவாதா?

அண்ணன் - பசுமைப் புரட்சியின் பெருமை, பலன் பற்றி உனக்குத் தெரியும். அதுவே அஸ்ஸாம், பீகார், U.P., ராஜஸ்தான் போன்ற இடங்களுக்குப் பரவவில்லையே.

தம்பி - உரம், நவீன விவசாயம் பேஷனாகவில்லை. அதனால் பரவவில்லை என்கிறீர்களா?

அண்ணன் - இதுவரை உலகில் பரவினவெல்லாம் பேஷன் மூலமே பரவியுள்ளன.

தம்பி - ஏன் அப்படி?

அண்ணன் - மனிதனுக்குச் சௌகரியத்தைவிட மரியாதை முக்கியம்.

தம்பி - பணத்தைவிட மரியாதை முக்கியம் என்றும் சொல்லாம். பேஷனை ஏற்றுக்கொண்டால் மரியாதை வரும். அதனால் மனிதன் அதை நாடுகிறானா?

அண்ணன் - மனிதன் மரியாதைக்காகவே உயிர் வாழ்கிறான் என்றே சொல்லலாம்.

தம்பி - இந்தப் படிப்பைப் பேஷனாக்க முடியுமா?

அண்ணன் - அப்படியானால் நிச்சயமாகப் பரவும்.

தம்பி - பேஷன் என்றால் என்ன? அதற்கு சக்தி எப்படி வருகிறது?

அண்ணன் - மனிதன் தானே சாதிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறான். அதைப் பேஷன் பூர்த்தி செய்கிறது.

தம்பி - அவன் தேடும் மரியாதை ஒரு product பொருளாக T.V போல வந்தால், அதை வாங்கினால் அவன் தனக்கு மரியாதை வரும். அது தானே பெறும் மரியாதை என நினைக்கிறான்.

அண்ணன் - உலகத்திற்குத் தேவையானதை ஒரு product பொருளாக T.V கார், கம்ப்யூட்டர் போல மாற்றிக் கொடுத்தால், அது விரைவில் பரவும். மனிதன் ஜடமாக physical உணர்வாக vital ஆக இருப்பதால் பொருள்கள் மூலமே இலட்சியம் இன்று பரவ முடியும்.

தம்பி - இதற்கடுத்த நிலையுண்டா?

அண்ணன் - ஒரு நல்ல idea கருத்தாக இலட்சியம் வந்தால் இன்று மனிதன் ஏற்கும் நிலையில் இல்லை. அப்படி வர மனிதன் mental ஆக (அறிவின் மூலம்) செயல்பட வேண்டும். அவன் T.V. வாங்கும்பொழுது, அவன் மனதில் "T.V. வாங்கி வைத்தால் மரியாதை வரும்'' என்ற எண்ணமிருக்கிறது.

தம்பி - அது அறிவு mental இல்லையா?

அண்ணன் - ஒரு வகையில் மனிதன் செய்யும் எல்லாக் காரியங்களும் இதுபோன்ற ஒரு கருத்தின் அடிப்படையில்தான் அமைகிறது. ஆனால் இன்று அந்தக் கருத்தை அவன் அறிவுள்ளவர் மூலமாகவோ, புத்தகம் மூலமாகவோ அறிவதில்லை. வதந்தி மூலமாக அறிகிறான்.

தம்பி - வதந்தியை word of mouth என்கிறோம். இப்படிப்பின் பெருமை வதந்தியானால் அது பரவும்.

அண்ணன் - இன்று எது வதந்தியாக உலவுகிறது? மனிதனுக்குத் தேவையானது வதந்தியாவதில்லை. பெரிய இடம் - பணக்காரன், நடிகை, தலைவர் - மனிதன் மனதில் இருக்கிறது. அந்தச் செய்தி வதந்தியாகப் பரவுகிறது. மனிதன் vital உணர்வால் வாழ்கிறான். அறிவால் இன்னும் வாழ முயலவில்லை. மனிதன் இன்று ஏற்கும் வதந்திக்கேற்ப இப்படிப்பின் சிறப்பை உயர்த்தவோ, மாற்றவோ முயன்று பலித்தால் அது நடக்கும்.

தம்பி - மனிதன் நிலைக்கு நாம் போகலாமா? அவனை நம் நிலைக்கு உயர்த்த வேண்டாமா?

அண்ணன் - முடியும், சிரமம். அன்னை தரும் அதிர்ஷ்டம் அதுபோல் பரவலாம். ஆனால் இன்று மனிதன் அதிர்ஷ்டத்தை முயன்று பெறுவதைவிட, இருக்கும் மனநிலையைத் தீவிரமாக அனுபவிப்பதிலேயே நாட்டத்தைச் செலுத்துகிறான்.

தம்பி - சாதாரண மனிதன் இருக்கும் நிலை மிகவும் தாழ்ந்ததாயிற்றே.

அண்ணன் - அது உயர்ந்தால்தான் மனிதன் உயருவான். இதுபோன்ற படிப்பை ஏற்பான். மனிதன் இன்றுள்ள நிலையில் ஒரு 100 பேர் முயன்று சத்திய ஜீவியத்தையே தர முடியும் என்றார் பகவான்.

தம்பி - சத்திய ஜீவன் பிறந்தால் எல்லா மனிதர்களும் சத்திய ஜீவனாவார்களா?

அண்ணன் - எல்லாரும் ஆக முடியாது. தகுதியுள்ளவர்கள் பலன் பெறலாம். இந்தப் படிப்பு, செல்வம், வளம், அதிர்ஷ்டம் development முன்னேற்றம் ஆகியவை சத்திய ஜீவனோடு ஒப்பிட்டால் மிகச் சிறியன. அதனால் இதைப் பரப்ப முடியும்.

தம்பி - சத்திய ஜீவனாக மனிதன் தயாரான பின்னால்தான் இவையெல்லாம் வரும் என்று சொல்வார்களா?

அண்ணன் - மற்ற நாடுகளில் ஏற்கனவே இவை வந்துவிட்டதால் அந்த நிபந்தனை தேவை எனத் தெரியவில்லை.

தம்பி - ஏராளமான வசதி வரும் என்றால் அனைவரும் பிரியப்படுவார்கள். ஆனால் முதல் நிபந்தனை பூரண நல்லெண்ணம் வேண்டும் என்றால் அதிகம் பேர் தேறமாட்டார்கள்.

அண்ணன் - அல்லது நேர்மையும், திறமையும் மட்டுமாவது வேண்டும்.

தம்பி - தன்னை மனிதன் அப்படித்தான் நினைப்பான்.

அண்ணன் - நினைப்பதற்குப் பலன் வாராது. உள்ளதற்குத்தான் பலன் வரும். மூன்றாம் நிபந்தனையாகவும் ஒன்றைக் கூறலாம். அடக்கம் அளவுகடந்து இருந்தாலும் பலிக்கும்.

தம்பி - பயந்துதான் மனிதன் அடங்குவானே தவிர, தானே அடங்கமாட்டான்.

அண்ணன் - கர்வமானவன், கௌரவத்தை நாடுபவன், பெருமை, வீண் பெருமையை நாடுபவர்கள் அறிவால் அடக்கத்தின் பெருமையை உணர்ந்தால் பலன் வரும். மேடைக்கு வந்தால் அடக்கமாகப் பேச வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இப்பொழுது ஏற்பட்டுவிட்டது. ஒரு காலத்தில் மேடையிலிருந்து சவால் விட்டார்கள்.

தம்பி - மேடையில் வந்த நாகரீகம், மனதில் வந்தால் நல்லது. அல்லது பெரிய ஆத்மா ஒன்று உலகத்தின் சார்பாக அடக்கத்தை மேற்கொண்டால் போதுமா?

அண்ணன் - அது போதுமா என்று சொல்ல முடியவில்லை. அதற்கு நல்ல பலனிருக்கும். அதுவரை சொல்லலாம். மேடையில் உள்ள அடக்கமே உண்மையான அடக்கமானால் அதற்குப் பலனிருக்கும்.

தம்பி - அடக்கம் மட்டுமிருந்தால் அதிர்ஷ்டம் வருமா?

அண்ணன் - நிச்சயம் வரும். அது மட்டுமே போதும் என்றும் சொல்லலாம். இன்டர்நெட் வந்திருக்கிறது. அது idea கருத்துக்குப் பேஷன் பெற்றுள்ள சக்தியைக் கொடுக்கலாம். பார்க்க வேண்டும். மனிதனுக்குத் character திறமையுள்ள நல்ல சுபாவம் வேண்டும்

முன்னுக்கு வந்த நாடுகளில் தனிமனிதன் அது போன்ற சுபாவத்தை உற்பத்தி செய்து அதன் மூலம் சமூகம் அதைப் பெற்றது. நம் நாட்டில் தலைகீழாக வருகிறது. உலகம் அந்தச் சுபாவத்தைப் போற்றுவதால் மனிதன் பேஷனாக அதை ஏற்று முன்னேற வேண்டும்.

தம்பி - மற்ற நாடுகளில் இந்த முன்னேற்றம் வந்து விட்டதால், இனி பரவ வேண்டியதுதானே.

அண்ணன் - அதைச் சமூகம் ஏற்க ஒரு தனிமனிதன் முன்னோடியாக வரவேண்டும். அதாவது ஒரு சிலர் செய்து - அதிர்ஷ்டம், இந்தப் படிப்பு - அதைச் சமூகம் பார்த்து ஏற்று, பிறகு அனைவருக்கும் வரவேண்டும்.

தம்பி - அதற்கு ஏதாவது சுருக்கு வழியிருக்கிறதா?

அண்ணன் - அந்த முன்னோடி அன்னை அன்பரானால், உலகம் அவரை ஏற்கும். படிப்பு, அதிர்ஷ்டம் தானே பரவும்*. நாம் யாருக்கும் சொல்லக் கூடாது. செய்வதானால் நாமே செய்து, நாமே முன்னோடியாக வேண்டும்.

* Man must do it impersonally or should represent a universal vibration, not as a personal achievement out of his own efficiency.

தம்பி - அன்பராக இருந்தால் படிப்பும், அதிர்ஷ்டமும் தானே பரவும் என்பதை நான் அறிவேன். மேலும் விளக்கம் (its rationale) கொடுக்க வேண்டும். எங்களூர் செட்டித் தெருவில் ஒரு விசேஷம். கோமுட்டிச் செட்டியார் எங்களூரில் அதிகம். வசதியானவர்கள். ஒரு கல்யாணத்தில் ஓர் அம்மாள் புது டிசைன் புடவை உடுத்தினால், அவ்வூரில் அடுத்த கல்யாணத்திற்கு வரும் செட்டியார் பெண்கள் எல்லாம் அந்த டிசைன் புடவை உடுத்தியிருப்பார்கள். இது நடக்கிறது என்று அறிவோம். எப்படி எனப் புரிகிறது. ஜாதி ஒன்றே. பண வசதியுண்டு. போட்டி அதிகம். புடவை வாங்கிய இடம் தெரிவது சுலபம். அதனால் இது நடக்கிறது. அதுபோல் அன்னை சக்தியை விளக்க முடியுமா?

அண்ணன் - குருஷேத்திரம் போன சேலம் பெண் தன் டூரிஸ்ட் குரூப்பை விட்டுப் போய் வழி தெரியாமல் தவித்து, அன்னையை அழைத்து திரும்பி வந்தது தெரியுமல்லவா? வழி தெரியவில்லை. பாஷை தெரியவில்லை. படிக்காத பெண். வயதானவர். போலீஸில் போய் கேட்கும் அளவு விவரம் தெரியாதவர். முருகனையும், விநாயகரையும், அம்மனையும் கூப்பிட்டார். எதுவும் நடக்கவில்லை. எப்பொழுதோ கேள்விப்பட்ட அன்னை நினைவு வந்து அவர்களாவது காப்பாற்றக் கூடாதா என்று நினைத்தார். தமிழ்க் குரல் கேட்டது. தப்பித்துக் கொண்டார்.

தம்பி - இது எப்படி நடக்கிறது?

அண்ணன் - நாம் காசிக்குத் தந்தி அனுப்பினால் போய்ச் சேருகிறது. எப்படி? போஸ்ட்டாபீஸ், தந்தி என்பது சர்க்கார் ஸ்தாபனம். தந்தியை வாங்கி, அனுப்ப ஏற்பட்டது. அதற்குக் கடமைப்பட்டது. அதனால் அனுப்பிய தந்தி விலாசத்திற்குப் போகிறது. ரயில்வேயில் தந்தியுண்டு. நம் தந்தியை வாங்கவோ, அனுப்பவோ, கொண்டு போய்க் கொடுக்கவோ கடமைப்பட்டவரில்லை. இஷ்டப்பட்டால் செய்யலாம். போஸ்ட்டாபீஸ் ஸ்தாபனம், கடமைப்பட்ட ஸ்தாபனம். ரயில்வே நமக்குக் கடமைப்பட்டதன்று. சூட்சும உலகம் என ஒன்றுண்டு. அதில் உலகமே அடக்கம். அன்னை அவ்வுலகில் வசிக்கிறார். குருஷேத்திரத்தில் பாட்டி கொடுத்த குரல் சூட்சும உலகில் அன்னைக்குக் கேட்கிறது. அன்னை அதன் மூலம் பாட்டிக்கு உதவக்கூடியவரைத் தேடி அவருக்கு உத்தரவு போடுகிறார். சூட்சும ஸ்தாபனம் இது. அன்னை போட்ட உத்தரவு குருக்ஷேத்திரத்தில் உள்ள தமிழ் பேசுபவர்கட்குக் கேட்டது. பாட்டி அவர்களை சந்தித்தார். பத்திரமாக வீடு வந்து சேர்ந்தார்.

தம்பி - மற்ற கடவுள்கட்கு இந்தச் சூட்சும ஸ்தாபனமில்லையா?

அண்ணன் - நாம் மற்ற தெய்வங்கள் இப்படி நடப்பதாகக் கேள்விப்படவில்லை. தெய்வ லோகத்திற்கு (overmental world) இந்த சக்தியிருப்பதாகத் தெரியவில்லை.

தம்பி - சங்ராச்சாரியாருக்கு காஷ்மீர் ராஜா இறந்துவிட்டார் எனக் காசியில் அப்படித்தான் தெரிந்ததா?

அண்ணன் - சங்ராச்சாரியார் அவதாரப் புருஷர், விபூதி என்கிறார் பகவான். அவருக்கு நடப்பது நமக்கு நடக்குமா? விழுப்புரம் போன பணக்காரப் பாட்டி பர்ஸைத் தொலைத்து விட்டார். பஸ்ஸுக்குப் பணமில்லை. டாக்ஸி ஸ்டாண்டிற்குப் போனார். டாக்ஸிகாரனிடம் "நான் பர்ஸைத் தொலைத்துவிட்டேன். என்னைப் பாண்டிக்குக் கொண்டு போய்விடு. பணம் வீட்டில் தருகிறேன் என்றார். டாக்ஸி டிரைவர் பாட்டி கழுத்தில் 100 பவுன் நகையைப் பார்த்தான். கொண்டு வந்து விட்டுவிட்டுப் பணம் வாங்கிக் கொண்டு போனான். இல்லாதவருக்கு நடக்குமா?

தம்பி - சூட்சும ஸ்தாபனமில்லாமலும் இது நடக்குமா?

அண்ணன் - நீ குருக்ஷேத்திரம் போய் வழி தெரியாவிட்டால் என்ன செய்வாய். போலீஸ் உதவியை நாடலாம். அந்த ஊரில் உள்ள பெரிய கம்பனி ஒன்றிற்கு நம் ஊரில் கிளையிருந்தால், அவர்களை நம்மூர்க் கிளையுடன் போனில் பேசச் சொல்லலாம். உள்ளூர்காரருக்கு உன்னை அடையாளம் காண முடியுமானால், வீட்டிலிருந்து தந்தி மணியார்டர் வரலாம். இவையெல்லாம் எல்லா இடங்களிலும் முடியாது. எல்லாருக்கும் முடியாது. ஆனால் வசதியுள்ளவர்க்கு, திறமையுள்ளவர்க்கு, சாதுர்யச்சாலிக்குப் பலிக்கும் நேரம் உண்டு. சரி, குருக்ஷேத்திரத்தில் பாட்டி கொடுத்த குரல் அன்னைக்குக் கேட்டுப் பதில் வந்தது, அன்னை சூட்சும ஸ்தாபனம். அன்னைக்கு இந்த சக்தியுண்டு என்றால் நம்ப முடியுமா? சிலர் நம்புவார்கள், வேறு சிலர் நம்பமாட்டார்கள்.

தம்பி - நம்பினாலும் அடுத்த முறை பிரச்சினை வரும்பொழுது "அன்னைக்கு இந்த சக்தியுண்டு நான் அன்னையை அழைக்கப் போகிறேன்'' என்று நம்புவது அரிது. அதைத்தான் அன்னையை அறியவேண்டும், நம்ப வேண்டும் என்கிறீர்களா?

அண்ணன் - 1994இல் சர்வதேசக் கமிஷன் ஒன்றில் அன்பர், உலகம் வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிக்க வழியுண்டு எனப் பேசினார். ரிப்போர்ட்டில் எழுதினார். ஐரோப்பாவில் வேலையில்லாத் திண்டாட்டம் 10% முதல் 12% வரையுள்ளது. அமெரிக்காவில் ஆள் கிடைக்கவில்லை. ஹாலந்தில் இந்தச் சதவீதம் 1½%க்கு வந்துவிட்டது. இங்கு அன்னை செயல்பட்டார் என நாம் கூறினால் யார் புரிந்து கொள்வார்கள்? புரிந்து கொண்டாலும் எப்படி எனப் புரியும். அதை எத்தனை அன்பர்கள் உணர்வால் ஏற்றுக் கொள்வார்கள்?

தம்பி - ஏன் அமெரிக்காவிலும், ஹாலந்திலும் இப்படி என்று கேட்பார்களே?

அண்ணன் - இக்கமிஷனில் 3 அன்பர்களிருந்தார்கள். அவர்களில் இருவர் அமெரிக்காவிலும், ஒருவர் ஹாலந்திலும் இருக்கிறார் என்றால், எத்தனைப் பேருக்கு அது பயன்படும்?

தம்பி - இக்கருத்தை ஏற்பது சுலபமன்று. அதற்குப் பெரிய நம்பிக்கை வேண்டும்.

அண்ணன் - இவை போன்ற நிகழ்ச்சிகள் 100க்கு மேல் எழுதப்பட்டுள்ளன. இப்பெற்றோர் அவற்றை எடுத்து, ஆராய்ந்து, அங்கெல்லாம் அன்னை சக்தி செயல்பட்டுள்ளது, எப்படிச் செயல்பட்டது என அறிய முன்வருவார்களா? வந்தபின் அதை ஏற்பார்களா? அதை ஏற்கும் நம்பிக்கையிருந்தால் அது குழந்தைக்கு உலகப் பிரசித்தி பெற்றுத் தரும்.

தம்பி - இவற்றை எல்லாம் நாம் பிறரிடம் சொல்வதே கஷ்டம். ஒருவர் சொல்லி அடுத்தவர் ஏற்கும் விஷயம் இது அன்று. தானே மனதில்பட வேண்டும். அப்படிப்பட்ட நம்பிக்கைக்கு ஆள் தேறாது.

தொடரும்.....

**** 

Comments

10.பிரார்த்தனை பலிக்க

10.பிரார்த்தனை பலிக்க வேண்டும்
 
Para 32 - Line 1 -  விருப்பப் படுவது -   விருப்பப்படுவது
Please combine the line starting with மையத்தில் பேசுகிறோம்?  to Para 34.
Please combine the line starting with
  உண்மை. அதனால் இப்படிப்பு நாடெங்கும் பரவாது.
to Para 40.
Para 82 -  Line 2  -  பக்கும் -  பலிக்கும்
Para 88 - Make a new paragraph for following lines
முன்னுக்கு வந்த நாடுகளில் தனிமனிதன்  ....
:
:
அதை ஏற்று முன்னேற வேண்டும்.



book | by Dr. Radut