Skip to Content

01.யோக வாழ்க்கை விளக்கம் IV

யோக வாழ்க்கை விளக்கம் IV

                                                                                       கர்மயோகி

748) பரம்பொருள் நம்மைத் தீண்டாமல் பரம்பொருள் நமக்குச் சித்திக்காது. அவனால் முடியாததைச் சாதிக்க சமூகம் உதவாமல் மனிதனால் சாதிக்க முடியாது. தனிமனிதனுடைய ஆர்வமே வளர்ந்து சமூகத்தின்மூலம் அவனிடம் மீண்டும் வருகிறது. மனிதனே ஆரம்பம்.

பரம்பொருளால் சித்திக்கும் பரம்பொருள்.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கும் பரம்பரை இந்துக்கள். எந்தக் காரியம் முடியவும் ஜீவாத்மாவும் பரமாத்மாவும் சம்மதிக்கவேண்டும் என்பது ஆன்மீகச் சட்டம்.

பரம்பொருள் நமக்குச் சித்திப்பது என்றால் என்ன? உடலாலான மனிதன் மனத்தால் செயல்பட்டாலும் ஆன்மாவே அவனுக்குத் தலைவன். ஆன்மா மனிதனுக்குச் சித்தித்தால்தான் பிறகு எதையும் சித்தி என நாட முடியும்.

அகந்தை அழிந்தபின் ஆன்மா விடுதலையடைகிறது. விடுதலையடைந்த ஆன்மா உயர்ந்து சென்று சச்சிதானந்தம்வரை செல்லும். சச்சிதானந்தம் எட்டினால் அங்கு பரம்பொருளின் புருஷனைத் தொடலாம். அதைக் கடந்து நிர்வாண சித்தியை நாடுபவர்களும் உண்டு. அதையும் கடந்து பிரம்மத்தை எட்டித் தொடலாம். இதுவரை உலகம் அறிந்தது. இது மேல் நோக்கியப் பயணம். அடுத்தது கீழ்நோக்கிய பயணம். அப்பயணத்தை மோட்சம்மூலம் பெற முடியாது. சத்திய ஜீவியம் மூலம் பெறலாம். கீழ்நோக்கிய பயணத்தில் பரம்பொருள் இறங்கிவந்து நம் வாழ்விலும் பலிக்கமுடியும். இது பலிக்க நம்மைப் பரம்பொருள் தீண்டி இருக்கவேண்டும். பரம்பொருள் நம்மைத் தீண்டாமல், நமக்கு உலகில் பரம்பொருள் சித்திக்காது

ஒரு உதாரணத்தால் இதை விளக்க முயல்கிறேன். பரம்பொருள் வாழ்வில் சித்திப்பது எனில் பரம்பொருள் நம் வாழ்வை ஏற்று நடத்துவதாகும். அது சத்தியஜீவிய சித்தி.

சமூகத்தில் வாழும் நாம் ஒரு வகையில் தனிமனிதன். மற்றொரு வகையில் நாம் அதன் அங்கம். தனிமனிதன் ஆலைகள் கட்டியிருக்கிறான், பல்கலைக்கழகங்கள், பாங்குகள் நிறுவியுள்ளான். சமூகம் தனிமனித வாழ்வில் பலித்ததால் தனிமனிதன் ஒரு பல்கலைக்கழகத்தை நிறுவ முடிந்தது. ஒரு மனிதன் தனியாக நின்று, சமூகத் தொடர்பில்லாமல், சமூகம் அவனுக்குதவ முன்வாராமல் பாங்கையோ, ஆலையையோ, நிறுவமுடியாது. இவன் பாங்கு ஆரம்பித்தால் அனைவரும் டெபாசிட் போடவேண்டும், கடன் வாங்கவேண்டும். ஆலை ஆரம்பித்தால் தொழிலாளர் வேலைக்கு வரவேண்டும், அவன் சரக்கை மார்க்கட் வாங்கவேண்டும். இவை ஓரிரு அம்சங்கள். சமூகம் தனிமனிதனை வாரி அணைத்து உச்சிமோந்து உயிர் கொடுத்தாலன்றி அவனால் எதையும் சாதிக்கமுடியாது. அதேபோல் பரம்பொருள் மனிதனை நாடித் தீண்டி ஆதரவு அளிக்காமல் மனிதனால் வாழ்வில் பரம்பொருளைச் சித்திக்க முடியாது.

இதற்கடுத்த கட்டமும் உண்டு. தனிமனிதன் ஜீவாத்மா என்பதால் அவ்வகையில் சமூகத்தைவிட உயர்ந்தவன். சமூகம் இவனுக்கு உதவுவதால்தான் தனிமனிதன் சாதிக்கிறான். அதற்கு அடிப்படையானது தனிமனிதனுடைய ஆர்வம். முன்னோடியான மனிதன் தன் எண்ணத்தாலுயர்ந்து, செயலால் பலித்து, உணர்ச்சியால் மலர்வதால், அத்தகைய தனிமனிதர்களுடைய ஆர்வம் சமூகத்தில் அடித்தளத்தை நிரப்பி, அதிலிருந்து எழுச்சியாக உயர்ந்து சிகரத்தைத் தொட்டு சாதிக்கிறது. சமூகச் சாதனை என முடிவாக நாம் காண்பது ஆரம்பத்தில் தனிமனித சாதனையேயாகும். மனிதனே முதல், அவனே ஆரம்பம், அவனே முடிவு. ஜீவாத்மா பரமாத்மாவின் பகுதி என்பதால் மனிதனுக்குச் சமூகத்தைவிட உயர்ந்த இச்சிறப்புண்டு.

  • மனித முயற்சியால் எதுவும் முடியாது, அருள் அவசியம்.
  • மனித முயற்சியும், மனிதனுமே அடிப்படை, அஸ்திவாரம்,

என்ற இரண்டு கருத்துகளும் எதிரானவையாகத் தோன்றும். முதற்கருத்து நம் மரபில் "அவனருளாலே அவன் தாள் வணங்கி'' என வழங்குகிறது. அடுத்தது எதிராகக் காணப்பட்டாலும் ஜீவாத்மாவே பரமாத்மா என்ற ஸ்ரீ அரவிந்தர் கருத்துப்படி முரணில்லை என்று கொள்ளலாம்.

தனிமனித முயற்சியே சமூக முன்னேற்றத்திற்கு அடிப்படை என்பதால் தனிமனிதனே ஆரம்பம். சமூகத்தின் உதவியின்றி தனிமனிதன் பல காரியங்களைச் சாதிக்கமுடியாது என்பதுபோல், பரம்பொருளின் ஸ்பர்சமின்றி நாம் பரம்பொருளை அடையமுடியாது.

கல்லூரி, ரயில்வே, கஜானா, போலீஸ், போன்றவையின்றி மனிதன் எங்கே? அவன் வாழ்வை நடத்த சமூகத்தின் அனைத்து அம்சங்களும் தேவை. காட்டில் தவம் செய்யும் முனிவர்போல் ஊரில் குடும்பம் நடத்தமுடியாது.

நாட்டில் அரசியலில் சாதிக்க மனிதனுக்கு நாடு அவனைத் தீண்டவேண்டும். தனிமனிதன் அரசியலில் சாதிக்கமுடியாது. அதற்குக் கட்சி ஆதரவு தேவை, மக்கள் ஆதரவு வேண்டும்.

நாட்டின் ஆதரவின்றி, நாட்டு மக்களின் ஆதரவின்றி அரசியலில் மனிதன் எதையும் சாதிக்கமுடியாது. அரசியல் என்பது மக்களின் ஸ்பர்சமாகும்.

பரம்பொருளின் ஸ்பர்சமின்றி பரம்பொருள் சித்திக்காது என்பதில் ஸ்ரீ அரவிந்தர் சிறப்பாகக் கூறுவது மேலுலகிலுள்ள பரம்பொருளையன்று, நம்முள்ளேயுள்ள பரம்பொருள் எழாமல், எழுந்து நம் வாழ்வில் மிளிராமல் பரம்பொருள் சித்திக்காது என்கிறார்.

பரம்பொருள் சித்திப்பது மனித முயற்சியாலன்று, பரம்பொருளின் அருளால் என்பதை இப்படிக் கூறுவது லீலையின் உட்கருவை உணர வைப்பதாகும்.

****

749) அவதாரம் கண்டத்தில் அகண்டம்.

Avatar is the infinite in the finite.

மனிதன் சிறியவன். இறைவன் அனைத்தையும் தன்னுட் கொண்டவன், அகண்டம். மனிதன் கண்டம். அவதாரப் புருஷன் சிறிய மனிதனிடையே பெரிய புருஷனாக அவதரித்தவன். தத்துவம் இறைவனை அகண்டமாகவும், சிருஷ்டியின் ஜீவராசிகளைக் கண்டமாகவும் வர்ணித்ததுடன், நாம் கண்டமாக (சிறியதாக) காண்பது உண்மையில் அகண்டமான பிரம்மம் என்றும் கூறுகிறது. நம் கண்ணுக்குச் செங்கல் களிமண். ஞானதிருஷ்டிக்குச் செங்கல் பிரம்மம். எல்லா மனிதர்களும் அப்பார்வைக்கு அகண்டம், இறைவன், பிரம்மம். இதை நாம் அறியமுடியாவிட்டாலும் அவதாரப்புருஷனை இறைவனாக மனம் ஏற்கும். அவதாரத்தில் ஆண்டவனைக் காணும் பார்வையை மேலும் கூர்ந்து கவனித்தால் அனைவரும் ஆண்டவன் என்றறியலாம்.

இராஜகுமாரன் நாடகத்தில் பிச்சைக்காரனாக நடித்தால், பிரதம மந்திரி கிரிக்கெட் விளையாடினால், பெர்னார்ட் ஷா ஆஸ்பத்திரியில் படுக்கையாக வந்து சேர்ந்தால், நாம் அவர்களைப் பிச்சைக்காரனாகவோ, வியாதியஸ்தராகவோ மட்டும் புரிந்துகொள்வதில்லை. இராஜகுமாரன், பிரதம மந்திரி, பேரறிஞர் நம் கண்ணுக்குத் தெரியாமற் போவதில்லை. மகாத்மாவையும், மார்ட்டின் லூதரையும், ஏசுவையும், இன்று உலகில் பிரபலமான பலரையும் வெறும் மனிதர்களாக உலகம் நடத்தியதுண்டு. அவர்கள் பெருமை வெளிவந்த பின்னரே அவர்களை உலகம் பாராட்டியது. அவர்களுடைய திறமை செயல்பட்டு பலித்த பின் உலகம் அவர்களை ஏற்றது. நம் ஆன்மீகத் திறமை செயல்பட்டு வெளிவந்தால் எல்லா ஜீவராசிகளும் இறைவன் என அறியலாம். கண்டமான மனிதனை அகண்டமான பிரம்மமாகக் காணமுடியும். அதுவே பூரணயோகத்திற்குரிய பார்வை. சூட்சுமப் பார்வையாக ஆரம்பித்து ஞானதிருஷ்டியாகி, திரிகாலத் திருஷ்டியாக மாறுவது யோகம்.

அன்னை ஆசிரமத்தில் நடந்து போய்க்கொண்டிருக்கும்பொழுது புதிய carpet கம்பள விரிப்பின்மீது நடந்தவர் திடீரென நின்று கீழே பார்த்தவர், "இக்கம்பளம் என்னுடன் பேசிற்று. நான் அழகாக இருக்கிறேன், பார் என்றது'' என்று கூறினார். அன்னைக்குக் கம்பளத்தின் குரல் கேட்டது. சக்ரவர்த்தி சாலமனுக்கு விலங்கு பாஷை புரியும்.

கண்டமான ஜடப்பொருள்களிடையே நாமும் ஜடமாக, கண்டமாகப் பிறந்துவிட்டோம். நாம் நம்மை கண்டமில்லை, உள்ளுறை இறைவனை நான் கண்டபோது அது அகண்டம் (infinity) என்று அறிந்தேன் என்ற நிலைக்கு வந்தால், உலகில் அனைத்தும் அகண்டமாகத் தெரியும். ஆரம்பத்தில் மலரிலும், குழந்தையிலும், கடற்பரப்பிலும், வானவெளியிலும் அகண்டம் தெரியும். பாரதி சிறிய கழுதைக்குட்டியைப் பார்த்தவர் அதன் அழகை ரசித்துக் கட்டி முத்தமிட்டார். பாரதியின் கண்ணுக்கு அது கழுதைக்குட்டியில்லை,அழகுவாய்ந்த இறைவனின் திருவுருவம்.

அவதாரப் புருஷர்களையும் சிறுவயதில் உலகமோ, உடனுள்ளவரோ பிரம்மமாக அறிவதில்லை. ஒரு சிலர் கண்ணுக்கே அது தெரியும். ஜோஸ்யர் சொல்வதுண்டு. ஜோஸ்யம் பலிக்கட்டும் என்று உலகம் காத்திருக்கும்.

பரமஹம்சர் கண்ணுக்கு நரேன் மனிதனாகத் தெரியவில்லை. நரேனுடைய விசேஷ அம்சம் தெரிந்தது. நிஷ்டையில் நரேன் பிறந்த சந்தர்ப்பத்தை அவரால் பார்க்க முடிந்தது. அதை அறிந்தபின் நரேனைத் தேடி காலேஜுக்குப் போய் இந்தப் புரோகிதர் நரேனுக்கு அவமானத்தைத் தருவார். என்னைத் தேடி கல்லூரிக்கு வரவேண்டாம், எனக்கு வெட்கமாயிருக்கிறது என்பார். உன்னைக் காணாவிட்டால் என் நெஞ்சத்தை பிழிந்தெடுக்கிறது என்பார் பரமஹம்சர்.

அவதாரம் தன் தெய்வாம்சத்தை வெளியிட்டபின் அனைவரும் அறிவர். வெளியிடுமுன் ஒரு சிலர் அறிவார்கள். அன்னை மனதில் பலித்தால் மனிதரெல்லாம் பிரம்மம் (அகண்டம்) என பக்தரால் அறியமுடியும்.

கடல் அளவு கடந்தது. பிரம்மாண்டமான நீர்ப்பரப்பு. அதன் நீர் உப்பு ஆனதால் பயன்படுத்த முடியாது. பரவெளியை நிரப்பியுள்ள பரம்பொருள் அத்தகையது.

வெய்யிலால் தூய நீர் உப்பிலிருந்து பிரிக்கப்பட்டு மேகமாகி, மழையாகப் பொழிந்து ஏரி, குளம், ஆறு, வாய்க்கால், கிணறு ஆனால் அகண்டமான கடலைக் கண்டமான கிணறாகக் காண்கிறோம்.

வற்றாத ஊற்றுள்ள கிணறு தன் தன்மையால்

அகண்டமாவதைப்போல் மனிதப் பிறவியில் அவதாரம்.

பரம்பொருள், பரமாத்மா, பராத்பரா, பரபுருஷா என்ற சொற்கள் அகண்டமான ஆண்டவனைக் குறிக்கின்றன. பரமாத்மா ஜீவாத்மாவாகி உடலை ஏற்று மனிதனாகப் பிறக்கிறது. உடலாலான மனிதன் பரிணாம வளர்ச்சியால் உணர்வையும், மனத்தையும் பெறுகிறான். தபஸ்வி மனத்திலுள்ள மனோமயப் புருஷனைக் கண்டு, அதன்மூலம் ஜீவாத்மாவையும், பரமாத்மாவையும் அடைந்து மோட்சம் பெறுகிறான். இது மனித முயற்சி. அருள் செயல்பட்டு ஆண்டவன் மனிதனாகப் பிறப்பெடுப்பது அவதாரம்.

  • மனித ஜீவனுக்கு உடல், உணர்வு, மனம், ஆன்மா, என்பவை பகுதிகள்.
  • இவை அனைத்தும் சேர்ந்தது ஜீவன்.
  • பரமாத்மா, ஜீவாத்மாவைத் தேடி வரும்பொழுது உடலில் ஆன்ம விழிப்புள்ளவன், உணர்வில் அதுபோன்றவன், மனத்தால் பரம்பொருளைப் பெறுபவன், ஆன்மாவால் பலன் பெறுபவன் என்பவருண்டு.
  • ஜீவாத்மாவைத் தேடிவரும் பரமாத்மாவை மனித ஆன்மா ஏற்றால், மனிதன் மகாத்மாவாகிறான்.
  • அதேபோல் மனோமயப் புருஷன் பெற்றால், genius மேதை பிறக்கிறான்.
  • உணர்வில் பரமாத்மா செயல்பட்டால் மாவீரன் ஜனிக்கிறான்.
  • ஜீவனில் பரமாத்மா ஏற்கப்பட்டால் அவன் அவதாரமாகிறான்.
  • ஜீவனில் ஏற்ற பரமாத்மா, உடலால் ஏற்கப்பட்டதைப்போல் தெரியும்.
  • ஏனெனில் ஜீவனுக்குள்ள முழுமையான அம்சம் உடலுக்கும் உண்டு.

          சத்தியஜீவன் அவதாரத்திலிருந்து வேறுபட்டவன்:

  • சைத்தியப் புருஷன் விழித்து மௌனம், திருஷ்டி, யோகம், தெய்வீகம் மூலம் சத்திய ஜீவியத்தை அடைந்தால், அதே சமயம் பரிணாம மாற்றம் உணர்விலும், உடலுக்கும் போய் சைத்தியப் புருஷனுக்கு (substance) உடலுக்குள்ள உரமும் வலிமையும் வந்து, உடலின் சைத்தியமாக மாறும்பொழுது மனோமயப் புருஷன் ஈஸ்வரனாகிறான். அதுவே சத்தியஜீவன். அவதாரம் உயர்ந்த மனிதன். சத்தியஜீவன் மனிதனைக் கடந்த அடுத்த (species) நிலைக்குரிய பிறவி.

****

750) மனிதன் விழிப்பற்று இருப்பதால், அவன் முன்னேற்றமும் அப்படியேயிருக்கிறது. உள்மனம் பெறும் ஆன்மீக அனுபவங்களை மனிதன் அறியாமலிருப்பதுண்டு.

விழிப்பற்ற மனிதனின் ஆன்மீக வளர்ச்சி.

ஓர் ஊரில் உள்ள சந்தர்ப்பங்களை அனைவரும் அறிவதில்லை, பயன்பெறுவதில்லை. ஒரு குடும்பத்து வாய்ப்புகளை ஓரிருவர்தான் அறிந்து பலன் பெறுகிறார்கள். இன்று நாட்டில் வியாபாரம் பெருகுகிறது. T.V. பெருநகரங்களில் எல்லா வீடுகளிலும் உள்ளன எனப் பத்திரிக்கை கூறுகிறது. ஆனால் 30 கோடி பேர் வறுமையிலுள்ளனர். 50 ஆண்டுக்குமுன் வறுமை இருந்தது எனில் அன்று வாய்ப்பில்லை. இன்று 50 கோடி பேர் வறுமையைக் கடந்து வந்துள்ளனர். இந்த நிலையிலும் 30 கோடி பேருக்கு வாய்ப்பு கண்ணில் படவில்லை. அவர்கள் விழிப்பற்றுள்ளனர்.

இதே நிலையை பகவான் சுட்டிக்காட்டுகிறார். மனிதனுக்கு விழிப்பில்லை என்கிறார். பிரபஞ்சத்தின் உச்சியில் தெய்வங்களும், அடிமட்டத்தில் விலங்குகளும் உள்ளன. விலங்குகட்கு மனம் இல்லை. அதனால் உணர்வால் செயல்படுகின்றன. உணர்வுக்கு விழிப்பில்லை. உணர்வுக்கு உணவும், உறக்கமும் தெரியும். விலங்கினம் மனநிறைவோடுள்ளது. உணவும், உறக்கமும் உள்ளவரை அதன் வாழ்வில் நிம்மதியுண்டு. அதற்குமேல் விலங்குக்கு நினைக்கத் தெரியாது. ஏனெனில் நினைக்கும் அறிவு அதற்கில்லை.

சிருஷ்டியின் உச்சியில் தெய்வங்கள் உறைகின்றன. தெய்வங்கள் பூமி அளவுள்ளன. அவர்களால் எதுவும் முடியும், முடியாததில்லை. நம்மைப் போன்ற ஸ்தூல உடல் அவர்கட்கில்லை. சைத்தியப் புருஷன் எனும் ஆன்மாவும் இல்லை. ஆனால் அவர்கள் சக்தி வாய்ந்தவர்கள். உலகம் அவர்கட்குக் கட்டுப்பட்டது. ஒளிமயமான விஷ்ணுவும், சக்தி வாய்ந்த சிவனும், உலகைப் படைத்த பிரம்மாவுக்கும் என்ன வேண்டும்? எதுவும் அவர்களுக்குத் தேவையில்லை. இந்திரலோகத்தை அடைய நாம் கனவு காண்கிறோம். தவம் பலித்தால் இந்திர பதவியை நினைக்கலாம். இந்திரனுக்கு என்ன தேவை? மனிதன் செல்வத்தை நாடுகிறான். அதன் தெய்வமான லக்ஷ்மியைத் துதிக்கிறான். லக்ஷ்மிக்குச் செல்வம் தேவையா? சரஸ்வதிக்கு ஞானம் தேவையா? The Gods are satisfied with their splendours. உலகையே உற்பத்தி செய்து காத்து அழிக்கும் கடவுள்களுக்கு தங்கள் பிரபலம் திருப்தி அளிக்கிறது என்கிறார் பகவான். அவர்களுக்கும் முன்னேற்றமுண்டு. அதை அவர்கள் நாடுவதில்லை. நாடினால் முன்னேற்றத்தைப் பெற்றுத் தரும் சைத்தியப் புருஷன் தெய்வங்களிலில்லை. தெய்வலோகத்திலேயே இல்லை. அது பூவுலகில் மட்டுமேயுண்டு. அதை நாடினால் தெய்வம் மனிதப் பிறவி எடுக்கவேண்டும்.

பிரபஞ்சத்தின் அடித்தளம் இருள், ஜடமானது; சிகரம் ஜோதி, சச்சிதானந்தம். இருள் முழு இருளாக இருப்பதால் கண்ணுக்கு அது தெரியாது. ஜோதி ஜகஜ்ஜோதியாக இருப்பதால் கண் கூசும், அதைப் பார்க்க முடியாது. இவையிரண்டும் தனித்து, விலகியுள்ளன. ஜோதியே இருளாக மாறி, மீண்டும் தன்னைக் கண்டுகொள்ள முயல்வது சிருஷ்டி என்கிறார் பகவான். அந்த இலட்சியம் பூர்த்தியாக, இருளுள் புதைந்துள்ள ஜோதி வெளிவந்து, எழுந்து, உயர்ந்து, மேலேபோய் ஜோதியுடன் கலக்கவேண்டும். இதுவே இறைவனின் சித்தம். அதை விலங்குகளால் அறிய முடியாது. தெய்வங்களுக்கு அறியும் ஆவலில்லை.

இறைவனின் சித்தம் சிருஷ்டியின் பரிணாமமாகப் பூர்த்தியாக வேண்டுமானால், அதற்குரிய கருவி மனிதன். ஏனெனில் அவனுக்கு உணர்வுடன், மனம் உண்டு. மனம் விழிப்படையக் கூடியது. மனம் விழித்தெழுந்தால் அவனுக்கு ஜோதி விளங்கும். தான் புதைந்துள்ள இருள் தெரியும். இருளிலிருந்து வெளிவர அவனால் முடியும். இருளையும், ஜோதியையும் இணைக்கும் பாலமாக மனிதன் அமைவான். இதைப் பூர்த்தி செய்ய அவதாரங்களால் முடியாது என இறைவனே உலகுக்கு வந்ததுதான் ஸ்ரீ அரவிந்தம்

யோக வாழ்வு இக்குறிக்கோள் முன்னால் கடுகு. எனினும் யோக வாழ்வின் அடிப்படையும் இதுவே. யோகவாழ்வில் பிரபஞ்சத்தின் ஜோதியையும், இருளையும் இணைப்பதற்குப் பதிலாக நம்முள் உள்ள ஜோதியையும், இருளையும் இணைக்க முயல்கிறோம்.

மனிதனுக்கு விழிப்பில்லை unconscious. அவனது உள்மனம் inner mind விழிப்பாக இருக்கிறது. உள் மனம் வளர்வது அவன் மேல் மனத்தில் தெரியாது.

நஞ்சை நிலம், ஏரி, ஆறு, வாய்க்கால் உள்ள இடங்களை வளமான இடங்கள் எனப் பார்த்தவுடனே தெரியும். அளவுகடந்து பூமிக்கடியில் நீருள்ள பாலைவனத்தை எவரும் பாலைவனம் என்றே அறிவர். இந்தியாவில் விவசாய முன்னேற்றத்தில் தலைமையான மாநிலம் பஞ்சாப். அங்கு மழை 10''. 10'' மழை பெய்யுமிடம் பாலைவனம் என நிர்ணயிக்கப்படும். 5 நதிகள் ஓடுவதால் பஞ்சாப் விவசாயச் சிறப்புப் பெற்றது.

போர்ட் டிரஸ்ட் ஆபீசில் சீனிவாச ராமானுஜத்தின் மேதாவிலாசம் தெரியாதது போல் உள்மனம் பெறும் சித்திகள், அனுபவங்கள், ஞானம் தமக்கே மனிதருக்குத் தெரிவதில்லை.

20 ஆண்டு சத்பிரேம் அன்னையுடன் Agenda அஜெண்டா எழுத உதவினார். ஸ்ரீ அரவிந்தர் சத்பிரேமின் ஆன்மீகச் சிறப்பை அன்னைக்குப் பலமுறை கூறியுள்ளார். அவை சத்பிரேம் அறிந்ததே. எனினும் தமக்கு 20 ஆண்டு ஆசிரம வாழ்வில் எந்தப் பலனும் தெரியவில்லை என அன்னையிடமே குறைப்பட்டுக்கொள்வார். அன்னையின் விளக்கங்கள் அவருக்கு முழு திருப்தி தரவில்லை. வாழ்விலுள்ள சில அனுபவங்கள்:

  • பள்ளி, கல்லூரியில் எந்தச் சிறப்புமில்லாமலுமிருந்தவர் வாழ்வில் பெருஞ்சிறப்புப் பெறுவதுண்டு.
  • எல்லா வகையிலும் சிறந்தவர் என்று இளம் வயதில் கண்டவர்கள் பின்னர் பேர், ஊர், தெரியாமல் போவதுண்டு.
  • ஊர், பேர் தெரியாத கம்பெனி சில வருஷத்தில் நாட்டில் பிரபலமாவதுண்டு.
  • 70 வயதுக்குமேல் எழுத்து, பேச்சு, பாட்டு, அரசியல் திடீரென பிரபலம் அடைவதுண்டு. அது அரிது.

மனிதனுடைய திறமை, அறிவு, சாதனை ஆகியவை அவனுள் உருவாவது அவனுக்கும், மற்றவர்க்கும் தெரியாமலிருப்பதற்குக் காரணம் மேல்மனம், உள்மனத்தினின்று பிரிந்திருப்பதால்தான். ஒருவரை நாம் அறியவேண்டுமானாலும், அவரே அறிய வேண்டுமானாலும், சூட்சும அனுபவமுள்ளவர், சூட்சும அறிகுறிகளைக் கவனித்தால் புரிந்துகொள்ள முடியும். ஆசிரம வாயிலில் தம் பிறந்த நாளன்று ஒரு பக்தர் தற்செயலாய் சந்தித்த வெளிநாட்டாரை பகவான் அறைக்கு அழைத்துப் போனார். அச்சமயம் நல்ல மழை. வந்தவர் பக்தருடன் நிரந்தரமாகத் தங்கியதை அருளான மழையும், பகவான் அறையும், பிறந்தநாளும் குறிக்கின்றன. வயதானபின் நாம் வெற்றி பெற்ற விஷயங்களின் ஆரம்பத்தை நினைவுகூர்ந்தால் சூட்சும அறிகுறிகள் என்ன என அறியலாம்.

****

தொடரும்....

ஜீவிய மணி

ஆர்ப்பாட்டத்திலும் ஆனந்தம் அழகை வெளிப்படுத்தும்.
 

ஸ்ரீ அரவிந்த சுடர்

மனிதன் தன்னைக் கொண்டு உலகத்தை அறிய முயல்கிறான். அது சுயநலத்தால் வரும் அறிவு. விலக்கான மனிதர்களும்,விலக்கான நேரங்களிலும் தவிர, மனிதன், நான் சரி, மற்றவர்கள் தவறு என்ற கண்ணோட்டத்தையே மேற்கொள்கிறான்.

மனிதனுக்கு அவன் எப்பொழுதும் சரி

*****

Comments

750)Para  1  -  Line  2   - 

750)
Para  1  -  Line  2   -  அறியாமருப்பதுண்டு   -     அறியாமலிருப்பதுண்டு
Para 5   -  Line 11  -  தெய்வங்களிலி ல்லை   -    தெய்வங்களிலில்லை
Para 7   -  Line  3   -  இருளிலி ருந்து               -    இருளிலிருந்து
Please make a new paragraph for following lines
யோக வாழ்வு இக்குறிக்கோள் முன்னால் கடுகு.
:
:
..... நம்முள் உள்ள ஜோதியையும், இருளையும் இணைக்க முயல்கிறோம்.
 
Make a new paragraph for the line starting with
போர்ட் டிரஸ்ட் ஆபீசில் சீனிவாச .....
 
Para 12  -  Line 2  -  தெரியாமருப்பதற்குக்     -     தெரியாமலிருப்பதற்குக்

 

749) Please combine Para 1

749)

 
Please combine Para 1 and Para 2
Para  8   -  Line 2  -  பலி த்தால்  -   பலித்தால்
Para 12   - Line  3  -    உடலி ல்   -   உடலில்

01.யோக வாழ்க்கை விளக்கம்

01.யோக வாழ்க்கை விளக்கம் IV
 
748)
 
Para 3 - Make a new paragraph for the following lines
 
பரம்பொருள் நமக்குச் சித்திப்பது என்றால் என்ன?
:
ஆன்மா மனிதனுக்குச் சித்தித்தால்தான் பிறகு எதையும் சித்தி என நாட முடியும்.
 
Para 4- Make a new paragraph for the following lines
 
ஒரு உதாரணத்தால் இதை விளக்க முயல்கிறேன்
:
அது சத்தியஜீவிய சித்தி.
 
Make new paragraph for the following lines
 
 சமூகத்தில் வாழும் நாம் ஒரு வகையில் தனிமனிதன்.
:
அதேபோல் பரம்பொருள் மனிதனை நாடித் தீண்டி ஆதரவு அளிக்காமல் மனிதனால் வாழ்வில் பரம்பொருளைச் சித்திக்க முடியாது.
 
Make a new paragraph for the following lines
 
இதற்கடுத்த கட்டமும் உண்டு
:
ஜீவாத்மா பரமாத்மாவின் பகுதி என்பதால் மனிதனுக்குச் சமூகத்தைவிட உயர்ந்த இச்சிறப்புண்டு
 
Para 8 -  Line 1   -        அரசியல்   -    அரசியலில்
Para 8 -  Line 2   -        அரசியல்   -    அரசியலில்
Para 8 - Make a new paragraph for the following lines
  நாட்டின் ஆதரவின்றி,
:
அரசியல் என்பது மக்களின் ஸ்பர்சமாகும்.
 



book | by Dr. Radut