Skip to Content

14.தேடினால் கிடைக்காது பிரார்த்தனை செய்தால் கிடைக்கும்

 தேடினால் கிடைக்காது பிரார்த்தனை செய்தால் கிடைக்கும்

       Ball Point Pen. இங்க் தீர்ந்துவிட்டது. புது refill போட பழையதை எடுத்து குப்பையில் போட்டபொழுது, சில சமயங்களில் உள்ளேயுள்ள ஸ்பிரிங் தவறுவது வழக்கம். அதனால் கவனமாக அதை எடுத்து வைக்க முயன்றபொழுது, அதைக் காணோம்.

- ஒரு செகண்டில் எங்குப் போகும், டிரஸ்ஸை உதறிப் பார்த்து விட்டாயிற்று, இல்லை.

- உட்கார்ந்த நாற்காலியைப் பார்த்தாயிற்று.

- ஒருவர் வந்து நாற்காலி, அதிலுள்ள cushion, ஆகியவற்றைப் பார்த்துவிட்டு உடனே சுற்றியுள்ள இடத்தையும் சுத்தமாகத் தேடியாயிற்று, கிடைக்கவில்லை.

- மறு நாள் இடத்தை சுத்தம் செய்யும்பொழுது இருவர் அருகேயுள்ள, பெட்டி, தட்டு, rubber band வைக்குமிடம் ஆகிய அனைத்தையும் மெதுவாகப் பார்த்து ‘இல்லை’ என்று தீர்ப்புக் கூறியபொழுது,

தேடினால் கிடைக்காது, பிரார்த்தனை செய்தால் கிடைக்கும் என்றார் ஒருவர்.

       ஐந்து நிமிஷம் பிரார்த்தனையில் பேனா உள்ளே பார்க்கத் தோன்றியது. ஸ்பிரிங் இருந்தது. கிடைத்தது. தொலைத்தவர், “நான் நேற்று இந்தப் பேனாவை தட்டித் தட்டி உள்ளே ஸ்பிரிங் இருக்கிறதா எனப் பார்த்தேனே” என்றார்.

தேடினால் கிடைக்காது, பிரார்த்தனை செய்தால் கிடைக்கும்.’

****



book | by Dr. Radut