Skip to Content

11.பகவானுடைய இதர நூல்கள்

பகவானுடைய இதர நூல்கள்”

ஸ்ரீ அரவிந்தர் கண்ட கனவு

       யோகி எந்த வேலையை வேண்டுமானாலும் கற்கும் திறன் உடையவர் என பகவான் கூறியுள்ளார். அதனால் அவற்றைக் கற்றுக் கொள்ளவேண்டும் என்ற அவசியமில்லை. தாம் செய்யும் வேலைக்குரிய திறமைகளை மட்டுமே யோகி பெறுகிறார். கனவில் எதிர்காலம் முழுவதும் தெரிவது ஒரு யோக சாதனை. இதைத் தியானத்திலும் பெறலாம். தாம் இவற்றைத் தமக்கு முக்கியமாகக் கருதவில்லை எனவும், இதுபோன்ற திறமைகளை அன்னையிடம் விட்டுவிட்டதாகவும் கூறுகிறார். வெகுதூரத்தில் பேசுவது அன்னைக்குக் கேட்கும் என்கிறார்.

சில கனவுகள் கனவில் கண்டபடி பலிக்கும் என்று ஸ்ரீ அரவிந்தர் சொல்கிறார்.

கனவில் ஒரு விஞ்ஞானியும், மந்திரவாதியும் உள்ளனர். இருவரும் எதிரிகளிடமிருந்து ஒரு பெண்ணைக் காப்பாற்ற முனைகின்றனர். மந்திரவாதி (Psychic and mental man) ஆத்ம விழிப்புள்ளவன். அவனுக்கு விஷயம் தெரியும். தெரிவதைப் பயன்படுத்தும் முறை அறியாதவன். ஆத்மாவைப் புரியும். அது செயல்படும் விவரம் தெரியாது.

விஞ்ஞானி பெண்ணைக் காப்பாற்ற முயன்றான். மந்திரவாதியும் முயன்றான், மந்திரவாதியால் முடியவில்லை. விஞ்ஞானி முயலும்பொழுது கத்திக் குத்தால் எதிரி காயப்படாதது அவனுக்குப் புரியவில்லை. எதிரிகள் அரச பீடத்தை நோக்கிப் போகின்றனர். பிறகு அவர்கள் ஓடிவிட்டனர். பெண்ணை அழைத்துக் கொள்கின்றனர். விஞ்ஞானி geologist பூமி நூல் நிபுணன்.

எதிரிகள் ஓடியபொழுது அவர்கள் பொருள்களை விட்டுவிட்டுப் போகின்றனர். தலை நகரத்திற்குக் காயத்துடன் போக விரும்பவில்லை. விஞ்ஞானி geologyயைப் பற்றிப் பெரிய புத்தகத்தைக் காண்கிறார். இந்த அறையில் பாதி அளவுள்ள புத்தகம். பெண் புத்தகத்துள்ளிருக்கிறாள். அது புவியின் இரகஸ்யம், அடையாளமாகக் (symbolic) காணப்படுகிறது.

       இந்திய விஞ்ஞானம் பூமியில் புதைந்துள்ளது எனில் நம் உடலுள்ளிருக்கிறது என்று கொள்ளலாம். பெண் சரஸ்வதி. எதிரிகள் பிரிட்டிஷ் அரசாங்கம். பெரிய சைஸ் புத்தகம் அளவு கடந்த ஞானம் அதனுள்ளிருப்பதாகும். கத்திக்குத்தால் எதிரி பாதிக்கப்படவில்லை என்பது விஞ்ஞானிக்கு ஆச்சரியம் தருகிறது. அவை ஆவி உருவங்கள் என்பதால் கத்திக்குத்தால் உயிர் போகாது. நாடு விழித்துக் கொண்டது. மந்திரவாதி என்பது நாட்டின் ஆன்மீக ஞானம். அதற்கு வழிவகை (process) தெரியவில்லை என்றால், வாழ்க்கைக்குப் பயன்படும் வழியறியாத ஆன்மீகம் அது. எதிரிகள் ஓடிவிடுவது இந்தியருக்கு வெற்றி.

நாட்டில் ஞானம் ஏராளமாக இருந்தாலும் விஞ்ஞானமும், ஆன்மீகமும் இருந்தாலும், அவை வாழ்க்கைப் பயனை அளிப்பதாக இல்லை என கனவு கூறுகிறது.

ஆத்ம சக்தி வாழ்க்கையை வளப்படுத்த வேண்டும் என்பது கனவின் வித்து.

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

ஒரு விஷயத்தை பற்றியோ அல்லது ஒருவரைப் பற்றியோ மனம் நினைப்பது, மனதில் அவர் மீது ஆசையிருப்பதைக் குறிக்கும். தாமே அவை நம்மை நோக்கி வருவது ஆசையில்லாததைக் குறிக்கும்.

ஆசை நினைவைத் தரும்.

 

 



book | by Dr. Radut