Skip to Content

அன்பர் கடிதம்

அன்னை அறிவின் உலகம்

இது ஒரு கட்டுரை அன்று. என் அனுபவம். என்னுடைய office இல் என்னிடம் ஒரு பழைய computer உள்ளது. Recently, எல்லா computerக்கும் internet connection கொடுக்கப்பட்டது. நாங்கள் புதிய computerக்காக apply செய்தோம். ஏனென்றால் பழைய computer இல் internet connection  கொடுக்க முடியாது. Funds போதிய அளவு இல்லாததால், Finance Dept.எங்களுக்கு புதிய computer கொடுக்க முடியாது (தற்போது) என்றும், அடுத்த financial year இல் பார்க்கலாம் என்றும் தெரிவித்தது. Computer dept. எங்களிடம், "பழைய computer இன் rams increase செய்தால், internet connection  கொடுக்கலாம்'' என்று தெரிவித்தது. நாங்களும் ஒத்துக்கொண்டோம். Connection எல்லாம் கொடுத்து முடித்து, operate செய்யும்போது, என் system ரொம்ப slowஆக வேலை செய்வதைக் கவனித்தேன். கேட்டதற்கு computer experts, "பழைய computer இல், ramsஅதிகப்படுத்தி, internet connection கொடுத்தால், system slow ஆகத்தான் வேலை செய்யும்'' என்று கூறிவிட்டார்கள். தற்போதைக்கு அதே system இல்தான் நான் வேலை செய்கிறேன்.

In the meantime, we are also getting our application processed for a new computer.

இன்று அதிகாலையில், அன்னையையும், ஸ்ரீ அரவிந்தரைப் பற்றியும், அவர்கள் உலகத்துக்காகச் செய்த, ஒப்பிலாச் சேவைகளைப் பற்றியும் நினைத்து என் ஆன்மா, அவர்களை நமஸ்கரித்தபோது, "மனதில் ஒரு தீப்பொறி'' என் மனதில் மளமளவென்று எழ, தோன்றியவைகளைப்பற்றி எழுதுகிறேன்.

அன்னை என்ற சக்தியை, ஒரு internetக்குச் சமமாக்கினால், through internet we can understand HER more easily. 

  1. Internet  என்பது, ஒரு world of knowledge. அன்னை என்பவரும், Supramental consciousness என்ற ஒரு புது உலகின் knowledge.
  2. நம் உடலை ஒரு computerக்கு ஒப்பிட்டால், நம் computer, அதாவது நம் system புதியதாக இருந்தால்தான், internet connection மூலம் நாம் பூரண பலனடைய முடியும். அதன் knowledge ஐப் பெற முடியும்.
  3. பழைய system, அதாவது நம் உடல் பழைய பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், சுபாவத்தை விட்டொழித்து புதியதாக மாற வேண்டும்.
  4. Rams ஐ அதிகப்படுத்துவதன் மூலம் பழைய system, internet connection ஐப் பெறுகிறது. ஆனால், பூரணமான பயனில்லை. system becomes slow.
  5. Rams ஐ நாம், அன்னையைத் தெரிந்து கொண்ட பிறகு வளர்த்துக்கொண்ட, ஓரளவு பக்தி devotion, நம்பிக்கை இவைகளுக்கு ஒப்பிடலாம். இவைகள் ஓரளவே என்பதாலும், system பழையதுதான் என்பதாலும், பயனும் ஓரளவுதான்.
  6. அதாவது நாம் பழைய உடல், பழக்கவழக்கங்கள், சுபாவங்கள், நம்பிக்கைகள், இவற்றோடு அன்னையின்பால் ஈர்க்கப்பட்டு, அதனால் உண்டான நம்பிக்கையோடு internet connectionஐ (அன்னையின் தொடர்பு) நாடினால் பயன் உண்டு, ஆனால் ஓரளவே.
  7. ஆகையால் எப்படி புது system internet connectionஐ, நமக்குப் பூரண பயன் தரும் வகையில் பெற்றுத் தருமோ, அப்படி நம் உடல், சுபாவம், பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள் புதிதாக மாறி ஒரு புது உடல் புது system த்தை நாம் பெறுவதன் மூலம், அன்னையின் தொடர்பைப் பூரணமாகப் பெறலாம்.
  8. எப்படி computerஇல் உட்கார்ந்து நாம் அதைப் பற்றிய விவரங்களைப் பூரணமாகக் கற்றுக் கொள்கிறோமோ அதேபோல், அன்னையை நெருங்கி அவரோடு அதிகமாகத் தொடர்பு கொண்டால், அவரைப்பற்றிய விவரங்கள் புரிகிறது.
  9. அன்னை என்பவர் Supramental consciousness ஐ இந்த உலகிற்குக் கொண்டுவந்துவிட்டார். அது உலகில் இயங்கிக் கொண்டு இருக்கிறது. அதாவது நாம் சுவாசிக்கும் காற்றில், நாம் வாழும் environment இல் இயங்கிக் கொண்டு இருக்கிறது. இதை அறிந்து, உணர்ந்து அதை அடைய aspire செய்பவருக்கு இது கிடைக்கிறது. இதற்காக நாம் வளர்த்துக் கொள்ள வேண்டியது, நம்பிக்கை, bhakti, devotion, sincerity. இவற்றையெல்லாம் விட மேலாக நம் systemத்தை புதியதாக்குவது. எந்தக் குணங்களால் நாம் இந்த உலகை, அன்னையை அடைந்தோமோ, அதை வளர்த்துக்கொண்டே போக வேண்டும். அதற்கு ஒரு முடிவில்லை. The purer you are, the more you will understand Mother and Supramental consciousness. இது நம் மனதை விலக்கி நம்பிக்கையால் மட்டுமே அடையக்கூடியது.
  10. Mother is a world of knowledge like the internet. The more we explore it, the more we become knowledgable.

- வித்யா, சென்னை

(அன்பர் உதாரணம் அன்னைக்கு மிகவும் பொருத்தமானது) 

- ஆசிரியர்

****** 

ஸ்ரீ அரவிந்த சுடர்

உணவு, உறக்கம், இன உணர்வு போன்றவை இன்றியமையாதவை. இலட்சியத்தை ஏற்றுக்கொண்டபின் இவை தவிர்க்க முடியாத தடைகளாக இருக்கா. உயர்ந்த உணர்வுகள் வந்தபின், தாழ்ந்தவை தடைகளாக இருப்பதில்லை. கடுமையான தடை, மென்மையாக மாறுவதும், மேலும் உயர்ந்த நிலையில் இனிமையாக மாறுவதும் உண்டு.

********

Comments

Last para, Line 1 - இன்றியமை

Last para, Line 1 - இன்றியமை யாதவை. - இன்றியமையாதவை.

Nataraj

9th Point - Last line

9th Point - Last line அடையக்கூடிறயது. - அடையக்கூடியது.

Para 1 Line 6 - Computerdept.

Para 1 Line 6 - Computerdept. - Computer dept.



book | by Dr. Radut