Skip to Content

Agenda

தலைவிதி

தலைவிதி என்பது மாற்ற முடியாது என்று நாம் நம்புகிறோம். அன்னை அதை  மாற்ற முடியும் என்கிறார். திருக்குறளும் அதை ஆமோதிக்கிறது. மதியால்   விதியை  வெல்லலாம் என்பவருண்டு. புராணக்கதையில் சாவித்திரி எமனிடம்    புத்திர பாக்கியம் கேட்டுப்பெற்றதால்,  எமன் சத்தியவானைத் திருப்பிக் கொடுக்க நேர்ந்தது என்பதை உதாரணமாகக் காட்டுவதுண்டு.

"காபிக்கு எவ்வளவு  சர்க்கரை போடவேண்டும்,  அதனுள் எத்தனை  மணிகள்   இருக்க வேண்டும்  என்பதையும்  இறைவன் நிர்ணயித்துள்ளான்''  என்று  அன்னை  அஜெண்டாவில் கூறுகிறார். நாம்  மனத்தை விட்டகன்று ஆத்மாவிலிருந்து   செயல்பட்டால் அத்தலைவிதியும் மாறும் எனவும் அன்னை கூறுவது முரண்பாடாகத் தெரிகிறது.

ஒளியின்  வேகம்  1,86,000  மைல் ஒரு விநாடிக்கு என நாம் அறிவோம். இதைச்  சற்று மாற்றினாலும் பிரபஞ்சமிருக்காது என்று இன்றைய விஞ்ஞானம் கூறுகிறது.  அதாவது ஒளியின் வேகத்திலிருந்து, காபியின் சர்க்கரைவரை  இறைவனால்  நிர்ணயிக்கப்பட்டவை. அவற்றை மாற்ற இயலாது என அன்னையும்,   விஞ்ஞானியும் கூறினால், தலைவிதியை மாற்றலாம் என்ற அன்னையின்  சொல்லை நாம் புரிந்து கொள்வது  எப்படி?

ஷேக்ஸ்பியர் கதை Merchant of Venice இல் போர்ஷியா என்ற பெண்  தனவந்தரின்    மகள்.  ஏழையான பஸ்ஸானியோவைக் காதலிக்கிறாள். அவள் அன்பு தூய்மையானது. அவன்  வளைப் பணத்திற்காக இல்லாமல், அன்பிற்காகக்    காதலிக்கிறான். தூய்மையான  அன்புள்ள இடத்தில் தெய்வமுண்டு. தன் காதலை மட்டும் வலியுறுத்தாமல் போர்ஷியா சுயம்வரம் நடத்தி அதன் முடிவை ஏற்க  முன் வருகிறாள். தங்கம், வெள்ளி, ஈயப்பெட்டிகளில்  ஒன்றில் தன் படமிருப்பதாகவும்  அதை எடுப்பவரை தான்  மணப்பதாகவும் கூறுகிறாள். பலரும் தங்கப்பெட்டியை  திறந்து அதனுள் கபாலத்தைக் காண்கிறார்கள். வெள்ளிப்பெட்டியில் மடையன்   படமிருக்கிறது. பஸ்ஸானியோ ஈயப் பெட்டியைத் திறந்து போர்ஷியா படத்தை எடுத்து அவளை  மணக்கிறான். மனிதன்  அறிவுப்பாதையில் நடந்து முடியும் பொழுது ஆண்டவனின் விருப்பத்தைக் காண்கிறான் என்று இந்நிகழ்ச்சி கூறுகிறது. The finite's free will is the determinism of the infinite.

மனிதன் வாழ்வுக்குரியவன். அது சிறியது finite. ஆண்டவன் பெரியது Infinite.   வாழ்விலுள்ள ஆண்டவன் Infinite. தன்னுள் finite, Infinite இரண்டையும் கொண்டது   Infinite. வாழ்வுக்குரிய இறைவன்  வாழ்வையும்,  இறைவனையும்  தன்னுட்கொண்டது.  அதை சைத்திய  புருஷன்  என்கிறார் பகவான்.  மனிதன்  சைத்திய  புருஷனை அடைந்து அதனினின்று செயல்பட்டால், அவனே இறைவனாகிறான். அவனால் தலைவிதியை  மாற்றமுடியும் என்கிறார் அன்னை.

மனிதன்  அன்னையை  ஏற்றால்  அன்பனாகிறான். அன்னை ஜீவியம் அவனுள்  உள்ள அந்த சில வினாடிகளில் அவன்  சைத்திய புருஷனாகிறான். அந்த நேரம்  அவனால்  தலைவிதியை  மாற்றமுடியும் என்பது அன்னை கொள்கை.

அன்னையை  அழைத்து நாம் பெறுபவை பெரும்பாலும் தலைவிதியை மாற்றிய    செயல்களாக அமைவதை  நாம் உணருவதில்லை. பிரார்த்தனை பலித்ததாகவே  கொள்கிறோம்.

*****

ஸ்ரீ  அரவிந்த  சுடர்

(Luck)  அதிர்ஷ்டம்  நன்றியறிதலாகும்.

Comments

Para 3 LIne 2 வேகத்திலி

Para 3 LIne 2 வேகத்திலி ருந்து - வேகத்திலிருந்து



book | by Dr. Radut