Skip to Content

பகவானுடைய இதர நூல்கள்

வாழ்வுக்குரிய சட்டம்

(Rule of Life)

April '80 Archives p.69

விஞ்ஞானம் Laws of physical nature இயற்கை நியதிகளைக் கண்டு முன்னேறுகிறது. இதைக் கடந்த நிலையுண்டு. அவை வாழ்வுக்குரிய சட்டம், மனத்திற்குரிய சட்டம், ஆத்மாவின் சட்டங்களுண்டு என்று பகவான் இங்கு எழுதுகிறார்.

"ஆர்யா'' பத்திரிகையில் Life Divine எழுத ஆரம்பிக்குமுன் பகவான் Life Divine  என்ற தலைப்பில் 5 அத்தியாயங்கள் எழுதினார். அவை 1912 முதல் 1914 வரை எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது. இந்த அத்தியாயங்கள் வேதாந்த அடிப்படையிலேயே எழுதப்பட்டவை. வேதாந்தத்தையே முதலாகவும், முடிவாகவும் கொண்டு தம் யோகத்தை விளக்க முடியாது, தம் யோகம் அதைக் கடந்த நிலையிலுள்ளது, இதன் அடிப்படைக் கருத்துகளில் பல வேதாந்தத்திலில்லை என்று கண்டு, இவ் 5 அத்தியாயங்களைப் புறக்கணித்து Life Divine நூலை புதியதாக எழுத ஆரம்பித்தார்.

அவற்றுள் காணப்படும் அரிய கருத்துகளில் ஒன்று மேற் கூறியது - வாழ்வுக்குரிய சட்டம்.அப்படியென்றால் என்ன?

நம் நினைவுக்குரிய பலன் வாராது. நம் மனநிலைக்குரிய பலனே வரும்,

என்பது அவற்றுள் ஒன்று. Life rewards not your behaviour or acts but what you are inside.

திருமணத்திற்குரிய பெண். பல வரன்கள் விரும்பும் பெண். வசதியான மத்தியதரக் குடும்பம். நல்ல வரன்கள் பல உள்ள பொழுது,  இவள் நிலைக்கு அதிக அளவில் தாழ்ந்த வரன் ஒன்றை இவளிடம் கொண்டு வந்தனர். அந்தப் பையன் வீட்டார், இவள் வீட்டிற்கு வந்து பெண் கேட்கும் நிலையிலில்லை.பையனைப் பற்றிய விவரங்களைப் பெண் அறிவதால், அவன் அந்தஸ்தைக் கருதாது பெண் மனதால் சம்மதித்தாள். தன் சம்மதத்தை பையன் வீட்டாருக்குத் தெரிவித்துவிட்டாள். பெண் இலட்சிய மனநிலையுடன் வரனை ஏற்றாள். அதனால் தன்னைப்பற்றித் தானே அதிகமாக சந்தோஷப்பட்டதுடன், பெருமையுமடைந்தாள்.

வாழ்வு இவளுடைய இலட்சியத்தைப் புறக்கணித்து, பெருமையடையும் மனநிலைக்குப் பரிசளிக்கும் என்ற சட்டம் இவள் அறியாதது.

கொஞ்சநாள் கழித்து தன்னைவிட அதிக அந்தஸ்துள்ள தன் உறவினரான பெண்ணை சந்தித்துப் பேசும்பொழுது தான் மணக்க இருக்கும் வரனைப்பற்றி சந்தோஷமாகப் பேசும் பொழுது, பெருமையடைந்து, "நீயே போய்க் கேட்டாலும், அந்த வரன் சம்மதிக்க மாட்டான்'' என்று நினைத்தாள். அதையும் ஒருவாறு அவளிடம் கூறினாள். கேட்டவளுக்கு எதுவும் தெரியாது, சொல்பவள் மீது அக்கறையுமில்லாதவள், அவள் அதைக் காதில் வாங்காமல் போய்விட்டாள். அவள் காதில் வாங்காததை "வாழ்வு'' காதில் போட்டுக்கொண்டது. செயல்பட்டது. எந்தப் பெண்ணிடம் பெருமையாக இவள் பேசினாளோ, அதே அந்தஸ்துள்ள பெண் அதே வரனைத் தேடி வந்தது!

பெண் இலட்சியமானவள். வரனை இலட்சியம் என நினைத்துவிட்டாள். பெரிய இடம் வந்தவுடன் வரன் மனம் மாறியது. இவள் எதிர்பார்த்த இலட்சியம் அங்கில்லை என இவளை நிலைமை அறிய வைத்தது. அதற்குண்டான அத்தனைத் தொந்தரவு, கிராக்கிகளும் எழுந்தன. நாலு நிலை இறங்கி வந்து இலட்சியமாகச் செயல்பட்ட பெண்ணுக்கு, நாலு நிலை ஏறிப்போய் வரன் தேடுவது போன்ற நிலையை வாழ்வு அளித்தது. பட்டது பாரதம். ஒருவழியாக திருமணம் முடிந்தது. பெண் ஏமாந்து போனாள். எதையும் காணோம்,  எந்த இலட்சியத்தையும் காணோம். இருக்கக்கூடாதவை அனைத்துமிருந்தன. கல்யாணம் கர்மபலனாக இருந்தது.

  • பெண் இலட்சியமானவள், இலட்சியத்திற்குரிய பெருந்தன்மையுடனிருக்க வேண்டும்.
  • மனதால் தன் பெருமையை நினைத்து, வாயால் பேசினாள். செயலால் எதையும் செய்யவில்லை.
  • இலட்சியமில்லாதவர் பேசினால் தவறில்லை.
  • இலட்சியமும், குறைவும் கலந்து வர வாழ்வு அனுமதிக்காது.

உயர்ந்த இலட்சியம் செயலிலிருந்தாலும், வாழ்வு அதைப் புறக்கணித்து மனதால் குறையைப் பாராட்டியதால், அதை வாழ்வில் எதிராக உருவாக்கி, உயிரை எடுப்பதுபோல் வாழ்வு நடந்தது.

வாழ்வுப் பலன் நினைவுக்கும், செயலுக்கும் வாராது. உள்ளுறை மனநிலைக்கே பலன் வரும் என்பது வாழ்வுக்குரிய சட்டம்.

*****

ஸ்ரீ அரவிந்தர் சுடர் 

அன்னை, ஸ்ரீ அரவிந்தர் அவதாரங்கள் மனிதனுக்கு எடுத்துக்காட்டாக மட்டும் அமையவில்லை. மனிதன் செய்ய வேண்டிய வேலைகளைத் தாங்களே செய்தார்கள். விவசாயம், வியாபாரம், பாங்க், மானேஜ்மெண்ட் ஆகிய இடங்களில் நாம் விஷயத்தைச் சொல்லிக் கொடுத்தால் மட்டும் போதாது. நாமே செயல்படுத்தி காண்பிக்க வேண்டும்.

 

********

Comments

Para 2 Line 1 - Life Diving 

Para 2 Line 1 - Life Diving  - Life Divine

Nataraj



book | by Dr. Radut