Skip to Content

03. சாவித்ரி

சாவித்ரி

Page 181: To brute bodies gives a soul, a will, a voice
விலங்குடம்பிற்கு உறுதியும், குரலும், ஆத்மாவும் கொடுத்து

  • மந்திரக் கோலென மாயமாய் கவர்ந்தழைக்கும்
  • ஜீவனும், உருவமும், எண்ணிலாக் காட்சிகள்
  • காலத்தில் இடத்தினூடே தீவட்டி கொளுத்தி கொண்டாடும்
  • இரவெனும் நீண்ட யாத்திரையான இவ்வுலகம்
  • சூரியனும் கிரகங்களும் அவள் பாதைக்குரிய விளக்குகள்
  • அவள் எண்ணங்களைப் பொக்கிஷமாகப் பெற்ற நம் பகுத்தறிவு
  • நம் புலன்கள் அதிரும் அவள் சாட்சி
  • பாதி பொய், பாதி மெய்யான அவள் அடையாளங்கள்
  • பலித்த கனவை முழு வாழ்வெனக் கருதி
  • பிரம்மத்தை இழந்த நினைவு
  • உலக மாயை எனும் அறியாமையில் இவை முழுச் செயல்கள்
  • திரை விலகும்வரை, இருளழியும் வரை
  • அணையாத ஆராய்ச்சி இருளிலும், ஒளியிலும்
  • முடிவற்ற யாத்திரைக்கு காலமே வீதி
  • ஒரு வேகம் தீவிரமாகி அத்தனை வேலைகளையும் அற்புதமாக்கி
  • பிரம்மமெனும் காந்தன் செயல்களின் மூலவன்
  • காண முடியாத பரப்பினின்று அவனுக்காகத் துள்ளி எழுந்தாள்
  • இருண்ட கரிய உலகை அசைத்து ஆள முயன்று
  • மறைந்துள்ள தெய்வத்தின் வாணிகம் அவள் செயல்கள்
  • இதயத்தின் வேகம் அச்சாகி வார்க்கும் அவள் குணம்
  • புன்னகையெனும் சூரிய ஜோதி அவள் பொக்கிஷமான அழகு
  • பெரும் பிரபஞ்ச தரித்திரத்திற்கு வெட்கப்பட்டு
  • சிறுவெகுமதியால் பெரும் வலிமையை மகிழ்ந்து நாடும்
  • அவள் விஸ்வாசத்தின் பார்வையைத் தன் காட்சியால் பிடித்து
  • அவன் பெரிய திருஷ்டியின் அலையும் ஞானத்தை விரும்பி நாடி
  • கோடிக்கணக்கான கதிர்களை எழுப்பும் சக்தியின் ரூபங்கள் அவை
  • திரையிட்ட தோழனை கவர்ந்திழுக்க முனைந்து
  • உலகத்தின் ஆடையின் உள்ளுணர்வில் அவனை ஆழ்ந்து அனுபவிக்க
  • அவள் அணைப்பை இழந்து தன் ரூபமற்ற சாந்தியை நாடி
  • இதயத்துடன் உறவாடி கொஞ்சும் பிரியத்தைத் தேடி
  • நெருக்கம் அதிகமானபின் தூர விலகிய உணர்வு
  • முரண்பாடே அவள் சுபாவத்தின் இயல்பான சட்டம்
  • அவனில் அவள், அவளுள் அவன்
  • மூலத்து முடிச்சை அறியாதவளாக
  • இறைவனைச் செயலில் இதமாக இழைப்பது அவள் கடமை

***********



book | by Dr. Radut