Skip to Content

01. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்

ஸ்ரீ அரவிந்தம்

லைப் டிவைன்

ஆங்கிலம்: லெஸ்லி ஜேக்கப்ஸ்

தமிழாக்கம்: வித்யா ரங்கன்

திருத்தம்: ஸ்ரீ கர்மயோகி

 

II/1. Indeterminates, Cosmic Determinations and the Indeterminable
Page 295
Para 1
II/1. பிரபஞ்ச சிருஷ்டி பிரம்ம சிருஷ்டி
A Consciousness-Force is everywhere inherent in Existence.
ஒரு சித் சக்தி பெருவாழ்வில் எங்கும் உள்ளார்ந்து அமைய பெற்றுள்ளது.
It acts even when concealed.
மறைந்த நிலையிலும் அது செயல்படுகிறது.
It is the creator of the worlds.
அது லோகங்களை உருவாக்கும் சிருஷ்டிகர்த்தா.
This is the occult secret of Nature.
இது இயற்கையின் நுண்மையான ரகசியம்
But in our material world and in our being, consciousness has a double aspect.
ஆனால் நம் உலகம் மற்றும் நம் ஜீவனில் ஜீவியம் இரட்டை அம்சங்கள் கொண்டது.
There is a force of Knowledge.
அங்கு ஞானத்தின் சக்தி உண்டு.
There is a force of Ignorance.
அங்கு அறியாமையின் சக்தி உண்டு.
A self-aware infinite Existence has an infinite consciousness.
சுய ஞானம் படைத்த அனந்தப் பெரு வாழ்வு அனந்தமான ஜீவியத்தைக் கொண்டது.
In that, knowledge must be everywhere implicit or operative.
அதில் ஞானம் எங்கும் புதைந்து உள்ளதாக அல்ல செயல்படுவதாக இருக்க வேண்டும்
It is so in the very grain of its action.
அதன் செயலின் மிகச் சிறிய கருவிலும் ஞானத்தின் செயல்பாடு உண்டு
But we see at the beginning of things an Inconscience, a total Nescience.
ஆனால் ஆரம்ப நிலையில் நாம் ஜட இருள் எனும் ஒரு பூரண அறிவின்மையைக் காண்கிறோம்
It is apparently the base of the creative world energy.
உலகத்தைச் சிருஷ்டிக்கும் சக்திக்கு இது அஸ்திவாரமாக தோற்றமளிக்கிறது.
This is the stock with which the material universe commences.
ஜடப் பிரபஞ்சம் இதையே இருப்பாகக் கொண்டு தொடங்குகிறது.
Consciousness and knowledge emerge at first.
ஜீவியமும் ஞானமும் முதலில் வெளிவருகின்றன.
They emerge in obscure infinitesimal movements.
அவை இருண்ட மிக நுண்ணிய இயக்கங்களில் வெளிப்படுகின்றன.
They emerge at points, in little quanta.
அவை சிறிய அளவுகளில் பல மையங்களில் எழுகின்றன.
They associate themselves together.
அவை தம்மை ஒன்றாகச் சேர்க்கின்றன.
There is a tardy and difficult evolution.
அங்கு மெதுவான மற்றும் சிரமமான பரிணாமம் நடக்கிறது.
There is a slowly increasing organisation.
முறைமை சிறிது சிறிதாக அதிகப்படுகிறது.
There is an ameliorated mechanism of the workings of consciousness.
அங்கு ஜீவியத்தின் செயல்பாட்டை சிறப்பிக்கும் இயக்கமுறை உள்ளது.
More and more gains are written on the blank slate of the Nescience.
இருண்ட நிலை மேன்மேலும் பல நன்மைகளை பெறுகிறது.
But still these have the appearance of gathered acquisitions.
இருப்பினும் இவை சேகரம் செய்யப்பட்டு பெறப்பட்டவைகள் போன்ற தோற்றத்தைப் பெற்றுள்ளன.
They seem to be constructions of a seeking Ignorance.
அவை பரிணாமத்திற்கு விழையும் அறியாமையில் அமைப்புகளாகத் தோன்றுகிறது.
It tries to know, understand, discover, change slowly.
அது மெல்ல அறிய, புரிந்து கொள்ள, கண்டுபிடிக்க, மாற முயற்சி செய்கிறது.
It struggles into knowledge.
அது ஞானத்தை அடைய சிரமப்படுகிறது.
Life here maintains its operations with difficulty.
வாழ்வு இங்குச் சிரமத்துடன் அதன் நடவடிக்கைகளை பராமரிக்கிறது.
It is on a foundation of general Death.
சாதாரண மரணம் அதன் இச்செயலுக்கு அடிப்படையாகிறது.
First it is in infi nitesimal points of life.
முதலில் வாழ்வின் மிகச் சிறிய மையங்களில் அதைச் செய்கிறது.
It is in quanta of life-form and life-energy.
அது வாழ்வின் ரூபம் மற்றும் சக்தியின் கூறுகளில் அதைச்
செய்கிறது.
Then, in increasing aggregates that create more complex organisms.
பின், சிக்கலான உயிரிகளை உருவாக்கும் அதிகரிக்கும்
கூட்டுத்தொகைகளில் அதைச் செய்கிறது.
It creates an intricate life-machinery.
அது ஒரு சிக்கலான இயந்திர அமைப்பாக வாழ்வை
உருவாக்குகிறது.
So too, Consciousness establishes a growing but precarious light.
அதுபோன்றே ஜீவியமும் வளரக் கூடிய, ஆனால் நிலையற்ற
ஒளியை ஸ்தாபிக்கிறது.
But that light is in the darkness of an original Nescience.
ஆனால் மூல அறிவின்மையின் அந்தகாரத்தில் அவ்வொளி
உள்ளது.
It is in the darkness of universal Ignorance.
பிரபஞ்ச அறியாமையின் இருளில் அது உள்ளது.
 
**********
 
 
ஜீவிய மணி
 
 
ஜீவிய மணி
 
5 ஆண்டுகட்குமுன் உலகப் புகழ்பெற்ற அமெரிக்க ஸ்தாபனம் மக்களின் இந்தியப் பொருளாதார நிலையை ஆராய்ந்து எழுதிய ரிப்போர்ட்டில் இந்தியர் அறிந்திராத பெருமைகள் ஏராளமானவற்றைக் குறித்தனர். அவற்றுள் ஒன்று
சில சட்டதிட்டங்களை மற்ற நாடுகள் போல் இந்தியா மாற்றினால் நாட்டில் எந்தப் பெரிய மாறுதலுமின்றி இரண்டு இலட்சம் கோடி ரூபாயை சர்க்கார் ஆண்டுதோறும் பெறலாம் என்றனர். இது அவர்கள் ஆராய்ச்சியின் முடிவு. சமூகம் இத்திறன் பெற்றுள்ளதை அவர்கள் கண்டு ஏற்றனர். சமூகம் இந்தியாவின் ஆன்மிகத் திறனுடையது. அதை அறிந்து
மேற்சொன்ன மாறுதல்களைச் செய்தால் அது இரண்டு இலட்சம்
கோடியாக இல்லாமல் இருபது இலட்சம் கோடியாகும் என்பதை
ஆன்மிகத் தெளிவு கூறுகிறது. உள்ளூர் பள்ளியில் 100 மீட்டர்
ஓட்டப்பந்தயத்தில் நேரம் கூடக் குறிப்பதில்லை. குறிப்பதற்கு stop watch உரிய கடிகாரமிருப்பதில்லை. பார்வையிட வந்தவர் பையன் 9.8 செகண்டில் ஓடியிருக்கிறான் எனக் கண்டார். இவன் ஒலிம்பிக்கில் ஜெயிப்பான் எனக் கூறுவது விந்தையாகாது. ஆன்மிகம் வலிமை, ஆன்மிகம் அமைதி, ஆன்மிகம் செல்வம், ஆன்மிகம் திறன் என்பது ஆன்மிகத் தெளிவு.
இன்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துறையிலும் புதிய
வாய்ப்புகள் ஏராளமாக வந்தபடியிருக்கின்றன. தொழிலில் நிபுணர் எனப் பெயர் வாங்கியவர் ஆச்சரியப்படும்படி எனக்குத் தெரியாதேஎனக் கூறும்படி தொழில் வளர்கிறது. ஆரம்ப நிலையிலிருப்பவர் ஏதோ ஒன்றை மனதில் குறித்துத் தேடுகிறார். அவர் அறிவுடை முயற்சியுடன் ஆராயத் தொடங்கினால் தம் நிலைகண்டு இரக்கப்படுவார். அவர் உள்ள நிலை கடைசி நிலை கிடைத்தால் போதும் என்பது. நாட்டிலுள்ள வாய்ப்பு முதல் நிலை காத்துக் கொண்டிருக்கிறது என்பது. 3 பாங்கில் கிளார்க் வேலைக்குப் பரீட்சை எழுதி நிராகரிக்கப்பட்டவர், 3 ஆண்டு உழன்று, IAS எழுதி, தவறி, ஸ்டேட் பாங்க் ஏஜெண்டானார். அவர் மனம் கிளார்க் வேலையை நாடுகிறது. நாடு IAS, ஏஜெண்ட் வேலைக்கு அவருக்காகக் காத்திருக்கிறது. வாய்ப்பை அறியாதவர் நிலையிது. அன்னை சூழல் ஊரில் எவரும் ஆதரவு தரமாட்டார் என்ற நிலையில் குக்கிராமவாசிக்கு பம்பாயில் இருந்து பெருவாய்ப்பு கொண்டுவரும். அது உழைப்பை வரவேற்று, உள்ளதை
எடுத்துக்காட்டும். உழைப்புக்குப் பலனுண்டு. அறிவுக்குப் பெரும் பலனுண்டு. உணர்ச்சிக்கு உள்ளதெல்லாம் பலிக்கும்.

 ***************



book | by Dr. Radut