Skip to Content

09. அஜெண்டா

அஜெண்டா

தற்கொலையும் நிர்வாணமும் அந்தந்த நிலையில் சமமானவை

Volume 10, page 103

  • சேவை, விஸ்வாசம், ஒத்துழைப்பு, எதிர்ப்பு, தற்கொலை, சுயநலம் என்பவை பல நிலைகளில் உண்டு. நிலை எதுவானாலும் மனநிலை ஒன்றே.
  • பாலுக்குச் சர்க்கரையில்லை என்பதும், கூழுக்கு உப்பில்லை என்பதும் ஒரே கவலை.
  • வண்டியில் காற்றில்லை என்பதும், வகுப்பில் போர்டு தெரியவில்லை என்பதும் ஒன்றே.
  • மகான் தவம் செய்து உலகை விட்டு மோட்சம் போவதும் இளைஞன் அமெரிக்கா போய் குடும்பத்தைக் கைவிடுவதும் சமம்.
  • தற்கொலை என்பது வாழ்வை நடத்த முடியாமல் முடித்துக் கொள்வது.
    நிர்வாணம் என்பது மனம் கரைந்த நிலை.
    கரைந்த நிலையில் பிரச்சனை இருக்காது.
    தூங்கும் பொழுது கவலையை மறந்திருப்பது போல் இருக்காது.
    மகான் தவம் பலித்த நிலையில் நிர்வாணம் எய்தினால், மனமே கரைந்து மனத்தின் பிரச்சனைகளிலிருந்து விடுபட்ட சுதந்திரம் தெரியும்.
    கரைவதன்முன் மனம் எல்லாப் பிரச்சனைகளையும் எதிர்கொள்ளும்.
    எல்லாப் பிரச்சனைகளையும் எதிர்கொண்டு சமாளிப்பதை விட நிர்வாணம் சுதந்திரம் தரும்.
    அதை ஏற்பது தற்கொலைக்குச் சமம் என்கிறார் அன்னை.
  • கம்பெனி முதலாளி நிர்வாகச் சுமை தாங்காமல் ஓய்வு பெறுவது கம்பெனிக்குத் துரோகம். எதிரியின் பலம் அதிகமாக இருப்பதால், போரிட முடியாது என்று சரணடைவது தவறு.
  • நான்கு வருஷம் டாக்டருக்குப் படித்தவன் பரீட்சைக்குப் பயந்து எழுதாவிட்டால் நான்கு வருஷப் படிப்பு வீணாகும்.
  • குடும்ப பாரத்தை ஏற்க மறுத்துத் திருமணம் செய்துக் கொள்ளாமலிருப்பவருண்டு.
  • கட்சி அபரிமிதமாக வெற்றி பெற்றபின் நிர்வாகப் பொறுப்புக்குப் பயப்படும் தலைவர்கள் உண்டு. அவர்கள் நாட்டுத் தலைவரானால் சிறிது காலத்தில் இறந்து விடுவார்கள்.
  • போர்க்களத்தில் சிப்பாய் போரிட பயந்து பின்வாங்க முடியாது. ஏனெனில், திரும்பினால் அவன் கட்சி சிப்பாயே அவனைச் சுட்டு விடுவான்.
  • பொறுப்பு பெரியது. கிடைத்தற்கரியது என்றாலும், ஏற்க பயப்பட்டு ஓடி ஒளிவது உலக இயற்கை.
    நிர்வாணமும், மோட்சமும் ஒரு வகையில் அதுபோன்றவை என்பது அன்னையின் கொள்கை.
  • சர்க்கார் பதவியை ஏற்று சேவை செய்யலாம், பதவியை ஏற்று கொள்ளையடிக்கலாம், சேவை செய்வதற்குப் பதிலாக துரோகம் செய்யலாம். எதுவும் செய்யாமல் நாட்டைக் கைவிடலாம். இல்லாத பொறுப்பையும் ஏற்று தலைவராகி, பெருந்தலைவருமாகலாம்.

*********

 

ஜீவிய மணி
 
வாழ்வை விளக்கும் அறிவு, உயிர் பெற்ற அறிவு.
பிராணனில் விழித்த மனம், அறிவால் வாழ்வைப் புரிந்து கொள்ளும்.
 

 

***********



book | by Dr. Radut