Skip to Content

09. பூரணயோகம் - முதல் வாயில்கள்

பூரணயோகம் - முதல் வாயில்கள்

(சென்ற இதழின் தொடர்ச்சி.....)

கர்மயோகி

68. ஒரு குறையை அதன் எதிரானதாக தீவிரமான சிறப்பாக அறியும் திறன்.

 • கண்டதே காட்சி, கொண்டதே கொள்கை மனித அனுபவம்.
 • குழந்தையைப் பாம்பினின்று காப்பாற்றிய கீரிப்பிள்ளையின் வாயின் இரத்தத்தைக் கண்ட தாயார் அது குழந்தையைக் கடித்ததாக அறிந்து அடித்துப் போட்டுவிட்டாள்.
 • உள்ளது வேறு, காண்பது வேறு என்பது உலகம் அறிந்து ஏற்றுக்கொண்ட கொள்கை.
 • இந்த அம்சத்திற்குப் பல நிலைகள் உண்டு. மேற்சொன்னது எளியது.
 • உலகப் போருக்குப் பின் 50 ஆண்டில் உலகம் 500 ஆண்டு முன்னேற்றத்தைப் பெற்றது.
  இம்முன்னேற்றத்திற்கான தடைகளை அழிக்க போர் வந்ததாக 1939இல் உலகம் அறியவில்லை.
 • அது முடிவான வெளிப்பாடு. இடைப்பட்ட நிலைகள் ஏராளம்.
 • வித்துவான் பரிட்சையில் 1920இல் முதல் மாணவனுடைய பரிசை 20ஆம் ராங்க் மாணவனுக்குக் கொடுத்ததால் தமிழ் பண்டிதர் ஆங்கிலம் கற்று, Ph.D. எடுத்து, 16 மொழி பயின்று துணைவேந்தரானார்.
 • பரிசை இழந்தபொழுது இது அவருக்குத் தெரியாது. அதைத் தெரிவிக்கும் ஞானம் மேலே குறிப்பிட்டது.
 • தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போயிற்று என்பது மொழி.
  ஆபத்து வந்து அதிர்ஷ்டமானதாகப் பழமொழியுண்டா எனத் தெரியவில்லை.
 • சென்னை IITயில் இடம் கிடைக்காததால் சிங்கப்பூரிலும் ஹாலண்டிலும் சேர முடிந்தது.
 • இந்த ஓர் அதிர்ஷ்டத்தை பின்வரும் பேரதிர்ஷ்டமாக முன்பே தெரியும் ஞானம் அன்னை சூழல் தருவது.
 • கட்சியை விட்டு விலக்கியதால் முதலமைச்சரான அரசியல்வாதியொருவர்.
 • வீட்டில் கொடுமை தாங்காமல் வெளியே போய் 50 பஸ்ஸுக்கு முதலாளியானவர் ஒரு சிறுவன்.
 • லிடியா ஓடிப்போனதால் நெதர்பீல்டும், பெம்பர்லியும் வந்தன.
 • பாங்க் லோன் திருப்பித் தராததால் சொந்த முயற்சி முடிவான வெற்றியை அளித்தது.
 • சர்க்கரை பாகு தர மறுத்த சர்க்கரை ஆலையை அவரே விலைக்கு வாங்கினார்.
 • சர்க்கார் தபால்களைத் தாமதமாக அனுப்பியதால் ராஜினாமா செய்த வேலை மீண்டும் கிடைத்தது.
 • உள்ளூர் பாங்கில் பொய்யாகக் கோள் சொல்லி கடனை கான்சல் செய்ததால் சேர்மன் அறிமுகமானது.
 • மூன்றில் ஒரு பங்கு கொடுக்க மறுத்த கூட்டாளி முழுச் சொத்தையும் கொடுத்தது.
 • உலகம் இவற்றை காலம் கடந்து அறியும்.
 • முன்கூட்டி அறிவது ஞானதிருஷ்டிக்கொப்பான ஆன்மீக ஞானம்.
 • நள, தமயந்தி கதையைப் படித்த ரஷ்ய ராணுவ வீரர் அதன் மூலம் மனைவியின் விஸ்வாசத்தை அறிந்து அதை ரஷ்ய மொழியில் எழுதினார்.
  போருக்குப் போய் உயிரைக் காவு கொடுக்கும் நிலை மனைவியின் உயர்ந்த அம்சம் தெரிய உதவியது.
 • M.P. சீட் கிடைக்காத ஆந்திர அரசியல்வாதிக்கு ஒரிஸ்ஸாவில் சீட் கொடுக்காததால் மந்திரியானார்.
 • பின்னால் வருவதை முன்னால் அறிவது விவேகம். காலத்தைக் கடக்கும் விவேகம்.
 • 10ஆம் ஆண்டு சாமர்த்தியமாக முதலாளியை ஏமாற்றி பகல் கொள்ளை அடித்தவன் அதை மறைக்க செய்த வேலை சொத்து பறிமுதலாகாமல் காப்பாற்றியது.
 • காலத்தைக் கடப்பது ஆன்மீக விவேகம்.
 • காலம் அக ஆன்மாவின் அசைவு.
 • அதைக் கடப்பது ஆன்மீக சித்தி, ரிஷியின் நிலையை அடைவது.
 • அந்த ஞானம் ஒருவரிடமிருந்தால், அவருக்குத் தெரியாவிட்டாலும் அவருக்கும் பூரண யோகம் பலிக்கும்.
 • பூரண யோக வாயில்கள் அனந்தம்.
 • வாழ்வின் முனைகளெல்லாம் வாயில்களாகும்.
 • கடற்கரையை நம்மூரில் மட்டும் காணலாம் என்பதில்லை, எங்கும் காணலாம்.
 • எங்கும் காணலாம், எதையும் காணலாம், சர்வம் பிரம்மம் என்பதால் பிரம்மத்தை எங்கும் காணலாம் என்றாலும், தியானத்தில் மட்டும் மனம் அதை அறிகிறது.
 • மழலை இனிது என்பது உண்மை. தம் மக்களில் மழலை இனிப்பது போல் மனிதனுக்கு மழலை எங்கும் இனிப்பதில்லை.
 • ஒரு குறிப்பிட்ட புத்தகத்தைப் படித்தால் ஆபத்தான செய்தி வருகிறது என்று கண்டவர் அதைப் படிப்பதை நிறுத்திவிட்டார்.

  அதன்பின் அவருடைய சுபாவத்தின் முனைப்பை நிகழ்ச்சி காட்டுவதை அவர் அறியார்.

  அவர் சூழலையும் மனத்தையும் கவனித்திருந்தால் பெரிய இலட்சியவாதியான அவர் அந்தஸ்தை மதிப்பதால் எதிர்காலம் அழிவதைத் தடுத்திருக்க முடியும்.

*******

69. உடல் பூரித்துப் புளகாங்கிதம் பெறுவது - நன்றியறிதல்.

 • மனம், இதயம், உடல் மூன்றுக்கும் அறிவு, உணர்ச்சி, உடலுணர்வுண்டு.
 • மனம், இதயம், உடல், ஆத்மா சேர்ந்தது ஜீவன்.
 • ஆத்மா உலகில் ஜனிக்க உடல் தேவை, உடலுக்கு சக்தியளிப்பது இதயம், அறிவு மனம் தருவது.
 • இம்மூன்றும் சேர்ந்தது (embodied being, ஜீவன், நாம்) மனிதன் என்பது.
 • ஆத்மா உடலைப் பெற்றாலும், அதன் ஜீவனுக்கும் ஆத்மா உண்டு - அது ஜீவாத்மா.
 • ’பொறி தட்டிற்று’ என்பது மனம் அறிந்ததாகும்.
 • ’நெஞ்சு நிறைந்தது' என்பது இதயம் உணர்வால் நிறைந்ததாகும்.
 • அறிவு உணர்வாக மாறி நெஞ்சை ஆட்கொண்ட நிலையது.
 • அந்நிலையில் மனம் அதன் பகுதியாகும்.
 • அறிவு உணர்வாகி உணர்வு உடலுணர்வாவது உடல் பூரித்துப் புளகாங்கிதமடைவது.
 • குருக்கள் முதல் மகளை - மறைந்திருந்தவளை - பம்பாய் வரன் பார்க்க விரும்பினான்.
 • விரும்பியவன் மணக்கச் சம்மதித்தான்.
 • அடுத்த பெண்ணைத் தம்பிக்கு மணம் முடிக்க ஏற்றான்.
 • இவ்வளவு நல்ல காரியங்கள் தானே நிகழ்வதால் பெரிய பெண் என் தம்பிக்கு ஒன்றுமில்லையே என நினைத்தாள்.
 • அவனுக்குப் பூணூல் போட வரன் முடிவு செய்தான்.
 • அறிவு இவ்வரனைப் போற்றுகிறது. அடுத்த கட்டத்தில் நெஞ்சம் நிறைகிறது. முடிவான நிலையில் உடல் நிறைந்து பூரித்துப் புல்லரிக்கிறது.
 • புல்லரிப்பது ஜீவன் நிறைவது.
 • ஜீவன் நிறைவது பூரண யோக வாயில் திறப்பது.
 • "வயதானதால் இனிமேல் எனக்குத் திருமணமா, என் தங்கையாவது வாழட்டும்” என்ற நல்ல எண்ணத்தால் பெரியவள் தங்கையை பெண்ணாக அனுப்பி மறைந்தாள்.
 • விஷயம் வெளிவந்த பின் நடந்தவை மேற்சொன்னவை.
 • Self-giving பரநலம் புனிதமானது.
 • நல்லெண்ணம் என நாம் கூறுவது self-giving பரநலம்.
 • ஒரு ஆத்மா அடுத்த ஆத்மாவை நாடுவது பரநலம்.
 • அதன் விளைவு புல்லரிப்பு.
 • உடல் புல்லரிப்பது ஒருவர் யோகத் தகுதி பெற்றதைக் காட்டும்.
 • பொதுவாகப் புல்லரிப்பதுண்டு.
 • ஆத்ம விழிப்பால் புல்லரிப்பதை இங்குக் குறிப்பிடுகிறேன்.
 • அரசனுக்கு மகனாகப் பிறந்தவன் வாரிசு.
 • நாட்டின் மெஜாரிட்டிக் கட்சித் தலைவர் பிரதமர்.
 • ஒன்று பிறப்பு, அடுத்தது அரசியல்.
 • உலகில் இந்த அம்சத்தைக் குறிப்பவை ஏராளம். எல்லாமும் சுட்டிக்காட்டும்.
 • தெருவில் பழம் வாங்கிய சாஸ்திரி - சிறுவன் - கையைப் பார்த்து ராஜயோகம் உண்டு என்றார் ஒருவர். அவர் லால்பகதூர் சாஸ்திரி.
 • எல்லா அம்சங்களும் எல்லாவற்றையும் குறிக்கும். ஆனால் நமக்குச் சில தெரியும்.
  நல்லபாம்பு தூங்குபவர் தலைமீது படம் எடுப்பது ராஜ யோகம்.
 • பூரண யோகம் ஒருவருக்குண்டா எனக் குறிப்பிடும் 143 அம்சங்களை எழுதினேன்.
 • இது அதனுள் 69வது அம்சம்.
 • பகவான் இந்தியா ஜகத் குருவாகும் என்றார்.
 • பகவான் பிரபஞ்ச ஜாதகம் அறிந்தவர்.
 • நான் The Life Divineனை பிரபஞ்ச ஜாதகம் horoscope of the universe எனக் குறிப்பிடுவதுண்டு.

தொடரும்.....

********

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
மாற வேண்டியது வாழ்வில்லை,
நமது பார்வை.
 
 
 
*******
 
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
முடிந்ததை முழுவதும் செய்வது
மூலவனை அடைவது.
 
 
 
*******book | by Dr. Radut