Skip to Content

01. ஸ்ரீ அரவிந்தம் லைப் டிவைன்

ஸ்ரீ அரவிந்தம்

லைப் டிவைன்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

 

XXIV. Matter
24. ஜடம்
Matter is unreal.
Page 234
ஜடம் உண்மையில்லை.
It is non-existent.
Para 5
உலகில் ஜடம் உற்பத்தியாகவில்லை.
It is only in a certain sense.
ஒரு கோணத்தில் இப்படிக் கூறலாம்.
We presently have an idea of Matter.
தற்சமயம் நாம் ஜடத்தை அறிவோம்.
We experience Matter.
ஜடத்தை அனுபவிக்கிறோம்.
They are not truth.
நம் எண்ணமும் அனுபவமும் உண்மையில்லை.
They are merely a phenomenon.
அவை தோற்றம்.
Our senses have a relation with all-existence.
அனைத்துடன் நம் புலன்கள் தொடர்பு கொண்டுள்ளன.
We move in the all-existence.
அனைத்துடன் நாம் வாழ்கிறோம்.
We realise this relation as Matter.
இவ்வுறவு ஜடமாகத் தோன்றுகிறது.
Science made discoveries.
விஞ்ஞானம் கண்டுபிடிக்கிறது.
Matter resolves into Energy.
ஜடம் சக்தி ரூபமாவதாக விஞ்ஞானம் கண்டது.
It is a universal truth.
அது பிரபஞ்ச சத்தியம்.
It is a fundamental truth.
இது அடிப்படையான உண்மை.
Science now got it.
விஞ்ஞானம் இதைக் கண்டது.
Philosophy discovers.
தத்துவம் கண்டுபிடிக்கிறது.
Matter is to it an appearance.
ஜடம் தோற்றமே என்பது தத்துவம்.
It is a substantial appearance to the consciousness.
ஜீவியம் கண்டுகொள்ளும் தோற்றம் அது.
The one reality is Spirit.
ஆத்மா மட்டுமே சத்தியம்.
It is a greater truth.
அது மிகப்பெரிய உண்மை.
That truth is more complete.
முழுமையுடைய சத்தியம் அது.
It is fundamental.
அடிப்படையானது.
A question remains.
ஒரு கேள்வி எழுகிறது.
Why Energy should take the form of Matter?
ஏன் சக்தி ஜடரூபம் பெற வேண்டும்?
And not the force-currents?
வெறும் சக்தி ஓட்டமாக இருக்கக்கூடாதா?
Why Spirit should become Matter?
ஏன் ஆத்மா ஜடமாக வேண்டும்?
Why it should not rest in the joy of Spirit?
ஏன் ஆத்மா ஆனந்தத்துடன் இருக்கக்கூடாது?
This it is said, is the work of Mind.
இது மனம் செய்த வேலை என்று கூறுகிறார்கள்.
Thought does not directly create.
எண்ணம் சிருஷ்டிக்காது.
It does not perceive material things.
எண்ணம் ஜடப்பொருட்களைக் காண முடிவதில்லை.
Therefore it is the work of Senses.
எனவே புலன்கள் இதைச் செய்தன.
The sense-mind creates the forms.
புலனறிவு ரூபங்களைச் சிருஷ்டிக்கிறது.
It seems to perceive the forms.
புலனறிவு ரூபங்களைக் காணும்.
Thought mind works upon it.
எண்ணத்தின் அறிவு அதன் மீது செயல்படுகிறது.
Sense-mind presents it.
புலனறிவு அதை உலகுக்குக் கொடுக்கின்றது.
Mind is the individual embodied-Mind.
மனம் மனிதனுடைய ஜீவனில் உள்ளது.
Matter is a phenomenon.
ஜடம் தோற்றம்.
Evidently Mind has not created it.
தனி மனித மனம் ஜடத்தை உற்பத்தி செய்யவில்லை என்பது தெளிவு.
Human mind is the result of earth-existence.
மனம் பூவுலக வாழ்வால் ஏற்பட்டது.
So, earth-existence cannot be result of human mind.
மனித மனம் பூவுலகில் ஜடத்தைச் சிருஷ்டித்திருக்க முடியாது.
We may say the world exists in our mind.
உலகம் நம் மனத்திலுறைகிறது எனக் கூறலாம்.
It is a non-fact.
அது இல்லாதது.
It is a confusion.
அது குழப்பம் விளைவிக்கும்.
The material world existed before the man.
ஜட உலகம் மனிதனுக்கு முன் சிருஷ்டிக்கப்பட்டது.
It will exist after man disappears.
மனிதனுக்குப் பின்னும் பூமியிருக்கும்.
Even if our individual mind abolishes itself in the Infinite.
நம் மனம் அனந்தத்தில் கரைந்தபின்னும் பூமியிருக்கும்.
We must conclude there is a universal mind.
பிரபஞ்ச மனமிருப்பதாக நாம் கொள்ள வேண்டும்.
It is subconscious to us.
அது இருப்பது நமக்குத் தெரியவில்லை.
It is in the form of the Universe.
அது பிரபஞ்சமாக இருக்கிறது.
It is superconscious in its spirit.
மனத்தின் ஆத்மா நாமறியாதபடி நமக்கு மேலேயுள்ளது.
It has created its habitation.
தான் வாழும் உலகை அது படைத்தது.
The creator must precede his creation.
படைத்தவன் படைப்புக்கு முந்தியவன்.
It implies a superconscient Mind.
அதனால் மனத்தைக் கடந்த மனமிருக்க வேண்டும்.
It has its instrumentality.
அதற்குக் கருவியுண்டு.
It is a universal sense.
பிரபஞ்ச உணர்வு அக்கருவி.
It creates in itself the relation of forms with form.
அது உறவு என்ற ரூபத்தைத் தன்னில் உற்பத்தி செய்கிறது. அது ரூபம் ரூபத்துடன் பெற்ற உறவு.
It is the rhythm of the material universe.
அதுவே ஜடப் பிரபஞ்சம் என்ற சலனம்.
This too is no solution.
இதுவும் தீர்வல்ல.
It tells us Matter is a creation of consciousness.
ஜீவியம் ஜடத்தை உற்பத்தி செய்ததாக இது கூறுகிறது.
Matter is the basis of cosmic workings.
ஜடம் பிரபஞ்ச செயலின் அஸ்திவாரம்.
It does not explain how consciousness came to do this.
இதை ஏன் ஜீவியம் செய்ய வேண்டுமென்று அது கூறவில்லை.
Let us go back to the original principle of things.
மூலமான தத்துவத்தைக் காணலாம்.
Then we shall understand better.
Page 235
மேலும் அதிகமாகப் புரிய அது உதவும்.
Existence acts.
Para 6
பெரு வாழ்வு செயல்படுகிறது.
It becomes a Conscious-Force by action.
செயல்படுவதால் பெரு வாழ்வு சித்-சக்தியாகிறது.
It presents the working of its force to its
consciousness.
சித்-சக்தி தன் செயலின் பலனை ஜீவியத்திற்குக் காட்டுகிறது. தன் ஜீவனின் ரூபங்களாக அவை உள்ளன.
There is one sole-existing conscious-Being. Force is only the action of that Being.
இருப்பது ஒரே தன்னையறியும் ஜீவன்.
சக்தி என்பது ஜீவனின் செயல்.
We have its results.
செயலுக்குப் பலன் உண்டு.
They can be nothing else but forms of Conscious Being.
அவை தன்னையறியும் ஜீவனின் ரூபங்களாகவேயிருக்கும்.
Substance is Matter.
பொருள் ஜடம்.
It is then only a form of Spirit.
எனவே ஜடம் ஆன்மாவின் ரூபம்.
This form of Spirit has an appearance.
இந்த ஆன்மீக ரூபத்திற்குத் தோற்றமுண்டு.
This is a form assumed to our senses.
நம் புலன்கள் பெறும் தோற்றமிது.
It is due to the dividing action of Mind.
இந்த ரூபம் மனத்தின் பிரிக்கும் செயலால் ஏற்பட்டது.
We have been able to deduce from it.
இதிலிருந்து நாம் சில முடிவுக்கு வந்தோம்.
The whole phenomenon of the universe is so
deduced.
உலகத்தின் தோற்றமனைத்தும் அப்படி நாம் புரிந்து கொண்டவையே.
Life is an action of Conscious-Force.
வாழ்வு சித்-சக்தியின் செயல்.
We now know it.
இப்பொழுது நமக்கு இது தெரியும்.
Material forms are its result.
ஜட ரூபங்கள் வாழ்வால் ஏற்படுத்தப்பட்டவை.
Life is involved in those forms.
வாழ்வு அந்த ரூபங்களில் கலந்துள்ளது.
They appear first as inconscient force.
முதலில் அது ஜட சக்தியாகத் தெரிகிறது.
It evolves and brings back Mind into manifestation.
வாழ்வு பரிணாமத்தால் மனத்தை வெளிப்படுத்துகிறது.
It is the real self of the force.
மனமே சக்தியின் உண்மையான ஜீவன்.
It never ceased to exist in it.
அது இருக்கத் தவறியதில்லை.
Even when it manifest it is so.
வெளிப்பட்டாலும் அது தவறுவதில்லை.
The original conscious knowledge is Supermind.
மூலமான தன்னையறியும் ஞானம் சத்திய ஜீவியம்.
Consciousness or Chit represents itself as Mind.
சித்-(அல்லது) ஜீவியம் சத்திய ஜீவியத்தை மனமாகப் பிரதிபலிக்கிறது.
We know it.
நமக்கு இது தெரியும்.
It is a power.
சத்திய ஜீவியம் ஒரு பவர்.
Life acts as an instrumental energy.
வாழ்வு சக்தியின் கருவியாகச் செயல்படுகிறது.
Consciousness or Chit descends through Supermind.
ஜீவியம் (அல்லது) சித் சத்திய ஜீவியம் வழியாகக் கீழே வருகிறது.
Force of Consciousness is Tapas.
சித் சக்தி தவம்.
It represents itself as Life.
தவம் வாழ்வாகக் காணப்படும்.
Mind is separated from Supermind.
மனம் சத்திய ஜீவியத்தினின்று பிரிந்தது.
Supermind is the higher reality of Mind.
சத்திய ஜீவியம் மனத்தின் உயர்ந்த அம்சம்.
Mind gives Life the appearance of division.
மனம் வாழ்வுக்குப் பிரிந்து தோன்றுகிறது.
It is further involved in its own Life-Force.
அது மேலும் வாழ்வின் சக்தியில் கலந்துள்ளது.
Mind becomes subconscious in Life.
மனம் வாழ்வில் தன்னை மறந்ததாகிறது.
Thus it gives the outward appearance of inconscient force.
அவ்வழி ஜட சக்தியாக வெளியில் தோன்றுகிறது.
It is so to its material workings.
ஜடமான செயலில் அது தோற்றம்.
The inconscience, inertia, atomic disaggregation have all their source in division.
ஜடம், தமஸ், சிதையும் அணு பிரிவினையிலிருந்து எழுகின்றன.
It is a self-involving action.
பிரிவினை சுயமான சக்தி.
Our universe came into being by it.
அதனால் பிரபஞ்சம் உண்டாயிற்று.
Mind is the final action of Supermind.
மனம் சத்திய ஜீவியத்தில் முடிவான செயல்.
It is so in the descent of creation.
சிருஷ்டியில் இது நடக்கிறது.
So, Life is an action of Conscious-Force.
வாழ்வு சித்-சக்தியின் முடிவான செயல்.
Matter is the final form of conscious-being.
ஜடம் தன்னையறியும் ஜீவனின் முடிவான செயல்.
It is the result of that working.
சிருஷ்டியின் பலனிது.
Matter is substance of the one conscious-being.
ஜடம் தன்னையறியும் ஜீவனின் பொருள்.
It is phenomenally divided within itself.
அதன் தோற்றம் அதனுள் பிரிந்துள்ளது.
It is by the action of the universal Mind.
பிரபஞ்ச மனத்தின் செயலிது.
It is a division individual Mind repeats.
தன் மனம் பிரிவினையை மீண்டும் செய்கிறது.
It dwells in.
மனம் அதனுள் வசிக்கிறது.
But it does not abrogate.
ஆனால் அதை மீறுவதில்லை.
It does not diminish the unity of Spirit.
ஆத்ம ஐக்கியத்தைக் குறைப்பதில்லை.
Neither the unity of Energy nor that of Matter.
சக்தியின் ஐக்கியமோ, ஜடத்தில் ஐக்கியமோ குறைவதில்லை.
Matter is indivisible Existence.
Page 236
ஜடம் பகுக்கப்படாத மிகப் பெரு வாழ்வு.
We see it is pragmatically divided.
Para 7
நடைமுறையில் ஜடம் பகுக்கப்பட்டுக் காண்கிறது.
Why is this?
இது ஏன்?
The principle of multiplicity is of the Mind.
மனத்தின் தத்துவம் பலவாகத் தோன்றுவது.
It has to be carried to its extreme potential.
அத்தத்துவம் முடிவு வரை செயல்பட வேண்டும்.
It can be done only by division and separativeness.
பிரித்துத் தனித்து இருப்பதால் இதைச் செய்யலாம்.
To do this Being must appear as substance.
இதைச் செய்ய ஜீவன் பொருளாகத் தோன்ற வேண்டும்.
Being has a universal principle.
ஜீவனுக்குப் பிரபஞ்ச தத்துவம் உண்டு.
It is a subtle substance pure.
ஜீவனின் பொருள் சூட்சுமமானது, தூய்மையானது.
It must become gross and material in appearance.
இது ஜடப்பொருளாக மாறித் தோன்ற வேண்டும்.
Now to the contact of pure consciousness it is a principle of form.
இப்பொழுது தூய ஜீவியம் பொருளை ரூபமாக அறிகிறது.
It is a plastic form.
அது மாறும் ரூபம்.
It freely expresses the conscious being.
தன்னையறியும் ஜீவனை அது சுதந்திரமாக வெளிப்படுத்துகிறது.
It is to a subtle sense.
சூட்சுமப் புலன் அப்படி அறிகிறது.
The Being is of pure eternal existence and reality.
ஜீவன் தூய சாஸ்வதமான பெருவாழ்வின் சத்தியம்.
It must appear a stable thing.
நிலையான பொருளாக அது மாறித் தோன்ற வேண்டும்.
It must be of an abiding multiplicity.
பலவாக நிலையாக அது இருப்பது அவசியம்.
Sense is the contact of mind with its objects.
மனம் பொருட்களைத் தீண்டுவது புலன் உணர்வு.
Here it has to be obscure.
இங்கு புலனுணர்வு இருண்டிருக்க வேண்டும்.
It must be an externalised sense.
உணர்வு புறத்திற்குரியதாக இருக்க வேண்டும்.
It must be assured of its reality.
அதன் சத்தியம் நிலையானதாக உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
The reality is of what it contacts.
தீண்டுபவற்றின் சத்தியமது.
Pure substance descends into material substance.
தூய்மையான பொருள் ஜடப்பொருளாக வேண்டும்.
Sachchidananda descends on life and mind through supermind.
சச்சிதானந்தம் சத்திய ஜீவியம் வழியாக மனதை, வாழ்வை அடைகிறது.
An inevitable result of this is pure substance
descends on material substance.
தூய்மையான பொருள் ஜடப்பொருளாவது அதன் பலன்.
The will to make multiplicity of being is necessary.
ஜீவன் ஒன்று பலவாவது இதற்கு அவசியம்.
An awareness of things from separate centres of consciousness is necessary.
தனித்த ஜீவிய மையங்களினின்று அறிவது அவசியம்.
This is the first method.
இதுவே முதல் முறை.
It is a method of lower experience of existence.
வாழ்வின் தாழ்ந்த அனுபவமிது.
We can go back to the spiritual experience of
things.
நாம் ஆன்மீக அனுபவத்தைக் கருதலாம்.
Substance is in utter purity.
பொருள் பூரணத் தூய்மையானது.
It resolves into pure conscious being.
அது திரும்பி மாறி தூய தன்னையறியும் ஜீவனாகும்.
It is self-existence.
அது சுய வாழ்வுடையது.
It is inherently self-aware by identity.
பிறப்பில் அது ஐக்கிய சுய ஞானம் பெற்றது.
It is not yet turning its consciousness.
தன் ஜீவியத்தை இன்னும் திருப்பவில்லை.
It must turn upon itself as object.
தன்னையே பொருளாக மாற்ற முயலவில்லை.
Supermind preserves this self-awareness.
சத்திய ஜீவியத்திற்கு இந்த உணர்வுண்டு.
It is by identity.
இது ஐக்கியத்தாலானது.
It preserves its substance by self-knowledge.
சொந்த ஞானத்தால் பொருளைப் பாதுகாக்கிறது.
And by its light of creation.
சிருஷ்டியின் ஜோதியால் செய்கிறது.
For that creation presents Being to itself.
சிருஷ்டி ஜீவனைத் தனக்கேக் கொடுக்கிறது.
As its subject-object, one and multiple.
ஒன்றாக, பலவாக, அகமே புறமாகக் காட்டுகிறது.
It is of its own active consciousness.
அது தன் சொந்த சுறுசுறுப்பான ஜீவியம்.
Being as subject is held there in a supreme
knowledge.
ஜீவன் அகமாக அங்கு சுப்ரீம் ஞானத்தால் வைக்கப்படுகிறது.
It can see, by its comprehension.
தன் அறிவால் அதை இது காண முடியும்.
It can see both as object and subject.
அகமாகவும் புறமாகவும் காண முடியும்.
Object within itself, subjectively as itself.
புறமாக உள்ளேயும், அகமாக அதையும் காணும்.
Simultaneously, by apprehension.
ஒரே சமயத்தில் புறப்பார்வையாலும் காணும்.
Project it as an object of cognition.
புறப்பொருளாகக் காட்டும்.
It is within its circumstance of its consciousness.
அதன் ஜீவிய சந்தர்ப்பத்துள் காணும்.
Not other than itself.
அது பிறிதில்லை.
It is part of its being.
தன் ஜீவனின் பகுதி.
It is a part put away from itself.
தன்னிடமிருந்து பிரித்த பகுதி.
It is to say, from the centre of its vision.
தன் பார்வை மையத்திலிருந்து பிரித்தது.
Being concentrates itself in it.
ஜீவன் அங்குள்ளது.
It is knower knowledge known.
அது ஞானி ஞானம் ஞானம் காண்பது.
It is the Witness or Purusha.
அது சாட்சி, புருஷன்.
This is apprehending consciousness.
இது புறத்தில் காணும் ஜீவியம்.
The movement of Mind arises from it.
மனம் இங்கு உற்பத்தியாகிறது.
It is a movement by which the individual knower knows.
தனி மனிதன் இதனால் தன்னை அறிகிறான்.
He regards a form of his own universal being.
தன் ரூபத்தை அறிகிறான், தன் பிரபஞ்ச ஜீவனின் ரூபம் அது.
He sees it as if it is other than he.
தன்னைப் பிறராகக் காண்கிறான்.
In the divine Mind there is another movement.
தெய்வீக மனத்தில் வேறொரு சலனமுண்டு.
It is immediate or simultaneous.
அது உடனே அல்லது ஒரே சமயத்தில் எழுவது.
It is another movement.
அது வேறொரு செயல்.
Or its reverse side of the same movement.
அல்லது அதன் மறுபுறம்.
It is an act of union in being.
அது ஜீவனில் இணையும் செயல்.
It heals the phenomenon of division.
பிரிவினைக்கு அது மாற்று.
It prevents it from becoming real.
அது உண்மையாவதைத் தடுக்கும்.
Even for a moment it cannot become solely real.
ஒரு க்ஷணமும் அது உண்மையாகாது.
This is an act of conscious union.
இது அறிந்து இணையும் செயல்.
It is represented otherwise in the dividing Mind.
பிரிக்கும் மனத்தில் இது வேறாகத் தோன்றுகிறது.
It is obtuse, ignorant, external.
அது அறியாத புறமான கோணல்.
It is seen as contact in consciousness between divided beings.
பிரிந்த பொருட்கள் ஜீவியத்தில் தொடுவதாகத் தெரியும்.
They are separate objects.
பிரிந்த பொருட்கள் தனித்து விளங்கும்.
This contact in divided consciousness is sense.
பிரிந்ததைத் தீண்டுவது புலன் உணர்வு.
This is a contact of union subject to division.
இணைந்தவை பிரிக்க உட்படுகின்றன.
The action of thought mind founds itself for return.
எண்ணம் இதனடிப்படையில் திரும்பி வர முயல்கிறது.
It returns to a higher principle of union.
ஐக்கியம் என்ற உயர்ந்த தத்துவத்தை நாடுகிறது.
There division is subject to unity and subordinate.
அங்கு பிரிவினை ஐக்கியத்தின் பகுதி, உட்பட்டது.
Substance is material substance.
பொருள் ஜடப்பொருளாகும்.
It is a form in which Mind acts through sense.
மனம் புலன் வழிச் செயல்பட உதவுவது பொருள்.
It contacts the conscious Being.
அது தன்னையறியும் ஜீவனை ஸ்பர்சிக்கிறது.
Of which it is itself a movement of knowledge.
 
Contd....
அதுவே ஞானத்தின் செயலாகும்.
 
தொடரும்......
 
***********
 
ஜீவிய மணி
 
எடுத்துச் சொல்வது சரியானால்
எண்ணம் தவறாது.
 
ஜீவிய மணி
 
இடைவிடாத காதலுணர்வு
இதமாக எழுவது
சத்பிரம்மமாவது.
 
 
***********book | by Dr. Radut