Skip to Content

1. நினைவும் செயலும்

நினைவும் செயலும்

  • நினைவு எப்படியிருந்தாலும் பலன் செயலுக்கே வரும்.

    முழு நேரமும் பரீட்சைக்குப் படிக்க விரும்பினாலும் கொஞ்ச நேரம் படிப்பவனுக்கு மார்க் செயலுக்கேற்ப வருமே தவிர, நினைவுக்குப் பலனிருக்காது.

  • ஏனெனில் முழு நேரமும் படிக்க வேண்டும் என்ற நினைவை மீறி அதற்குக் கீழே படிக்க விருப்பமிருக்காது. பலன் ஆழ்ந்த நினைவுக்கே வரும்.
  • மனம் மாறாமல் செயல் மாறினாலும், மாறிய செயலுக்குப் பலனிருக்காது. மாறாத மனத்தையே பலன் பிரதிபலிக்கும்.
  • சிஷ்யர்கள் குருவைக் கேட்டுச் செய்யப் பிரியப்படுவார்கள். ஆனால் குரு அவர்கள் மனதிலிருப்பதையே சொல்ல வேண்டும் என நினைப்பார்கள். குரு சொல்வது மாறியிருந்தால், அதை மாற்ற முயல்வார்கள். பொதுவாக அப்படிப்பட்ட சிஷ்யர்கள் கேட்பதற்கு ஏதாவது ஒரு வகையில் பதில் வாராமற் போகும்.
  • சிஷ்யனாக இருப்பது மனைவியாக இருப்பதை விட சிரமம்.
  • பகவான், பிறந்த குழந்தைக்குப் பெயர் தரவில்லையென ஒரு வருஷம் பெயர் வைக்காமலிருந்தவர் ஒரு சிஷ்யர்.
  • மனம் ஏற்காமல், குரு சொல்லியதற்காகச் செய்தாலும், வாழ்க்கை மனநிலைக்கே பலன் தரும். குருவின் பேச்சைக் கேட்டதற்காகப் பலனிருக்காது. அப்பலன் வேறு வகையில் வேறு விஷயத்தில் வேறு நேரத்தில் வரும்.
  • குருவுக்குச் சிஷ்யன் கேட்டதற்குப் பதில் கூற அபிப்பிராயமில்லாவிட்டால், ஒப்புக்குப் பதில் கூறினாலும், குரு மனமே பலிக்கும், சொல் பலிக்காது.
  • பொருத்தமற்ற கேள்வியைச் சிஷ்யன் கேட்கக் கூடாது. கேட்டபின் குருவுக்கும் சிஷ்யனுக்கும் சங்கடம். பலன் இருவர் மனம் போல இருக்குமே தவிர, செயல் போலிருக்காது.

    குரு குழந்தைக்கு இட்ட பெயரை மாற்றுவோர் சிஷ்யன் உருவில் குருவாக இருக்க விரும்புபவர்.

******



book | by Dr. Radut