Skip to Content

13. அன்னை வழியில் சாதிப்பது

அன்னை வழியில் சாதிப்பது

N. அசோகன்

மார்ச் மாதம் online conference call மூலம் மக்கள் அன்றாட வாழ்க்கையில் valueக்களின் உதவியைக் கொண்டும் மற்றும் power of organizationஐக் கொண்டும் எப்படிச் சாதிக்கலாம் என்று விளக்கமாகப் பேசினேன். இப்பொழுது அன்னை பக்தர்களுக்கு அன்னையிடம் அவர்கள் வந்து விட்டார்கள் என்ற காரணத்தால் அன்னையின் அருள் அவர்கள் வாழ்க்கையில் செயல்படக்கூடிய வாய்ப்பு இருப்பதால் எத்தகைய சாதனைகளையெல்லாம் அவர்களால் நிகழ்த்திக் கொள்ள முடியும் என்பதைப் பற்றிப் பேச விரும்புகிறேன். அன்னையின் அருளின் சிறப்பைப் பற்றி அப்பா ஸ்ரீ கர்மயோகி அவர்கள் 1980 வாக்கில் முதன்முதலாக எழுத ஆரம்பித்தபொழுது மற்ற கடவுள்களிடம் தங்களுக்குள்ள தீராத பிரச்சனைகள் பற்றி பக்தர்கள் வைத்து பலிக்காத பிரார்த்தனைகளை அன்னையிடம் வைத்தால் அவற்றைப் பலிக்க வைக்கும் அளவிற்கு விசேஷ சக்தி வாய்ந்தது அன்னையின் அருள் என்று குறிப்பிட்டிருந்தார். அன்னையின் அருளைப் பற்றி எழுதும்பொழுது டாக்டர்களால் குணப்படுத்த முடியாது என்று கைவிடப்பட்ட நோயாளிகள் அன்னையின் அருளை வேண்டி பிரார்த்தனை செய்தபொழுது அந்தத் தீராத நோய்கள் குணமடைந்ததாக எழுதினார். மேலும் தன்னால் திருப்பித் தர முடியாத அளவிற்குக் கடன் சுமையைக் ஏற்றிக் கொண்டவர்கள் அன்னை பக்தர்களாக மாறியபொழுது அந்தக் கடன் சுமையிலிருந்து விடுபடும் அளவிற்குப் புதிய அதிக வருமானத்தைப் பார்த்ததாகவும், முப்பத்தைந்து வயதாகியும் திருமணம் கூடி வராமல் ஏங்கிக் கொண்டிருந்த முதிர் கன்னிகளுக்கு அன்னையிடம் வந்த பிறகு அவருடைய அருளால் உடனே எதிர்பாராதவிதமாக திருமணங்கள் கூடி வந்ததாகவும், எந்த வேலையிலும் நீடித்து நிற்க முடியாதவர்களுக்கு அன்னையிடம் வந்த பிறகு இது வரையிலும் இல்லாத பொறுப்புணர்வு வந்து ஒரு நல்ல வேலையைத் தக்க வைத்துக் கொண்டிருப்பதாகவும், பல வருடங்களாகச் சொத்துத் தகராறு நிலவி வந்த கூட்டுக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் அன்னை பக்தராக மாறி அன்னைக்குச் சுமுக மலர்களை வைத்ததன் பலனாக நீண்ட காலச் சொத்துத் தகராறு முடிவுக்கு வந்து சுமுகம் பிறந்ததாகவும் என்றிப்படி பல உண்மை நிகழ்ச்சிகள் நடந்துள்ளன என்பதையும் அவருடைய புத்தகங்களில் குறிப்பிட்டிருக்கிறார்.

நீண்ட காலப் பிரச்சனைகளுக்கு உடனடி நிவாரணத்தை அன்னையின் அருளால் கொடுக்க முடியும் என்பது அன்னையிடம் புதிதாக வந்த அன்பர்களுக்கு வியப்பாகவும் புரியாத புதிராகவும் இருக்கலாம். ஆனால் அன்னை மற்றும் பகவானுடைய ஆன்மீக சிறப்புகளை உணர்ந்த விவரமறிந்த அன்பர்களுக்கு அன்னையுடைய சக்தி சத்திய ஜீவிய சக்தி என்பதால் இத்தகைய அற்புதங்களை அதனால் அதிவேகத்தில் நிகழ்த்த முடிகிறது என்பது புரியும் என்பதால் அவர்களுக்கு ஆச்சரியம் இருக்காது. அப்பா அவர்கள் அன்னையின் அருளின் வேகத்தை மின்னல் வேகத்திற்கு ஒப்பிடுகிறார். அதாவது அன்னையிடம் வைத்த பிரார்த்தனைக்குண்டான பலன் ஒரு சில நிமிடங்களில் வந்து விடுகிறது என்கிறார். அன்பர்களுடைய வீடுகளிலும் அவர்கள் பணியாற்றும் அலுவலகங்களிலும் மின் சப்ளை தடைபடும்பொழுது அன்னையிடம் அது பற்றி பிரார்த்தனை செய்த அடுத்த நிமிடமே மின் சப்ளை மீண்டும் வருவதைப் பல அன்பர்கள் பார்த்துள்ளார்கள். அம்மாதிரியே பணம், கை கடிகாரம், பேனா, மூக்குக்கண்ணாடி மற்றும் முக்கியமான ஆவணங்கள் (documents) ஆகியவை வைத்த இடம் தெரியாமல் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தேடிவிட்டு பின்பு அன்னை நினைவு வந்து அன்னையிடம் அது பற்றிச் சொன்னவுடன் அதுவரை கண்ணில் படாத பணம் மற்றும் பொருட்கள் உடனே கண்ணில் படுவது போன்ற நிகழ்ச்சிகளும் பல அன்பர்கள் வாழ்க்கையில் நடந்துள்ளன. இப்படி உடனடி பலன் கிடைக்கிறது என்பது பொதுவான ஒரு உண்மையாக இருந்தாலும் எங்களுக்கு இம்மாதிரி அன்னையிடம் சொன்னவுடனேயே கரண்ட் மீண்டும் வருவதில்லை, தொலைந்த பொருள் உடனே கிடைப்பதில்லை என்று சொல்கின்ற அன்பர்களும் இருக்கின்றார்கள். இப்படிச் சிலருக்கு உடனடியாக பலன் கிடைப்பதில்லை என்பது அருளுக்கு இத்தகைய மின்னல் வேக ஆற்றல் இல்லை என்ற அர்த்தத்தைத் தாராது. மாறாக அருளால் மின்னல் வேகத்தில் பலனைத் தரமுடியும் என்ற நம்பிக்கை சம்பந்தப்பட்ட அன்பருக்கு இல்லை என்பதைத்தான் இது காட்டுகிறது. வேலை வேண்டும் என்ற பிரார்த்தனை மற்றும் வருமான உயர்வு, திருமண சம்பந்தம், வீடு கட்டுதல், வீடு வாங்குதல் மற்றும் புதிய தொழில் project தொடங்குதல் ஆகியவை சம்பந்தமாக செய்யப்படும் பிரார்த்தனைகள் பலிப்பதற்கு நிறைய கால அவகாசம் தேவைப்படுவது போல் நமக்குத் தெரிகிறது. இங்கேயும் அப்பா அவர்கள் என்ன சொல்கிறார் என்றால், எப்படிப் பிரார்த்தனை தடைப்பட்ட மின்சப்ளையை உடனடியாகக் கொண்டு வருகிறதோ, கண்ணில் படாமல் நம்மை அலைய வைக்கும் பணமும் பொருளும் அன்னையிடம் சொன்ன உடன் எப்படி கண்ணில் படுகிறதோ அதே மின்னல் வேகத்தில் தான் வேலை, வருமானம், திருமணம், வீடு கட்டுதல் போன்ற பெரிய விஷயங்களுக்கான பிரார்த்தனைகளுக்கும் அன்னை பதிலளிக்கிறார் என்கிறார். அதாவது பிரார்த்தனை செய்கின்ற அன்பரிடம் அன்னை எதிர்பார்க்கும் அளவிற்கு சின்சியரிட்டியும் பிரச்சனையின் கடுமைக்கேற்ற தீவிரமும் அதாவது intensityயும் இருந்ததென்றால் அன்னை வழங்கும் responseஉம் மின்னல் வேகத்தில் தான் கிடைக்கிறது என்கிறார். நமக்குச் சூட்சும பார்வை இல்லாததால் சூட்சும நிலையில் இந்த மின்னல் வேக response கிடைப்பது தெரியவில்லை. நாம் பிஸிக்கல் லெவலில் காலம் மற்றும் இடம் (time and space) ஆகியவற்றிற்குக் கட்டுப்பட்டும் இவற்றை மீறி செயல்பட முடியாது என்று நம்பிக் கொண்டும் செயல்படுவதால் அருளின் மின்னல் வேகச் செயல்பாடு நம்முடைய தாழ்ந்த மற்றும் அறிவில்லாத மனநிலைக்கு ஏற்றவாறு தீவிரம் குறைந்து கால தாமதம் என்ற நியதிக்குட்பட்டு போதுமான கால இடைவெளிக்குப் பின்னர் தான் பலனாக நமக்குத் தெரிய வருகிறது. ஆனால் பெரிய விஷயங்களிலாவது இப்படிப்பட்ட தாமதமான responseஐ சந்தித்தே ஆக வேண்டும் என்ற அவசியமே இல்லை என்று அப்பா அவர்கள் சொல்கிறார். அவர் ஏன் அப்படிச் சொல்கிறார் என்றால் அதற்கான பதில் பகவானுடைய லைப் டிவைன் புத்தகத்தில் இருக்கின்ற பிரம்மன், புருஷா, ஈஸ்வரா என்ற படலத்தில் இருக்கிறது. இந்தப் படலத்தில் பகவான்அவர்கள் Time Eternity, Timeless Eternity மற்றும் இந்த இரண்டு நிலைகளும் ஒன்று சேர்ந்த மூன்றாம் நிலைக் காலமான Simultaneous Integrality என்ற மூன்று கால நிலைகளைப் பற்றி குறிப்பிடுகிறார்.

நாம் Time planeஇல் செயல்படுகிறோம் என்பதால் நாம் எந்த வேலையைச் செய்தாலும் அதற்குண்டான பலன் தெரிவதற்கு நமக்குக் கால அவகாசம் தேவைப்படுகிறது. ஒருவர் ஒரு கம்பெனியை நிறுவி ஒரு பிஸினஸ் செய்ய விரும்புகிறார் என்றால் அந்தக் கம்பெனியை நிறுவுவதற்குண்டான வேலைகளைச் செய்து என்ன பொருளை விற்க விரும்புகின்றாரோ அதை உற்பத்தி செய்தோ, வரவழைத்தோ வைத்துக் கொண்டு விற்பனையைச் செய்து வருமானத்தைப் பார்ப்பதற்குள் குறைந்தபட்சம் ஒரு மாத காலமாவது ஓடி விடுகிறது. ஒரு நாள் காலையில் பிஸினஸ் ஆரம்பிக்க விரும்பியவர் அந்தக் காலைப் பொழுதிலேயே இடத்தை ஏற்பாடு செய்து தேவைப்பட்ட பொருட்களையும் தயார் செய்து மதியமே விற்பனை செய்து மாலைப் பொழுதிலேயே நல்ல வருமானத்தைப் பார்த்து விட்டார் என்ற மின்னல் வேக நிகழ்ச்சிகளைப் பொதுவாக நாம் பார்ப்பதில்லை. வேண்டுமென்றால் வீட்டுத் தோட்டத்திலுள்ள தென்னை மரத்தில் விளைந்த தேங்காய்களைக் காலையில் பறித்து வீட்டுத் திண்ணையில் வைத்து உடனடியாக விற்பனை செய்து ஒரு வருமானத்தைப் பார்க்கலாம். அப்பொழுதும் தென்னை மரத்திலேறி தேங்காய்களைப் பறிப்பதற்கு அரை மணி நேரமாவது செலவாகும். ஆனால், பத்து, இருபது இலட்சம் முதலீடு செய்யக்கூடிய ஒரு வியாபாரத்தைப் பற்றி காலையில் சிந்தித்து உடனடியாக அமல்படுத்தி அன்று மாலைக்குள்ளாகவே வருமானத்தைப் பார்த்துவிட்டதாக நாம் பொதுவாக கேள்விப்படுவதில்லை.

அம்மாதிரியே ஒரு விவசாயி வயலில் நெல் விதைத்து பயிர் செய்யத் தொடங்கினார் என்றால் நெல் முளைத்து வளர்ந்து நெல் மணிகள் தோன்றி அறுவடைக்குத் தயார் ஆன பிறகுதான் அறுவடை செய்து அதை விற்று ஒரு வருமானத்தைப் பார்க்க முடியும். இதற்கிடையில் மூன்று மாதங்களாவது ஓடி விடும். அம்மாதிரியே காலி இடத்தில் ஒருவர் வீடு கட்டத் தொடங்கினால் கட்டுமானப் பணிகள் முடிந்து அவ்வீட்டுக்குள் முறையாக அவர் குடி போக வேண்டுமென்றாலும் அதற்கும் ஓரிரு மாதங்கள் கால அவகாசம் நிச்சயம் தேவைப்படும். ஆகவே Time planeஇல் நாம் செயல்பட்டுக் கொண்டிருக்கும் வரையிலும் காலத்தாலும் இடத்தாலும் நாம் கட்டுப்பட்டுத்தான் இருக்க வேண்டும். அப்பட்சத்தில் செய்த வேலைக்கு உடனடியாக பலனைப் பார்ப்பதென்பது physical levelலில் பெரும்பாலும் முடியாத காரியமாகி விடுகிறது. தவம் செய்யும் தபஸ்வி மற்றும் ரிஷிகளை எடுத்துக் கொண்டால் தியானத்தில் லயித்துத் தன்னை மறந்த நிலையில் இருக்கும்பொழுது அவர்களுக்கு நேரம் போவதே தெரியாமல் இருந்து விடுகிறது. பல நாள் தியானத்தில் இருந்து விட்டு கண் விழித்துப் பார்க்கும்பொழுது நாலைந்து நாளோ ஒரு வாரமோ ஓடி விட்டது அவர்களுக்குத் தெரிவதில்லை. அதாவது தன்னை மறந்த நிலையில் தியானத்தில் இருந்தபொழுது அவர்கள் அச்சமயத்தில் காலத்தைக் கடந்த நிலையில் இருந்திருப்பதாக அர்த்தம் செய்து கொள்ள முடியும். அதனால் தான் பல நாட்கள் கழிந்த பின்னரும் ஏதோ ஒரு சில மணி நேரம் தான் செலவாகி இருக்கும் என்று அவர்களுக்குத் தோன்றுகிறது. அன்னையை நினைத்து பன்னிரண்டு மணி நேரம் calling செய்யும் அன்பர்கள் இருக்கிறார்கள். இவர்களும் தியானத்தில் லயித்துத் தன்னை மறந்த நிலையில் இருக்கும் பொழுது பன்னிரண்டு மணி நேரம் போனது அவர்களுக்கு ஏதோ ஓரிரு மணி நேரங்கள் போனதாகத் தான் தோன்றுகிறது. ஆகவே இவர்களும் calling செய்து கொண்டிருந்த நேரத்தில் Time planeஇல் இருந்து விடுபட்டு Time planeக்கு போய்விட்டார்கள் என்று தான் அர்த்தமாகும். நாமும் ஒரு காரியத்தை அனுபவித்து செய்து கொண்டிருக்கும் பொழுது நமக்கும் கூட நேரம் போவதே தெரிவதில்லை. அந்த நேரத்தில் நாமும் காலத்தைக் கடந்த நிலைக்குத் தான் செல்கிறோம். ஒரு நல்ல திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும்பொழுது நாம் அப்படத்துடன் ஒன்றிப் போய்விடுகின்றோம். மூன்று மணி நேரத்திற்கு பிறகு திரைப்படம் முடிவுக்கு வரும்பொழுது நமக்கு மூன்று மணி நேரம் போனதே தெரிவதில்லை. ஏதோ அரை மணி நேரம் தான் திரைப்படம் ஓடியது போலத் தோன்றுகிறது.

பள்ளி விடுமுறை நாட்களைப் பொதுவாக சிறுவர் சிறுமியர்கள் விளையாட்டிலேயே கழித்து விடுவார்கள். ஒரு மாத விடுமுறை முடிவுக்கு வரும்பொழுது ஏதோ ஒரு வாரம் தான் கழிந்திருப்பது போல சிறுவர் சிறுமியர் உணர்வார்கள். ஆக அந்த விடுமுறை நாட்களில் அவர்கள் காலத்தைக் கடந்த நிலையில் இருந்ததாக நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இப்போது நாம் அன்னைக்கு வருவோம். அன்னை அவர்கள் காலமும் காலத்தைக் கடந்த நிலையும் என்ற இந்த இரு நிலைகளும் ஒன்றாக கூடி இருக்கின்ற Simultaneous Integrality என்ற மூன்றாம் நிலை Time planeஇல் இருக்கிறார்கள். நம்மைப் போல் மானுட உருவம் எடுத்து பூமியில் அவர்கள் அவர்களுடைய ஆயுட் காலத்தில் நடமாடினார்கள் என்றாலும் நம்மைப் போல காலத்திற்கும் இடத்திற்கும் அவர்கள் கட்டுப்பட்டு இயங்கவில்லை. அதாவது Time planeஇல் அவர்கள் செயல்பட்ட காலத்திலும் காலத்திற்குக் கட்டுப்படாமல் செயல்பட்டார்கள். அதே சமயத்தில் படைப்போடு தொடர்பே இல்லாமல் காலத்தைக் கடந்த நிலையில் இருக்கின்ற பரப்பிரம்மத்தைப் போல் பூவுலகத் தொடர்பில்லாமல் ஒதுங்கியும் இருக்கவில்லை. அவர் இஷ்டப்பட்டிருந்தால் மானிட அவதாரமே எடுக்காமல் தன்னுடைய காலம் கடந்த நிலையிலேயே இருந்திருக்கலாம். ஆனால் மானிட இனத்தின் மேலும், மற்றும் உலகில் உள்ள மற்ற ஜீவராசிகளின் மேலும் கொண்ட பரிவின் காரணமாகவும் பூவுலக வாழ்க்கையை இறைமயமாக்க வேண்டும் என்ற நோக்கத்தின் காரணமாகவும் அவர் இருக்கின்ற உயர்ந்த நிலையிலிருந்து இறங்கி வந்து physical planeஇல் மானுட வடிவமெடுத்து நம்மோடு நடமாடினார். அப்படி மானிட வடிவம் வாங்கி வந்ததால் அவர் தம் தெய்வீக நிலையையோ அதற்குண்டான தெய்வீக சக்தியையோ எதையும் இழக்கவில்லை. Physical planeஇல் நடமாடிக்கொண்டிருந்தபொழுது கூட தன்னுடைய சொந்த இருப்பிடமான சத்திய ஜீவிய நிலையோடு ஒரு தொடர்பை வைத்துக் கொண்டுதான் இருந்தார். ஆகவே அன்னையைப் பொறுத்த வரையில் ஒரே சமயத்தில் காலம் மற்றும் காலத்தைக் கடந்த நிலை என்ற இரண்டு நிலைகளையும் உள்ளடக்கிய பகவான் குறிப்பிடுக்கின்ற Simultaneous Integrality என்ற planeஇல் தான் அவர்கள் செயல்படுகிறார்கள். இந்த Time planeஇல் result என்பது உடனடியாக வருகிறது. ஏனென்றால் Timeless planeஉம் Time planeஉம் அருகருகே இருப்பதால் Time planeக்கு உண்டான உடனடி resultஐக் கொண்டு வருகின்ற சக்தி அந்த ஆற்றல் இல்லாத Time planeகும் தானாக வந்து விடுகின்றது.

ஒரு வாழ்க்கை சூழ்நிலையை உதாரணமாக எடுத்துச் சொன்னால் இது உங்களுக்கு நன்றாகப் புரியும் என்று நினைக்கிறேன். ஒரு M.L.A.அல்லது M.P. போன்ற செல்வாக்கு வாய்ந்த அரசியல்வாதியை எடுத்துக் கொள்வோம். அவருக்கு வீடு கட்டிக் கொள்வதற்கு Town Planning Authorityஇல் ஒரு order வேண்டும் அல்லது மின்துறையிலிருந்து அவருடைய வீட்டிற்கு three phase power supply connection கொடுப்பதற்கான ர்ழ்க்ங்ழ் வேண்டுமென்று வைத்துக் கொள்வோம்.

இவருக்கு அரசியல் பலமிருப்பதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை phoneஇல் தொடர்பு கொண்டு தான் யாரென்று தெரியப்படுத்தி தனக்கு இப்படி ஒரு order வேண்டுமென்று கேட்டாலே போதும். மற்ற சாதாரண குடிமக்கள் நடையாய் நடந்து ஒரு மாதமாவது காத்திருந்து அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுத்து வாங்க வேண்டிய orderஐ ஒரு phone call போட்டு அன்றைக்கே வீட்டிற்குக் கொண்டு வந்து கொடுக்கும்படி செய்து கொள்கிறார். அதாவது ஒரு மாத வேலையை ஒரு நாளில் முடித்துக் கொள்கிறார். ஒரு மாதத்தை ஒரு நாளாக சுருக்குவதென்பது Time planeஐ Timeless planeஆக ஆக்குவதற்குச் சமம். இப்பொழுது M.L.A.வின் உறவினர் ஒருவருக்கு இப்படி ஒரு order Town Planning Authorityயிலிருந்தோ அல்லது மின்துறையிலிருந்தோ வேண்டுமென்று வைத்துக்கொள்வோம். அவர் M.L.A.வின் உறவினர் என்பதைத் தெரியப்படுத்திக் கொள்ளாமல் சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்குச் சென்றார் என்றால் அவரும் சாதாரண குடிமக்களைப் போல் நடையாய் நடந்து பணத்தை செலவழித்துதான் orderஐ வாங்க முடியும். ஆகவே அப்படி காத்திருக்க விரும்பாத உறவினர் M.L.A.இடமிருந்து recommendation letter வாங்கிக் கொண்டு அந்த officeக்குச் சென்று தான் யார் என்பதைத் தெரியப்படுத்தி ப்ங்ற்ற்ங்ழ்ஐ கொடுக்கிறார். M.L.A..வின் உறவினர் இவர் என்று அவர்களுக்குத் தெரியும் போது எப்படி M.L.Aவிற்கு உடனடியாக வேலையை முடித்துக் கொடுத்தார்களோ அதே வேகத்தில் இவருக்கும் வேலையை முடித்துக் கொடுத்து விடுகிறார்கள். ஆகவே M.L.A. கூட இருப்பதால் M.L.A. அனுபவிக்கும் உடனடி ரிசல்ட் என்பதை இவரும் சேர்ந்து அனுபவிக்கின்றார். இந்த உதாரணத்தைச் சொல்லும்போது எப்படி இந்த Time planeஉம் Timeless planeஉம் கலந்து இருக்கின்ற மூன்றாம் நிலை காலத்தில் உடனடி ரிசல்ட் கிடைக்கின்றது என்பது உங்களுக்குப் புரியும் என்று நினைக்கிறேன். அன்னை இந்த மூன்றாம் நிலை காலத்தில் இருப்பதால் நாம் நம் பிரச்சனைகள் விஷயமாக பிரார்த்தனை செய்யும்பொழுது நமக்கும் நம் பிரச்சனைகளுக்கும் இந்த உடனடி ரிசல்ட் கிடைக்கும் மூன்றாம் நிலை காலத்துடன் தொடர்பு கிடைத்து விடுகிறது. அதன் விளைவாக நம்முடைய பிரச்சனைகளுக்குண்டான தீர்வு உடனடியாக கிடைத்து நம் வாழ்க்கையில் ஏதோ miracle நடந்து விட்டது போல நமக்கு ஒரு அதிசயமும் ஆச்சர்யமும் வியப்பும் வருகிறது. பல வருடங்களாக வியாதியால் அவஸ்தைப்பட்டுக் கொண்டு இருந்தவர் அன்னையிடம் தன்னுடைய வியாதியைப் பற்றிப் பிரார்த்தனை செய்யும்பொழுது அது ஒரு சில நாட்களில் குணமடைவது கண்டு அதிசயித்துப் போகிறார். இம்மாதிரியே நெடுங்காலமாக தீராத கடன், நெடுங்காலமாகக் கிடைக்காத promotion, நெடுங்காலமாகக் கூடி வராத திருமண சம்பந்தம் ஆகியவை நாம் அன்னையுடன் தொடர்பு கொள்ளும் போது உடனடியாகக் கூடி வருவது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. நாம் காலத்தால் கட்டுண்டிருந்தாலும் நம் பிரச்சனைகளை அன்னைக்குத் தெரிவிக்கும்போது அன்னைக்குண்டான உடனடி ரிசல்ட் என்ற அம்சம் அன்னையோடு உள்ள தொடர்பின் காரணமாக நம் வாழ்க்கைக்குள்ளும் வந்துவிடுகிறது.

அன்னையிடம் வந்தபிறகு ஓரிரு வருடங்களிலேயே மாதம் சில ஆயிரம் சம்பாதித்துக் கொண்டிருந்த அன்பர்கள் மாதம் சில இலட்சங்கள் வருமானமாக பார்க்கக்கூடிய அளவிற்கு வளர்ந்து விடுகிறார்கள். அன்னையின் ஜீவியம் காலத்தைச் சுருக்குகிறது என்பதால்தான் இப்படிப்பட்ட அன்பர்களால் ஓரிரு வருடங்களிலேயே இப்படி ஒரு வருமான உயர்வைப் பார்க்க முடிகிறது. இப்படி ஒரு வருமான உயர்வை அனுபவித்த அன்பர்கள் மற்ற அன்பர்களிடம் பேசும்பொழுது, "அன்னையிடம் வந்திருக்காவிட்டால் இப்படி ஒரு வருமான உயர்வை இவ்வளவு குறுகிய காலத்தில் நான் பார்த்திருக்கவே முடியாது. பதினைந்து அல்லது இருபது வருடங்கள் கடினமாக நான் உழைத்த பிறகுதான் இப்படிப்பட்ட வருமான உயர்வு எனக்குக் கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஒரு வேளை கிடைக்கலாம் அல்லது கிடைக்காமலும் போகலாம்'' என்று சொல்வார்கள். மேலும் இம்மாதிரியே சுலபமாக சீக்கிரமாக கிடைக்காத சில government orderகள் சம்பந்தப்பட்ட அன்பர்கள் அன்னையிடம் இது பற்றிய பிரார்த்தனையை வைத்த பிறகு உடனே ஒரு சில நாட்களிலோ அல்லது ஒரு வாரத்திலோ கைக்குக் கிடைப்பதையும் பார்த்திருக்கிறார்கள். நான் இது வரையிலும் அன்னையினுடைய அருளாற்றல் எப்படி விசேஷமானது, அது கொண்டு வரும் பலன்கள் எப்படி நம்மைப் பிரமிக்க வைக்கிறது என்றெல்லாம் விளக்கிச் சொன்னேன். இப்பொழுது அன்னையோடு நாம் எப்படியெல்லாம் தொடர்பு கொள்ளலாம், அவருடைய அருளை எப்படியெல்லாம் பெற்று பயன்படுத்திக் கொள்ளலாம் என்று விபரமாகப் பேச விரும்புகிறேன்.

1. முதலாவதாகவும் அன்பர்களால் மிகவும் சுலபமாகவும் கையாளக்கூடிய அணுகுமுறை என்னவென்றால் தம்முடைய பிரச்சனைகளைப் பற்றி அன்னைக்குப் பிரார்த்தனை செய்து அவருடைய அருளால் தனக்குத் தீர்வு வேண்டும் என்பதை அவரிடம் கேட்பது தான்.

ஆரம்ப நிலையில் இருக்கும் பெரும்பாலான அன்பர்கள் இப்படித்தான் அன்னையை அணுகுகிறார்கள். அதாவது ஒரு குறிப்பிட்ட பலனை வேண்டி ஒரு குறிப்பிட்ட பிரார்த்தனையை அன்னையிடம் வைக்கிறார்கள். இந்தப் பலன் கிடைக்கும் பொழுது அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். பிரார்த்தனை செய்யும் பொழுதே பல ஆரம்ப நிலை பக்தர்கள் அன்னைக்குக் காணிக்கையையும் கொடுத்து விடுகிறார்கள். ஒரு சிலர் பிரார்த்தனை பலித்து கைமேல் பலனைப் பார்த்த பிறகு அன்னைக்கு நன்றி அறிதலாகக் காணிக்கையை வழங்குவதும் உண்டு. இப்படிப்பட்ட பிரார்த்தனைகள் பலதரப்பட்டவை. வியாதி குணமாக வேண்டும், நல்ல வேலை மற்றும் வருமானம் கிடைக்க வேண்டும், நல்ல பள்ளி மற்றும் கல்லூரியில் admission கிடைக்க வேண்டும், கடன் பாரம் தீர வேண்டும், சொந்தமாக வீடு அமைய வேண்டும் மற்றும் திருமண சம்பந்தம் கூடி வரவேண்டும் என்று இப்படி நாம் அடுக்கிக் கொண்டே போகலாம். காணிக்கை கொடுப்பது மற்றும் பிரார்த்தனையைத் தினசரி அன்னையிடம் சொல்வது என்று இவை போக ஆரம்ப நிலை அன்பர்கள் கூடுதலாக அன்னைக்குகந்த மலர்களான Prosperity (நாகலிங்கப்பூ), Luck (அதிர்ஷ்டம்) மற்றும் Grace Flower, சுமுக மலர்கள், பாதுகாப்பு மலர்கள் என்று இந்த மாதிரியான மலர்களைச் சேகரித்து அன்னைக்கு அர்ப்பணித்து இவ்வகையில் அருளின் செயல்பாட்டை விரைவுபடுத்துவதும் உண்டு. இது போக அன்னைக்குச் சுத்தம் பிடிக்கும் என்று தெரிந்து கொண்டு அன்பர்கள் தம்முடைய வீட்டின் சுத்தத்தை விசேஷ முயற்சி எடுத்து உயர்த்தி அவ்வகையில் அருளைப் பெற்றுக்கொள்வதற்கு மேலும் உகந்த பாத்திரமாக தன்னை மாற்றிக் கொள்வதும் உண்டு. மேற்சொன்னவற்றைத் தாண்டி ஆரம்ப நிலையில் உள்ள அன்பர்கள் பொதுவாக தம்மை அன்னைக்கு உகந்தவராக மாற்றிக் கொள்ள விசேஷ முயற்சி எதுவும் எடுப்பதில்லை. அதாவது தன்னுடைய personalityஇல் உள்ள சோம்பேறித்தனம், பொய் சொல்வது, பொறாமைப்படுவது, பொறுப்பில்லாமல் நடந்து கொள்வது, அவசரம், பேராசை, பயம் போன்ற குணவிசேஷ குறைபாடுகளிலிருந்து விடுபடவோ அல்லது தன்னைத் திருத்திக் கொள்வதற்கோ ள்ங்ழ்ண்ர்ன்ள்ஆக எந்த முயற்சியும் எடுப்பதில்லை. மேலும் இந்த நிலையில் உள்ள அன்பர்கள் அருள் நிபந்தனையின்றி செயல்படும் என்று நம்புகிறார்கள். ஆகவே அவர்கள் எப்படி இருக்கிறார்களோ அப்படியே அன்னை அவர்களை ஏற்றுக் கொண்டு அருள்பாலிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அருள் நிபந்தனையின்றி செயல்படக் கூடியது என்ற அவர்களுடைய எதிர்பார்ப்பில் ஒரு உண்மையும் இருக்கிறது. அதாவது இப்படி நிபந்தனையின்றி அருள் செயல்படும்போது பிரார்த்தனை செய்யும் அன்பர்களுக்கு அருள் வழங்கும் குறைந்தபட்ச பலனாக நோய் குணமாவது, நல்ல வேலை மற்றும் நல்ல கல்லூரி admission கிடைப்பது, தள்ளிப் போகும் திருமண சம்பந்தம் கூடி வருவது போன்ற பலன்கள் கிடைக்கும். அருளைப் பொறுத்தவரை இது குறைந்தபட்ச பலன் என்றாலும் சம்பந்தப்பட்ட அன்பர்களுக்கு இவையெல்லாம் மிகப்பெரிய பலன்களாகத் தெரிவதால் அவர்கள் இதிலேயே முழுத் திருப்தி அடைந்து விடுகிறார்கள். அதோடு விட்டு விடுகிறார்கள்.

2. அன்பருக்கு உண்டான இரண்டாவது அணுகுமுறை அன்னையிடம் தன்னுடைய பிரச்சனைகளை surrender மற்றும் சமர்ப்பணம் செய்வது. பெரும்பாலான ஆரம்ப நிலை அன்பர்கள் இந்த அணுகுமுறையை மேற்கொள்வதில்லை. ஒரு சில சாதகர் நிலையில் உள்ள அன்பர்கள் மட்டுமே இந்த அணுகுமுறையை மேற்கொள்கிறார்கள். இந்த அணுகுமுறை மிகவும் சக்தி வாய்ந்தது என்பதால் சாதாரண பிரார்த்தனையை விட இந்த முறையில் அன்பர்களுக்குக் கிடைக்கக் கூடிய பலன்கள் பல மடங்கு பெரிதாக இருக்கும். ஆனால், பலன் பெரிது என்றாலும் அதற்கு ஈடாக அணுகுமுறையும் அந்த அளவிற்குக் கடினமானது தான். ஆகவே ஏதோ ஒரு சில அன்பர்கள்தான் இந்த அணுகுமுறைக்கு முன் வருகிறார்கள்.

ஓர் அன்பர் பிரார்த்தனையை அன்னை முன் வைக்கும் பொழுது ஒரு குறிப்பிட்ட பிரச்சனைக்கு ஒரு குறிப்பிட்ட தீர்வைக் கேட்கிறார். வியாதி உள்ளவர்கள் வியாதியிலிருந்து நிவாரணமும், வேலை இல்லாதவர்கள் நல்ல வேலையும், திருமணத்திற்காக காத்திருப்பவர்கள் நல்ல திருமண சம்பந்தத்தையும், வீடு இல்லாதவர்கள் சொந்தமாக ஒரு வீட்டையும் அன்னையிடம் கேட்பார்கள். அதாவது தனக்கு என்ன மாதிரி result வேண்டும் என்பதை அன்பர் ஏற்கனவே முடிவு செய்து கொள்வார். அந்த முடிவை அன்னைக்குத் தெரிவித்து அவருடைய அருளைப் பயன்படுத்தித் தான் விரும்பும் பலனைத் தனக்கு வழங்கச் சொல்வார். ஆனால் சமர்ப்பணம் என்ற அணுகுமுறையை அன்பர் மேற்கொள்ளும் பொழுது அன்பர் தனக்கு இது தான் வேண்டும் என்று அன்னையிடம் வலியுறுத்துவது இல்லை. மாறாக, பிரார்த்தனைக்கு அன்னை என்ன முடிவு வழங்க விரும்புகிறாரோ அதைத் தான் ஏற்றுக் கொள்வதாகச் சொல்லி முடிவை அன்னையின் இஷ்டத்திற்கு விட்டு விடுகிறார். அதாவது, சமர்ப்பணம் என்ற அணுகுமுறையை மேற்கொள்ளும் அன்பர் தனக்கு எது நல்லது என்பது தன்னை விட அன்னைக்குத்தான் தெரியும் என்று நம்புவதால் தன் இஷ்டத்தை விலக்கிக் கொண்டு பிரச்சனையை முழுவதும் அன்னையின் கைகளில் ஒப்படைத்து விடுகிறார். "என் இஷ்டத்திற்குப் பதிலாக தங்கள் திரு உள்ளம் நிறைவேறட்டும்'' என்று அர்த்தம் வருகின்ற "Let Thy Will be done, Not my will'' என்ற ஒரு ஆங்கில மந்திரத்தை அன்னை தன்னுடைய யோக சாதனையில் இறைவனோடு தனக்கு உள்ள தொடர்பில், தனக்கு அவரோடு இருக்கும் alignmentஐ காப்பாற்றிக் கொள்ள அடிக்கடி சொல்வதுண்டு. இந்தச் சமர்ப்பண முறையை மேற்கொள்கின்ற அன்னை அன்பர்கள் இதே அணுகுமுறையை அன்னையிடத்தில் தாங்கள் பின்பற்றுவது உண்டு.

தொடரும்.....

*******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
அழைப்பு இடைவிடாத நினைவைத் தரும்.
 

*******book | by Dr. Radut