Skip to Content

07. லைப் டிவைன் - கருத்து

லைப் டிவைன் - கருத்து

பலவான ஜீவாத்மாக்களில் முழு ஒருமையை அறிய ஞானம் அஞ்ஞானத்தை ஏற்க வேண்டும்.
அது அமரத்துவம், ஆனந்தம் தரும்.

  • ஞானத்தை ஏற்கலாம், அது பெரும் பலன் தரும்.
  • அஞ்ஞானத்தை ஏற்கலாம், அதனால் அகந்தையின்று விடுபடலாம்.
  • இரண்டையும் இருநிலையிலும் - பரமாத்மா, ஜீவாத்மாவில் - ஏற்பது சட்டம்.
  • தாயாரை ஏற்கலாம், அது கடமையை நிறைவேற்றும்.
  • மனைவியை ஏற்கலாம், அது பிரியத்தைப் பூர்த்தி செய்யும்.
  • இருவரும் நம்முள் நமது சொந்த குணமாக இருக்கிறார்கள்.
  • பிரியம் கடமையை மீறும் இடமுண்டு, கடமை பிரியத்தை ஒதுக்கும் நேரமுண்டு.
  • பிரியம் கடமையை அறிந்து ஏற்பதும், கடமை பிரியத்தை உணர்ந்து ஏற்பதும் முடியாததில்லை.
  • இங்கு யோசனைக்கே இடமில்லை.
  • வலிமையைக் கருதுதல் வன்முறைக்கு வழி செய்யும்.
  • பலஹீனம் உள்ளங்கை நெல்லிக்கனியாக ஒளி விடும்.
  • மோதும் இடம் தெரியும்.
  • முடியாது என்பதில்லை, பிடிக்காது என்று அறிவோம்.
  • பிடிக்காத கடமையைப் பிடித்தமாகச் செய்வது சைத்திய புருஷ சட்டம்.
  • பிரியத்திற்காக ஏற்பது போல், பிரியத்திற்காக விலக்குதல் எளிதல்ல.
  • இந்நிலையில் சிந்தனை ஸ்தம்பிக்கும்.
  • சமர்ப்பணம் பலிக்காது.
  • சமர்ப்பணம் பிரியத்தையோ, கடமையையோ, எண்ணத்தையோ வற்புறுத்தாது.
  • சமர்ப்பணம் சமர்ப்பணத்தை வலியுறுத்தும்.
  • சமர்ப்பணம் ஆரம்பத்தில் எதிர்ப்பாக மனத்துள்ளிருந்து தன்னை வற்புறுத்தும்.
  • இது என்னால் முடியாது என்று முடிவு செய்வோம்.
  • இடையில் கைவிடக் கூடாது என்பது நூலில் முதல் அத்தியாயம்.
  • இறைவனை ஏற்றால் இடையில் கைவிட வேண்டாம்.
  • உறுதி தேவை.
  • உறுதியை விட, உள்ளம் அவனை நெகிழ்ந்து, அறிந்து ஏற்க வேண்டும்.
  • உறுதிக்கு அசையாதது உள்ள நெகிழ்வுக்கு அசையும்.
  • சமர்ப்பணம் காட்டும் வழி, மாறிய சூழலின் புது நிலை.
  • சூழல் மாறி, புது நிலையெழுந்து, வழி விடும்வரை உறுதி உள்ள நெகிழ்வாகி உள்ளதைப் புறத்தில் வெளிப்படுத்தும் வரை நிலைகுலையாதது சமர்ப்பணம்.
  • சமர்ப்பணம் தோல்வியறியாதது. மனிதன் தோற்பான்.
  • மனிதனுள் உள்ள இறைவன் தோற்றதில்லை.

******



book | by Dr. Radut