Skip to Content

06. அன்பு அமிர்தமாகி, அபரிமிதம் அனந்தமாகும் அழைப்பு

அன்பு அமிர்தமாகி, அபரிமிதம் அனந்தமாகும் அழைப்பு

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

  • எது வேண்டும்?
    • "மனம் வேலைக்குரிய திறமை பெற்றுள்ளது.
      ஆன்மீக எண்ணங்களால் நிரம்பியுள்ளது.
      சுறுசுறுப்பு, தெளிவு, விவேகம் காணப்படுகிறது".
      • ஒருவரிடம் இது இருந்தால் அவரைப் பாராட்டினால் அது நமக்கு வரும்.
      • இது நமக்கு வேண்டுமானால், உள்ள இடத்தை அறிந்து அவரைப் பாராட்டும் மனநிலை தேவை. இவை உள்ளவரை குறை சொன்னால் இவை வேண்டாம் எனப் பொருள்.
      • பொறுப்பு, நேர்மை, நியாய மனப்பான்மை போன்றவற்றைக் கருதினால் நமக்குப் பல விஷயத்தில் எதிரானவையிருக்கும்.
        • அவற்றைக் காண்பது, ஏற்பது, உண்மை sincerity.
        • பிறரை இயல்பாக நாம் கேலி செய்தால், எதைக் கண்டு சிரிக்கிறோமோ அது நம்முள் இருக்கும், நிறைய இருக்கும்.

          உண்மை நம்மை எது நாடி வருகிறதோ அதனால் தெரியும்.

        • ஒருவரை ஏன் பாராட்டத் தோன்றுகிறது?
          அவரிடம் உள்ள பெரிய குணம் கவருவதால் அப்படித் தோன்றுகிறது.
          அதற்கு மேல் அவரிடம் மறைந்துள்ள குறை அதிகமாகக் கவரும்.
          வெறுப்புக்கு முதற் காரணம் அவரிடம் உள்ள நல்ல குணம்.
          கெட்ட குணம் வெறுப்பு தாராது. கவனிக்காமலிருப்போம்.
          வெறுப்பும், விருப்பும் நாம் யார் எனக் காட்டும்.
          நமக்கு என்ன எதிர்காலமுண்டு என இரு திசைகளிலும் காட்டும்.
          நல்லவன் நம்மை நாடி வந்தால், நாம் நல்லவனாகப் போகிறோம் என்றும், கெட்டவன் நாடி வந்தால் கெட்டவனாகப் போகிறோம் எனவும் காட்டும்.
          எது முனைப்பாக இருக்கிறதோ அதுவே நடக்கும்.
  • பிரியம் தவற்றைக் கரைக்கும். குறை, தவறு, தீமை முதலியவற்றை அவர் மீது நமக்குள்ள அன்பு கரைத்துவிடும்.
    பிரியம் தவற்றைச் சரியாக்கும், குறையை நிறைவாக்கும், கெட்டதை நல்லதாக்கும். எதுவும் மனத்தைப் பொருத்தது.

    ஒரு நாவலில் ஸ்கார்லெட் என்ற இளம்பெண் போக்கிரி. பிரெட் என்ற கதாநாயகன்.

    அவளைப் போக்கிரி என்பதால், அதற்காகப் பிரியப்படுகிறான்.

    போக்கடாவுக்கு ஏராளமான ஆதரவாளர்கள் உண்டு.

    அதனால் போக்கிரியும், போக்கடாவும் சரியாகாது.

    நாம் அப்படியிருக்கலாம் என்றாகாது.

    போக்கிரி மீதும் கனிந்த ஆசை எழும், போக்கிரியாக இருப்பதால் ஆசை வரும்.

    பிரெட் அதையே ஸ்கார்லெட்டிடம் கூறுகிறான்.

    சில நடிகர்கட்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. குணம் கவருவது பிரபலம். அது எதிராகவுமிருக்கும்.

    மட்டம் கவர்ச்சி தரும்.

    உயர்வு தரும் கவர்ச்சிக்கும், மட்டம் எழுப்பும் கவர்ச்சிக்கும் உள்ள வித்தியாசம் தெரிய மட்டமான நிலையைத் தாண்டி வரவேண்டும்.

    மட்டம் கவருவதும், இலஞ்சம் பெருமை தருவதும், திருட்டில் ஆர்வம் கொள்வதும் நாளடைவில் சொல் மாறி, உணர்வு மாறும்.

  • அதிகபட்ச சாதனை
    • எந்த ஸ்தாபனத்திற்கும், எவருக்கும், எந்தக் குடும்பத்திற்கும் அதிகபட்ச சாதனையொன்றுண்டு. அதை உயர்த்த வேண்டுமானால், ஒருவர் அடிப்படையில் தன்னை உயர்த்த வேண்டும். அந்த அதிகபட்ச வாய்ப்பில் எவரும் 10%கூட பயன்படுத்துவதில்லை. நம் குடும்பத்தில் 1%கூட பயன்படவில்லை.
      • அமெரிக்கர் திறமையாகச் செயல்படுகிறார்கள். அன்னையின் திறமை வேறு. பட்டதாரி ஆசிரியர்களால் முடியாது என ஹெட்மாஸ்டர் நினைத்ததைப் பியூன் செய்தது அன்னையின் திறமை. இராமாபுரத்துச் செல்வம், ஆங்கிலப் பரிட்சையில் முதலாவதாக வந்த கிராமத்துப் பாஸ் செய்ய முடியாத மாணவன், 24 மடங்கு உபரியான பொற்கிழி அன்னையின் சாதனை. சக்தி எங்கிருந்து வந்தது?
      • எதுவுமே இல்லாத பிரம்மம் எல்லாவற்றையும் சிருஷ்டிக்கிறது.
        திறமையிருப்பது தடை. திறமையைக் கைவிடுவது திறமையின் உற்பத்தி ஸ்தானம் உயிர் பெறுவது resources.
        அது அபரிமிதமாகப் பெருகும்.
        பகவானுடைய அபரிமிதம் புரிவது கடவுள் புரிவது.
        அக்ஷய பாத்திரம், காமதேனு, கற்பக விருக்ஷம், பிரம்ம தண்டம் எங்கிருந்து உற்பத்தி செய்கிறது என அறியலாம். அதற்கு முக்கிய அம்சம் குறை நிறையைப் பூர்த்தி செய்யும் இன்றியமையாத அமைப்பு என்ற தெளிவு அவசியம். அதையறிய பொறுமை, அடக்கம் தேவை. இது ஞானம். ஞானம் பலிப்பது attitudeஆல். அடக்கம் இனிமையால் பலிக்கும். இனிமை சொல்லைக் கடந்த, மனத்தைக் கடந்த ஜீவனின் இனிமை. அது அதிகபட்ச வாய்ப்பைத் தருகிறது.
  • வாழ்வு அனைத்தையும் அனுமதிக்கும்.
    ஆன்மா எதையும் அனுமதிக்காது.
    பெரிய ஆத்மா அனைத்தையும் ஏற்கும். அவற்றையெல்லாம் வாழ்வு அனுமதிக்காது.
    சாதிப்பது வேறு, சரியாக இருப்பது வேறு, சரியாக சாதிப்பது பெரியது.

    அமெரிக்கா இன்று உலகை ஆளும் காரணம்

    1. ஜாதி, மத, வகுப்பு வேறுபாடில்லை.
    2. திறமையுள்ளவன் சாதிப்பான்.
    3. பாகுபாடில்லை என்ற சுதந்திரம் சாதிக்கிறது.
      சந்தர்ப்பம் திறமையைத் தருகிறது.
      திறமை உற்பத்தி செய்யும்.
      உற்பத்தி பணம்.
    4. எல்லா இடத்திலும் organisationயைப் பயன்படுத்துகின்றனர்.
    5. அவர்கள் எளிதாகப் பெரிய அளவில் சாதிக்கிறார்கள் என பகவான் கூறுகிறார். 
    ஜாதி, மத, வகுப்பு வேறுபாடுகளை அழித்தது, கடின உழைப்பு, வாய்ப்பு, ஸ்தாபன முறை, பெரிய திட்டம் ஆகியவை அமெரிக்கர் சொத்து. அது பரிணாம சத்தியம்.
    பெரியது, சிறியது, நல்லது, கெட்டது என்ற பாகுபாடு மனத்திலிருக்கக் கூடாது.
    அறிவோடு வேலை செய்ய வேண்டும், வாய்ப்பைப் பயன்படுத்த வேண்டும், முறையைக் கையாள வேண்டும், பெரியதாக நினைக்க வேண்டும்.
    அப்படிப்பட்டவருக்கு "100 ரூ."எளிது.
    உங்கள் மனநிலையை இக்கோணத்திலிருந்து சோதனை செய்து பாருங்கள்.

தொடரும்....

(* அடக்கம் எனில் இறைவன் முன் நாம் துரும்பு எனவும் எவரும் எதுவும் இறைவன் எனவும் அறிதல்.)

*******



book | by Dr. Radut