Skip to Content

04. யோக வாழ்க்கை விளக்கம் VI

யோக வாழ்க்கை விளக்கம் VI

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

II/56)நன்றும் தீதும் ஒன்றென அறியும் நேரம் இந்த ஞானம் பிறக்கிறது. அது தீமையைக் கரைத்து நன்மைக்கு எதிரியில்லை என்றாக்குகிறது.

 • தீமையெனும் நன்மையைக் காணும் சத்திய ஜீவன்.
 • தற்கொலை தவறு என உலகம் ஒப்புக் கொள்கிறது.
 • பகவான் தற்கொலை என்பது நெடுநாள் வாழும் ஆசை தலைகீழ் திரும்புவது என்கிறார்.
 • அன்னையும் தற்கொலை தவறு, எந்தப் பிரச்சனையையும் தீர்க்காது என்கிறார்.
 • பெர்ட் ரண்டு ரஸ்ஸல் உலகப் புகழ் பெற்ற தத்துவ நிபுணர்.
 • அவர் மாணவர் எழுதிய Ph.D. பட்டக் கட்டுரை அவரிடம் ஆய்வுக்கு வந்தது.
 • கொண்டுவந்து கொடுத்த மாணவர் இது உங்களுக்குப் புரியாது எனக் கூறிக் கொடுத்தார்.
 • அவர் Existentialism ஒரு புதிய தத்துவத்தை ஏற்படுத்தியவர்.
 • அவர் தற்கொலைக்கொப்பான காரியங்களைச் செய்திருக்கிறார்.
 • ஏராளமான செல்வம் அவரை வந்தடைந்தது.
 • அத்தனையையும், அனைவருக்கும் கொடுத்து விட்டார்.
 • பணத்தைப் பொறுத்தவரை அது தற்கொலை.
 • போர் முனையில் சாகும் இடங்களை வலிய நாடி போரிட முன் வந்தார்.
 • இரண்டாம் உலகப் போர், மனித குலம் ஜட வாழ்வைக் கடந்து மன வாழ்வு பெற்ற செயல்.
 • ஏராளமான பேர் வலிய உயிரை மாய்க்க விரும்பி முனைந்த போர் அது.
 • ஜட வாழ்வு தற்கொலை செய்து கொண்ட நிகழ்ச்சி.
 • ரஸ்ஸல் மாணவர், தற்கொலையால் உயிர் பிரியும் பொழுது மரண வாயிலில் ஜோதி எழும், அதை விரும்பி மக்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்றார்.
 • 1945-இல் போர் முடிந்த பின், உலகம் பெற்ற அளவு கடந்த வாய்ப்புகள் அவர் கூறியது உண்மை என எடுத்துக் கூறுகின்றன.
 • முன்னேற்றத்திற்குத் தடையானவை தீமை. அதை அழிப்பது நல்லது.
  அது அழிவதால் முற்படுவது நன்மை. தீமையை அழிக்கும் செயல் நன்மை.
 • எலிசபெத் டார்சியைத் திட்டுகிறாள். அது தவறு.
 • அவள் திட்டுவதால் அவன் திருந்துகிறான்.
 • அவள் திட்டு நன்மையில் முடிகிறது.
 • அதனால் திட்டு நல்லதாகிறது.
 • தானே தீமை அழியாத காலத்தும், அழியும் சந்தர்ப்பம் எழாத நேரமும், தீமை தற்கொலை செய்து கொள்ள விழையும்.

  மனித குலம் அது போல் செய்து கொண்ட தற்கொலை இரண்டாம் உலகப் போர்.

 • அந்த அழிவுக்குக் காரணமான தலைவர் சர்ச்சில்.
 • சர்ச்சிலைப் பதவியில் அமர்த்தியதும், அவருக்கு வெற்றி பெற்றுக் கொடுத்ததும் யோக சக்தி. அதைக் கொடுத்தவர் பகவான் ஸ்ரீ அரவிந்தர்.
 • சர்ச்சில் அசுரன்.
 • அசுரன் செயலும் அகில உலகத்திற்கு நன்மை பயக்கும்படி செயல்பட்டது பகவான் ஸ்ரீ அரவிந்தர் யோக சக்தி - சத்திய ஜீவிய சக்தி.
 • வரலாற்றிலும், சொந்த வாழ்விலும் இச்சக்தி செயல்படுவதை அறிவது ஆத்மீக விழிப்பு.

*******

II/57) நன்றும் தீதும் மனத்தின் தார்மீக நிலைக்குரியன. வலியும் சந்தோஷமும் உணர்வுக்கும் உடலுக்கும் உரியன. வலியை (ஆனந்தமாகவும்) சந்தோஷமாகவும், சொரணையை சொரணையில்லாததாகவும் அறிவது உணர்விலும், உடலிலும் இந்த புதிய திருவுருமாற்றத்திற்குரிய நோக்கமாகும்.

 • உடலறியும் சத்திய ஜீவியம் வலியை ஆனந்தமாக்கும்.
 • சிருஷ்டிக்கு முன் உள்ளது ஆனந்தம்.
 • வலி சிருஷ்டியால் ஏற்பட்டது.
 • நன்றும் தீதும் மனத்தின் சிருஷ்டி.
 • சொரணையும், சொரணையில்லாததும், உடலுக்கும், உடல் சம்பந்தப்பட்டதற்கும் உரியவை. திருவுருமாற்றம் என நாம் கூறுவது பல நூற்றாண்டுகட்கு முன் உடலிலும், பிறகு உயிரிலும், சமீபத்தில் 100 ஆண்டு காலமாக மனத்திலும் சுட்டிக் காட்டப்பட்டதுண்டு.
 • இரண்டு நாள் பட்டினியாக இருந்த சிங்கத்திற்கு மனிதனைப் போட்டு, சிங்கம் அவன் உடலைக் கிழித்துச் சாப்பிடுவதைப் பார்த்து மகிழ்ந்தது 2000 ஆண்டுகட்கு முன்.
 • பிறந்த குழந்தை மெலிவாக இருந்தால் அதை வெய்யிலில் போட்டு சாகடித்த நாள் அது.
 • சிவபெருமான் கழுகாக வந்து சிபிச்சக்கரவர்த்தியின் உடலை வெட்டித் தரும்படி கேட்டார். உடல் உலகை ஆண்ட நேரம் அது.
 • கணவன் மனைவியைத் தன் சொத்து எனவும், பெண்டு பிள்ளைகளை அடிக்கவும், கொலை செய்யவும் உரிமை பெற்ற நாள் அவை.
 • உடன்கட்டை ஏறி உடலையே கொடுத்தால்தான் உண்மை என்பது அக்காலம்.
 • உடலுக்குரியது சாங்கியம், சம்பிரதாயம்.
 • வேதம், ஞானம், கர்மமாகப் பிரிந்தது.
 • யாகம், யக்ஞம் என்பது கர்மம்.
 • அவற்றைப் பயபக்தியுடன் செய்தால் எதிர்பார்க்கும் பலன் தவறாது கிடைக்கும்.
 • தீமையொழிந்து நன்மை ஆள வேண்டி பாரத யுத்தம் நடந்தது.
 • கௌரவர்கள் தீமையே உருவானவர்கள்.
 • அவர்கள் வம்சமே அழிந்தது.
 • சத்திய ஜீவியம் முதலில் மனத்தில் எழும்.
 • பிறகு உயிரில் தலைகாட்டும்.
 • முடிவாக உடலையடையும்.
 • உடலிலும் மேற்பகுதி, ஆழம் - ஜீவியம், பொருள் - என இரு பகுதிகள் உள்ளன.
 • உடலின் ஆழத்தைச் சத்திய ஜீவியம் அடைவது சத்திய ஜீவன் பிறப்பது.
 • மனத்தில் எழுந்த சத்திய ஜீவியம் உடலை நோக்கிப் போகும். அதே சமயத்தில் சத்திய ஜீவியம் எழுந்து முனி, ரிஷி, யோகி, அவதார புருஷ நிலைகளையடைகிறது.
 • உடலை அது அடைவதும், அவதாரத்தைக் கடப்பதும் ஒரே நேரம்.
 • கீழும் மேலும் முடிவில் சந்தித்துப் பூர்த்தியாகும்.
 • அந்நேரம் சொரணையற்றதும் சொரணை பெறும்.
 • மனத்திலிருந்து மேலெழும் சத்திய ஜீவியம் முனி, ரிஷி, யோகி, அவதார நிலைகளில் அந்நிலைக்குரிய சத்திய ஜீவியம் - சைத்திய புருஷனை - உருவாக்குகிறது.
 • வாழ்வு பூரணமானது என்பதைக் கீழும் மேலும் சந்திப்பதால் அறிகிறோம்.
 • பூரணத்தின் (dimension) அம்சங்கள் அனந்தம்.
 • அவற்றுள் கீழும் மேலும் சந்திப்பது ஒன்று.

தொடரும்....

******

 

 

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
நினைவைக் கடந்து அன்னையை நினைப்பது அன்னை நினைவு.
 

 

*******book | by Dr. Radut