Skip to Content

03. சாவித்ரி

சாவித்ரி

P.135 In Nescience began her mighty task

         உயர்ந்த அவள் கடமை உதிக்கும் இருளுலகம்

  • முடிவு பெறாத வேலையை அறிவில்லாமல் தொடர்கிறாள்
  • ஞானம் தடம் மாறி திணறுகிறது, விவேகம் கிடைத்தபாடில்லை
  • கண்மூடி பயிலும் நடை மெதுவாக மேலெழுகிறது
  • தெய்வ சக்தி பெற்ற சிறு ஜீவன் எனத் திரியும்
  • நரகத்தின் வாயிலும் வந்து நிற்கும் இளம் ஆத்மாவென
  • சொர்க்கத்தை நாடி மூடுபனியூடே உழலும்
  • மெதுவாக மேலெழும் பாதையில் அவள் நடையைத் தொடர்கிறாள்
  • மங்கலான தெளிவற்ற ஆழ் மனதில் ஆரம்பிக்கும்
  • பூமிக்குக் கடைசி முடிவு வரும் வழி அதுவே
  • இருண்ட இலட்சியத்தையறிய இதுவே வழி
  • நம்மைப் பின்னிழுக்கும் பல, இறைவனுக்குப் புதிரானவை
  • சிறைப்பட்ட ஆத்மாவின் திறந்த வெளி விடுதலை
  • ஆபத்தான வாயில்கள் மூலம் செல்லும் விரைவான பாதைகள்
  • மங்கலான இருளுள் தற்செயலாய் நுழைந்தாள்
  • மனம் எழுமுன் பெருகி நிறையும் உணர்ச்சிகள்
  • உருவம் பெற்று இடம் பிடிக்க முண்டியிடும்
  • இரவும் சாவும் இழைந்து கொண்டாடும் உறவான வாழ்வு
  • சிறு மூச்சுவிட சாப்பிட்ட காலன் அளித்த உணவு
  • தத்தெடுத்த தறுதலை உரிமையுள்ள உறுப்பினராகி
  • ஊமை இருளின் இராஜ்ஜியத்தில் ஏற்ற ஆழ்மனச் சக்தி
  • கொஞ்ச நாள் தங்கும் நம்பிக்கையுமின்றி
  • ஒளிமயமான எண்ணத்திலிருந்து விலகி, சத்தியத்தை ஒதுக்கி
  • உரிமையுள்ள இடம் கண்ணுக்குத் தெரிந்தது – தனித்த பிறவி
  • பதவியிழந்து, உருக்குலைந்த, வேதனையுறும் சக்தி
  • பொய்யின் புதுமுகம் சத்தியத்தை ஏற்று
  • தெய்வப்பிறப்பிற்கு முரணான முகப்பு
  • ஒளியையும், அழகையும் உதாசீனப்படுத்தி
  • விலங்கின் அவமானத்தை விரும்பி உலகுக்கறிவித்து
  • மறைப்பின் துணையின்றி, கடுமையான நிர்வாணம்
  • முத்திரையிட்ட உருவம் ஏற்று, பதித்து
  • சொர்க்கமும், ஜாதியும் விலக்கி நம்பிக்கை இழந்து
  • வீழ்ந்து, அழிவு தரும் நிலையைப் பெருமையாக ஏற்று,
  • தெய்வ சக்தி பெற்றுயர்ந்த சக்தியின் பிடிப்பு
  • விலங்குணர்வின் அருளற்ற அவலம்

*******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
அன்னையை நினைப்பது சிருஷ்டியைக் கடப்பது.
 

*******



book | by Dr. Radut