Skip to Content

09. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்

தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

  1. ஆணிடம் வளர்ந்த பிள்ளை, பெண்ணிடம் உள்ள பணம் போல.
    • பெண் ஆணைவிட பணத்தைக் காப்பாற்றுவார்.
  2. கர்ணனுக்குப் பிறகு கொடையில்லை.
    • காலம் கடந்தபின் எழும் காலத்தின் சிறப்பு.
  3. கிருஷ்ணன் செய்ததைச் செய்யாதே; கிருஷ்ணன் சொன்னதைச் செய்.
    • கிருஷ்ணன் செய்ததும், சொன்னதும் ஒன்றே.
  4. நம்பினோர் கெடுவதில்லை.
    • நம்பினோரை நம்பியவரும் கெடுவதில்லை.
  5. நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக.
    • நாளொரு சமர்ப்பணமும், பொழுதொரு சரணாகதியாகவும்.

தொடரும்....

******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
அதுபோன்ற பத்து வருஷ உழைப்பு, அடுத்த பத்து வருஷச் சிந்தனைக்கு ஜீவனைத் தயார் செய்கிறது.
 
பத்து வருஷ உழைப்பால் பத்து வருஷ சிந்தனை எழும்.

*****



book | by Dr. Radut