Skip to Content

08. யோக வாழ்க்கை விளக்கம் VI

யோக வாழ்க்கை விளக்கம் VI

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

II/14) விஸ்வாசத்திற்கு விஸ்வாசமாக இருப்பவரையே துரோகம் நாடுகிறது.

  • ஆழ்ந்த விஸ்வாசத்தின் மறுபுறம் துரோகம்.  
  • அன்னை வந்த புதிதில் பகவான் Guest House என அழைக்கப்படும் கட்டிடத்திலிருந்தார்.
  • மச்சிலிருந்து கல் விழுந்தது. பகவான் அறை தவிர மற்ற இடங்களில் கல் விழுகிறது.
  • பகவான் சமையல்காரன் ஒரு மந்திரவாதி. அவன் செய்த மந்திரம் எனக் கண்டுபிடித்தார்கள்.
  • அன்னை கல் வீசிய தேவதைகளை அழைத்தார். பலர் வந்தனர். அன்னைக்குச் சரணடைந்தனர்.
  • சேவை செய்ய விரும்பினர். என்ன சேவை செய்வீர்கள் என அன்னை கேட்டபொழுது கல் வீசுவோம் என்றனர்.
  • புதியதாக மந்திரம் பயில்பவர்கள் தங்கள் மந்திரம் பலிக்கிறதா எனக் காண பெரிய மகான்கள் மீது மந்திரத்தை ஏவுவார்கள். அது போல் நடந்த நிகழ்ச்சியிது.
  • துரோகம் செயல்பட நினைத்தால் விஸ்வாசத்திற்கே உறைவிடத்தை நாடும் என்பது மரபு.
  • ஹிட்லர் தன் படை பலத்தை சோதனை செய்ய ரஷ்யா மீது போர் தொடுத்தான்.
  • ஒரு பண்டிதர் தன் பாண்டித்யத்தை நிலைநிறுத்த பெரிய பண்டிதருக்குச் சவால் விடுவார்.
  • சவால் சாதாரண மனிதனுக்கல்ல. துறையில் முதன்மையானவனுக்கு விடும் சவாலே சவால்.
  • ஷேக்ஸ்பியர் கதையில் லீயர் என்ற அரசனுக்கு 3 பெண்கள். பெண்கள் மீது அளவு கடந்த பிரியம் எழுந்து, ராஜ்யத்தைப் பிரித்துக் கொடுத்தார். உயிர் பிரியும் வரை காத்திருக்க- வில்லை. தாமதமேயின்றி மகள்கள் ராஜாவின் பரிவாரங்- களையும், சௌகரியங்களையும் எடுத்துவிட்டனர். தகப்ப- னாரைக் கொடுமைக்காளாக்கினர். துரோகம் தன்னை சோதனை செய்ய அளவு கடந்த பிரியம், விஸ்வாசமுள்ளவரை நாடும்.
  • இந்திரா காந்தியைப் பிரதமராக்கியது காமராஜ். இந்திரா அவருக்கு எதிரியாகி, அவர் மீது அரெஸ்ட் வாரண்ட் பிறப்பித்தார்.

    துரோகம் பூர்த்தி பெற பூர்த்தியான விஸ்வாசத்தை நாடுகிறது.

  • உளுத்துப் போன ஸ்தாபனத்தில் இலட்சியவாதி வந்து சேர்ந்து, இலட்சிய சேவை செய்தால் ஸ்தாபனம் அவன் மீது பாயும்.
  • குடும்பத்திற்காகத் தன்னை சர்வ பரித்தியாகம் செய்பவனை, அனைவரும் சேர்ந்து அழிப்பார்கள்.
  • ஏசுபிரான் அன்பின் புனித உருவம். அவரைச் சிலுவையில் அறைந்தனர்.
  • கைக்குழந்தைக்கு டிரஸ் செய்த பின் கன்னத்தில் கறுப்பு மை வைப்பார்கள்.
    திருஷ்டி படாமலிருக்க அதைச் செய்வார்கள். அக்குறையிருப்பதால் திருஷ்டி படாது.
  • ஒரு ஸ்தாபனத்தில் ஆட்குறைப்புச் செய்யும் பொழுது, முதலாளிக்கு அதிக விஸ்வாசமானவனுக்கு அது இல்லை என அனைவரும் நினைப்பார்கள். அவனையே முதலில் வேலையிலிருந்து எடுப்பார்கள்.
  • முதலாளிகள் பல விதம். ஒரு வகையினர் புதிய ஆளை எடுத்தால், சில நாள் சோதனை செய்வார்கள். எந்தச் சந்தர்ப்பத்திலும் அவன் எதையும் திருடாவிட்டால், அவனை எடுத்து விடுவார்கள். திருடினால், வேலைக்கு நிரந்தரமாக வைத்துக் கொள்வார்கள். தனக்கே திருடாதவன் எப்படி நாளைக்குக் கம்பனிக்காகத் திருடி இலாபம் தருவான் என்பது அவர்கள் கொள்கை.

    திருடாதவனுக்கு வேலையில்லை.

  • ஷேக்ஸ்பியர் எழுதியவை 37 நாடகங்கள். அவற்றுள் 4 நாடகம் (tragedy) துக்கமான முடிவு. ஷைலக் என்ற யூதரைப் பற்றியது பிரபலமானது. சரித்திர சம்பந்தமானவை சில. நாடகங்கள் இத்தாலி, டென்மார்க், கிரீஸ் போன்ற நாடுகளில் நடந்ததாகக் கதை அமைப்பு. ஏதென்ஸ் நகரத்தில் டைமன் என்பவரைப் பற்றிய நாடகம் மனித சுபாவத்தைக் குறிப்பது. நண்பர்கட்கும், உறவினர்கட்கும், விருந்தினர்கட்கும் வாரி வழங்கிய பிரபு டைமன். அவருக்குச் சிரமம் வந்துவிட்டது. பெருவாரியாகப் பெற்றவர் அனைவரும் விலகிய விநோதம் நாடகம்.

    துரோகம் இயல்பாக விஸ்வாசத்தை நாடும் நாடகமிது.

  • விஸ்வாசம் உறவிலும், நட்பிலும் முழுமையானால் உடனே தவறாது துரோகம் எழும்.
    முழுமை பெறுமுன் முன்கூட்டி அதில் குறையை ஏற்படுத்துவது நடைமுறை விவேகம்.

*****

II/15) உணர்வு மையம் விஸ்வாசத்தை நாடுகிறது.

  • நல்லதோ, கெட்டதோ, உணர்வுக்கு யோகமில்லை.
  • விஸ்வாசம் உணர்ச்சி; உணர்ச்சிக்கு யோகமில்லை.  
  • யோகங்களில் உயர்ந்தது ஞான யோகம்.
  • ராஜ யோகம் ஞான யோகத்தைவிட உயர்ந்தது. ஏனெனில் ஞான யோகம் எண்ணத்தால் செயல்படுவது. ராஜ யோகம் முழு மனத்தால் செயல்படுவது.
  • இது நிஷ்டையால் செயல்பட்டு, சமாதியை அடைவது.
  • கீதை இதையே சரணாகதியால் எட்டுகிறது. சரணாகதி நிஷ்டையைவிட உயர்வு என்பதால் கீதையின் யோகம் ராஜ யோகத்தைக் கடந்தது.
  • பூரண யோகம் மனத்தால் செயல்படுவதில்லை; ஆன்மாவால் செய்யப்படுவது.
  • பக்தி யோகம் உணர்ச்சியால் நடப்பது.
  • ஞானம் பக்தியைவிட உயர்வு.
  • பூரண யோகம் உணர்ச்சி, எண்ணம், இதயம், மனத்தைக் கடந்தது.
  • உணர்ச்சி உள்ளவரை பூரண யோகமில்லை. 0 அகந்தையைக் கடந்தால் பிரகிருதியுண்டு.
  • பிரகிருதியைக் கடந்தால் பிரம்மம்.
  • அகந்தை அழிந்தால், மனிதன் விஸ்வமானவா (Universal Man) பிரபஞ்ச மனிதனாகிறான்.
  • இதுவரை செய்த யோகங்கள் மேல்மனத்திற்குரியவை.
  • மேல்மனத்தில் ஞானம், பக்தி, கர்மம், அகந்தை, காலம், இடம் உண்டு.
  • இவற்றைக் கடந்து மோட்சம் பெறலாம்; அது பெரியது.
  • இவற்றைக் கடக்காமலும் மோட்சம் பெறலாம்.
  • படித்து அரசியலில் உயரலாம்.
  • மேல்மனத்தின் அடியில் உள்ளது உள்மனம்.
  • உள்மனத்தில் காலமில்லை; மனம் உயர்ந்து தெய்வீக மனமாகிறது.
  • உள்மனத்தைக் கடந்து அடிமனம் உண்டு.
  • ஆழ்மனமும், பரமாத்மாவும் சந்திக்குமிடம் அடிமனம்.
  • அடிமனத்துள் சைத்தியபுருஷன் உண்டு.
  • பூரண யோகம் சைத்தியபுருஷனால் செய்யப்படுவது.
  • மனம் உள்ளவரை, உணர்ச்சியுள்ளவரை பூரண யோகமில்லை.
  • இவை உயர்ந்த ஆன்மீகப் பலன்கள்.
  • சத்தியம், ஜீவியம், ஆனந்தம், மௌனம் இவற்றால் அறியப்படுவது.
  • அன்பர்கள் இவற்றைவிட லௌகீகப் பலன்களான பதவி, காரிய சித்தி, பணம், பிரபலத்தில் பூரண யோகப் பலனை அறிவார்கள்.
  • மனம் நிஷ்டையில் எண்ணம், உணர்வைக் கடந்தால் பூரண யோக ஜீவியம் லௌகீகப் பலனாகத் தெரியும்.
  • கம்பனி அக்கௌண்டட்டிற்கு 15 இலட்ச ரூபாய் வீடும், பெற்றோருக்கு 15 இலட்ச ரூபாய் வீடும் ரொக்கம் கொடுத்து வாங்க ஆசை. அவர் சம்பளத்தில் ஓய்வு பெறும் வரை நடக்காது.
  • மனைவியிடம் கூறினார். அவர் அன்பர். அவர் அன்னை முறைகளைப் பேசிய பொழுது எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கையில்லை என்றார்.
  • மனைவி அன்னை முறை ஒன்றைத் தேர்ந்தெடுத்து பின்பற்ற முடிவு செய்தார்.
  • பல நாள் கடக்கவில்லை. சில நாட்களில் கணவன் கம்பனி, கணவனுக்கு ஒரு வேலையைக் (extra work outside the office) கொடுத்தது. குறைவற நிறைவேற்றினார். 37 இலட்சம் கமிஷன் கிடைத்தது.
  • அடிக்கடி அன்பர் வாழ்வில் நடப்பது.
  • அதை நிலையாகச் செய்வது பூரண யோகம்.
  • எண்ணம், உணர்ச்சி, மனம், இதயம் உள்ளவரை இது இல்லை.

தொடரும்....

*****

 

ஜீவிய மணி
 
திரைக்குப் பின்னாலுள்ளது தெய்வம்.
 
 
*****
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
"இலட்சியவாதிகள், தீவிரவாதிகள், அரசியலிலும், போரிலும் ஒரே குறியாக தங்களை மறந்து சாதிக்கின்றார்கள். அவர்கள் சாதனை அறியாமையின் சாதனை'' என்கிறார் பகவான்.
 
அறியாமையின் சாதனை அளவு கடந்த சாதனை.
 
*****
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
ஒரு காலத்தில் புனித உணர்வுகள் வேறொரு காலத்தில் கேலிக்குரியவை. உணர்வுகள் குறிப்பிட்ட காலத் தேவைகளால் நிர்ணயிக்கப்படுபவை. யுகாந்தர காலப் பண்புகள் அல்ல.
 
புனித உணர்வும் புரையோடிப் போகும்.
 
*****



book | by Dr. Radut