Skip to Content

07. அன்பர் கடிதம்

அன்பர் கடிதம்

இக்கடிதம் அன்னையின் மலரடிக்கு சமர்ப்பணம்.

அன்புள்ள அப்பாவிற்கு,

மகேஸ்வரி எழுதிக் கொள்வது. அப்பா, நானும் எனது குடும்பத்தாரும் சுமார் 7 வருட காலமாக அன்னையின் பக்தர்களாக இருக்கிறோம். அப்பா பல நேரங்களில், பல இன்னல்களில், பல காரியங்களில் அன்னை எங்களுடன் இருப்பதை உணர்ந்துள்ளோம். அனேக காரியங்களில் அனுகூல செயல் வடிவமாக அறிந்துள்ளோம். ஆனால் இப்போது என் குடும்பத்திற்கு நேரடியாக வந்து சக்தியாக செயல்பட்டதை, என்னால் காண முடிந்தது. அதன் சாட்சியாகவே இக்கடிதத்தை அன்னைக்கு சமர்ப்பணம் செய்கிறேன். அப்பா, நான் இரண்டாவது குழந்தை கருவுற்றிருந்தேன். எனக்கு நவம்பர் மாதம் 11ந் தேதி due date கொடுத்தார்கள். ஒவ்வொரு மாதமும் தவறாது check-up செய்து வந்தேன். September 4ந் தேதியுடன் 7 மாதம் முடிவடைந்தது. மருத்துவமனையிலும் நல்ல condition, குழந்தையும் நலமாக உள்ளது என்று doctor சொன்னார்கள். நான் Siddha Govt. Medical கல்லூரியில் படித்து வருகிறேன். 8ந் தேதி September மாதம் காலையில் கணவர் என்னை கல்லூரியில் விட்டு சென்றார். 32 வருட காலத்தில் எனக்கு High B.P. என்பதே கிடையாது. கடைசியாக மருத்துவ சோதனையின்போதுகூட 70/90. Low B.P., நன்றாக சாப்பிடுங்கள் என்று advice செய்தார்கள். ஆனால் கல்லூரியில் எனக்கு வாயிலிருந்து ரத்தமாக வாந்தி ஏற்பட்டது. கல்லூரியிலிருந்து நேராக என் மருத்துவரிடம் சென்றதும், அவர்கள் உடனடியாக, "எங்கள் மருத்துமனையில் குழந்தையையும், உன்னையும் காப்பாற்றுவதற்கான வசதியில்லை. உடனடியாக அரசு மருத்துவமனைக்கு செல்லவும்'' என்று emergency கடிதம் கொடுத்து அனுப்பிவிட்டார்கள். காரணம், எனக்கு uncontrolled B.P. 110/170; குழந்தைக்கு guarantee கிடையாது; உடனடியாக terminate செய்யவும் என்று எழுதி கொடுத்தார்கள். அன்று மாலை 3 மணியளவில் Govt. Hospital சென்றேன். Emergency careல் admit செய்தார்கள். மேலும் குழந்தை movementல் உள்ளது. இன்னும் சிறிது காலம் தள்ளலாம் என்று என்னை பிரசவ அறையிலேயே தங்க வைத்து, அடிக்கடி check-up செய்தார்கள். என்னால் நடமாட இயலாதபடி கை, கால், முகம் முழுவதும் வீக்கமடைந்து, எனது normal weightஐவிட 12 கிலோ அதிகமாக இருந்தேன். எனக்கு Govt. Hospital என்றாலே பிடிக்காது. சுத்தமாக இருப்பதில்லை என்பதாலும், சரியான சிகிச்சை இருப்பதில்லை என்பதாலும் பயந்தேன். அதுவும் முதல் குழந்தை அறுவை சிகிச்சை மூலம் பிறந்தவள். ஆனால் private என்பதால் ரொம்ப கஷ்டம் எதுவும் தெரியவில்லை. General anaesthesia. 1 வாரக் காலத்தில் எனது வேலைகளை செய்ய ஆரம்பித்துவிட்டேன். ஆகையால் அதே hospitalலில்தான் 2வது குழந்தைக்கும் பார்த்து கொண்டிருந்தேன். 15 ஆயிரம் வரை செலவாகும் என்றார்கள். அதற்காக என் கணவர் நகைகளை வைத்து, பணத்தை readyயாக வைத்திருந்தார். ஆனால், General Hospitalலில் admit ஆனோம். அதுவே எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. என்னை பார்த்துக் கொள்ள ஆளும் யாரும் இல்லாததால் என் கணவரும், குழந்தையும் கூட மிகவும் அவஸ்தைபட்டார்கள். உண்பதற்கு உணவு சரியாக இல்லாமல், வீட்டிற்கும் மருத்துவமனைக்கும் அலைச்சல். மேலும் ICU என்பதால் ஒருவரும் பார்க்கக் கூடாது. இப்படியே 10 நாட்கள் தள்ளினேன். அன்னையை மட்டுமே என் மனம் அழைத்துக் கொண்டு இருந்தது. புரட்டாசி மாதம் 2ஆம் நாள் சனிக்கிழமை அதிகாலையில், வெகுநாட்களாக குளிக்கவில்லை என்பதால் தலைக்கு குளித்தேன். அன்று காலை 6.30 மணியளவில் பனிக்குடம் உடைந்துவிட்டது. உடனடியாக என்னை operation theatreக்கு அழைத்து சென்று விட்டார்கள். B.P. high, uncontrolled; உடல் ஊதிய நிலை; தலைக்கு குளித்ததால் A/c.யில் operation என்பதால் ஜன்னி ஏற்பட்டது. ரத்தம் குறைந்து, ஒரு புறம் ரத்தம் ஏறிக் கொண்டிருந்தது. Hemoglobin level 5.5க்கு வந்தது. ஆகையால் இருவர் உயிருக்கும் உத்திரவாதமில்லை என்று கையெழுத்து வாங்கிக் கொண்டார்கள். அன்னையை மட்டும்தான் என்னால் நினைக்க முடிந்தது. எனக்கு நம்பிக்கை, இந்த குழந்தை என் அன்னையின் ஜீவன் என்று, என்னால் உணர முடிந்தது, குழந்தைக்கு ஒன்றும் ஆகாது என்று. அன்னையை முழுமையாக அழைத்துக் கொண்டு இருந்தேன். மருத்துவர்கள், "உன் குழந்தை பற்றி ஒன்றும் சொல்ல இயலாது. 990gm உள்ளது என்றார்கள். Incubatorஇல் வைத்துவிட்டார்கள். மீண்டும் என்னை ICUஇல் போட்டார்கள். எனக்கு அருகில் டெங்கு ஜுரத்தால் உயிருக்கு போராடும் ஒரு பெண். எனக்கோ 104º ஜுரம். என்னால் மரணத்தின் கடைசி உணர்வை உணர முடிந்தது. அன்னைûயை அழைத்தேன். நான் ஒவ்வொரு தருணத்திலும் அன்னையைக் கண்டேன். Chief Medical Officer மூலமாக எனது caseஐ அவர்களது முழு நேரடி பார்வையில் மாற்றம் செய்து, என்னை கவனித்து கொண்டார்கள். பொது வார்டில்கூட எனக்கு special கவனிப்பு மற்றும் சுத்தமான சூழலில் இருப்பதற்கான வாய்ப்பு என அனைத்தையும் அன்னை எனக்கு ஏற்படுத்தி தந்தார். Deliveryஆன பிறகும் 8 நாட்கள் கழித்து, 26ஆம் தேதிதான் குழந்தையைப் பார்த்தேன். எலும்பும், தோலுமாக பார்க்கவே பயமாக இருந்தது. ஆனால் ஜீவன் அன்னையுடையது. என் குழந்தை, நான்தான் அணைக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்க தொட்டேன். உணர்ந்தாள் என் ஸ்பரிசத்தை; அழுதாள்; தூக்கினேன். மதியம் மீண்டும் incubator சென்றபோது அந்த emergency careஇல் குழந்தை இல்லை; பதறினேன். எதிர் wardஇல் உள்ளது என்றார்கள். அப்படியென்றால் safer zone என்று அர்த்தம் என கூறினார்கள். தாய்பாலை squeeze செய்து கொடுத்துவிட்டு, மீண்டும் மாலை பார்க்க வந்தேன். "உன் குழந்தையை கையில் கொடுக்கிறோம். இனி உன் தாய்பால் மூலமாக weight increase செய்யணும். 1¼kg வரும்போது babyஐ discharge செய்கிறோம்'' என்றார்கள். என் கையில் கொடுத்தபோது குழந்தை 830 gm. 26ஆம் தேதி முதல் 16ஆம் தேதி October வரை குழந்தை 1 kg 230 gm வந்தாள். என்னை discharge செய்து வீட்டிற்கு அனுப்பிவிட்டார்கள். இதற்கிடையில் Headக்கு scan செய்தார்கள். அன்னையினை அழைத்து கொண்டே scan centre சென்றேன். வழியிலேயே அன்னையைக் கண்டேன், chief doctor வடிவில்; உணர்ந்தேன் மானசீகமாக, குழந்தைக்கு குறையில்லை என்பதை. குறை மாத குழந்தைக்கு rop என்ற கண்திரை நோய் ஏற்படும் என்றார்கள். கண் பரிசோதனையின்போது இவளுக்கு rop முதல் கட்டம். அடுத்த வாரம் check-upஇல் அதிகமானால் operation செய்து நீக்க வேண்டும் என்றார்கள். தினமும் அன்னையின் திருநாமத்தை அழைத்து, அன்னையின் சிறிய படத்தை குழந்தையின் கண்களுக்கு காட்டி, நேத்ரா தேவிக்கு வேண்டுதலை சமர்ப்பணம் செய்து வந்தேன். அடுத்த வாரம் check-upஇல் operation stage இல்லை, சரியாகிவிடும் என்று doctor சொன்னார்கள். இப்படியாக இந்த 1½ மாத காலமாக அன்னை என்னுள்ளேயே இருந்து, தாயும், சேயும் நலமாக வாழ உதவி செய்தார்கள். அன்னையை நினைக்கும்போது என் மனம் என் தவறுகளை எண்ணி வெட்கமடைகிறது. அன்னையின் அரவணைப்பை எண்ணி பரவசமடைகிறது. அன்னைக்கு என் கோடான கோடி நன்றியை பாதக்கமலத்தில் சமர்ப்பணம் செய்கிறேன். அப்பா, நான் மேலும் கல்வியை தொடரவும், என் முதல் பையன், அவனுக்கு படிப்பில் ஆர்வமின்றி உள்ளான்; அவனது கல்வி மேம்படவும் அன்னையின் அருள் கிடைக்க எங்களை ஆசிர்வாதம் செய்யுங்கள். அப்பா தொழிலிலும் நிறைய போட்டிகள். அதை சமாளித்து, வெற்றி காணவும், என் கணவரின் உடல்நிலை மற்றும் மன அமைதி மேம்படவும், எங்கள் குடும்பம் அன்னையின் மலரடியை என்றும் வணங்கி ஆசி பெறவும் எங்களுக்கு அருள் புரியுங்கள். இன்று குழந்தை 1½ kg உள்ளாள். ஜய வசுந்தரா எனப் பெயர் வைத்துள்ளோம். எங்களின் செயல்களும், சிந்தனைகளும் அன்னைக்கு சமர்ப்பணம்.

நன்றி! நன்றி! நன்றி!

15 ஆயிரம் ஆகக்கூடிய செலவினை free யாக Govt.Hospitalஇல் செலவின்றி குழந்தையும் நானும் வீட்டிற்கு வந்தோம்.

அன்னையின் அற்புதம் சொல்லில் அடங்காதது.

நான் ஒரு சாட்சியாக இருக்கவே இக்கடிதத்தை எழுதுகிறேன். எழுத்தில் வேண்டுமானால் சாதாரணமாக தோன்றலாம். ஆனால், இந்த அனுபவம் எனக்கு நிறைய படிப்பினை கொடுத்தது. ஒரு மருத்துவரின் கடமையை உணர்த்தியது. நான் நிறைய மருத்துவ விஷயங்களை உணர, அறிய வழி செய்தது. நிறைய அனுபவங்கள் கிடைத்தது. என் படிப்பின் முக்கியத்துவத்தையும் என்னால் உணர இயன்றது. அப்பா, என் கல்லூரி படிப்பை முடித்து, சிறந்த மருத்துவராக சேவை செய்வேன். இச்செயலும் அன்னைக்கு சமர்ப்பணம். அப்பா, என் உள்ளம் திருவுருமாற்றம் பெற சக்தி கொடுங்கள். கோபம், பொறாமை, ஆசை, இன்பம் என்று கட்டுண்டு இராமல், விரிந்து பரந்த நோக்குடன் செயல் புரிய ஆசி தாருங்கள். நாங்கள் செய்யக்கூடிய தொழிலை மேலும் விரிவுப்படுத்தவும், முறைப்படுத்தவும் சக்தி தாருங்கள்.

நன்றி அப்பா!

-- மகேஸ்வரி கிருஷ்ணமூர்த்தி, சென்னை.

******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
அதிகமாகப் பின்பற்றுவதும், உடலின் எதிர்ப்பும் - ராகு காலம், சிறு வயது திருமணத்தை அழிப்பது - எதிர்பாராத அசம்பாவிதமான விளைவுகளை ஏற்படுத்தும். இந்த விஷயத்தைப் பொருத்தவரை உள்ளுணர்வு உடல் அளவில் திருவுருமாற்றமடையும்வரை அவை இருக்கும்.
 
எதிர்ப்பு எதிர்பாராத விளைவைத் தரும்.

 

*****



book | by Dr. Radut