Skip to Content

05. சாவித்ரி

சாவித்ரி

P.122 Even severed, straying from their timeless source,

         மூலத்தினின்று பிறழ்ந்து, பிரிந்து நின்று,

  • ஊனமுற்று, இருண்டு, சபிக்கப்பட்டு, நிலையிழந்து,
  • தரையில் வீழ்வது தணியாத குதர்க்கமான இன்பம்
  • ஆனந்த ஸ்பர்சமுள்ளது அவளிடமிருந்து தப்பாது,
  • இவை மலையுச்சியை எட்டும், எட்டித் தொடும்
  • அது ஆத்மாவின் வீழ்ச்சியின்று காப்பாற்றும்,
  • இழந்த தெய்வீகத்தை இனிமையாக இனிப் பெறும்.
  • பிரம்ம திருஷ்டியின் வீச்சில் பிடிபட்ட நிகழ்ச்சி
  • உயர்ந்த லோகங்களின் உன்னதப் பெருமையைக் கண்டனர்
  • தாழ்ந்த ஆழத்தில் தவழும் லோகங்கள்.
  • அழியாத பிரம்மத்தின் ராஜ்ஜியம் மேலே,
  • பாதாளம் செய்யும் பவித்திரமான தவம் கீழே,
  • எதிரான துருவம், பூமியின் மறுமுனையான எதிர்முனை.
  • வாழ்வின் பூரணம் பெருமை நிறைந்த பரப்பு:
  • மரணமழிந்த மகிமையில் அனைவரும் கலகலத்துப் பூரித்தனர்
  • ஆத்மாவின் குழவிப் பருவம் காலத்தின் பிடியின்று வெளிவந்தது
  • அது இருளுக்கு முன், வலியும் கவலையும் வடிவம் பெறுமுன்
  • ஏகனும் அநேகனும் இணையும் லோகம்
  • பாவமறியாத பவித்திரம் ஏற்ற விவேகம்
  • சத்தியம் சூரிய உதயமானால், சுதந்தரம் ஆடையற்ற நிர்வாணம் பெறும்.
  • குதூகலம் கொந்தளிக்கும் லோகம், பரிகசிக்கும் பலன் பெறும் வாழ்வு,
  • உழலும் போராட்டம் எழுப்பும் கண்ணீர் உற்ற அரங்கம்;
  • காதல் நிறை காலனின் மார்பில் பதித்த அவள் சிரம்,
  • சமாதியின் அமைதியை போலியாக ஏற்கும் உறக்கம்.
  • இருளின்று விலகி இறைவனின் ஒளியை நாடி
  • எதிர்ப்பின் ருசி ரஸமாகும் சோதனை.
  • இதயத்தில் இணையும் எதிர்ப்பு எழுப்பும் சுருதியும் வண்ணமும்
  • அவன் ஜீவன் விரியும் ரகங்களின் கோர்வை,
  • காலத்தின் கதியெனும் அவன் வாழ்வின் நீரோட்டம்,
  • அவன் சுபாவத்தின் அசையாத நிலையான ஓட்டம்,
  • அசையும் படத்தின் மாறும் தோற்றம் அவனது ஆத்மா,
  • பிரபஞ்ச குழப்பமான அவனது சுபாவம்.
  • சிருஷ்டிக்கும் லோகமாதா தரும் சில்லிடும் ஸ்பர்சம்
  • சக்தியின் கனவுலகம் பெற்ற வருத்தம்,
  • ஆழங்காணாத புதிரின் வேகம் நிறைந்த விளையாட்டு.

******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
பரிணாம வளர்ச்சி நிலையில் கருவியின் நிலையைப் பொருத்து, கருவி திருவுருமாற்றம் அடையலாம்; அல்லது கரையலாம், அல்லது நம்மை விட்டு அகலலாம்.
 

*****



book | by Dr. Radut