Skip to Content

08. அன்பர் கடிதம்

அன்பர் கடிதம்

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய.

ஸ்ரீ அன்னைக்கும் பகவானுக்கும் அநேக நமஸ்காரம். அப்பா அவர்கள் பொற்கமல பாதம் பணிந்து இக்கடிதம் எழுதுகிறேன். 2001ஆம் ஆண்டு தஞ்சாவூர் தியானமையம் மூலம் அன்னையை தெரிந்துகொண்டேன். அன்னையை ஏற்றுக்கொண்டபின் எத்தனையோ மாற்றங்கள் எங்களிடம் ஏற்பட்டுள்ளன. மார்ச் மாதம் 600 கிராம் வெயிட்டில் என் பெண்ணுக்கு 6 மாதத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. எடையும் குறைவாக உள்ளது, ஆறாவது மாதம் பிறந்துவிட்டது, அது பிழைக்காது என டாக்டர்கள் முடிவு எடுத்துவிட்டார்கள். பின் தஞ்சாவூர் சென்டர்க்கு தினமும் போன் செய்து நானும் அவர்களும் பிரார்த்தனை செய்து, அன்னை அருளால் குழந்தை இப்பொழுது நன்றாக இருக்கிறது. அடுத்து, செப்டம்பர் 29ஆம் தேதி எனக்கு முதுகு தண்டுவடத்தில் ஆபரேஷன் நடந்தது. எனக்கு ஆபரேஷன் செய்ய பயமாக இருந்ததால் ஆறு மாதங்கள் யோசித்துக்கொண்டு தஞ்சாவூர்க்குப் போன் செய்தும் அன்னையிடம் பிரார்த்தனை செய்தும் ஒரு முடிவுக்கு வந்து ஆபரேஷன் செய்ய நினைத்து நாகர்கோவில் ஆஸ்பத்திரியில் சேர்ந்தேன். எல்லோரும் என்னிடம் சென்னையில் நன்றாகச் செய்வார்கள். அங்குச் சென்று செய் என்று சொன்னார்கள். நான் எங்கு இருந்தாலும் அன்னையும் பகவானும் தானே எல்லாம் செய்ய வேண்டும் என்று நினைத்து நாகர்கோவில் எங்களுக்கு பக்கமாகவும், ஆபரேஷன் பணச் செலவும் குறைவாக இருக்கும் என்பதால் அங்குச் சேர்ந்தேன். ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்துச் செல்ல ஸ்டெரச்சர் வந்தபின்பு அன்னை, பகவானிடம் காணிக்கை வைத்து வேண்டிவிட்டு ஸ்டெரச்சரில் படுத்து, ஆபரேஷன் தியேட்டருக்குச் சென்றேன். எனக்கு ஆபரேஷனுக்கு general anesthesia முழுமயக்கமருந்து கொடுத்துவிட்டார்கள். ஆனால் மயக்கம் வந்தபிறகு மயக்க நிலையில் அன்னையும் பகவானும் மட்டும் ஆபரேஷன் தியேட்டரில் காட்சியாக தெரிந்தார்கள். முதுகில் பட்டறையில் ஸ்குரு வைத்து ஓட்டை போடுவதுபோல் பயங்கரமான அதிர்வு முதுகுத் தண்டு முழுவதும் இருந்தது. வலி இல்லை. ஆனால் அதிர்வு முழுவதும் உணர்ந்த நிலையில் அன்னை பகவான் காட்சியுடன் கை, கால், வாய் எதுவும் அசைக்க முடியவில்லை. ஆனால் முதுகுத்தண்டில் அதிர்வு மிக அதிகமாகவும் அன்னை, பகவான் காட்சியாகவும் நன்றாக உணர முடிந்தது. இன்றும் என் மனக்கண்ணில் உணர முடிகிறது. வெளியே I.C.U.க்குக் கொண்டு வந்தவுடன் என் பெண் என்னைப் பார்க்க வந்தவுடன் அவளிடம் எனக்கு ஒன்றுமில்லை. ஆபரேஷன் தியேட்டரில் அன்னையும் பகவானும் கூடவே இருந்தார்கள் என்று சந்தோஷமாகக் கூறினேன். அவளுக்கு ஒரே ஆச்சரியம். அன்னையே இன்றும் எப்பொழுதும் எங்களுடனே இருந்து, எங்கள் குடும்பத்திற்கும், பெண்கள் குடும்பத்திற்கும் பாதுகாப்பும் துணையும் தந்து அருள வேண்டும். எத்தனைப் பிறவி எடுத்தாலும் அன்னை அன்பராகவே பிறக்க வேண்டும்.

அன்னைக்கு நன்றி.

-- கல்யாணி, திருநெல்வேலி.

******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
பகவான் "நான்'' என்ற சொல்லைப் பயன்படுத்துவது அரிது. பிற்காலத்தில் தம்மை "ஸ்ரீ அரவிந்தர்'' எனவும் குறிப்பிட்டார்.
 
பகவான் குறிப்பிட்ட ஸ்ரீ அரவிந்தர்.

******



book | by Dr. Radut