Skip to Content

05. பாரம்பரிய ஆன்மீகமும், அன்னை மற்றும் பகவான் கண்ட புதிய ஆன்மீகமும்

பாரம்பரிய ஆன்மீகமும்,

அன்னை மற்றும் பகவான் கண்ட புதிய ஆன்மீகமும்

N.அசோகன்

வ. எண்
பாரம்பரிய ஆன்மீகம்
அன்னை மற்றும் பகவான் கண்ட புதிய
ஆன்மீகம்
1.
உலகம் என்பது ஒரு மாயை, எனவே அதிலிருந்து நாம் விடுபட வேண்டும்.
உலகம் மாயையில்லை. மாறாக அது உண்மையானது. ஆகவே அதிலிருந்து விடுபட நினைக்காமல் அதைத் திருவுருமாற்றம் செய்ய நினைக்க வேண்டும்.
2.
பிரம்மத்தை நம்மால் அறியவோ, உணரவோ முடியாது.
பிரம்மத்தை நம்மறிவால் உணர முடியவில்லை என்றாலும் ஜீவியத்தின் உதவியைக் கொண்டு நாம் பிரம்மத்தை உணரலாம்.
3.
ஆன்மா என்றும் மாறாதது. ஆகவே அதற்குப் பரிணாம வளர்ச்சியில்லை.
ஜீவாத்மாவின் பிரதிநிதியான சைத்தியப்புருஷனுக்கு மாற்றமும், பரிணாம வளர்ச்சியுமுண்டு.
4.
நம் ஜீவனின் எந்த பகுதியிலிருந்தாவது ஆன்மாவை விடுவித்து அதன் மூலம் மோட்சம் அடைய வேண்டும்.
நம் ஜீவனின் எல்லாக் கரணங்களையும் திருவுருமாற்றம் செய்து, அதன் மூலம் நம் பர்ஸனாலிட்டியை முழுவதும் தெய்வீகமயமாக்க வேண்டும்.
5.
வேலை செய்தால் கர்மம் உற்பத்தி ஆகிறது. கர்மம் சேர்ந்தால் மறுபிறப்பு வருகிறது. ஆகவே மறுபிறப்பைத் தவிர்க்க நாம் வேலையையே தவிர்க்க வேண்டும்.
வேலையை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். மேலும் நம் திருவுருமாற்றத்திற்கு கருவியாக  வேலையைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
6.
பணம், பதவி மற்றும் பெண்கள் ஆகியவை ஒதுக்கப்பட வேண்டும்.
பணத்தை நாம் அசுர சக்திகளிடமிருந்து மீட்டு இறைவனிடம் ஒப்படைக்க வேண்டும். ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் ஆன்மீகத்தில் உரிமை இருக்கிறது.
7.
ஆண்டவனை மனிதன்தான் தேடிப் போக வேண்டும்.
மனிதன் ஆண்டவனைத் தேடுவதைவிட ஆண்டவன்தான் மனிதனை அதிகமாகத் தேடுகிறான்.
8.
குருநாதருடைய வழிகாட்டல் இன்றியமையாததாகும்.
நம் உள்ளிருக்கும் இறைவன் தான் நமக்கு, குருவாக அமைவார்.
9.
தெய்வலோகத்தில் உள்ள கடவுள்களை வழிபட்டுக் கொண்டிருந்தால் மனிதனுக்கு அது போதும்.
கடவுள்களை வழிபடுவதைத் தாண்டி வந்து மனிதன் சத்தியஜீவியத்தை நோக்கிச் செல்லவேண்டும்.
10.
மனிதன் வாழ்க்கைக்கும், இயற்கைக்கும் கட்டுப்பட்டவன்.
உள்ளிருக்கும் இறை அம்சத்தை மனிதன் கண்டுபிடித்துவிட்டான் என்றால் மனிதன் தன்
கட்டுப்பாட்டிற்குள் வாழ்க்கையையும், இயற்கையையும் கொண்டுவர முடியும்.
11.
அகந்தை கரைய வேண்டும்.
அகந்தைக்குப் பதிலாக ஆன்மாவின் தனித்தன்மை வெளிப்பட வேண்டும்.
12.
மேலுலகத்தில்தான் நாம் பேரின்பத்தை அனுபவிக்க வேண்டும்.
வாழ்க்கை தெய்வீகமயமாகும் பொழுது அதே பேரின்பத்தை நாம் இங்கு அனுபவிக்கலாம்.
13.
அறியாமை, தீமை, துன்பம் ஆகியவைகள் எல்லாம் உலகில் என்றும் நிலைத்து இருக்கும்.
சத்தியஜீவியம் பூவுலகில் வெளிப்படும்பொழுது இவையெல்லாம் மறைந்து உலகம் ஓர் அற்புதமாகக் காட்சி அளிக்கும்.
14.
சமூகத்திற்குத் தனிமனிதன் கட்டுப்பட வேண்டும்.
ஆன்மீகத் தனித்தன்மை உள்ளவரை சமூகம் கட்டுப்படுத்தாது.
15.
உடம்பை உதாசினப்படுத்த வேண்டும்.
சத்தியஜீவியத்தை பிஸிக்கல் லெவலில் கொண்டுவர உடம்பு ஓர் அஸ்திவாரமாக அமையும்.
16.
வாழ்க்கையையும், யோகத்தையும் இணைக்க முடியாது.
வாழ்க்கையையும், ஆன்மீகத்தையும் இணைத்து யோகமயமான வாழ்க்கையும் வாழமுடியும்.
17.
எதிர்மறையான இரட்டைகள்தாம் நமக்குத் தெரிந்தவை.
பொய், இருட்டு, தீமை என்றிவற்றின் கலப்பே இல்லாமல் தனித்து விளங்கக்கூடிய உண்மை, ஒளி, மற்றும் நன்மைகளும் உண்டு.
18.
முரண்பாடுகள் ஒன்றுக்கொன்று எதிரானவை.
நமக்கு எதிர்மறையான முரண்பாடுகளாகத் தெரிபவை உண்மையில் ஒன்றோடு ஒன்று
ஒத்துப்போகக்கூடியவை.
19.
ஜடம் சச்சிதானந்தத்திலிருந்து மிகவும் வேறுபட்டது.
நாம் ஜடமென்று சொல்வது ஆனந்தத்தின் திட வடிவமாகும்.
20.
பிறவித் தளையிலிருந்து விடுபடுவதற்கு ஆன்மா விரும்புகிறது.
பிறவியிலிருந்து விடுபடுவதைவிட வாழ்வில் வெளிப்படுவதைத்தான் ஆன்மா விரும்புகிறது.
21.
கர்மத்தை நாம் கரைக்க முடியாது. ஆகவே வேலை செய்வதைத் தவிர்த்து அதன் மூலம் கர்மம் சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
சத்தியஜீவிய அருளின் செயல்பாடு மூலமும், கடந்தகாலச் சமர்ப்பணத்தின்
மூலமும் கர்மத்தைக்கூட நாம் கரைக்கலாம்.
22.
மனிதன் வெறும் பக்தனாக இருந்து கொண்டு ஆண்டவனை எட்ட இருந்து வழிபட வேண்டும்.
மனிதனே ஆண்டவனாகலாம் என்னும்பொழுது ஏன் வழிபாட்டுடன்
நிறுத்திக்கொள்ள வேண்டும்?
23.
கடுமையான விரதங்களும் உடம்பை வருத்திக் கொள்வதும் ஆன்மீக முன்னேற்றத்திற்கான அடையாளங்கள்.
விரதங்களும், உடம்பை வருத்திக் கொள்வதும் ஆன்மீகப் பக்குவத்திற்கான அடையாளங்கள்
இல்லை. படைப்பின் நோக்கமே ஆனந்தம் எனும்பொழுது வலியைத் தேடிப்போகாமல் நாம் ஆனந்தத்தை நாடிப்போக வேண்டும்.
24.
தனிப்பட்ட மனிதனுடைய மோட்சம் தான் ஆன்மீகத்தினுடைய நோக்கமாகும்.
பூவுலக வாழ்க்கையை முழுவதுமாக தெய்வீகமயமாக்குவது தான் புதிய ஆன்மீகத்தின் நோக்கமாகும்.
25.
ஆன்மீக ஞானத்தையும், பாரம்பரியத்தையும் பாதுகாக்க மடங்களும், ஆசிரமங்களும் தேவைப்படுகின்றன.
அவரவரும் அவரவருக்கென்று தனியாக ஆன்மீகப் பாதையை
வகுத்துக்கொள்ளலாம். ஆகவே எவரும் மற்ற எவரையும் பின்பற்றத் தேவையில்லை. மடங்களும், ஆசிரமங்களும் நாளாவட்டத்தில் சாரத்தை இழந்து வெறுந் தோற்றத்தைமட்டும் தக்க வைத்துக்கொள்கின்றன. இப்படி இருப்பது ஆன்மீகத்தின் உண்மைக்கும், புதுமைக்கும்
எதிரானது.
26.
சாஸ்திரங்களில் எழுதியிருப்பது என்றும் உண்மை. அதை யாரும் கேள்வி கேட்கக் கூடாது.
மனிதன் சேகரிக்கும் அறிவு வளர்ந்துகொண்டே இருப்பதால் சாஸ்திரங்கள் கூறுகின்ற பழைய
விஷயங்களை விலக்கிவிட்டு புது விஷயங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
27.
படைப்பில் ஒரு தொடர்ச்சியான முன்னேற்றம் இருப்பதாகவே பாரம்பரிய ஆன்மீகத்தில் ஒரு
கருத்தே இல்லை.
மனிதனுக்கு அடுத்தாற்போல் சத்தியஜீவிய மனிதன் தோன்றுவான். இப்படி ஒரு பரிணாமவளர்ச்சி படைப்பில் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கும்.
28.
பாரம்பரிய ஆன்மீகத்தில் சடங்கு மற்றும் சம்பிரதாயங்கள் மிகவும் முக்கியமாகும்.
சடங்கு மற்றும் சம்பிரதாயங்களுக்குப் பதிலாக இடையறா நினைவு மற்றும்
சமர்ப்பணம் ஆகியவற்றை உள்ளே வளர்த்துக்கொள்ள வேண்டும்.
29.
ஏழ்மையும், கடுமையான விரதங்களும் ஆன்மீகப் பக்குவத்திற்கு
அடையாளங்களாக எடுத்துக் கொள்ளப்படுகின்றன.
ஏழ்மைக்குப் பதிலாக எளிமை வரவேற்கப்படுகிறது. செல்வவளம் ஆன்மீகத்திற்கு எதிரானதாகக் கருதப்படாமல், மஹாலஷ்மியின் வெளிப்பாடாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.
30.
மனிதன் தன்னுடைய யோகசாதனையைத் தானே செய்ய வேண்டும்.
சாதகர் அன்னையிடம் சரணம் அடைகிறார். சாதகருக்கு உள்ளிருக்கும் அன்னையே
சாதனை செய்வார்.
31.
எழுத்தில் இருக்கின்ற விளக்கங்கள் மிகவும் குறைவு. குருநாதருடைய
வாய்மொழி விளக்கங்களாகத் தான் பெரும்பாலான விஷயங்கள் வருகின்றன. அவற்றைக் கேள்வி கேட்காமலேயே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
எல்லா விஷயங்களும் விபரமாக எழுதி வைக்கப்பட்டுள்ளது. சந்தேகங்களுக்கு விளக்கம்
தரப்படுகின்றன. கலந்துரையாடலுக்கு இடம் உண்டு.
32.
படைப்பு எவ்வாறு நிகழ்ந்தது என்பதற்கு ஓர் அர்த்தமுள்ள மற்றும் அறிவுக்குப் பொருத்தமான ஒரு விளக்கம் இல்லை.
படைப்பிற்குப் பின்னிருக்கும் அடிப்படையான செயல் முறைகளும் நிகழ்வுகளும்
விவரமாக விளக்கப்பட்டு உள்ளன.
33.
படைப்பில் அவதாரங்களைப் பற்றிய கருத்துண்டு. ஆனால்
பிரம்மம் எப்படிப் படைப்பாக மாறியது மற்றும் படைப்பு எப்படி மீண்டும் பிரம்மத்தை
நோக்கி செல்கிறது என்பது பற்றி விளக்கம் இல்லை. மேலும் படைப்பிலுள்ள பல்வேறு நிலைகளைப் பற்றியும் தகவல் இல்லை.
பிரம்மம் எப்படிப் படைப்பாக மாறியது மற்றும் மீண்டும் படைப்பு பிரம்மத்தை நோக்கி
எப்படிச் செல்கிறதுஎன்பது பற்றியும், பிரம்மம் உச்சியிலும், ஜடம் கடைசியிலும் இருக்க
மற்றும் இடையில் வேறு என்னென்ன நிலைகள் உள்ளன என்பது பற்றிய விவரங்கள்
எல்லாம் தரப்பட்டுள்ளன.
34.
ஒரு மனிதனுடைய வாழ்க்கை பிரம்மச்சரியம், கிரகஸ்தம், வானப்பிரஸ்தம் மற்றும்
சன்னியாசம் என்று நான்கு பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
இப்படி நான்கு தனித்தனி பாகங்களாகப் பிரிக்கப்படவில்லை. நேரிடையாகவே இளம் வயதிலேயே ஆன்மீகத்திற்குள் நுழையலாம். குடும்பஸ்தனாகக் காலம் கழித்துவிட்டுதான் ஆன்மீகத்திற்கு வரவேண்டும் என்று இல்லை.
35.
பாவம், புண்ணியம் என்ற கருத்துகள் மிகவும் வலியுறுத்தப்படுகின்றன. இப்பிறப்பில் நடப்பன எல்லாம் போன பிறவியின் கர்மபலன் என்று சொல்லப்படுகிறது.
பாவ, புண்ணியத்தைப் பெரிதாக வலியுறுத்தவில்லை. தர்ம, அதர்ம கண்ணோட்டங்கள் இல்லாமல் வாழ்க்கை ஒரு வெறுஞ்சக்தியாகவே கருதப்படுகிறது.
36.
பரம்பொருளில் தான் கரைவதுதான் தனிப்பட்ட ஆன்மாவின் இலட்சியமாகக்
கருதப்படுகிறது.
பரம்பொருள் நிலையை அடைந்த பின்னும் தனி ஒரு மனிதன் கரையாமல் தனி ஆன்மாவாகத்
தொடர்ந்து செயல்படலாம்.
37.
ஞானயோகம், பக்தி யோகம், கர்ம யோகம், ஹதயோகம் ஆகிய மூன்றைவிட
உயர்ந்ததாகக் கருதப்படுகிறது.
இப்படி உயர்வு, தாழ்வு எதுவும் இல்லை. எல்லாயோகங்களும் ஒன்றிணைக்கப்பட்டு பூரணயோகம் என்ற ஒரே யோகமாக மாற்றப்பட்டுள்ளது.
38.
மேலே உள்ள சச்சிதானந்தத்திற்கு நேரெதிரான இருளில் மூழ்கியுள்ள விஷயமாகப்
படைப்பு கருதப்படுகிறது. ஆகவே இந்த உலகத்திலிருந்து விடுபட வேண்டும் என்பது
லட்சியமாகக் கருதப்படுகிறது.
அறியாமை என்பது சச்சிதானந்தத்தில் உள்ள அறிவைவிட உயர்ந்ததாகக் கருதப்படுகிறது. ஜடத்திற்குள் ஒளிந்திருக்கும் சச்சிதானந்தத்தை வெளிக்கொண்டுவருவது நோக்கமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.
39.
ஆன்மீகச் சித்திக்காக எண்ணற்ற மந்திரங்கள் உருவாக்கப்பட்டு இருந்தன.
ஸ்ரீ அரவிந்தர் மற்றும் அன்னையின் திருநாமங்களும், தங்கள் திருவுள்ளம் நிறைவேறட்டும் என்ற மந்திரமும்தான் இங்கே பயன்படுத்தப்படுகின்றன.
40.
பகுதி முழுமையைவிட எப்பொழுதும் சிறியது.
பகுதி முழுமையைவிட பெரிதாவதற்குரிய சந்தர்ப்பம் உண்டு. சைத்தியப்புருஷன்
பகுதியாகும். ஆனால், அது வெளிவரும்பொழுது மற்ற பர்சனாலிட்டி பாகங்களைவிட இது பெரிதாக இருக்கும்.
41.
ஆன்மாவிற்கு எதிராக இருப்பதால் உடம்பை நாம் கைவிட வேண்டும்.
உடம்பை ஆண்டவனின் இருப்பிடமாகச் செயல்படும் அளவிற்கு மாற்றி தெய்வீகமயமாக்க முடியும்.
42.
மேலுலகத்திலிருந்து பூவுலகிற்கு கீழே மனிதனை அனுப்பியதால் ஆண்டவன் மனிதனை
விலக்கி விட்டதாகத் தெரிகிறது.
மனிதன் அகந்தையை உருவாக்கிக்கொண்டு செயல்படுவதால் இவன்தான்
ஆண்டவனைவிட்டு விலகி நிற்பதாகத் தெரிகிறது.
43.
கடந்தகாலம்என்பது நம் வாழ்வை பெருமளவிற்கு நிர்ணயிக்கிறது.
சைத்தியப்புருஷன் வெளிப்படும்பட்சத்தில் நிரந்தரமாக நாம் நிகழ்காலத்திலேயே
இருக்கலாம். சைத்தியம் செயல்படும்பொழுது கடந்த காலம் நொடிப்பொழுதில் மறையும்.
44.
இறைவனும் படைப்பும் வேறுவேறு என்பதால் காலமும், காலம் கடந்த
நிலையும் வெவ்வேறாக உள்ளன.
படைப்பிற்குள்ளேயே இறைவன் இருப்பதால் காலமும், காலம் கடந்த நிலையும் என்றிரண்டும் சேர்ந்து இருக்கும் நிலையுமுண்டு.
45.
கிரகங்களும், நட்சத்திரங்களும் நம் வாழ்வை நிர்ணயிக்கின்றன.
உள்ளிருக்கும் இறை சாந்நித்தியத்தைக் கண்டுபிடித்து அதிலிருந்து செயல்படும்பொழுது
கிரகங்களையும், நட்சத்திரங்களையும் முறியடித்து மனிதன் தன் தலைவிதியைத்
தானே நிர்ணயித்துக்கொள்கிறான்.
46.
ஆண்டவன் கருணை நிறைந்தவன் என்பதைவிட கண்டிப்பு நிறைந்த நீதிபதியாகத்தான் இருக்கிறான்.
ஆண்டவனின் அன்பும், கருணையும்தான் இந்த உலகத்தைக் காப்பாற்றி வருகிறது. அவன்
நீதிபதியாகச் செயல்பட்டால், அவன் வழங்கும் நீதியை இவ்வுலகம் தாங்காது.
47.
ஒரு புனிதத் தோற்றம் மிகவும் அவசியம். ஆகவே, ஜடா முடி தரித்து, காவி அணிந்து
காட்சி அளிக்க வேண்டும்.
தோற்றத்திற்கு முக்கியமில்லை. ஜடா முடி தரித்தலோ, மொட்டையடித்தலோ புனிதத்தின்
அடையாளம் ஆகாது.
48.
உண்மை மாறாமல் என்றும் அப்படியே இருக்கும்என்று கருதப்படுகிறது.
இதனால் புதிதாகக் கண்டறியக்கூடிய உண்மைகள் பழைய உண்மைகளுக்கு
எதிரானதாகக் கருதப்பட்டு நிராகரிக்கப்படுகின்றன.
தற்பொழுது நிலவுகின்ற உண்மைகள் தற்காலிகமானவைதாம். புதிய
உண்மைகள் தெரியவரும் பொழுது பழைய உண்மைகள் விலக வேண்டும்.
49.
இறை விரோத சக்திகள் என்றுமே நிலைத்திருக்கும்.
அவை தேவைப்படும் வரையிலும்தான் அவை இருக்கும். தேவையில்லை என்ற கட்டம் வரும்பொழுது இறைவனின் பக்கம் சாதகமாகமாறி வந்துவிடும். அல்லது இவையெல்லாம் அழிந்துவிடும்.
50.
ஆண்டவனிடம் பயமிருந்தால்தான் மனிதன் ஒழுங்காக இருப்பான்.
ஆண்டவனைக் கண்டு அஞ்சுவதற்கு பதிலாக ஆண்டவன் மேல் அன்பு வைத்து
உறவாடினால்தான் ஆண்டவனை நெருங்க முடியும்.

******



book | by Dr. Radut