Skip to Content

01. சாவித்ரி

சாவித்ரி

P.109 A dream of beauty dances through the heart

அழகெனும் கனவு ஆடும் அரங்கமென்ற இதயம்

  • பிரபஞ்ச மனத்தின் எண்ணம் அருகே வந்தது
  • காணாத இடத்தினின்று காதில் ஒலிக்கும் செய்தி
  • அனந்த உறக்கம் விழித்தெழுந்து இறங்கி வந்தது
  • இதுவரையறியாத பிரம்மத்தின் சின்னங்கள்
  • ஜடமான தசை உள்ள சொரணையையிழந்தது
  • புனிதமான காளியின் ஆட்டம் ஆடி ஓய்ந்தது
  • பாசத்தின் வேகமும், சக்தியின் அலைகளும்
  • பளபளக்கும் ரூபம் நம்மை விட்டகன்றது
  • ஆச்சரியமான பூமாதேவி, சிகரமான கற்பனை
  • பிரவாகமாக வந்ததின் பிசிறு
  • பூமாதேவியின் அரைப்பார்வை, அவள் சக்தியின் குறையான சிருஷ்டி
  • அவள் உயர்ந்த சித்திரம், சொர்க்கத்தின் படத்தைப் பார்த்து வரைந்தது
  • பொன்னான முறையின் பொலிவான பிரகாசம்
  • உற்சாகமான கருவியின் சிறப்பான சிற்பம்
  • உள்ளதை மறைக்கும் உருவகம்
  • சுயமான உருவம், பிடிபடாத ஆச்சர்யம்
  • அனந்தனின் திருஷ்டியில் வடிவெடுத்த வண்ணம்
  • அரைகுறையான உலகின் சிரமமான வாழ்வில்
  • மெதுவான முயற்சி, கண் மூடிய சக்தி
  • மடமையான மனிதனின் தெய்வீக மனம்
  • ஜடமான இருண்ட மண்ணில் பிறந்த மேதை
  • கலையின் பிரதிகளைப் புவியில் பார்த்து எழுதும்
  • உலகைக் கடந்து, இலட்சியத்தை நாடி
  • உழைப்பாளியின் பயனற்ற கருவி, கரடுமுரடான களிமண்
  • இதயத்தை எழுப்பிச் செயல்படும் முயற்சி
  • தெய்வீக எண்ணம் எழுப்பும் மாயமான கட்டடம்
  • பிறவாதவனுக்கு காலத்தின் சத்திரம் கண்ட ரூபம்
  • ஜீவன் உயர்ந்த நினைவால் உள்ளம் புல்லரித்து
  • காலத்தைத் தாண்டிய கருத்தைக் கொணரும்
  • புவியில் இயற்கை திட்டத்திற்கு ஒவ்வாத தெய்வீகம்
  • பிடிபடாத தழல் பிரம்மத்தின் அற்புதம்
  • பிரம்மத்தில் வதியும் பிறக்காத சலனம்
  • ஆத்மாவின் அமர வாழ்வின் அதிஅற்புதம்
  • அசையாத காலம், அழியாத உலகம்
  • ஆழ்ந்த இடத்தின் மாற்றமறியாத கவி

******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
சக்தியும் ஜீவியமும் பிரிந்துள்ளன. அவை யோகத்தால் தாமே சேரவேண்டும். ஜீவியத்தை, சக்தி வலிந்து செயல்படச் செய்தால் சத்தியம் பொய்யாகும்.
 
தானே சேர்வது மெய். வலிய சேர்ப்பது பொய்.

******



book | by Dr. Radut