Skip to Content

10. அஜெண்டா

"Agenda"

With the right intermediary making people Prime Ministers, Presidents is immediately possible.

In the terrestial condition things were done just like that while to obtain a visa or permit you have to move heaven and earth.

சரியான நபர்களும், சந்தர்ப்பங்களும் அமைந்தால் ஜனாதிபதியாகவோ, பிரதமராகவோ ஒருவரை நியமிப்பது சுலபம்.
புவியில் அதுபோலவே செயல்கள் நடக்கின்றன.
ஆனால் ஒரு விசா அல்லது பெர்மிட்பெற மலையைப் புரட்ட வேண்டியிருக்கிறது.

அஜெண்டா

  • பணம், பாஸ்போர்ட், விசா, அனுபவமுள்ளவர் 24 மணி நேரத்தில் அமெரிக்கா போய், தாம் போய்ச் சேர்ந்த செய்தியைச் சொல்வார்.

    ரோடில்லாத ஊருக்கு, பெரிய தலைச்சுமையுடன் பஸ்ஸில் போய் இறங்கி, 8 மைல் போய்ச் சேர 2 நாளில் முடியுமா என்பதை நிச்சயமாகச் சொல்ல முடியாது.

    • ரோடில்லாத ஊருக்குப்போக முடியாமல் தவிக்கும் மனிதனுக்குச் சுலபமாக அமெரிக்கா போக வழி செய்வது அன்னைச் சூழல்.

      மனம் மாறினால் மலையைக் கடக்கலாம்.

      இது அன்பர் அனுபவம்.

    • அன்னையை முன் அனுப்பி, அவரை நம்பி, அவரை மட்டும் நம்பும் மனப்பான்மையுடன் செயல்படுவது அன்பருக்குரியது.

      நமது பழக்கம், நம் வீட்டு வழக்கம், நம் நாட்டுப் பண்பு, நமக்கே பிடித்தமான வழிமுறைகள், நம் பரம்பரை, நம் தாயார்-தகப்பனார் கையாண்ட வழிகள், நம் ஜாதிக்குரிய சிறப்பு, நம்மூர் பெற்ற பேர் ஆகியவற்றை வலியுறுத்துவது நம் செயல்.

      சிறியதைச் செய்யவும் நம்மால் இயலாது.

      பெரியதும் எளிமையாக முடிவது அன்னையின் அருள்.

    • ரூ.5 கடன் பெற நகையை ஈடுவைத்து, 5 நடை நடந்து, அநியாய வட்டி கொடுத்து, மனம் உடைந்து பெற்றவர்க்கு,

      ரூ.10,000 கடன் கேட்காமல், இருக்குமிடம் தேடிவந்து, ரொக்கமாகக் கொடுத்தது அன்னை.

    • 2500 மைல் பிரயாணம் செய்து, 20 பேரைச் சந்தித்து, ரூ.2,000/- செலவு செய்து, அவர்கள் வாக்கு கொடுத்த ரூ.20,000/-தைப் பெற முயன்று, 2000 ரூபாய் பெற்றவருக்கு,
      • அவர் நம்பாத பொழுது, அவரால் நம்ப முடியாமல் கேலி செய்த பொழுது,
      • ரூ.10,000 வசூல் செய்ய முனைந்தவர், கேட்காமல், வெளியில் சொல்லாமல், ரூ.1,63,000 வசூலானபின், தொடர்ந்து ரூ.75,000 வசூலானது அன்னை செயல்.

அன்னை அளிக்கும் அபரிமிதமான அருளை அலட்சியம் செய்வதும், அர்த்தமற்ற நம் பழக்கத்தைப் பெருமையாக வலியுறுத்தி வலியை அனுபவிப்பதும், மனிதன் யுகாந்த காலமாகக் கைக்கொண்டது என்பதை அஜெண்டாவில் தலைப்பில் கூறியதின் மூலம் அன்னை எடுத்துக் கூறுகிறார்.

****



book | by Dr. Radut