Skip to Content

06. சாவித்ரி

"சாவித்ரி"

P.96 The Thousandfold expression of the One

ஆயிரம் முகம் கொண்ட ஆண்டவன் அவன்

  • உலகனைத்தும் சேர்ந்து ஒரே பார்வையில் தெரிந்தது.
  • பரந்த ஞானதிருஷ்டிக்குத் தப்பிப்பது என்பதில்லை.
  • அவனை நாடி வாராததில்லை, வந்ததில் உறவில்லாததில்லை.
  • பிரம்மாண்டம் அவனோடு உயிரில் உறவு கொண்டாடிற்று.
  • தெய்வம் ஜீவியமாகி, உருவங்களாக அவன் முன் எழுந்தது.
  • பிறப்பற்றவன், அழிவற்றவன் உடலை ஏற்றான்.
  • பிரம்மம் பிரபஞ்சத்தில் தன்னை திருஷ்டியாக அமைத்தது.
  • அனாதியான புருஷஸ்பர்சம் ஜீவனளித்தது.
  • ஆத்மாவின் சிந்தனைகள் எண்ணத்தால் கட்டுப்பட்டு அவன்முன் நின்றன.
  • சொல்லைக் கடந்த சலனத்தின் சொரூபம்.
  • உலகத்தின் எல்லை, ஜீவனின் அம்சமான ரூபம்,
  • எழிலுருவமான இறைவனின் திருமுகம் தெரியும் வாயில்.
  • அனுதினமும் ஏற்கும் அற்புதக் காட்சி,
  • ஆத்ம சத்தியம் அடையாளமாக எழுந்தது.
  • உடலற்றவனின் உயிருள்ள உடல்கள்,
  • அவனை நாடி ஆதரவுதர முன்வந்தன.
  • உறங்காத மனம் எழுப்பிய தீராத பார்வை,
  • புலப்படாதது, எழுத்தாக மாறிய தொடர்பு.
  • எண்ணிறந்த அடையாளம் எடுத்துக்காட்டும் சூழல்,
  • வாழ்வின் ஆயிரம்அரங்கம் எழுப்பிய குரல்கள்,
  • அவளது வலுவான அழைப்பைச் சேவையாகக் கொணர்ந்தது.
  • புவி வாழ்வின் சொர்க்க நுணுக்கம் எடுத்த படையெடுப்பு,
  • இருண்ட கற்பனை கண்ட நரகத்தின் கனவு,
  • கனவு நனவாகும் பூவுலக அனுபவம்.
  • மந்தமான திறமை உணர மறுக்கும் செய்தி,
  • அழியும் உடல் தாங்க முடியாத அனுபவம்,
  • புனித செயலின் புலப்படும் அமைப்பு.
  • சுயமான ஜனனம் வாழும் சூழல்,
  • சொந்தமான சக்தியின் மூடியற்ற முகம்.
  • ஆத்மவலு தரும் அழுத்தமான வரவு.
  • ஜீவியம் என்ற புலனில் ஆழ்ந்து அகன்ற பள்ளம்.
  • வேகத்தின் தீவிரம் தூய்மையாகப் பரவியது,
  • ஒரு குரல் எழுப்பிய மூலத்தின் பிரம்மம்.
  • வன்மையான காவியம் சுதந்திரமான இனிமை பெற்றது,
  • ஆனந்தம் பயங்கரமாகிப் பெற்ற அழகு.

******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
சிந்தனைக்கு உரிமையில்லாத நேரம், மனம் ஓய்தல் ஒழிதலில்லாமல் எதிர்பார்க்கிறது. வெளிவர முயலும் எண்ணம் உணர்வால் உந்தப்படும்பொழுது மனம் எதிர்பார்க்கும்.
 
உலகம் தாராத உரிமையை மனம் எதிர்பார்க்கும்.

****



book | by Dr. Radut